Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தானாக சுற்றும் மர்மத் தீவு!

Posted: 19 May 2017 11:44 AM PDT

தானாக சுற்றும் மர்மத் தீவு! மே 19, 2017, 03:45 AM அர்ஜெண்டினாவின் வடகிழக்கு முனையில் அமைந்திருக்கிறது பரானா டெல்டா. இது மிதக்கக்கூடிய சின்னஞ் சிறு தீவு. வட்டமாக அமைந்துள்ள நிலப்பகுதியைச் சுற்றிலும், 130 அடி அகலத்துக்குத் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர்ப் பகுதியும், நிலப்பகுதியும் சுற்றி வருவதாகச் சொல்கிறார் கள். 'ஐ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியை, 6 மாதங்களுக்கு முன்பு அர்ஜெண்டினாவின் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான செர்கியோ நெஸ்பில்லர் கண்டுபிடித்தார். அமானுஷ்யம், பேய், ...

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு

Posted: 19 May 2017 11:15 AM PDT

டாக்டர் பட்டம் பெற்ற செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) -ன் 7-ஆம் ஆண்டு மாணவர்சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ...

கோயிலுக்குப் போகும் முஸ்லிம்கள்.

Posted: 19 May 2017 10:10 AM PDT

அரசியவாதிகள்,தீவிர மதவாதிகள் இல்லையேல் சாதாரண மக்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என வாழக்  கூடும்.

இயற்கை வேளாண்மை புத்தகம்

Posted: 19 May 2017 06:11 AM PDT

இயற்கை வேளாண்மை புத்தகம் லிங்க் :
mediafire.com view/vv797fwd8tr1uw6/iyrrkai_veellaannmai_a_mutl_H_v_-_ponnn.pdf

தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது?

Posted: 19 May 2017 06:08 AM PDT

- மாப்பிள்ளைப் பையன் மிகப்பெரிய ஹாஸ்பிட்டல்ல டாக்டரா இருக்கான்! – அதுக்காக பொண்ணைப் புடிச்சிருக்கு….உடனே அம்பதாயிரம் ரூபா வரதட்சணையா கட்டச் சொன்னா, எப்படிங்க? – —————————— – காலேஜ்ல சீட் கிடைச்சிருக்குன்னு ஸ்வீட் தராம, தலைவலி மாத்திரை…வயித்துவலி மாத்திரை… பேதி மாத்திரை..ன்னு தர்றே? – பின்னே…சீட் கிடைச்சிருக்கிறது மெடிக்கல் காலேஜ்லேல்ல…!! – ——————————— – தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது? – படிக்கிற காலத்துல கேட்காமலேயே கிடைச்ச பெயில் இப்ப கேட்டாலும் கிடைக்கமாட்டேங்குதாம்..! – ————————- – மியூசிக் ...

எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்

Posted: 19 May 2017 06:06 AM PDT

- மெல்லிய சப்தத்துடன் குறுஞ்செய்தி வந்திருப்பதை செல்போன் அறிவித்ததும் எடுத்துப் பார்த்த சங்கர் சிலிர்த்துப் போனான். அதே நம்பர். அதே செய்தி. தினமும் காலையில் ஒரு எஸ்.எம்.எஸ், இரவில் ஒரு எஸ்.எம்.எஸ் என்று வரும் அதே எண்ணிலிருந்து வந்திருந்தது. காலையில் 'குட்மார்னிங். ஹேவ் எ குட் டே' என்றும், இரவு பத்து மணிக்கு 'குட்நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ்' என்றும் தினம் தினம் இந்த எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ் வந்து மனதை வதைக்கிறது. நிச்சயம் இது ஒரு பெண்ணிடமிருந்துதான் வருகிறது. எந்தப் பயலும் இதுபோல ...

தந்தையின் அறிவுரை மகளுக்கு

Posted: 19 May 2017 05:56 AM PDT

தந்தையின் அறிவுரை மகளுக்கு மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி, மகள், தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார். நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம். வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார். நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் ...

சரவணன் இருக்க பயமேன்

Posted: 19 May 2017 05:50 AM PDT

-குங்குமம் விமர்சனக்குழு வேலை வெட்டி இல்லாமல் ஊரைச் சுற்றும் உதயநிதி ஊருக்குள் பெரிய மனிதராகும் முயற்சியும், ரகளையுமே 'சரவணன் இருக்க பயமேன்'. நண்பர்களோடு அரட்டை அடித்து திரியும் உதயநிதிக்கு, நண்பன் சூரி வழியாக அகில இந்தியக் கட்சிக்கு தமிழக தலைவராக வாய்ப்பு வருகிறது. சும்மா இருந்தவர், இதை பயன்படுத்தி பிரபலம் ஆகிறார். இதற்கிடையில் சின்ன வயதில் சேர்ந்து விளையாடிய காதல் இணையும் ஊருக்கு வந்து சேருகிறது. இறுதியில் உதயநிதி அந்த காதலில் இணைந்தாரா என்பதே காமெடி கலாட்டா. ...

ஆண்டுக்கு ஒரு நல்ல படம் போதுமென்கிறார் அருள்நிதி

Posted: 19 May 2017 05:19 AM PDT

- அருள்நிதிக்கு அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை யாம். எண்ணிக்கையைவிட தரமான படங்களில் நடிப்பதுதான் முக்கியம் என்கிறார். பலரும் குறை வான படங்களில் நடிப்பதாகக் கூறியதால்தான், இந்த ஆண்டு மூன்று படங்களை ஒப்புக் கொண்டாராம். "வருடத்துக்கு இத்தனை படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. வருடத்துக்கு ஒரு படம் செய்தாலும், சரியாகச் செய்துவிட வேண்டும் என நினைப்பேன். ஒவ்வொரு படமுமே எனக்கு மிகவும் முக்கியம். "அவசரமாக ஒரு படத்தை ஒப்புக்கொண்டு நடித்துச் சரியாகப் ...

‘ஓடி ஓடி உழைக்கணும்’

Posted: 19 May 2017 05:18 AM PDT

- நகைச்சுவை வேடங்களைப் புறக்கணிக்கத் துவங்கி, கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தது முதல் சந்தானத்தின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் அதிகளவில் தென்படுகின்றன. சந்தானத்தின் நடிப்பு, நட னம், திரையில் சண்டையிடும் நுணுக்கங்கள் என எல்லாமே தற்போது பளிச்சிடுகிறது. இதனால் பலரும் பாராட்டித் தள்ளுகிறார்கள். அவரோ, தனக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்குத் தனது படக்குழுவினரே காரணம் என்று மனதார ஒப்புக் கொள்கிறார். தற்போது 'சர்வர் சுந்தரம்', 'ஓடி ஓடி உழைக்கணும்' உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து வருபவர், விரைவில் ...

அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானிக்கு டேன் டேவிட் விருது

Posted: 19 May 2017 05:16 AM PDT

- கலிபோர்னியா: மகராஷ்டா மாநிலத்தை சேர்ந்த விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் குல்கர்னி என்பவர் கலிபோர்னியா தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் உட்பட மூன்று பேருக்கு இஸ்ரேல் நாட்டின் 'டேன் டேவிட் விருது' அறிவிக்கப்பட்டிருக்கிறது. வானியல் ஆராய்ச்சித் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'டேன் டேவிட்' விருது ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் ரொக்கப்பரிசுடன் கூடியது. இந்திய மதிப்பில் இது சுமார் ஆறரைக் கோடி ஆகும். ...

அலட்சியம் : மலர்மதி

Posted: 19 May 2017 05:09 AM PDT

- எங்களுக்கு எவ்வளவோ தலை போகிற வேலைகள் இருக்கும்மா. காணாமப் போன உங்க குழந்தையை உடனே கண்டுபிடிச்சுக் கொடுக்கணும்னா எப்படி? ரைட்டர்கிட்ட புகார் எழுதிக் கொடுத்துட்டு போங்க… பார்க்கலாம்!'' – எரிந்து விழுந்தார் இன்ஸ்பெக்டர் இன்பநாதன். நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் வந்த அந்த நடுத்தர வயது தம்பதியினர், 'பொசுக்'கென இடிந்து போயினர். ''என்னங்க… டியூஷனுக்குப் போன நம்ம பொண்ணைக் காணோம்ங்க.'' – இன்பநாதன் வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாகப் பதறியடித்து ஓடி வந்தாள் அவர் மனைவி. ''டியூஷன் ...

கஷ்டம் : பர்வதவர்த்தினி

Posted: 18 May 2017 11:04 PM PDT

-- ''சிரமப்பட்ட காலத்தில் எங்கப்பா யார் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கினார்னு உங்களுக்குத் தெரியுமா?'' - சிவராம் என்னிடம் கேட்டான். நண்பரின் மகன். பொறுப்பானவன். சின்ன வயசில் கஷ்டத்தில் தவித்து இப்போது வெற்றி நடை போடுபவன். இப்போது வந்து ஏன் இப்படிக் கேட்கிறான்? யோசித்தேன். ''உன் அம்மாவைக் கேட்டுப் பாரேன்!'' என்று தட்டிக் கழிக்கப் பார்த்தேன். அவன் விடுவதாக இல்லை. பேச்சை மாற்றி, அவனையும் கூட்டிக்கொண்டு ஹாலுக்கு வந்தேன். அங்கே அவனது அம்மா, சத்தமாக என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தாள். ''அந்த ...

அந்நியன் : ஒரு பக்க கதை

Posted: 18 May 2017 11:01 PM PDT

- 'உங்க ஊர்க்காரங்க, ஜாதிக்காரங்க எது கேட்டாலும் பணம் வாங்கிட்டு உடனே செய்து கொடுக்கறீங்க. ஆனா, இப்ப வந்துட்டுப் போன பையன், சென்னையில ஒரு வேலைக்காக இதோட பத்து தடவை உங்களை வந்து பார்த்துட்டான். ஆயிரக்கணக்கில் பணம் தர்றதா சொல்லி கெஞ்சறான். உங்க ஜாதிக்கார பையன்தான். உங்களால முடியாத வேலை இல்ல. எவ்வளவோ அரசியல் செல்வாக்குள்ள நீங்க முடியாதுன்னு திருப்பி அனுப்பிட்டீங்க. 'குடும்பத் தொழிலை பண்ணிக்கிறேன்'னுட்டு அவனும் விரக்தியா கிளம்பிட்டான். ஏன் தலைவரே இப்படி பண்ணீங்க?'' - ...

செய்திகள் சொல்கின்றன...!!

Posted: 18 May 2017 10:37 PM PDT

* 1. சமூகநல திட்டங்களைப் பெறும் பயனாளிகளிடம் ஆதார் எண் கட்டாயப்படுத்தி கேட்கக் கூடாது. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் திட்டவட்டம். மத்திய அரசு ஆதார் வேணும்கிறது. உச்ச நீதிமன்றம் கேட்கக் கூடாது என்கிறது. இவர்களுக்குள் அதிகார விளையாட்டுப் போட்டி கம்பீரமா நடக்கிறது. 2. ஆர்.கே. நகர் தேர்தலுக்காக தள்ளிப் போட முடியாது. டிடிவி. தினகரன் மீதான வழக்குகள் தினமும் விசாரிக்கப்படும். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. தொகுதியிலும் இருப்பார். நீதிமன்றத்திலும் இருப்பார். குற்றவாளியை விசாரணை செய்துகிட்டே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™