Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்

Posted: 15 May 2017 03:36 PM PDT

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.16 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.2.10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு இன்று(மே-15) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன. புதுச்சேரி புதுச்சேரியிலும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 8 காசுகள் குறைந்து ரூ 63.92 காசுக்கும் டீசல் விலை 13 காசுகள் குறைந்து ரூ 56.37 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. - தினத்தந்தி

இன்றைய செய்தி சுருக்கம்...

Posted: 15 May 2017 03:34 PM PDT


-
ஜப்பானின் டோக்கியோ நகரில் சுமார் 400 ஆண்டுகளாக
நடைபெறும் பாரம்பரிய குழந்தைகளை அழ வைக்கும்'
போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று
அழுதன.
-
-------------------------------------

மருத்துவ விடுமுறை அனுமதிக்க லஞ்சமாக மதுபாட்டில் வாங்கிய மாநகராட்சி அதிகாரி கைது

Posted: 15 May 2017 03:25 PM PDT

மும்பை, மருத்துவ விடுமுறை அனுமதிக்க மதுபாட்டிலை லஞ்சமாக வாங்கிய மாநகராட்சி அதிகாரி கைது செய்யப்பட்டார். மதுபாட்டில் லஞ்சம் புனே மாவட்டம் பிம்ப்ரி- சிஞ்ச்வாட் மாநகராட்சியின் 'இ' வார்டு உதவி சுகாதார அதிகாரியாக இருப்பவர் தானாஜி (வயது50). இவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன் துப்புரவு பணியாளர் ஒருவர் சில மாதங்களுக்கு மருத்துவ விடுப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இதை பரிசீலித்த அதிகாரி தானாஜி மருத்துவ விடுப்பில் செல்ல அனுமதிப்பதற்கு அவரிடம் ஒரு பாட்டில் மது மற்றும் ரூ.10 ...

முகவின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நாளை சென்னையில் இருக்கவேண்டும் மு.க. ஸ்டாலின் அழைப்பு

Posted: 15 May 2017 03:23 PM PDT

சென்னை, சட்டமன்றத்தை உடனே கூட்ட சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என கவர்னருக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில் திமுகவின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நாளை சென்னையில் இருக்கவேண்டும் என மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார். திமுகவின் அனைத்து எம்எல்ஏக்களும் நாளை காலை பத்து மணிக்கு சென்னையில் இருக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. - ------------------ தினத்தந்தி

வெறிச்சோடியது கோவை... தனியார் பேருந்தை சிறைப்பிடித்த பயணிகள்!

Posted: 15 May 2017 03:16 PM PDT

- அதென்னவோ தெரியவில்லை! அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பேருந்தை வேகமாக ஓட்டுகிறார்களோ என்னவோ.? ஏதேனும் அறிவிப்பு வந்தால் உடனடியாக செயல்படுத்தி மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிடுகிறார்கள். 500, 1000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்ற மோடி அறிவித்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் பல அரசுப் பேருந்துகளில் 500,1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து பயணிகளை படுத்தி எடுத்தார்கள். இப்போது, இன்று காலை முதல் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை நேற்று இரவே செயல்படுத்த ...

குரங்கு மாம்பழம் தின்ற மாதிரி இருந்தது…!

Posted: 15 May 2017 01:23 PM PDT


-

உலகின் முதல் பெண் பைலட் – பொ.அ.தகவல்

Posted: 15 May 2017 01:16 PM PDT

அனைவருக்கும் அறிமுகம் மற்றும் சிறந்த வாழ்த்துக்கள்

Posted: 15 May 2017 12:47 PM PDT

பெயர்: ராமன்
சொந்த ஊர்: காவேரிபட்டினம், வாழும் இடம்: பெங்களூர்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம் வழியாக
பொழுதுபோக்கு: புத்தக வாசிப்பு, இசை கேட்பது
தொழில்: மின்னணு உற்பத்தி பொறியியல்
மேலும் என்னைப் பற்றி:
புதிய செய்திகளை அறிந்து கொள்வதிலும் சேகரிப்திலும் ஆர்வம்.
என் பொழுதுபோக்கு தமிழ் சரித்திர நாவல்களை படிபது.

எப்படி கண்டுபிடிப்பது

Posted: 15 May 2017 12:32 PM PDT

வணக்கம்

எப்படி கண்டுபிடிப்பது என்ன கோத்ரம் என்று.

நன்றி

ராம்

இசை அரசியின் இக்கட்டைப் போக்கிய பரமாசார்யா!

Posted: 15 May 2017 10:47 AM PDT

மகாபெரியவாளோட பரமபக்தர்கள்ல ஒருத்தர், எம்.எஸ். சுப்புலட்சுமி. பரமாசார்யாளை தரிசிக்க அவா வந்தா, அன்னிக்க நிச்சயம் கானமழை கேட்கும். தன்னை மறந்து அவா பாடறதை, ஆனந்தமா ரசிப்பார் ஆசார்யா. - ஒருநாள், பரமாச்சார்யாளை தரிசனம் பண்ண வந்தா எம்.எஸ். கொண்டு வந்திருந்த பழத்தட்டை மகா பெரியவா முன்னால வைச்சுட்டு, நமஸ்காரம் பண்ணினா, 'பெரியவா, பாரத தேசத்தோட சார்புல ஐ.நா. சபையில சங்கீதக் கச்சேரி ஒண்ணு பண்ணறதுக்காக என்னை அழைச்சிருக்கா, உஙக உத்தரவைக் கேட்டுண்டு பதில் சொல்றதா சொல்லியிருக்கேன்' ...

நாவல்கள்தலைப்பு

Posted: 15 May 2017 09:09 AM PDT

ஐயா

எனக்கு தேவை சேரர் பற்றி என்ன தலைப்பு கதைகள் புத்தகங்கள் உள்ளன.
உதாரணம் :பொன்னின் செல்வன் -சோழர்சிவகாமியின் சபதம்- பல்லவர்.
போன்ற சேர சோழ பாண்டியர் மற்றும் பல்லவரின் தமிழ் வரலாற்று நாவல்கள்தலைப்பு மற்றும் அதன் ஆசிரியர் தேவை.

நன்றி

ராம்

அரசுக்கு எதிராக மோடி சகோதரர் போர்க்கொடி

Posted: 15 May 2017 07:25 AM PDT

ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள நியாய விலை கடைகளில், சமையல் காஸ் விற்பனை செய்ய அனுமதிக்காவிட்டால், மே 28 ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத் மாநில நியாய விலை கடைகள் மற்றும் கெரசின் லைசென்ஸ்தாரர் சங்க தலைவராக பிரகலாத் மோடி உள்ளார். அவர் கூறியதாவது: கெரசின் இல்லாத மாநிலமாக குஜராத்தை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்றவாறு கெரசின் ஒதுக்கீட்டை மத்திய அரசும் குறைத்து விட்டது. அத்துடன் உஜாலா ...

அழகிய தவறு - இயக்குனர் மகேந்திரன் நூலினை டவுன்லோட் செய்ய .

Posted: 15 May 2017 07:24 AM PDT

மகேந்திரன் புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ.அலெக்ஸாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை. மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு ...

இணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்: செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன?

Posted: 15 May 2017 07:22 AM PDT

சமீபத்தில் உலகம் முழுவதும் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை சர்வர்களை பதம்பார்த்துள்ள 'ரான்சம்வேர்' வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழி முறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர். இணைய உலகை அச்சுறுத்தும் 'ரான்சம்வேர்' வைரஸ்: செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன? சமீபத்தில் உலகம் முழுவதும் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை சர்வர்களை பதம்பார்த்துள்ள 'ரான்சம்வேர்' வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழி முறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் ...

மதிப்பிற்குரிய மேயர் பூரணிக்கு வாழ்த்துகள்

Posted: 15 May 2017 07:15 AM PDT

ஜூனியர் மேயராக தெரிவு செய்யப்பட்ட செல்வி பூரணிக்கு வாழ்த்துகள். அமெரிக்கா மேரிலாந்து கெயித்தர்ஸ்பர்க்(Maryland,Gaithersburg ,USA) நகரின் 2017 ஆம் ஆண்டுக்கான இளம் மேயராக (Junior Mayor) நான்காவது வகுப்பில் படிக்கும் 9 வயது பூரணி கண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்ற ஆண்டு 2016 இல் செல்வி சிறீநிதி குருவாயூரப்பன் தெரிவு செய்யப்பட்டிருந்தார். செல்வி பூரணி, ஜூனியர் மேயராக ஏப்ரல் 13 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்ட பின், மே 1 ஆம் தேதி நடந்த  மேயர் மற்றும் நகர சபை கூட்டத்தின் போது, கெய்த்தர்ஸ்பர்க் ...

சங்கப் பலகையோ உங்கள் வண்டி?

Posted: 15 May 2017 07:15 AM PDT

சங்கப் பலகையோ உங்கள் வண்டி?



சங்கப் பலகையோ உங்கள் வண்டி
பங்கப்படதோ  இச்சுமைக்கு

ஒல்லிக்கும் இடமுண்டு
குண்டிற்கும் இடமுண்டு
ஏற்றிச்செல்ல மனமுண்டு
போலீஸ் பிடித்தால்
கொடுக்க பணமுண்டா ?

ரமணியன்

ட்விட்டரில் ரசித்தவை

Posted: 15 May 2017 07:12 AM PDT

ஆளுமை மிக்க பதில்கள், சிலர் புன்னகையில்
குவிந்து கிடக்கின்றன்
-
தமிழ்சுகி - ட்விட்டரில்
-
---------------------------------

படித்ததில் யோசிக்க வைக்க வைத்தது.

Posted: 15 May 2017 07:10 AM PDT

நகரத்திற்கும், கிராமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை
சுருக்கமாக எழுதுக

மாணவன் பதில் எழுதினான்:

ஒரு நாய் மனிதனை பாதுகாத்தால் அது கிராமம்,

அதே நாயை மனிதன் பாதுகாத்தால் அது நகரம்

———————————

படித்ததில் யோசிக்க வைக்க வைத்தது.

பாரதி பாடிய புதுமைப் பெண்ணுக்கு...(கவிதை)

Posted: 15 May 2017 07:00 AM PDT

அரசியல் செய்யும் கொசுக்கள்

Posted: 15 May 2017 06:56 AM PDT

பாவம் பாப்பா - கவிதை

Posted: 15 May 2017 06:54 AM PDT

தமிழக அரசுப் பள்ளிகளில் வருகிறது இலவச வைஃபை!

Posted: 15 May 2017 06:54 AM PDT

அண்மையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னர், பொதுத் தேர்வுகளுக்கு இனி ரேங்க்கிங் முறை இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி இந்த ஆண்டு முதல் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் இந்த முடிவுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வைஃபை வசதி வழங்க முடிவுசெய்துள்ளதாக, ...

இசைச் சிறகுகள்

Posted: 15 May 2017 06:52 AM PDT

இரண்டின் காரணம் – காஞ்சி பெரியவர்

Posted: 15 May 2017 01:02 AM PDT

ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!

Posted: 14 May 2017 11:27 PM PDT

புதிய தொழில்நுட்பங்களுக்குத் தயாராவதில் உள்ள சிரமங்களால், அடுத்து வரும் மூன்றாண்டுகளில், ஐடி பணியாளர்களும் பொறியாளர்களும் லட்சக் கணக்கில் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, 'ஹெட் ஹன்டர்ஸ் இந்தியா' நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. - புதிய தொழில்நுட்பங்களுக்குத் தயாராவதில் உள்ள சிரமங்களால், அடுத்து வரும் மூன்றாண்டுகளில், ஐடி பணியாளர்களும் பொறியாளர்களும் லட்சக்கணக்கில் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, 'ஹெட் ஹன்டர்ஸ் இந்தியா' நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஐடி ...

மெட்ராஸ் மாப்பிள்ளை - கவிதை

Posted: 14 May 2017 10:02 PM PDT

தொடர்பு – கவிதை

Posted: 14 May 2017 10:01 PM PDT



--
எந்த
கொசுக்கடியும் இல்லை
அம்மா சுகமாக
தூங்குகிறாள் என்ற
தகவலை தொடர்ந்து
தெரிவிதுக் கொண்டிருந்தது
மின்விசிறி...!
-
------------------------
-ரவிச்சந்ததிரன்

சக நடிகர்களின் ‘டார்லிங்’ ரகுல்

Posted: 14 May 2017 06:33 PM PDT

- சக நடிகர்களின் 'டார்லிங்' ரகுல் - தெலுங்குத் திரையுலகில் 'பாகுபலி' நாயகன் பிரபாசுக்கு 'டார்லிங்' என்ற செல்லப் பெயர் உண்டு. அதேபோல் ரகுல் ப்ரீத்சிங்கையும் டார்லிங் என்று தான் சக நடிகர்கள் செல்லப் பெயர் வைத்து அழைக்கின்றனர். தமிழில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ஒரு படத்தில் ரகுல் நடித்த போது, தமிழ் ரசிகர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இவர் இப்போது தெலுங்கில் ரொம்ப பரபரப்பாக இயங்கி வருகிறார். இதையடுத்து கோலிவுட்டில் இருந்து வந்த தொடர் நச்சரிப்பை அடுத்து 'தீரன் அதிகாரம் ...

‘குடிசையில் வசித்தாலும் ராணியாக வாழ்வதே நல்லது’

Posted: 14 May 2017 06:26 PM PDT

- 'புலி' படத்தில் நடிக்க அழைக்கும்போது எனக்கு அதிக காட்சிகள் இருப்பதாகக் கூறினர். ஆனால், படத்தில் அப்படி எதுவும் அதிகமான காட்சிகள் இடம்பெறவில்லை. அதற்குப்பின் தான் எனக்குப் புத்தியே வந்தது. ஒரு பெரிய மாளிகையில் வேலைக் காரியாக இருப்பதைவிட ஒரு குடிசையில் ராணியாக இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார் நடிகை நந்திதா ஸ்வேதா. 'அட்டக்கத்தி' படத்தில் துவங்கி 'எதிர் நீச்சல்', 'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'முண்டாசுபட்டி' போன்ற நல்ல படங்களில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™