Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இரு அணிகள் இணைப்பில் சுணக்கம் முதல்வர் மீது அமைச்சர்கள் வருத்தம்

Posted: 13 May 2017 06:09 AM PDT

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு தொடர்பாக, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, இரு தரப்பிலும், சிலர் முயற்சிகள் எடுத்தனர். தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னத்தை முடக்கி உள்ளது. இரு அணிகளும் இணைந்தால், இரட்டை இலை சின்னத்தை, எளிதாக மீட்கலாம்.
சி.பி.ஐ., விசாரணை
இரட்டை இலை சின்னத்தை மீட்டால் மட்டுமே, உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல், லோக்சபா தேர்தல் என, வரும் தேர்தல்களை எளிதாக சந்திக்க முடியும். இரு அணியாக பிளவுபட்டு நின்றால், அது, தி.மு.க.,விற்கு சாதகமாக அமையும் என, மூத்த ...

அ.தி.மு.க., அணிகளில் யாருக்கு ஆதரவு? தடுமாறுகிறது பா.ஜ., தலைமை

Posted: 13 May 2017 06:11 AM PDT

அ.தி.மு.க.,வின் மூன்று அணியினரும் சரணடைந்துள்ளதால், யாருக்கு ஆதரவு அளிப்பது என, தெரியாமல், பா.ஜ., தலைமை தவித்து வருகிறது.

ஜெ., மறைந்த பின், பன்னீர்செல்வம் முதல்வ ரானார். அவருக்கு பா.ஜ., ஆதரவு அளித்தது. மத்திய அரசின் ஒத்துழைப்புடன், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, பன்னீர்செல்வம், அவசர சட்டம் கொண்டு வந்து, அனைவரு டைய பாராட்டையும் பெற்றார்.அவரை ராஜி னாமா செய்ய வைத்து, சசிகலா முதல்வராக முயற்சித்தார். அதை, பா.ஜ., தலைமை ரசிக்கவில்லை. சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா சிறை சென்றதும், அவரது முதல்வர் கனவு தகர்ந்தது. ஆனால், அவரது ஆதரவுடன், பழனிசாமி ...

சோனியா தலைமையில் 14 கட்சிகள் கூட்டம் சென்னையில் நடத்த தி.மு.க., ஏற்பாடு

Posted: 13 May 2017 06:14 AM PDT

தி.மு.க., தலைவர் கருணாநிதியின், சட்டசபை வைர விழாவை ஒட்டி, சென்னையில், சோனியா உட்பட, 14 கட்சிகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஜனாதிபதி தேர்தல், ஜூலை, 19ல் நடக்கிறது. முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், முன்னாள் லோக்சபா சபாநாயகர், மீரா குமார் ஆகியோரில் ஒருவரை, ஜனாதிபதி வேட்பாள ராக நிறுத்த, காங்கிரஸ் விரும்புகிறது. வட மாநில கட்சிகளின் தலைவர்களில் சிலர், காந்தி பேரன், கோபாலகிருஷ்ண காந்தி, சரத் யாதவ், சரத் பவார் ஆகியோரில், ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தும்படி வலியுறுத்து கின்றனர். இதனால், காங்., ...

சுப்ரீம் கோர்ட்டில் சசி தாக்கல் செய்த மறு ஆய்வு மனு... தள்ளுபடி?

Posted: 13 May 2017 06:28 AM PDT

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா, தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்ட னையை மறு ஆய்வு செய்யும் படி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு, தள்ளுபடி ஆகும் என கூறப்படுகிறது. ஏனெனில், தீர்ப்பில் எந்த குறையும் இல்லை என்பதால், மனுவை நீதிபதிகள் விசாரிக்க வாய்ப்பு இல்லை என, சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில், 27ம் தேதிக்குள் முடிவு தெரியும் என, அவர்கள் நம்புகின்றனர்.

சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை, தலா, 10 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்து, உச்ச நீதிமன்ற ...

ஐ.டி., ஊழியர்கள் 56 ஆயிரம் பேர்...வெளியேற்றம்?

Posted: 13 May 2017 07:59 AM PDT

புதுடில்லி:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'எச் --- 1 பி' விசாவுக்கு விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாகவும், புதிய தொழில்நுட் பத்தின் வரவாலும், இந்த ஆண்டு, 56 ஆயிரம் ஊழியர்களை, ஆட்குறைப்பு செய்ய, ஏழு முக்கிய, ஐ.டி., எனப்படும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு பதவியேற்ற பின், அங்கு பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும், 'எச் - 1 பி' விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கூடுதல் சம்பளம்
மேலும், 'வெளிநாடுகளை சேர்ந்த ...

'சைபர்' தாக்குதலால் 100 நாடுகளில் கம்ப்யூட்டர்கள்... முடக்கம்! ஆந்திர போலீஸ் துறையிலும் பரவியது 'வைரஸ்'

Posted: 13 May 2017 09:57 AM PDT

சியாட்டில்:அமெரிக்காவின், என்.எஸ்.ஜி., எனப்படும், தேசிய பாதுகாப்பு ஏஜன்சியிடம் இருந்து திருடப்பட்ட, மென்பொருள் தாக்குதல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்தியா உட்பட நுாற்றுக்கணக்கான நாடுகளில், ஏராளமான நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில், இணைய தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ஆந்திர மாநில போலீஸ் துறையைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், இந்த இணைய தாக்குதலில் முடங்கி உள்ளன.

கம்ப்யூட்டர் செயல்பாடுகளை முடக்கக் கூடிய, மென்பொருள் வைரஸ் தாக்குதல்கள், ஸ்வீடன், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்ததாக, அமெரிக்காவைச் சேர்ந்த, ...

ரூ.2,000 கோடி முறைகேடு: சிக்கும் சோனியா மகள்

Posted: 13 May 2017 10:02 AM PDT

புதுடில்லி:'நேஷனல் ஹெரால்டு' தொடர்பான, 2,000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுலை தொடர்ந்து, பிரியங்காவும், வருமான வரித்துறையின் வளையத்திற்குள் சிக்குகிறார்.

மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவால் துவக்கப்பட்ட, 'நேஷனல் ஹெரால்டு' உள் ளிட்ட பத்திரிகைகளை நடத்தி வந்த, ஏ.ஜே. எல்., எனப்படும் அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் நிறுவனம், நிதி நெருக்கடிக்கு ஆளானது. இதையடுத்து, அந்நிறுவனத்திற்கு,2008ல் காங்கிரஸ் கட்சி, 90 கோடி ரூபாயை, வட்டி இல்லா கடனாக அளித்தது.
அபகரிப்பு புகார்
மேலும்,சோனியா, ராகுல் ...

தமிழகத்தில் நாளை போக்குவரத்து ஊழியர்கள்...ஸ்டிரைக்?

Posted: 13 May 2017 10:40 AM PDT

தமிழகத்தில், நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

கோரிக்கைகள் தொடர்பாக, அமைச்சர், அதிகாரிகளுடன் நடந்த, பல சுற்றுப் பேச்சு தோல்வி யில் முடிந்ததால், மாநிலம் முழுவ தும், அரசு பஸ்கள் இயக்கம் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில், 1.43 லட்சம் ஊழியர்கள்உள்ளனர். அவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, 12வது ஊதிய உயர்வு ஒப்பந்தம், 2016 ஆக., மாதம் முடிந்தது. ஜெயலலிதா மறைவு உள்ளிட்ட அரசியல் குழப்பங்களால், 13வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு ...

இன்ஜி., கவுன்சிலிங்கில் 'டாப்பர்ஸ்' முறை ரத்து?

Posted: 13 May 2017 10:43 AM PDT

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 'டாப்பர்ஸ்' பட்டியல் வெளியிடுவதை, ரத்து செய்வது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவில், ரேங்கிங் முறை ரத்தானதால், மாணவர்களுக்கு, எந்த பிரச்னை யும் ஏற்படவில்லை; பல தரப்பிலும், வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை யால், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற பிரச்னை களில் இருந்து விடுதலை கிடைத்தது. அதே நேரத்தில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை பயன்படுத்தி, வணிக நோக்கில் செயல்படும் பள்ளிகளுக்கு, இந்த நடவடிக்கை அதிர்ச்சியை அளித்துள்ளது.இதற்கிடையில், உயர் ...

'ஜோடி பொருத்தம் சரியில்லையே...' வருத்தப்படும் பிரான்ஸ் மக்கள்

Posted: 13 May 2017 11:45 AM PDT

பாரிஸ்: பிரான்சில், வயது குறைந்த இளம் அதிபராக இம்மானுவேல் மக்ரோன், 39,
தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவிக்கு, 63 வயது என்பதால், அந்நாட்டு மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், ஐரோப்பிய யூனியன் ஆதரவாளர் இம்மானுவேல் மக்ரோன், அபார வெற்றி பெற்றார்.
வாழ்த்து
இளம் வயதில் அதிபராக தேர்வாகியுள்ள அவருக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி, அந்நாட்டு மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மக்ரோன், விரைவில் அதிபராக பொறுப்பேற்க உள்ள ...

ரகசியங்களை அம்பலப்படுத்துவேன்! டில்லி 'மாஜி' அமைச்சர் அதிரடி

Posted: 13 May 2017 12:47 PM PDT

புதுடில்லி:''என் அடுத்த அஸ்திரம், ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டு போட்ட டில்லி மாநில மக்களுக்கு, கடும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்,'' என, சமீபத்தில் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.
டில்லியில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டில்லி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த, ஆம் ஆத்மியை சேர்ந்த கபில் மிஸ்ரா, கட்சியின் மூத்த தலைவர்கள் பற்றி புகார் கூறி வந்ததால், அமைச்சரவையில் இருந்தும், கட்சியில் இருந்தும், சமீபத்தில் நீக்கப்பட்டார்.
'ஆம் ஆத்மி கட்சியின் ஐந்து மூத்த ...

புத்தக சுமையிலிருந்து ஒரு நாள் விடுதலை

Posted: 13 May 2017 01:58 PM PDT

லக்னோ: உ.பி.,யில், பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஒவ்வொரு சனிக்கிழமையும், பாட புத்தகங்கள் இல்லாத வேலை நாளாக அறிவிக்க, மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகவுள்ளது.
தொடரும் மாற்றங்கள்
உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், பா.ஜ., தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், துணை முதல்வர் ...

கர்ப்பிணிகளுக்கு உதவும் திட்டம் ஹரியானா மாநிலத்தில் அமல்

Posted: 13 May 2017 02:48 PM PDT

சண்டிகர்: கர்ப்பிணி பெண்களின் உடல்நலனைக் காக்க உதவும், புதிய திட்டத்திற்கு, ஹரியானா மாநில முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், பெண்களின் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கவும், தாய், சேய் நலனைக் காக்கும் வகையிலும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநில சுகாதார துறை அமைச்சர், அனில் விஜ் கூறியதாவது:
இந்த திட்டத்தின் கீழ், கிராம செவிலியர்களிடம், நான்கு மாத கர்ப்பிணிப் பெண்கள், தங்கள் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™