Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நடிகர் ரஜினிக்கு எதிராக வரிந்து கட்டும் நீதிபதி கட்ஜு

Posted: 18 May 2017 10:21 AM PDT

புதுடில்லி:''அரசியல் பற்றியோ, மக்கள் பிரச்னை பற்றியோ, நடிகர் ரஜினிக்கு என்ன தெரியும்; அவர் அரசியலுக்கு வர வேண்டும் என, ஏன் விரும்புகின்றனர்,'' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

நடிகர் ரஜினி, கடந்த சில நாட்களாக, தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் அரசிய லுக்கு வர வேண்டும் என, அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, சமூகதளத்தில்வெளியிட்டுள்ள பதிவு:தென் மாநில மக்கள் மீது, எனக்கு மிகுந்தமதிப்பு உண்டு. ஆனால், திரைப்பட நடிகர்கள் மீது, அவர் ...

பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச கோர்ட்டில் இந்தியாவுக்கு...வெற்றி!

Posted: 18 May 2017 10:31 AM PDT

தி ஹேக், நெதர்லாந்து:உளவு பார்த்ததாகக் கூறி, இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவை, 46, துாக்கிலிட சதிதிட்டம் தீட்டிய பாகிஸ்தானுக்கு எதிராக, சர்வதேச கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், இந்தியா வுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஜாதவுக்கான தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், சதி திட்டங்கள் தீட்டியதாகவும், இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவை, 2016, மார்ச்சில், பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.அவருக்கு, பாகிஸ்தான் ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித் தது.இதற்கு இந்தியா ...

சுட்டெரிக்கும் வெயிலால் திருத்தணியில் நேற்று செல்ஷியஸ்...46 டிகிரி!

Posted: 18 May 2017 10:42 AM PDT

தமிழகத்தின் வட மாவட்டங்களை, ஒரு வார மாக கோடை வெயில், சுட்டெரிக்கும் நிலை யில், திருத்தணியில், நேற்று, 46 டிகிரி செல்ஷி யஸ், அதாவது, 115 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மாநிலத்தின் பெரும் பாலான பகுதி களில், அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில், மார்ச், 1ல் கோடைக்காலம் துவங்கியது; மூன்று மாதமாக, வெயில் சுட்டெ ரித்த வண்ணம் உள்ளது. இது வரை, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள மக்களை, வாட்டி வதைத்த வெயில், ஒரு வாரமாக, வட மாவட்டங்களில் உள்ளவர்களை யும், அனலில் தவிக்க வைத்து உள்ளது. ...

குளிப்பதற்கு பாதுகாப்பற்றது கங்கை நீர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

Posted: 18 May 2017 10:46 AM PDT

டேராடூன்:'ஹரித்துவாரில் ஓடும் கங்கை நதி, குளிப்பதற்கு கூட லாயக்கில்லாத அளவு மாசடைந்து உள்ளது' என, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதிலில்தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந் திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு தேவப்பிரயாகையில் உற்பத் தியாகும் கங்கை நதி, ஹரித்துவார் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக ஓடுகிறது.கங்கையில் குளித்தால்பாவங்கள் அகலும் என்பதால், லட்சக் கணக்கானோர், கங்கையில்புனித நீராடுகின்றனர். ஹரித்துவார் மாவட்டத்தில், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுலா ...

30 ஆண்டுகளுக்கு பின் பீரங்கி மத்திய அரசு நடவடிக்கை

Posted: 18 May 2017 10:48 AM PDT

புதுடில்லி:இந்திய அரசியலை உலுக்கிய போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் புகார் வெளிவந்து, 30 ஆண்டுகளுக்கு பின், நவீன பீரங்கிகளை, மத்திய அரசு வாங்கிஉள்ளது.

காங்கிரசை சேர்ந்த மறைந்த பிரதமர் ராஜிவ் பதவி காலத்தில், சுவீடனில் இருந்து பீரங்கிகள் வாங்கியதில், காங்கிரஸ் பிரமுகர்கள் கமிஷன் பெற்றதாக, புகார் எழுந்தது. இதனால், இந்திய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு, 1989 லோக்சபா தேர்த லில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்நிலை யில், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லை பகுதியில் அடிக்கடி பதற்றமான சூழல் உருவாகி வருவதால், பீரங்கி படையை பலப்படுத்த, நம் ராணுவம் முடிவு ...

தினகரன் குரல் மாதிரி எடுக்க கோர்ட் அனுமதி

Posted: 18 May 2017 10:50 AM PDT

தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சசிகலாவின் அக்கா மகன் தினகரனிடம், குரல் மாதிரி எடுத் துக் கொள்வதற்கு, டில்லி போலீசுக்கு, கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

அ.தி.மு.க., பிளவுபட்டதை தொடர்ந்து முடக்கப் பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர் தல் கமிஷன் அதிகாரிகளுக்கு,50 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்ற வழக்கில், தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.'இந்த வழக்கு தொடர்பாக, தினகரன், இடைத் தரகர் சுகேஷ் சந்தர் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய, 'சிடி' கிடைத்துள்ளது. அதை உறுதி செய்வதற்கு, தினகரன் மற்றும் சுகேஷ் சந்தரின் குரல் ...

அண்ணா பல்கலை பட்டமளிப்பு: தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

Posted: 18 May 2017 10:54 AM PDT

சென்னை:அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

அண்ணா பல்கலை ஆசிரியர்கள் சங்க தலைவர், அருள் அறம் தாக்கல் செய்த மனு:
அண்ணா பல்கலையில், துணைவேந்தர் இல்லை. பட்டமளிப்பு விழாவை இன்று நடத்த, பல்கலை சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. துணைவேந்தர் இல்லாமல், பட்ட மளிப்பு விழா நடப்பது, அண்ணா பல்கலை சட்டத்துக்கு எதிரானது.சட்டப்படி, துணைவேந்த ருக்கு உரிய பணிகளை,அவர் தான் மேற் கொள்ள வேண்டும். துணைவேந்தரை தேர்வு செய்ய, தேர்வுக் குழுவும் அமைக்கப்பட்டு விட் டது. பட்டமளிப்பு விழாவில், ...

கலக்கத்தில் எம்.எல்.ஏ.,க்கள் சொல்கிறார் ஓ.பி.எஸ்.,

Posted: 18 May 2017 11:00 AM PDT

ராஜபாளையம்:"தோப்பு வெங்கடாசலம் உள் ளிட்ட பெரும்பான்மையான எம்.எல்.ஏ.,க் கள் கலக்கத்தில் உள்ளனர்," என, முன்னாள் முதல் வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

ராஜபாளையம் வந்த அவர் கூறியதாவது: அ.தி. மு.க., வின் இரு அணிகளின் பேச்சு வார்த்தை அதே நிலையில்தான் உள்ளது. தோப்பு வெங்கடாசலம் மட்டுமல்லாது பெரும்பான்மை யான சசி அணி எம்.எல்.ஏ.,க்கள் கலக்கத்தில் உள்ளனர்.அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொள்கையாக, தொண்டர்களின் இயக்கமாக, மக்க ளாட்சி தத்துவத்தின் படியும் இருக்க வேண்டும். இதற்காகத்தான் இந்த தர்ம யுத்தம். இந்த யுத்தம் மக்களின் நல் ஆதரவோடு வெற்றியடையும். ...

ஜி.எஸ்.டி., வரி அமலானால் பருப்பு விலை குறையும்

Posted: 18 May 2017 11:11 AM PDT

புதுடில்லி:'ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தால், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலை கணிசமாக குறையும். பாலுக்கு, வரி விலக்கு அளிக்கப் படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த, மத்திய அரசு தீவிரம் காட்டி வரு கிறது.இதன் மூலம், பலமுனை வரிக்கு பதி லாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு அமலுக்கு வரும். ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்து வதற்கான பணிகள், இறுதி கட்டத்தை நெருங்கி யுள்ள நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், ஜம்மு -காஷ்மீர் ...

விவசாயிகளுக்கு மானிய விலை உரம் : ஜூன் 1 முதல் 'ஆதார்' கட்டாயம்

Posted: 18 May 2017 11:35 AM PDT

'ஆதார்' அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே, ஜூன், ௧ முதல், மானிய விலையில் உரங்கள் கிடைக்கும். மத்திய அரசு, விவசாயிகளுக்கு மானிய விலையில், உரங்களை வழங்கி வருகிறது.
தமிழகத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மட்டுமின்றி, தனியார் மூலமாகவும், உரங்கள் வினியோகம் நடக்கிறது. இதில், முறைகேடுகளை தடுக்க, மானிய உரம் வழங்க, ஆதார் அட்டையை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், இந்த நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது. தமிழகத்தில், ஜூன், 1 முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து, வேளாண் துறை ...

ஜெயகுமார் அமைச்சரானது எப்படி?: மதுசூதனன் காட்டம்

Posted: 18 May 2017 12:34 PM PDT

சென்னை: ''ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே, தான் முதல்வராக வர வேண்டும் என்பதற்காக விழா எடுத்தவர், அமைச்சர் ஜெயகுமார்,'' என, பன்னீர்செல்வம் அணி அவைத் தலைவர் மதுசூதனன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: அமைச்சர் ஜெயகுமாருக்கு, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வரலாறு தெரியாது. ஜெ., உயிருடன் இருக்கும் போதே, 'ஜெ., சிறைக்கு சென்று விடுவார்; நான் முதல்வர் ஆகிவிடுவேன்' எனக் கூறியதால், சபாநாயகர் பதவியை இழந்தார். ஜெ., உயிருடன் இருக்கும் போதே, தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக விழா எடுத்தார்.
இவரால், பல தொண்டர்கள் ...

ம..பி.யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் தவிப்பு

Posted: 18 May 2017 01:36 PM PDT

ஷெ கோர்: மத்திய பிரதேச மாநிலத்தில் 100 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் விழுந்தான்.அவனை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது
மத்தியபிரதேச மாநிலம் ஷெகோர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நேற்று மாலை விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவன், அங்குள்ள 100 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்கும் பணியில் ...

'நீட்' தேர்வுக்கு எதிராக வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்

Posted: 18 May 2017 02:38 PM PDT

மதுரை: மே 7 ல் நடந்த 'நீட்' தேர்வை ரத்து செய்து, அகில இந்திய அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில், புதிதாக தேர்வு நடத்த தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை டி.ஆர்.ஓ., காலனி ஜொனிலாவின் தந்தை சீனிவாசகம் உட்பட 9 பேர் தாக்கல் செய்த மனு: எம்.பி.பி.எஸ்.,-பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) கொண்டுவர 2012 ல் முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் 'நீட்' தேர்வுக்கு 2016 ல் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.2016 ல் 'நீட்' தேர்வை ஆங்கிலம், இந்தியில் நடத்த ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™