Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'நீட்' தேர்வால் தமிழக மாணவர்களுக்கு 'ஜாக்பாட்': கூடுதல் இடங்கள் கிடைக்கும்

Posted: 10 May 2017 09:56 AM PDT

மத்திய அரசு நடத்தியுள்ள, 'நீட்' தேர்வால், தமிழக மாணவர்கள் அதிக அளவில் மருத்து வக் கல்லுாரிகளில் சேர வாய்ப்பு உருவாகி உள்ளது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர, இந்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' தேர்வு கட்டாயமாகி உள்ளது. தமிழக மாணவர்களுக்கு, இத்தேர்வில் விலக்கு கேட்டு, சட்டசபையில், மசோதா நிறைவேற்றப் பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.இந்நிலையில், தமிழகம் உட்பட, அனைத்து மாநிலங்களிலும், மே 7ல், 'நீட்' தேர்வு நடந்தது. உச்ச நீதிமன்றம், 2015ல் வழங்கிய வழிகாட்டுதல்படி, ...

கோடை விடுமுறையில் பணியாற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மோடி பாராட்டு!

Posted: 10 May 2017 10:26 AM PDT

''தேங்கி கிடக்கும் வழக்குகளை குறைப்பதற் காக, கோடை விடுமுறையிலும் பணியாற்றும் முடிவை எடுத்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதே நல்ல எண்ணத்துடன், ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வாதிட, வழக்கறிஞர்கள் முன் வர வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மத்திய சட்ட அமைச்சகத்தின் புள்ளிவிபரங் களின்படி, சுப்ரீம் கோர்ட்டில், 61 ஆயிரம் வழக்குகளும்; நாடு முழுவதும் உள்ள, 24 ஐகோர்ட்களில், 38.70 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 'நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் வகையில், கோடை விடுமுறையின்போது செயல்படுவோம்' என, சுப்ரீம் கோர்ட் தலைமை ...

ஓட்டு இயந்திரங்களின் செயல்பாடு; தேர்தல் கமிஷனுக்கு பகிரங்க சவால்

Posted: 10 May 2017 10:36 AM PDT

புதுடில்லி: 'மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது எனக் கூறும் தேர்தல் கமிஷன், அதை சர்வதேச வல்லுனர்கள் முன் நிரூபிக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் இருவர், சவால் விடுத்துள்ளனர்.

உ.பி., உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சியை பிடித்ததை அடுத்து, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்., பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேர்தல் கமிஷன், இது குறித்து, அனைத்துக் ...

ஜாதவுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற சர்வதேச கோர்ட் தடை

Posted: 10 May 2017 10:42 AM PDT

புதுடில்லி: பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற, இந்திய கடற் படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ், 46, விவகா ரம் தொடர்பாக, சர்வதேச கோர்ட்டை, மத்திய அரசு அணுகியதை அடுத்து, மரண தண்டனை க்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது.

இது குறித்து, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், கோபால் பக்ளே, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:குல்பூஷண் ஜாதவ், பாக்.,கில் உளவு பார்த்ததாக பொய் குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக் கில், பாக்., கோர்ட் மரண தண்டனை விதித்துள் ளது. அவரை சந்தித்து பேச அனுமதி கோரி, பாக்.,கில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் ...

கெஜ்ரிவாலை எதிர்த்து உண்ணாவிரதம்; 'மாஜி' அமைச்சருக்கு அடி, உதை

Posted: 10 May 2017 10:48 AM PDT

புதுடில்லி: டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பல்வேறு ஊழல் புகார்கள் கூறிவரும், டில்லி முன்னாள் அமைச் சர் கபில் மிஸ்ரா, உண்ணாவிரத போராட் டத்தை துவக்கியுள்ளார். அவரை, ஆம் ஆத்மி பிரமுகர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந் துள்ளது. கட்சியில் பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து, கபில் மிஸ்ரா, சமீபத்தில் நீக்கப்பட் டார். அதை தொடர்ந்து, முதல்வர் கெஜ்ரிவால் மீது, இரண்டு கோடி ரூபாய்லஞ்சம் வாங்கியதுஉட்பட, பல்வேறு புகார்களை, கபில் ...

முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு; தமிழக அரசின் நிலை என்ன?

Posted: 10 May 2017 11:09 AM PDT

'முதுநிலை மருத்துவப் படிப்பில், அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக் கும் விவகாரத்தில், தமிழக அரசு மேல்முறை யீடு செய்யுமா' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில், முதுநிலை மருத்துவப் படிப்பில், 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., விதிகளின்படி, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, கவுன்சிலிங் நடந்து வருகிறது.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ...

அ.தி.மு.க., அணிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு

Posted: 10 May 2017 11:22 AM PDT

தேர்தல் கமிஷன் நடத்தும், அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி, அ.தி.மு.க.,வின் இரு அணிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. அதை தொடர்ந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந் திரங்களில் முறைகேடு செய்து, பா.ஜ., வெற்றி பெற்றதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.அதை, தேர்தல் கமிஷன் மறுத்தது. இந்த புகார் தொடர்பாக, அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து, அவர்களின் குற்றச்சாட்டுகள் ஆதார மற்றவை என்பதை விளக்க, தேர்தல் கமிஷன் திட்ட மிட்டது.அதன்படி, ...

விஜிலென்ஸ் கமிஷனர் பதவி; கவர்னருக்கு ஸ்டாலின் கடிதம்

Posted: 10 May 2017 11:25 AM PDT

சென்னை:'விஜிலென்ஸ் கமிஷனுக்கு, சுதந்திர மாக இயங்கும் கமிஷனரை பணிய மர்த்த வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம் வருமாறு:அ.தி.மு.க., ஆட்சியில், மாநிலத்தின் மிக முக்கிய பொறுப்பான, மாநில விஜிலென்ஸ் கமிஷனர் பொறுப்பு, தலைமை செய லர்களுக்கு கூடுதல் பொறுப்பாக தரப்படு கிறது. தற்போது, உள்துறை செயலரை, மாநில விஜிலென்ஸ் கமிஷனராக,கூடுதல் பொறுப்பில் நியமித்துள்ளனர். இதனால், விஜிலென்ஸ் கமிஷனுக்கு உள்ள சுதந்தி ரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பல்வேறு நிலைகளிலும், ஊழல் ...

முதல்முறை..! பிளஸ் 2 தேர்வு முடிவு எஸ்.எம்.எஸ்.,சில் வருகிறது

Posted: 10 May 2017 11:38 AM PDT

சென்னை:பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. முதல்முறையாக, மதிப்பெண் விபரங்கள், மாணவர் அல்லது பெற்றோர் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., என்ற, குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்பட உள்ளன.

மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழிலும், புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. நாளை வெளியாகும் முடிவுகளை அறிய, தேர்வு எழுதிய, 9.3 லட்சம் மாணவர், மாணவி யர் காத்திருக்கின்றனர்.மார்ச் மாதத்தில் நடந்த, பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகள், சென்னை, நுங்கம்பாக்கம், பள்ளிக் கல்வி வளாகத்தில், நாளை காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
இந்த முறை, தேர்வு முடிவுகளை, ...

ராஜஸ்தான்: திருமண மண்டபம் இடிந்து விழுந்து 22 பேர் பலி

Posted: 10 May 2017 12:21 PM PDT

பாரத்பூர்: ராஜஸ்தானில் திருமண மண்டபம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியாகினர்.

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் திருமண மண்டபத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 22 பேர் பலியாயினர். மேலும் படுகாயமடைந்த 26 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் ...

'தலாக்' வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

Posted: 10 May 2017 01:28 PM PDT

புதுடில்லி: முஸ்லிம்களில், மும்முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளில், சுப்ரீம் கோர்ட்டின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இன்று(மே 11) விசாரணையை துவக்குகிறது.

முஸ்லிம்களில், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் நடைமுறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றை, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
'பெண்களுக்கு எதிரான இந்த நடைமுறை, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது; பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கிறது' என, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™