Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தனியார் வாகனங்களில் கட்டண கொள்ளை

Posted: 15 May 2017 09:42 AM PDT

தமிழகத்தில், அரசு பஸ் ஊழியர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அரசு பஸ்கள் மட்டுமே உள்ள சென்னை போன்ற ஊர்களில், தனியார் வாகனங்கள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளன.

சென்னையை பொறுத்தவரை, 'ஆம்னி' பஸ்கள், தனியார் பஸ்கள், மினி பஸ்கள் என, 60க்கும் மேற்பட்ட பஸ்கள், மாநகர போக்கு வரத்துக்காக, நேற்று பயன்படுத்தப்பட்டன. அவற்றில் பெரும்பாலும், 20, 30, 40, 50 ரூபாய் என்ற கட்டணமே வசூலிக்கப்பட்டது.
கட்டண கொள்ளை
இது குறித்து, பயணியர் கூறுகையில், 'அரசு பஸ்களில், 50 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால், ஒரு நாள் முழுக்க பயணிக்க முடியும். ஆனால், ...

அமைச்சர் ராஜுவின் 'தெர்மாகோல்' திட்டம் போல விஜயபாஸ்கரும் சொதப்பல்! 'புதிய நபர்களை வைத்து பஸ்களை இயக்குவேன்' என கங்கணம்

Posted: 15 May 2017 10:13 AM PDT

அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம், நேற்று தீவிரமடைந்ததன் காரணமாக, 90 சதவீத பஸ்கள் ஓடவில்லை. அதை பற்றி கவலைப்படாமல், அமைச்சர் ராஜுவின், 'தெர்மாகோல்' திட்டம் போல, போக்குவரத்து அமைச்சர், விஜயபாஸ்கரும், 'புதிய நபர்களை வைத்து, பஸ்களை இயக்குவேன்' என, கங்கணம் கட்டியிருப்பது, பொது மக்களிடத்தில் விமர்சனத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.பல ஆண்டுகளாக தரப்படாமல் உள்ள, ஓய்வூதிய பலன்கள் உட்பட, தங்களுக்கு சேர வேண்டிய, 7,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை கேட்டு, நேற்று முதல் போராட்டம் நடத்தப் போவதாக, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. ஆனால், நேற்று ...

சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட பாக்., சூழ்ச்சி..! சர்வதேச கோர்ட்டில் இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

Posted: 15 May 2017 10:18 AM PDT

தி ஹேக், நெதர்லாந்து: 'இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவை, உடனடியாக துாக்கிலிட பாகிஸ்தான் சூழ்ச்சி செய்து வருகிறது' என, சர்வதேச கோர்ட்டில், இந்தியா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்திய கடற்படையின் முன்னாள் வீரரான, குல்பூஷண் ஜாதவை, 46, பாகிஸ்தான் ராணுவம், 2016 மார்ச்சில் கைது செய்தது. உளவு பார்த்ததாகவும், நாச வேலைகள் செய்வதற்கு திட்டமிட்டதாகவும், அவர் மீது குற்றஞ்சாட்டி, அவருக்கு துாக்கு தண்டனை விதித்து, பாகிஸ்தான் ராணுவ கோர்ட், இந்த ஆண்டு, ஏப்., 10ல் தீர்ப்பு அளித்தது.
இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து ...

நீதிபதி கர்ணன் கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Posted: 15 May 2017 10:20 AM PDT

புதுடில்லி: 'ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, சுப்ரீம் கோர்ட் அமர்வு அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, நீதிபதி கர்ணன் தாக்கல் செய்துள்ள மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை ஏற்க, சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுத்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியுமான கர்ணன் மீது, சுப்ரீம் கோர்ட், தானாகவே, கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கில், கர்ணனுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மே, 12ல் தீர்ப்புஅளித்தது.
இந்த ...

வரைபடத்தில் மட்டும் நதிகள்; பிரதமர் மோடி வேதனை

Posted: 15 May 2017 10:31 AM PDT

அமர்காந்தக்: ''வரைபடத்தில் பல நதிகள் உள்ளன; ஆனால் நிஜத்தில், தண்ணீர் இல்லாமல் பெரும்பாலானவை வறண்டு காணப்படுகின்றன,'' என, பிரதமர் நரேந்திர மோடி, வேதனையுடன் குறிப்பிட்டார்.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில், நர்மதை நதி பாதுகாப்பு திட்டம், 2016 டிச., 11ல் துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 1,100 கிராமங்களில், 3,344 கி.மீ., நீளமுள்ள நதியில் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன; துார்வாருதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. கடந்த, 150 நாட்களாக நடந்து வந்த இந்தப் பணிகள் முடிவுக்கு வந்தன.
ஒவ்வொரு துளியும் ...

வரும் 29ம் தேதி வரை தினகரன் 'உள்ளே' தான்!

Posted: 15 May 2017 10:41 AM PDT

தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, தினகரனின் காவல், 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதை மீட்பதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, சசிகலாவின் அக்கா மகன் தினகரன், 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றது அம்பலமானது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன், டில்லி திகார் சிறையில், இம்மாதம், 1ல் அடைக்கப்பட்டார். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரா, ஹவாலா ஏஜன்ட் நரேஷ் ஜெயின் எனப்படும் நாது சிங் ...

அரசியல் பிரவேசம்: அடியெடுத்து வைக்கிறார் ரஜினி! 'சம்பாதிக்க நினைத்தால் ஓடி விடுங்கள்' ரசிகர்கள் சந்திப்பில் திட்டவட்டம்

Posted: 15 May 2017 10:44 AM PDT

சென்னை: கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை, நடிகர் ரஜினி, நேற்று துவங்கினார். ஐந்து நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், நேற்று கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர் மாவட்ட ரசிகர்களை, ரஜினி சந்தித்தார். அதில், சினிமா இயக்குனர், எஸ்.பி.முத்துராமனும் பங்கேற்றார்.

ரசிகர்கள் மத்தியில், ரஜினி பேசியதாவது:எஸ்.பி.முத்துராமனிடமிருந்து நேர்மை, ஒழுக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில், எனக்கிருந்த குடிப் பழக்கத்தால், படப்பிடிப்புக்கு தாமதமாக போவேன்; அதை, முத்துராமன் கண்டித்தார். அதன்பின், ...

சட்டசபை கூட்டத்தொடர் முடித்து வைப்பு பின்னணி

Posted: 15 May 2017 10:52 AM PDT

அவசர சட்டங்கள் கொண்டு வருவதற்காகவே, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும் முன், சட்டசபை கூட்டத் தொடரை, கவர்னர் முடித்து வைத்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபையில், மார்ச், 16ல், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம், மார்ச், 24 வரை நடந்தது. பின், தேதி குறிப்பிடப்படாமல், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்த பின், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த, சட்டசபை கூடும் என, தகவல் வெளியானது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தால், இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், ...

சட்டசபையை கூட்டுங்க: கவர்னருக்கு ஸ்டாலின் கடிதம்

Posted: 15 May 2017 10:55 AM PDT

சென்னை: 'சட்டசபையை கூட்ட, முதல்வர், சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம் வருமாறு: சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு துறைகள் முன்வைத்த மானிய கோரிக்கைகளுக்கு, சபையின் ஒப்புதல் பெறாமல் உள்ளது. அரசால் திட்டங்களுக்கு, நிதி ஒதுக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.
ஜனநாயகத்தை வலுப்படுத்த, சட்டசபை விவாதங்கள் அவசியம். ஆனால், சட்டசபையின் இரண்டாவது கூட்டம், விதிகளுக்கு மாறாக, இறுதி செய்யப்பட்டு உள்ளது.
துறை வாரியான, மானிய கோரிக்கைகள் மீது ...

'மாஜி' அமைச்சர் மிஸ்ராவுக்கு கெஜ்ரிவால் மனைவி சாபம்

Posted: 15 May 2017 12:07 PM PDT

புதுடில்லி: ''டில்லியில், ஆம் ஆத்மி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா, பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதற்கான பலன்களை அனுபவிப்பார்,'' என, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி, சுனிதா கூறியுள்ளார்.

டில்லியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். அவரது அமைச்சரவையைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, கட்சியின் மூத்த அமைச்சர்களுக்கு எதிராக புகார் கூறியதை அடுத்து, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஐந்து மூத்த அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் தொடர்பான விபரங்களை வெளியிட வலியுறுத்தி, கபில் மிஸ்ரா உண்ணாவிரதம் ...

பிளஸ் 1ல் பொதுத்தேர்வு கட்டாயம் அண்ணா பல்கலை அரசுக்கு பரிந்துரை

Posted: 15 May 2017 12:08 PM PDT

'உயர் கல்வியின் தரத்தை முன்னேற்ற, பிளஸ் 1 வகுப்பில், பொதுத் தேர்வை கட்டாயமாக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறைக்கு, அண்ணா பல்கலை பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில், 2006ல் அமலுக்கு வந்த, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை, 2011ல், கட்டாயம் மாற்றியிருக்க வேண்டும்; தமிழக அரசு மாற்றவில்லை. அதேநேரம், பொதுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெறும், தனியார் பள்ளி மாணவர்கள், பள்ளிகளின் விபரங்களை வெளியிடுவதில், தேர்வுத்துறை அதிக அக்கறை காட்டியது. எனவே, பதக்கம், பரிசு பெற விரும்பி, பெரும்பாலான தனியார் பள்ளிகள், பிளஸ் 1லும், பிளஸ் ௨ பாடத்தை நடத்தின. இரண்டு ...

'தலாக்' ரத்தானால் புதிய சட்டம் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Posted: 15 May 2017 01:19 PM PDT

புதுடில்லி: 'முஸ்லிம்களில், 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறை ரத்து செய்யப்பட்டால், முஸ்லிம்களின் திருமணம், விவாகரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், புதிய சட்டம் கொண்டு வரப்படும்' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களின், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. 'இந்த வழக்குகள், கோடை விடுமுறையின்போது விசாரிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியலமைப்பு சட்ட அமர்வு, தன் ...

ஜாதவிற்காக வாதாடும் ஹரீஷ் சால்வேவுக்கு ரூ. 1 சம்பளம்: சுஷ்மா

Posted: 15 May 2017 02:01 PM PDT

புதுடில்லி; ஜதாவிற்காக வாதாடும் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேக்கு ரூ. 1 சம்பளம் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.பாக்.கில்உளவு பார்த்ததாகவும், நாச வேலைகள் செய்வதற்கு திட்டமிட்டதாகவும், இந்திய கடற்படைவீரர் குல்பூசன் ஜாதவ் மீது குற்றஞ்சாட்டி, ஏப். 10ம் தேதி துாக்கு தண்டனை விதித்து, பாகிஸ்தான் ராணுவ கோர்ட்.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள, தி ஹேக் நகரில் அமைந்துள்ள, ஐ.நா.,வின் சர்வதேச கோர்ட்டில், மே, 9ல் மத்திய அரசு சார்பில், அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த, சர்வதேச கோர்ட், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™