Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளுக்கு மோடி...எச்சரிக்கை! பாகிஸ்தானை கண்டித்து பிரதமர் ஆவேச பேச்சு

Posted: 12 May 2017 10:32 AM PDT

கொழும்பு:''இரு நாடுகளுக்கு இடையேயான மோதலால் மட்டும் வன்முறை, பயங்கரவாத சம்பவம் நடப்பதில்லை; அந்த மனநிலையுடன், ஊக்குவித்து வரும் நாடுகளால், உலக நாடு களுக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது,'' என,பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார்.

கடந்த இரு ஆண்டுகளில், இரண்டாவது முறையாக, இலங்கைக்கு பயணம் மேற் கொண்டு உள்ளார், பிரதமர் மோடி. கொழும்பில் நேற்று நடந்த, புத்த பூர்ணிமா விழாவில், சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்றார். புத்தர் பிறந்தது, ஞானம் பெற்றது, மறைந்ததை உணர்த்தும் வகையில், சர்வதேச விசாக் தினமாக, புத்த பூர்ணிமா விழா, இலங்கையில் ...

பாக்.,கிற்கு பதிலடி தர மத்திய அரசு வியூகம்

Posted: 12 May 2017 10:38 AM PDT

புதுடில்லி: பாக்., ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டிற்கு எதிராக கடும் நடவடிக்கை களை எடுக்க, மத்திய அரசு தயாராகி வருவ தாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இந்தியா - பாக்., எல்லை கட்டுப்பாடு கோட்டை ஒட்டியுள்ள பகுதிகளில், பாக்., ராணுவம் அடிக்கடி அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய எல்லைக்குள், பாக்., ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால், இரு நாட்டு உறவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சமீப காலமாக, பாக்., ராணுவத்தின் ...

செல்லாத நோட்டு அறிவிப்பால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு

Posted: 12 May 2017 10:40 AM PDT

புதுடில்லி: செல்லாத நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை, 91 லட்சம் உயர்ந்துள்ளது.

கடந்த, 2016, நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதன்படி, பழைய, செல்லாத தாக அறிவிக்கப்பட்ட,500-1,000 ரூபாய் நோட்டு களை மாற்றிக் கொள்வது உட்பட பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால், 2016 - 17ம் நிதியாண்டில், வருமான வரி செலுத்து வோரின் எண்ணிக்கை, 91 லட்சம் உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டு உயர்வை ஒப்பிடு கையில், 80 சதவீத அதிகம். இந்த உயர்வை யும் சேர்த்து, தற்போது, 5.59 கோடி ...

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு சிக்கல்

Posted: 12 May 2017 10:44 AM PDT

புதுடில்லி: 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள் ளது.அவர்கள் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' நிறுவனம், வருமான வரித்துறையின் விசாரணையை சந்திக்க வேண்டும் என, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர போராட்டத்தின்போது, தியாகிகள் உள்ளிட்டோரிடம் இருந்து பணத்தை திரட்டி, 'நேஷனல் ஹெரால்டு' ஆங்கில பத்திரிகையை, 1938ல் துவக்கினார், நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு.நேஷனல் ஹெரால்டு உட்பட மூன்று பத்திரிகைகளை, ஏ.ஜே.எல்., எனப்படும் அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் நிறுவனம் நடத்தி ...

உ.பி.,யில் குற்றங்களை கண்காணிக்க முதல்வர் தலைமையில் தனிப்பிரிவு

Posted: 12 May 2017 10:46 AM PDT

லக்னோ: 'உ.பி.,யில் குற்றச் செயல்களை கண்காணித்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க, முதல்வர் தலைமையில் தனிப் பிரிவு அமைக்கப்படும்' என, மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். அந்த மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மார்ச், 19ல் ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார். அன்று முதல் ஒவ்வொரு நாளும் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில், மாநிலத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களை குறைக்கவும், சட்டம் - ஒழுங்கை பாதுகாத்து, காவல் துறையை ...

ஜெயலலிதா பெயரில் உள்ள வாகனங்கள் வாரிசு இல்லாததால் இயக்குவதில் சிக்கல்

Posted: 12 May 2017 10:53 AM PDT

ஜெயலலிதாவின் வாரிசுதாரர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகாததால், அவரது பெயரில் உள்ள வாகனங்களை, சட்டப்படி இயக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

முன்னாள் முதல்வர், ஜெ., மரணமடைந்து, ஐந்து மாதங்களுக்கும் மேலாகி விட்டது. அவர் முதல்வராக இருந்த, 1991 - 96ம் ஆண்டுகளில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக தொடுக்கப்பட்ட வழக்கில் தான், அவருக்கு சிறை தண்டனை கிடைத்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை இணைத்த சொத்து பட்டியலில், 306 சொத்துக்கள் இடம் பெற்றிருந்தன.அவற்றில், ஜெ., பெயரில் உள்ள சொத்துக் களுக்கு வாரிசுதாரர் யார் என்ற கேள்வி எழுந் துள்ளது. என்றாவது ஒரு ...

சிக்கலில் மாட்டும் அமைச்சர்களால் பழனிசாமி பீதி: பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் பரிதவிப்பு

Posted: 12 May 2017 10:59 AM PDT

அமைச்சர்கள் மீது, அடுக்கடுக்கான புகார்கள் குவிந்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல், முதல்வர் பழனிசாமி பரிதவித்து வருகிறார்.

'எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன், வெளியேறிவிடுவோம்' என, அவர்கள் மிரட்டுவதே, முதல்வரின் பரி தவிப்புக்கு காரணம். 'பிரச்னைகள் தீர திருப்பதி சுவாமியிடம் மன்றாடினேன்; திரும்புவதற்குள் அமைச்சர்கள் பீதியைக் கிளப்புகின்றனரே...' என, பீதியில் உறைந்து நிற்கிறார்.ஜெ., முதல்வராக இருந்த போது, அமைச்ச ரவை மாற்றம் அடிக்கடி நடக்கும். அமைச்சர் கள் மீது புகார் வந்தால், அவர் உடனடியாக ...

அங்கீகாரமற்ற மனைகள் பத்திரப்பதிவு; உயர் நீதிமன்றம் இடைக்கால அனுமதி

Posted: 12 May 2017 11:05 AM PDT

சென்னை:தமிழக அரசு கொண்டு வந்த புதிய விதிகளின்படி வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய நிபந்தனைகளுக்கு உட்பட்டு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கி உள்ளது.

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றவும், அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்யவும், தடை விதித்தது. தடையை நீக்கக்கோரி, 'ரியல் எஸ்டேட்' வணிகர்கள் மற்றும் தனிநபர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர். அங்கீகாரமற்ற மனைகளை வரன்முறைப் படுத்தவும் நில பயன்பாட்டை மாற்றுவதற்கும் தமிழக அரசு ...

பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டம்... முதலிடம்!

Posted: 12 May 2017 11:15 AM PDT

பிளஸ் 2 தேர்வில், 97.85 சதவீத தேர்ச்சியுடன், விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளி கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றன. சென்னை மாவட்ட பள்ளிகளின் கல்வித்தரம், அதல பாதாளத்திற்கு சரிந்துள்ளது. 'ரேங்கிங், கிரேடிங்' முறைகள் இன்றி, மதிப்பெண் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டது.

பிளஸ் 2 தேர்வு முடிவில், இந்த ஆண்டு முதல், மாநிலத்தில் முதல் இடம், இரண்டாம் இடம் போன்ற, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள் ளது. மாணவர்களுக்கான சான்றிதழிலும், ஏ, பி, சி, டி என, எந்தவித கிரேடிங் ...

வீரரை கொன்ற பயங்கரவாதிகள் பெயர்களை வெளியிட்டது ராணுவம்

Posted: 12 May 2017 12:08 PM PDT

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், ராணுவ அதிகாரியை கடத்தி சென்று, கொலை செய்த, மூன்று ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
கடத்தி கொலை:
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. தெற்கு காஷ்மீரில், சோபியான் மாவட்டத்தில், சமீபத்தில், உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க சென்ற ராணுவ அதிகாரி உமர் பயஸ், 23, பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல், குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில், சோபியான் மாவட்டத்தில் ...

விரும்பத்தகாத விவாகரத்து 'தலாக்': சொல்கிறது சுப்ரீம் கோர்ட்

Posted: 12 May 2017 01:02 PM PDT

புதுடில்லி: 'முஸ்லிம்கள், மும்முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறை, விரும்பத் தகாத, மிக மோசமான விவாகரத்து நடைமுறை' என, சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

மூன்று முறை, தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, முஸ்லிம் பெண்கள் மற்றும் அமைப்புகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 'இந்த நடைமுறை, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது; பாலின பேதத்தை உருவாக்குகிறது' என, மனுதாரர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசும், தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மனு தாக்கல் செய்துள்ளது.
அதே ...

ரூ.1,000 கோடி ஊழல்; லாலு மீது பா.ஜ., புகார்

Posted: 12 May 2017 01:54 PM PDT

பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழல் செய்து, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக, பா.ஜ., புகார் தெரிவித்துள்ளது.
புதிய புகார்:
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மீது, அடுத்தடுத்து, ஊழல் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், லாலு பிரசாத், 2008ல், ரயில்வே அமைச்சராக இருந்த ...

ஆதியோகி சிலைக்கு 'கின்னஸ்' விருது

Posted: 12 May 2017 02:43 PM PDT

கோவை: வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள, 112 அடி ஆதியோகி சிலையை, உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலையாக, 'கின்னஸ்' புத்தகம் அங்கீகரித்து உள்ளது.
சுற்றுலா தலம்:
கோவை அருகே, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள, ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்ட, 112 அடி உயர பிரம்மாண்ட ஆதியோகி சிலையை, பிப்., மாதம், மகா சிவராத்திரியன்று, பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன் சிறப்பு கருதி, ஆதியோகி சிலையை, அதிகாரப்பூர்வ சுற்றுலா தலமாக, மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.
'கின்னஸ்' விருது:
உலகிலேயே ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™