Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., கோர்ட்... அதிரடி! நிலக்கரி துறை 'மாஜி' செயலர் குற்றவாளி என அறிவிப்பு

Posted: 19 May 2017 10:33 AM PDT

புதுடில்லி:மத்திய பிரதேசத்தில், தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், நிலக்கரி துறை முன்னாள் செயலர், எச்.சி.குப்தா உள்ளிட்டோர் குற்றவாளி என, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.

மத்தியில், 2004 -- 2009ல், காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தின் போது, சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்த தில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது, நிலக்கரி துறை செயலராக பதவி வகித்தவர், எச்.சி.குப்தா. சுரங்கம் ஒதுக்கீடு தொடர்பான குழுவின் தலைவராக இருந்த அவர், 40 சுரங்கங்கள் ...

கல்வி, மருத்துவ துறைக்கு சேவை வரியில் விலக்கு

Posted: 19 May 2017 10:36 AM PDT

ஸ்ரீநகர்:''ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில், சேவை வரியின் கீழ் இருந்தவற்றுக்கு, வரி விகிதங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கல்வி மற்றும் மருத்துவச் சேவைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையால், பொருட்கள் மற்றும் சேவையின் விலை உயராது,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வரும் வகையில், ஜி.எஸ்.டி., எனப் படும் சரக்கு மற்றும் சேவை வரி முறையை, வரும், ஜூலை, 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கான சட்டங்கள் மற்றும் வரி ...

வெளிநாட்டுக்கு தப்பியோடும் குற்றவாளி சொத்துக்களை பறிமுதல் செய்ய மசோதா

Posted: 19 May 2017 10:40 AM PDT

புதுடில்லி:பொருளாதார குற்றங்களில் ஈடு பட்டு, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

சமீப காலமாக, பொருளா தார குற்றங்களில் ஈடுபடுவோர், வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வது அதிகரித்து வருகிறது. ஐ.பி.எல்., எனப்படும் இந்திய பிரீமியர் கிரிக்கெட் போட்டியில் முறை கேடுகள் செய்ததாக, தொடரப்பட்ட வழக்கில், அதன் தலைவராக இருந்த லலித் மோடி, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அதேபோல், வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் நிலுவை வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ...

5,500 அரசு பள்ளிகளில் 1,600 பள்ளிகள் முழு அளவு தேர்ச்சி முன்னேற்றம்!

Posted: 19 May 2017 10:51 AM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 5,463 அரசு பள்ளிகளில், 1,600பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று முன்னேற்றம் கண்டுள்ளன. வழக்கம் போல, இந்த ஆண்டும், மாணவர்களை விட மாணவியரே அதிகம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.

மார்ச்சில் நடந்த, ௧௦ம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளிக் கல்வித் துறையின் நேரடி கட்டுப் பாட்டில் உள்ள, 5,463 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 4.03 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில், 3.69 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள் ளனர். அதிலும், 1,557 அரசு பள்ளிகளில், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த ...

'யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்!'

Posted: 19 May 2017 10:57 AM PDT

''ரஜினி, மிகவும் நல்ல மனிதர்; சிறந்த ஆன்மிக வாதி. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வந்தாலும், அவர்களை ஏற்பதும், நிராகரிப்பதும் மக்களின் கைகளில் உள்ளது. காரணம், மக்கள் தான் எஜமானர்கள்,'' என, பன்னீர்செல்வம் கூறினார்.

அங்கீகாரம்
அ.தி.மு.க., புரட்சித் தலைவி அணி தலைவர் பன்னீர்செல்வம், நேற்று டில்லியில் நிருபர் களிடம் கூறியதாவது:இரட்டை சிலை சின்னத்தை பெற, தினகரன் லஞ்சம் கொடுத்த வழக்கை விரைந்து நடத்த வேண்டும். சசிகலா வின் நியமனத்திற்கே, இன்னும் தேர்தல் கமி ஷன் அங்கீகாரம் தரவில்லை.இந்நிலையில், அவரால் பொருளாளரான ...

ரூ.45 கோடி செல்லாத நோட்டு வருமான வரித்துறை ஏற்க மறுப்பு

Posted: 19 May 2017 11:03 AM PDT

சென்னையில் சிக்கிய, 45 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளை ஏற்று விசாரணை நடத்த, வருமான வரித்துறை மறுத்துவிட்டது.

சென்னை, கோடம்பாக்கத்தில், தண்டபாணி என்பவர் வீட்டில் இருந்து, 45 கோடி ரூபாய் மதிப்பிலான, செல்லாத ரூபாய் நோட்டுகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, பைனான்சியர் கிலானி என்பவரிடம் விசாரணை நடந்துவருகிறது. மேலும், வருமான வரித்துறை யினரையும், சென்னை போலீசார் நேற்று சந்தித்து பேசியுள்ளனர்.
இது தொடர்பாக, வருமான வரித் துறையினர் கூறியதாவது:
செல்லாத ரூபாய்நோட்டுகளுக்காக, பிப்ரவரியில், மத்திய அரசு தனி சட்டம் ...

பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயார் ஆய்வுக்கு பின் அருண் ஜெட்லி அறிவிப்பு

Posted: 19 May 2017 11:07 AM PDT

ஸ்ரீநகர்:''ஜம்மு - காஷ்மீர் எல்லையில், ராணுவம் தயார் நிலையில் உள்ளது. எந்த ஒரு சூழலை யும் எதிர்கொண்டு, எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க, வீரர்கள் துணிவுடன் உள்ளனர்,'' என, ராணுவத் துறைக்கு கூடுதல் பொறுப்பு வகிக்கும், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று கூறினார்.

அத்துமீறல்
ஜம்மு - - காஷ்மீர் மாநிலத்தில், இந்திய -- பாக்., எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி அருகே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத் தில், நம் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்., ராணுவ வீரர்கள், நம் வீரர்கள் இரு வரை ...

'சென்டம்' அதிகரிப்பு: மீண்டும் சறுக்கும் தேர்வின் தரம்:சி.பி.எஸ்.இ., போல வினாத்தாள் மாறுமா?

Posted: 19 May 2017 11:11 AM PDT

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மீண்டும் சென்டம் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத னால், 'விடை திருத்தும் முறையை, இன்னும் தரமாக்க வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும், சென்டம் வாங்குவோர் எண்ணிக்கை, லட்சத்தை தொடுவதாக உள்ளது. முந்தைய ஆண்டு களில், சென்டம் எண்ணி க்கை அதிகரித்ததால், விடைத்தாள் திருத்த முறையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு, 2016ல், ஓரளவுக்கு தரமான திருத்தம் நடந்தது. மீண்டும் இந்த ஆண்டு, சுதந்திரமான திருத்த முறை பின்பற்றப்பட்டதால், சென்டம் பெற்றவர்கள் ...

வாய்ப்பை தவறவிட்ட ஸ்டாலினை புகழ்வதா?ரஜினி மீது பா.ஜ., காட்டம்

Posted: 19 May 2017 11:15 AM PDT

'அரசியல் சீர்திருத்தம் பற்றி பேசிய ரஜினி, அதை செயல்படுத்தி வரும், பிரதமர் மோடியை பற்றி குறிப்பிடாமல், துணை முதல்வராக இருந் தும், நிர்வாக சீர்திருத்தம் செய்யும் வாய்ப்பை தவறவிட்ட ஸ்டாலினை பாராட்டுவது சரி அல்ல' என, பா.ஜ.,வினர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

சென்னையில், தன் ரசிகர்கள் மத்தியில் நேற்று பேசிய ரஜினி, 'தமிழகத்தில் அரசியல் சீர்கெட்டு விட்டது. அதை சரிப்படுத்த வேண்டும்' என்றார். ஸ்டாலினை சிறந்த நிர்வாகி என்றதுடன், அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோரை யும் புகழ்ந்தார். ஆனால், பிரதமர் மோடி பற்றி எதுவும் சொல்லவில்லை. இது, பா.ஜ.,வின ருக்கு ...

சீனாவுடன் எல்லை நிலவரம்: ராஜ்நாத் தலைமையில் ஆலோசனை

Posted: 19 May 2017 01:13 PM PDT

புதுடில்லி:சீனாவுடனான நமது எல்லை நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக இமய மலையையொட்டி அமைந்துள்ள 5 மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டில்லியில் இன்று(மே-20) நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் ஜம்முகாஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேசம் ஆகிய 5 மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். இமய மலையையொட்டிய மாநில முதல்வர்கள் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துவது இதுவே முதல் முறையாகும். இந்தக் கூட்டத்தில் இந்தியசீன எல்லைப் பாதுகாப்பு, எல்லைப்புற பிரதேசங்களில் ...

ஜாகீர் நாயக்கிற்கு சவூதி குடியுரிமை

Posted: 19 May 2017 01:57 PM PDT

மும்பை: பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள இந்தியாவைச் சேர்ந்த மத போதகர் ஜாகீர் நாயக்கிற்கு சவூதி அரசு அந்நாட்டு குடியுரிமை வழங்கியுள்ளது. இஸ்லாமிய மதபோதகரான ஜாகீர் நாயக், 51, வங்கதேசத்தில் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் ஜாகீர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டு இத்தாக்குதல் நடத்தியதாக கூறினான். எனவே இவரது பேச்சு பயங்கரவாதத்தை தூண்டுவதாக இருப்பாதக இந்தியா குற்றம்சாட்டி தேசிய புலனாய்வு எனப்படும் என்.ஐ.ஏ. அமைப்பு வழக்குப்பதிவு செய்தது. உரிய நேரத்தில் இந்தியா திரும்பாமல் அவர் இன்னும் சவுதியில் தங்கி வருகிறார் இந்நிலையில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™