Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அந்தநாள் ஞாபகம் - இறப்பு!

Posted: 13 May 2017 03:07 PM PDT

அந்தநாள் ஞாபகம் - இறப்பு! பா.வெ. பேரக்குழந்தையை பார்த்த நிறைவில் பெரியவர்களின் ஆயுள் பெருமூச்சு விடும்! நிறைவாய் வாழ்ந்த நிம்மதி நிழலில் இளைப்பாறும் இலையுதிர் மனது! கடமை முடிந்த கர்வத்தில் காலனை அழைத்து காத்திருக்கும் கண்கள்! கடமை தவறாத காலனும் காலத்தோடு கணக்கு முடிக்க கணக்காய் இதோ வந்துவிட்டான்! முதிர்ச்சியின் விசாலத்தில் மனம் மழலையின் விலாசத்தை தேடுகிறது...! உறவினர் அருகாமை, உள்ளப் பதற்றம், உளறல் மொழிகள், உவகை இல்லாத ஓரக்கண்ணீர், உடனே பிரியாத ...

அந்தநாள் ஞாபகம் - திருமணம்!

Posted: 13 May 2017 03:05 PM PDT

அந்தநாள் ஞாபகம் - திருமணம்! - பா.வெ. கால் கட்டு போட கால நேரம் கனிந்து வர காத்திருந்த பொறுமையில் கனவுகள் கூச்சலிடும்! பத்து பொருத்தம் பார்த்து பத்து இடத்தில் கேட்டு பெண் பார்த்து பிடித்தபின் பதில் கடிதம் போட்டு பரபரப்பின்றி பதிவாகும் பரஸ்பரம் மனதில்! தாம்பூலம் மாற்ற தேதி குறிக்க தரகர் தலையிட தடல்புடலாய் துவங்கும் திருமண நிச்சயம்! பெயர் விடுபடாமல் பத்திரிக்கை அச்சடித்து பெயர் எழுதி மதிப்பு கோர்த்து பலருக்கும் நேரில் வைக்க பாதி நாள் உருண்டோடும் ...

மிகப்பெரிய ரன்சம்வெயர் தாக்குதல் -முடங்கிய கணினிகள்.

Posted: 13 May 2017 12:26 PM PDT

நேற்றைய தினம் நடத்தப்பட்ட, தொடர்ந்து பரவிவரும் ரன்சம்வெயர் தாக்குதலால் 100 நாடுகளில் உள்ள 130,000 கணினிகள்  இதுவரை முடக்கப்பட்டன.(atom bomb of malware) இலண்டனில் National Health Service (NHS)  முடங்கியதால் நோயாளிகள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். ஜெர்மன் நாட்டில் பல தொடருந்து பயணச்சீட்டு  வழங்கும்  இடங்கள் முடங்கின.

உயிரிகள் உலகம்: வாய்க்குள் இயந்திரம்!

Posted: 13 May 2017 08:36 AM PDT

- - காட்டில் வாழும் விலங்குகளில் தலைவன் யார்? சிங்கம் என்று சொல்லிவிடுவீர்கள். காட்டிலும், நாட்டிலும் வாழும் பறவைகளில் யார் தலைவன் என்பதை உங்களால் காட்டமுடியுமா? மயிலையோ, கழுகையோ நீங்கள் சொல்லலாம். ஆனால், இவற்றைத் தாண்டி இன்னொரு பறவை உள்ளது. இந்தப் பறவைக்கு இயற்கை வழங்கிய திறமை மிகவும் அளப்பரியது. அந்தப் பறவையின் பெயர் மரங்கொத்திப் பறவை! மரத்தைக் கொத்தும்போது இந்தப் பறவையின் தலை அசைவைக் கவனித்திருக்கிறீர்களா? அது மரத்தைக் கொத்தும்போது "கிர்ர்ர்ர்…" என்ற ஓசையுடன், அதன் தலை ...

நூல் அறிமுகம் - தொடர் பதிவு

Posted: 13 May 2017 08:26 AM PDT

மாரடைப்பை தடுக்கும் எளிய வழி

Posted: 13 May 2017 06:38 AM PDT

மாரடைப்பை தடுக்கும் எளிய வழி தினமும் 10 நிமிடம் , டிவி பார்க்கும்போது , படிக்கும் போது , கலந்துரையாடலின் போது , தியானத்தின் போது என எப்போதுவேண்டுமானாலும் செய்யலாம் . செய்யவேண்டியது : ஆட்காட்டி விரலை மடக்கி கட்டைவிரலின் அடியில் தொடுங்கள். (ஆட்காட்டி விரல் - வட்ட நிலை - உள்ளங்கை பக்கமாக) பின்பு கட்டை விரலோடு நடு விரலையும், மோதிர விரலையும் இணையுங்கள், சுண்டு விரலை மேலே நீட்டுங்கள், மிக சுலபம் பலனோ மிக அதிகம் மாரடைப்பு தவிர்க்கப்படும் , இதயம் பலப்படும், ஆயுள் நீடிக்கும். தொடு ...

ஆயுத பூஜை: ஒருசிந்தனை.

Posted: 13 May 2017 06:34 AM PDT

தமிழ் எழுத்துக்களில் இது . .ஆயுதஎழுத்து எனப்படும். இந்த ஆயுதஎழுத்தானது நம் உடலில் சூரியநாடி, சந்திரநாடி மற்றும் சுழுமுனை நாடி ஆகியவைகளாக படிமம் கொண்டுள்ளது. இது உடலுக்கும் உள்ளத்துக்கும் வலு உண்டாக்கக் கூடிய ஆயுதமாகும். இவ்வாயுதத்தை நாள்தோறும் பயன்படுத்துவதே பிறவிப் பயன் என்பதை நினைவு கூறவே ஆயுதபூஜை கொண்டாடப் படுகிறது என்று நினைக்கிறேன்.

நாக்கு..

Posted: 13 May 2017 06:31 AM PDT

இரவின் நாக்குகள் நீளமானவை நீண்டு கொண்டே செல்கிறது அந்த இரவு காலத்தின் விழுமியங்களை எல்லாம் விழுங்கி கொண்டு.. பளப்பளப்பான கத்தியைப்போல் நான்கு புறமும் சுழல்கிறது இரவின் நாக்குகளால் தெறித்து விழும் துளிகள் எல்லாம் இரத்தச் சிவப்பாய் கனன்று எரிகிறது கண்ணீர் துளிகளால் அவ்வெப்பொழுது அணைத்து கொண்டே இருக்கிறேன் ஆனாலும் அது என்னவோ அணைவதாயில்லை இதோ நான் விழித்துவிட்டேன் வாள் வீச்சைப் போல் நாக்குகள் சுழன்றாலும் என்னில் தெறித்து விழும் நியாமான கோபங்களை சமூகத்தின் ...

வீட்டுக் குறிப்புகள் - 10

Posted: 13 May 2017 06:22 AM PDT


-

‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ .

Posted: 13 May 2017 06:20 AM PDT

நிதானமாக பேசுகிறார் இயக்குநர் ராதாமோகன் ''ஒவ்வொரு மனுஷனும் ஒரு கதைதான். அவனோட கனவு, ஆசை, நிராசை, கொண்டாட்டம் எல்லாத்தையும் பொத்தி வச்சிருக்கிற அனுபவமும், அழகுமே சொல்லி மாளாது. சினிமாவாக எடுத்தும் தீராது. நிறைய படிச்சிட்டோம் என்பதோ, நிறைய சினிமா எடுத்திட்டோம் என்பதோ விஷயமே இல்லை. எழுதுவதோ, படிப்பதோ, படம் எடுப்பதோ நமக்குள் ஒரு சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தணும். அந்த உள்மாற்றம்தான் மன விசாலம். என் 'பிருந்தாவனம்' அப்படிப்பட்டது. -

க்யூவிலே கலர் சுடிதாரிலே நிற்கிறதுதான் பொண்ணு...!!

Posted: 13 May 2017 06:18 AM PDT

அந்தநாள் ஞாபகம் - காதல்!

Posted: 13 May 2017 06:15 AM PDT

அந்தநாள் ஞாபகம் - காதல்! - பா.வெ. பருவம் சுரந்த காதலை பருகத் துடிக்கும் இதயங்களை பயம் மெல்ல பிடித்து இழுக்கும்! மனதில் பூத்த காதலை மறுகணம் பறிக்க வழியின்றி மனதை பிசையும் தயக்கம்! தயக்கம் மீறிய மயக்கத்தில் துளிர்விட்ட காதலை தூதுவிட துணிவு துளிர்ப்பதில்லை! காதலை சொல்ல கண்கள் நிமிர கணநேரமும் கனியாத காலம் அது! கண்களில் வழிந்த காதலை காலத்திற்கும் பதுக்க வழியில்லை; பதுக்கினாலும் பார்க்க ஆளில்லை! கன்னியரிடம் காதல் சொல்லும் கண்ணியக் கடிதங்களை ...

விடுகதைகள்

Posted: 13 May 2017 06:10 AM PDT


-
-
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

நேர்மையான டாக்ஸி ஓட்டுநரின் கடனை அடைத்த டெல்லிவாசிகள்

Posted: 13 May 2017 05:58 AM PDT

-- ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய பையைத் திருப்பி அளித்த டாக்ஸி ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டி, அவருக்கு இருந்த ரூ.70,000 கடனை டெல்லிவாசிகள் திருப்பிச் செலுத்தியுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் தேவேந்திர கப்ரி. அவரின் வண்டியில் மே 3-ம் தேதியன்று ஒருவர் விமான நிலையத்தில் இருந்து பஹார்கஞ்ச் வரை பயணித்துள்ளார். அப்போது அவர் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய பையை வண்டியிலேயே தவறவிட்டுவிட்டார். சிறிது நேரம் கழித்து, டாக்ஸியில் ஒரு பை இருப்பதைப் பார்த்த கப்ரி, ...

பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?

Posted: 13 May 2017 05:56 AM PDT

அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள்? உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் அழுகையின் போது அசைக்கப்படுகிறது. இந்த சிஸ்டம் அசைக்கப்ட்டாலே நமக்கு அமைதி (Relaxation) கிடைக்கும். அதாவது நிம்மதியைத் தருகிற, மன அழுத்தத்தைக் குறைக்கிற நரம்புகளை உணர்ச்சி தட்டி எழுப்பும். தொடர்ந்து OPIODS என்கிற இரசாயன வஸ்துவை நமது கண்ணீர் தட்டி எழுப்புகிறது. மேலும் நம்முடைய சந்தோஷத்தைத் தூண்டுகிற இயற்கை இரசாயனங்களையும் ...

தேடல் முக்கியம் – ஹைகூ

Posted: 13 May 2017 05:48 AM PDT

- தேடல் என்றால் பொருள் தேடல் அன்று அறிவுத் தேடல் மிக முக்கியம் . அறிவுத் தேடல் மூச்சு உள்ளவரை தொடர வேண்டும் – ——————————– சூரியன் அலைந்து கொண்டிருக்கிறான் எரிக்கும் தன் அனலை இறக்கி வைக்க இடம் தேடி ! – —————————— – இருண்மையை ஒழிக்க வந்த இருட்டுத் தீபம் நம் மக்களாட்சி ! – —————————- நாளாறு காலமும் தொழுது கோளறு பதிகம் பாடிப் பல பெற்றான் கோளாறு ! – ———————— – குளித்துக் குளித்து அழுக்குப் போகவில்லை மலைக்கு ஒய்ந்தது மழை ! – ————————- – ஒளிரத் தோடங்கிய நிலா ஒழியத் ...

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 13 May 2017 04:43 AM PDT

என் முகவரி

muthusimpu@gmail.com

பழைய துப்பறியும் நாவல்கள்.

Posted: 13 May 2017 04:33 AM PDT

ஈகரை சொந்தங்களே,பழம் பெரும் எழுத்தாளர்களான ஆரணி குப்புசாமி முதலியார்,வடுவூர் துரைசாமி ஐயங்கார்,ஜே.ர்.ரெங்கராஜு ஆகியோர் படைத்த அற்புதமான துப்பறியும் கதைகள் இருந்தால் பகிருமாறு அன்புடன் வேண்டுகிறேன்

ஹாரி பாட்டர் புத்தகம் தமிழில்

Posted: 13 May 2017 04:14 AM PDT

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கங்கள்.

       எனக்கு ஹாரி பாட்டர் புத்தகம் தமிழில் வேண்டும்! கிடைக்குமா? இங்கே தேடிப்பார்த்ததில் கிடைத்த இணைப்புகள் எனக்கு வேலை செய்யவில்லை. புத்தகம் இருக்கும் நண்பர்கள் இந்த பதிவில் தெரிவிக்கவும்.
         
                                               நன்றி!!!

மொட்டு – கவிதை

Posted: 12 May 2017 06:18 PM PDT

- ஐம்பத்தைந்து நாட்கள் தள்ளிப்போன மாதவிலக்கை 'மொட்டு துளிர்த்திருக்கும்' என உவகையில் உள்ளுணர்ந்த கணத்தில் சட்டென கட்டவிழ்ந்து பூக்கா புதுமலர் உதிர, இனியும் நாம் வருந்தி ஆவது ஒன்றுமில்லை. – இதோ, இந்த ஓட்டு வீட்டிற்கு அப்பால் தென்னைமரங்களுக்குள் பக்கவாட்டு தண்டவாளங்களில் எதிரெதிர் திசைகளில் பாயும் ரயில்களின் பேரழகில் லயித்து பருகும் தேநீர் மிடறுகளின் இடையில் சில கவிதைகள் சொல்… அல்லது கேள்… போதும் – ———————— – வள்ளி மயில் குங்குமம்

அம்மாவின் அல்சைமர் –

Posted: 12 May 2017 06:18 PM PDT

- கற்றுத் தந்ததை மறந்த சிறுமி போல் முற்றத்துக்கும் புழக்கடைக்கும் வழியறியாது கைபிசைந்து நிற்கிறாள் பணத்தை பாம்பென்றும் சோற்றை மண்ணென்றும் பெயர் மாற்றி வைக்கிறாள் ரெண்டு மாமாங்கப் பாழ் நெற்றியில் குங்குமம் தரித்தும் தும்பைப்பூ சிகையில் – துளி முல்லைச்சரம் சூட்டியும் அழகுபார்க்கிறாள் அவசரமாய் ஓடி அமரத் தெரியாமல் அடிக்கடி ஆடையை நனைத்துக்கொள்கிறாள் ஆரு பெத்த புள்ள இது அடிக்கடி ஊட்டுக்கு வருதென்று அவள் சொல்லும்போது மட்டும் ஆயிரம் ஊசி உயிர் துளைக்கும் வலியை என் செய்வதெனப் புரியவில்லை. – —————————— – ...

இது புது குலேபகாவலி!

Posted: 12 May 2017 05:59 PM PDT

- கழுத்தில் ஒட்டி உரசும் பாசிமணிமாலை, இடது கை கட்டைவிரலில் திருஷ்டி மோதிரம், தலையில் மங்கி கேப், கலர்ஃபுல் வுல்லன் ஜெர்கின் என பிரபுதேவா இப்போது 'குலேபகாவலி'. 'தேவி' கொடுத்த ஹிட்டில் செம ஸ்டைலீஷ் ஹன்சிகாவுடன் மாஸ்டர் அடுத்த ஆட்டத்திற்கு ரெடி. ''எனக்கு விபரம் தெரிஞ்ச வயசுல இருந்து நான் பிரபுதேவா சாரோட வெறித்தனமான ரசிகன். அவரோட 'காதலன்', 'மிஸ்டர் ரோமியோ' பாடல்களை ஆடியோவில் கேட்டால் கூட எனக்கு சாரோட எக்ஸ்பிரஷன்ஸும் அவரோட டான்ஸ் மூவ்மென்ட்ஸும்தான் மைண்ட்ல ஓடும். அதனால முழுக்க ...

காணவில்லை -கவிதை

Posted: 12 May 2017 05:27 PM PDT

பெயர் முகவரி காணாமல் போன தேதி காணாமல் போன அன்று அணிந்திருந்த சட்டையின் நிறம் – எல்லா சுவரொட்டிகளும் காணாமல் போனவர்கள் பற்றியதுதான் தவிர தொலைத்தவர்களைக் காணவில்லை – காணாமல் போன தேதி அன்று தொலைத்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? – ரசிகன் ஞானியார் – விகடன் படம்- இணையம்

விடிந்திடலாம் -கவிதை

Posted: 12 May 2017 05:25 PM PDT

வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்: 20 கோடி இந்தியர்கள் பயன்படுத்துவதாக தகவல்

Posted: 12 May 2017 04:59 PM PDT

- கலிபோர்னியா: வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்யும் வசதியை கடந்த ஆண்டு நவம்பரில், வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், உலகம் முழுவதும் நாளொன்றுக்கு 34 கோடி நிமிடத்துக்கு வீடியோ கால் செய்யப்படுவதாக கூறியுள்ள அந்நிறுவனம், இதில் இந்தியர்கள் 5 கோடி நிமிடத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 120 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதாகவும், ...

புனே ரன்வேயில் நிற்காமல் ஓடிய விமானம்: தப்பிய பயணிகள்

Posted: 12 May 2017 04:53 PM PDT

புனே: புனே விமான நிலையத்தில் இன்று(மே-12) மாலை தரையிறங்கிய விமானம் ஓடுபாதையைக் கடந்து சென்று நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. டில்லியில் இருந்து இன்று மாலை புனே நகருக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 120 பயணிகள் பயணம் செய்தனர். மாலை 6.50 மணிக்கு புனே விமான நிலையத்தை நெருங்கியதும் தரையிறங்குவதற்கு ஆயத்தமாகி, சிக்னல் கிடைத்ததும், அந்த விமானத்திற்கு ஒதுக்கப்பட்ட ஓடுபாதையில் தரையிறங்கியது. ஆனால், வழக்கத்திற்கு ...

கபடியை ஊக்குவிக்க ஐகோர்ட் உத்தரவு

Posted: 12 May 2017 04:51 PM PDT

மதுரை: 'தகுந்த காரணங்கள் இன்றி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான, கபடி போட்டி நடத்த போலீசார் அனுமதி மறுக்கின்றனர். இதை தவிர்க்க வேண்டும். கபடியை ஊக்குவிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில், கபடி போட்டி நடத்த அனுமதிக்க, போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரித்த நீதிபதிகள் ராஜா, வேல்முருகன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: கபடி போட்டி தொடர்பாக, ஏற்கனவே இந்நீதிமன்றம் ...

ஆதியோகி சிலைக்கு 'கின்னஸ்' விருது

Posted: 12 May 2017 04:47 PM PDT

கோவை: வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள, 112 அடி ஆதியோகி சிலையை, உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலையாக, 'கின்னஸ்' புத்தகம் அங்கீகரித்து உள்ளது. சுற்றுலா தலம்: கோவை அருகே, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள, ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்ட, 112 அடி உயர பிரம்மாண்ட ஆதியோகி சிலையை, பிப்., மாதம், மகா சிவராத்திரியன்று, பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன் சிறப்பு கருதி, ஆதியோகி சிலையை, அதிகாரப்பூர்வ சுற்றுலா தலமாக, மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது. 'கின்னஸ்' ...

ஐதராபாத்தில் தகவல் மையம் அமைக்குது இஸ்ரோ

Posted: 12 May 2017 04:45 PM PDT

ஐதராபாத்: இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விரைவில் தகவல் மையம் ஒன்றை ஐதராபாத்தில் அமைக்கவுள்ளதாக அதன் தலைவர் கிரண்குமார் அறிவித்தார். தெலுங்கானா மாநிலத்தில் தகவல் மையம் இஸ்ரோ அமைப்பது இதுவே முதல் முறை ஆகும்.இம்மையத்தினால் கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் ஆகியோர் பயன்பெறுவர். குறிப்பாக புதிதாகத் தொழில் துவங்க விரும்பும் இளம் தொழில் முனைவோர் நல்ல அறிவார்ந்த யோசனைகளை செயல் அளவில் மாற்றி சிறந்த பொருட்களை உருவாக்கலாம் என்று கூறினார் கிரண் குமார். ஒரே இடத்தில் தகவல்கள் தற்போது ...

கல்சா விழா: கனடா பிரதமருக்கு இந்தியா கண்டனம்

Posted: 12 May 2017 04:44 PM PDT

டோரண்டோ: கனடாவில் ‛‛கல்சா'' தின விழாவில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர் ஐஸ்டின் ட்ரூட்டிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவில் சீக்கிய மதத்தினர் பெருமளவு வசிக்கின்றனர். இவர்களில் பலர் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக கோரி போராடி வந்த காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இந்நிலையில் கனடாவின் டோரன்டோவில் கடந்த ஏப். 30ம் தேதி ‛‛கல்சா' தினம் கொண்டாடப்பட்டது. இதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டே கலந்து கொண்டார். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ...

ஹாலிவுட்டின் அடுத்த பிரமாண்டம்... ஜாக்கி சான் - சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் இணையும் ஆக்‌ஷன் படம்!

Posted: 12 May 2017 04:39 PM PDT

அதிரடி மன்னன் ஜாக்கி சான் மற்றும் ஹாலிவுட்டின் ஆக்‌ஷன் கிங் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் இணைந்து முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையம்சம்கொண்ட திரைப்படத்தில் நடிக்கவுள்ளனராம். இப்போது, ஹாலிவுட்டின் ஹாட் டாப்பிக் இதுதான். 'எக்ஸ்பெண்டபல்ஸ்' வரிசைத் திரைப்படங்களின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பிய ஸ்டாலோன், இப்போது ஜாக்கியுடன் கை கோத்திருப்பது படத்தின் வீச்சை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்துக்கு 'எக்ஸ்-பாக்தாத்' (Ex- Baghdad) என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் ...

துல்லிய தாக்குதல் - கெத்து கூடிய தேஜாஸ்!

Posted: 12 May 2017 04:36 PM PDT

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான இலகு ரக 'தேஜாஸ்' போர் விமானம் வெற்றிகரமாக மற்றொரு சோதனையில் தேர்ச்சி அடைந்துள்ளது. கண்காணாத இடத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக விண்ணில் பாயும் ஏவுகணை மூலம் வீழ்த்துயுள்ளது. ஒடிசாவின் சந்திப்பூர் சோதனை பகுதியில் இந்தச் சோதனை நடைபெற்றது. விமானத்தில் உள்ள ஏவுகணை தாக்குவதற்கு தயாராகும் திறன், கண்காணாத இலக்கை தாக்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் தேஜாஸின் தாக்குதல் வேகம், தயாராகுதல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™