Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


'உன்னோட பதவிக்கு ரூ.30 லட்சம் ரெடி.. துரத்திடுவேன் பாத்துக்க'.. அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜா!

Posted: 10 May 2017 03:44 PM PDT

தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை அதிகாரியை, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுவதற்கு இடையூறாக இருப்பதாக பெண் அதிகாரியை அமைச்சர் சரோஜா தனது வீட்டுக்கு வரவழைத்து திட்டியுள்ளார். சுமார் இரண்டு மணி நேரம் சிறை வைக்கப்பட்டு, அந்த அதிகாரியை சரோஜாவும், அவருடைய கணவரும் சேர்ந்து சரமாரியாக திட்டியுள்ளனர். இதையடுத்து அதிர்ச்சியில் மயங்கிய அதிகாரியை முதலுதவி அளித்து தெளிய வைத்துள்ளனர். இது ...

சென்னை: கீழ்பாக்கத்தில் சட்டகல்லூரி மாணவர்கள் போலீசாருடன் மோதல் பரபரப்பு

Posted: 10 May 2017 03:37 PM PDT

சென்னை: சென்னையில் ஒரே பைக்கில் மூன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் வந்ததை தடுத்து நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசாருடன் சட்டக்கல்லூரி மாணவர்கள் தகராறு செய்ததையடுத்து வாக்குவாதம் மோதலாக மாறியது. சென்னை மில்லர் சாலையில் ஒரே பைக்கில் மூன்று சட்ட மாணவர்கள் ஒரு வழிபாதையில் வந்துள்ளனர். அவர்கள் மீது போக்குவரத்துவிதி மீறல் நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசாருடன் சட்ட மாணவர்கள் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது மோதலாக மாறியுள்ளது. இது தொடர்பாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ...

ராஜஸ்தான்: திருமண மண்டபம் இடிந்து விழுந்து 22 பேர் பலி

Posted: 10 May 2017 03:31 PM PDT

பாரத்பூர்: - ராஜஸ்தானில் திருமண மண்டபம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியாகினர். ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் திருமண மண்டபத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 22 பேர் பலியாயினர். மேலும் படுகாயமடைந்த 26 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். - தினமலர்

வைட்டமின் டி

Posted: 10 May 2017 03:26 PM PDT

வைட்டமின் டி நடுத்தர வயது ஆண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக உண்டாகும் பல்வேறு நோய்கள் மற்றும் ஹார்மோன் பிரச்னைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.   எலும்புகளின் வலுவுக்கு கால்ஷியம் மிகவும் முக்கியம். அந்த கால்ஷியம் சத்து உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் டி சத்து மிகவும் அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதை தாண்டி வைட்டமின் டிக்கு பல முக்கிய பணிகள் உண்டு. அதுவும் ஆண்களுக்கு நீரிழிவு வராமல் தடுப்பதில் தொடங்கி, குழந்தையின்மையைத் ...

கடலூர்: இளைஞர் தலை துண்டித்து போலீஸ் ஸ்டேஷன்அருகே வீச்சு

Posted: 10 May 2017 03:24 PM PDT

கடலூர் : கடலூரில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் தலையை துண்டித்து அடையாளம் தெரியாத நபர்கள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி போலீஸ் ஸ்டேசனுக்குள் திடீரென மனித தலை விழுந்தது. இது அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவானது. இதனால்அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். தலையை பைக்கில் வந்த இருவர் போலீஸ் ஸ்டேசனுக்குள் வீசி சென்ற காட்சி பதிவாகியிருந்து. கொலை செய்யப்பட்டவர் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

'இந்தி கத்துக்கிட்டா லிவருக்கு நல்லது..!' - எஸ்.வி.சேகரும், யதார்த்தமும்!

Posted: 10 May 2017 02:17 PM PDT

- by விக்னேஷ் சி செல்வராஜ் விக்னேஷ் சி செல்வராஜ் ----------------- - 'இந்தி கத்துக்கிட்டா வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்' என எஸ்.வி.சேகர் சொல்லியிருக்கிறார். இவர் ஏற்கெனவே, 'சரவணபவனில் தோசை சாப்பிடவேண்டும் என்றாலும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்' எனப் பேசி சர்ச்சையைக் கிளப்பியவர்தான். - முன்னேற்றத்துக்கு இந்தி அவசியம் எனச் சொல்லும் இவர்களிடம் 'அப்புறம் ஏன் இந்தியையே தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் தமிழ்நாட்டை விடப் பின்தங்கி இருக்கின்றன?' எனக் கேள்வி கேட்டால் மண்டையைச் ...

எஸ்.எம்.எஸ் மூலம் பெற்றோருக்கு பிளஸ் 2 ரிசல்ட்! அசத்தப்போகும் தமிழக அரசு

Posted: 10 May 2017 10:18 AM PDT

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் செல்போனில் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். - பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (12.5.17) வெளியாகிறது. தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். பொதுவாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அரசு இணைதளங்களில் வெளியிடப்படுவது வழக்கம். இதனிடையே எஸ்.எம்.எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - --------------------------------- -விகடன

மலேசிய அரசைப் பின்பற்றுமா தமிழக/இந்திய அரசு.

Posted: 10 May 2017 09:58 AM PDT

பொதுமக்கள்  பொய்யான    செய்திகளைக்  கண்டுபிடிக்க    உதவும்    இணையத்தளமொன்றை  மலேசிய   அரசாங்கம்    தொடங்கியுள்ளது. ஒரு  செய்தி   உண்மையானதா,  பொய்யானதா   என்பதைத்    தெரிந்து  கொள்ளும்   ஓர்   இடம்   அது…….sebenarnya பொய்யான   செய்திகள்   நாடெங்கிலும்   பரவிக்  கிடக்கின்றன.   தப்பான    செய்திகள்   வந்துள்ளனவா  என்பதை   இந்த   இணையத்தளத்தின்   உதவியுடன்   தெரிந்து   கொள்ளலாம் என தொலை தொடர்பு,  பல்லூடக    அமைச்சர்    சாலே   சைட்   செருவாக்   கூறினார். இது   அரசாங்கத்துக்குச்  சொந்தமான   ...

சிரிப்பு மன்னன் சார்லி... சாப்ளின் கருவூலம்!

Posted: 10 May 2017 09:54 AM PDT

- Library filer of Charlie Chaplin, 1934. ------- - டொனால்டு டெக் உடலமைப்பு, பொருந்தாத உடை, நைந்துபோன காலணி, பழைய தொப்பி, வளைந்த பிரம்புக் கைத்தடி, கோணல் நடை என்றதும் நம் மனதில் சட்டென நிற்கும் உருவம் சார்லி சாப்ளின். - திரைப்படங்கள் பேச ஆரம்பிக்கும் முன்னரே அதில் நடித்த இவரது நடிப்பு பேசப்பட்டது. நான்கு தலைமுறைகளுக்கு அறிமுகமாகியிருக்கும் இநதக் கலைஞரின் 128வது பிறந்த நாள் அண்மையில் மிகப் புதுமையான முறையில் ஜெனிவாவில் கொண்டாடப்பட்டது. - அந்த விழாவிற்கு வந்த பெண்கள், ...

சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்

Posted: 10 May 2017 09:51 AM PDT

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான். தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் ...

மாப்பிள்ளைக்கு பொண்ணைப் பிடிக்கலயாம்!

Posted: 10 May 2017 09:49 AM PDT

தாங்கள் நேற்று பாட வருவதாகச் சொல்லிவிட்டு இன்று வருகிறீர்களே ஏன்? – கஜானாவில் பொற்காசுகளை இன்றுதான் லோடு செய்வதாக கேள்விப்பட்டேன், மன்னா! – கே.அருள்சாமி – —————————— – மன்னர் பதுங்கு குழியை மெகா சைஸ்ல வெட்டும்போதே சந்தேகப்பட்டேன்… – என்ன? – உள்ளே நர்த்தகிகள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள்..! – ———————————- – மாப்பிள்ளைக்கு பொண்ணைப் பிடிக்கலயாம்! – அப்ப, மேக்கப் சார்ஜ் 3500 ரூபாயை குடுத்துட்டு நடையைக் கட்டுங்க! – கே.அருள்சாமி – ———————— – ஆபிஸ்ல இருந்து வரும்போதே மாமியார் ...

விடுகதைகள்

Posted: 10 May 2017 09:49 AM PDT


-
-
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? –

Posted: 10 May 2017 09:48 AM PDT

பொண்ணு டி.வி. பிரபலம்னு சொல்லி கட்டி வச்சுட்டாங்க! – அது பொய்யா? – டி.வி. பிரபலம்தான்…சொல்வதெல்லாம் உண்மை புரோக்ராம்ல வந்த பிரபலமாம்!! – வி.சகிதாமுருகன் – ———————————– – அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? – வீடு, வாசலை பெருக்கிக்கிட்டே பாட்டுப் பாடற போட்டி..!! – க.சரவணகுமார் – ———————————– – எதார்த்தமானவர் நம் புலவர்! – பாடிய புலவருக்கு அரிசி, பருப்பு, பாமாயில் குடுக்கும்போதே தெரிஞ்சிகிட்டேன்! – வி.சகிதாமுருகன் – ———————————- –

தலைவருக்கு பன்றிக் காய்ச்சல் வந்திருச்சே...!

Posted: 10 May 2017 09:46 AM PDT

வசனம் தேவையில்லை…!!

Posted: 10 May 2017 09:44 AM PDT

டீ.வி.சீரியல் பார்த்து ஆம்பள அழலாமா…?!

Posted: 10 May 2017 09:42 AM PDT

தலைவருக்கு மரம் வளர்ப்புல ஆர்வம் ரொம்ப அதிகம்...!

Posted: 10 May 2017 09:40 AM PDT

- தலைவருக்கு மரம் வளர்ப்புல ஆர்வம் ரொம்ப அதிகம்...! - அதுக்காக தென்னை மரம், பனை மரத்தில்தான் கொடி ஏத்துவேன்னு சொல்றதா? - ----------------------------------- - என்ன டாக்டர் இது, உங்க செல்போன்ல சும்மா போட்டோ எடுத்துட்டு எக்ஸ்ரே எடுத்ததா பில் தர்றீங்க? - இங்க பாருங்க...செல்போன்ல எக்ஸ்ரே எடுக்குற ஆப்ஸ் வச்சிருக்கேன்..!! - ------------------------------- - என்னங்க இது, ரேங்க் ஹோல்டர்ஸ்ன்னு ரொம்ப வயசானவங்க போட்டோவா போட்டுருக்காங்க? - அது ஸ்கூலுக்கு டொனேஷன் கொடுத்தவங்க ரேங்காம்! - ------------------------------ - என்னப்பா ...

உங்க அம்மாவுக்கும் மனைவிக்கும் ,எங்க சண்டை நடந்தது? –

Posted: 10 May 2017 09:39 AM PDT

– ஏன் அந்த நடிகை திருமணத்தை தள்ளிப் போட்டுட்டே இருக்காங்க..? – இன்னும் டைவர்ஸ் தேதி வரலையாம்! – என்.சாமிநாதன் – —————————- – நாய்க்கு கோம் வந்தா என்ன செய்யும்? – போய் நாய்கிட்டே கேளு! – அதான்டா கேட்கிறேன், பதிலைச் சொல்லு! – க.தமிழழகன் – ——————————- – உங்க அம்மாவுக்கும் மனைவிக்கும் கட்டு பலமா இருக்கு,எங்க சண்டை நடந்தது? – ஆஸ்பத்திரிக்கு என்னைப் பார்க்க வந்த இடத்துலதான்! – என்.சாமிநாதன் – ———————————

பிரேக்கிங் நியூஸ் நிறைய வர்ற டி.வி.ஒண்ணு வேணும்

Posted: 10 May 2017 09:37 AM PDT

உங்களுக்கு மூணு தையல் போடணும்..! - இரண்டு தையல்னு சிஸ்டர் சொன்னாங்களே? - உங்க சட்டையும் கிழிஞ்சு இருக்கே..? - கலைவாணன் - ---------------------------- - பாடல் பிரமாதம் புலவரே? - நான் பாடவே இல்லை மன்னா! குடும்ப கஷ்டத்தை சொல்லி புலம்பிக் கொண்டிருந்தேன்! - அ.ரியாஸ் - --------------------------- - கஸ்டமர் என்ன கேட்டாரு? சேல்ஸ்மேன் தலையிலே அடிச்சுக்கிறாரே? - பிரேக்கிங் நியூஸ் நிறைய வர்ற டி.வி.ஒண்ணு வேணும்னு கேட்டாராம்! - பர்வின் யூனூஸ் - ---------------------------- - என்ன ...

ஒரு பல் கன்னா பின்னானு ஆடுது டாக்டர்!

Posted: 10 May 2017 09:35 AM PDT

சாஹித்ய அகாதெமி விருதை சாதாரண மேடையில் வழங்குகிறார்கள். சினிமா தேசிய விருதுகளை ஜனாதிபதி கையால் கொடுத்து கௌரவிக்கிறார்கள்! – #இலக்கியவாதிக்கு மரியாதை இல்லை – உமாதேவி —————————- – குழந்தைகள் நான்கு திசையிலும் தெறித்து ஓடுகிறார்களே? – அது மன்னர் விளையாட்டு அரசே..! – அஜீத் – ———————————— – அரசியல்வாதிகளெல்லாம் இந்த ஆஸ்பத்திரிக்கே வர்றாங்களே, ஏன்? – இது ஒரு 'பல்டிஸ்பெஷாலிடி' ஹாஸ்பிட்டல்!! – வி.ரேவதி – ———————————- – போர்முரசு கேட்கிறது மன்னா! – நிச்சயமா இருக்காது! ...

உங்க கிட்னியில கிரானைட் கல் இருக்குது..!!

Posted: 10 May 2017 09:34 AM PDT

சர்க்கரையை வெல்லலாம்

Posted: 10 May 2017 09:32 AM PDT

- டயாபடீஸ் டயட் – 4 கட்டளைகள் - இந்தக் காலத்தில் சரியான உணவைத் தேர்வுசெய்வதுதான் மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கிறது. `ஆரோக்கியமான உணவு இதுதான்' என்று மிகத் தெளிவாக ஒரே ஓர் உணவைப் பரிந்துரைக்க முடியாது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, உணவுப்பழக்கம் திட்டமிடப்பட வேண்டும். நாம் சாப்பிடும் எந்த ஓர் உணவும் ஆற்றலாக மாற்றப்படுகிறது. நம் ஆற்றலின் முக்கிய ஆதாரமாக இருப்பது, குளுக்கோஸ். இது ஒருவகையான சர்க்கரை. கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவை தேவைக்கு ஏற்ப நம் உடலில் குளுக்கோஸாக ...

அவரு மாதிரி யாரும் அவ்வளவு அதிகாரம் பண்ணியிருக்க மாட்டாங்க!

Posted: 10 May 2017 09:32 AM PDT

- அவரு மாதிரி யாரும் அவ்வளவு அதிகாரம் பண்ணியிருக்க மாட்டாங்க! – அப்படியா! யாரு அவரு? – நம்ம திருவள்ளுவர்தான்! – இராம அன்புமணி – —————————— – கல்யாணத்துக்கு முன்னாடி இந்த உலகத்தையே மாத்தணும்னு நினைச்சவன் நான்! – அது சரி…இப்பத்தான் கல்யாணமாயிடுச்சே! என்ன மாத்தப் போற? – எங்க டி.வி.சானலை கூட என்னால மாத்த முடியலியே…! – ஜோ.ஜெ – ———————————— – உங்க வீட்டுல திருட வந்தவனுக்கு சாமி பக்தி அதிகம்னு எப்படி சொல்றீங்க? – திருடன பணதுல 101 ரூபாயை சாமி படத்துக்கிட்ட வச்சிட்டு போயிருக்கான் ...

வறண்டது ஏரி... வெளியேறும் முதலைகள்..! அச்சத்தில் கிராம மக்கள்

Posted: 10 May 2017 09:31 AM PDT

- சிதம்பரத்தில் அமைந்திருக்கும் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் இருக்கும் முதலைகளை வனத்துறையினர் பிடித்துவந்து வக்ரமாரி ஏரியில் விடுவது வழக்கம். கொள்ளிடம் ஆற்றில் இருந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் முதலைகள் புகுந்து விடுவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக வனத்துறையினர் முதலைகளை ஏரியில் விட்டு செல்வார்கள். இதனிடையே வக்ரமாரி ஏரி வறண்டு விட்டதால் அங்குள்ள முதலைகள் கிராம பகுதியில் காணப்படுகின்றன. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,'இந்த பகுதியில் முதலைகள் பண்ணை அமைக்கவேண்டும் ...

வெளி நாட்டு விடுகதைகள்

Posted: 10 May 2017 09:29 AM PDT

பர்மா. 1.வெளுக்காத போர்வை வெள்ளையாக இருக்கும்,நிரப்பாத குடம் நிறைந்தே இருக்கும். 2.ஒரு கோப்பை பசும்பால் ஊரெல்லாம் பெருகிடுமாம். 3.சின்னம் சிறு அறையில் சீராக வாழ்ந்திடுவார், கறுத்த உடை அணிவார் , கவலையில்லாத் துறவி அவர், கள்ளைக் குடித்திடுவார் கடவுளை பாடிடுவார். பாகிஸ்தான். 4.நீரிலே வாழும் மீன் அல்ல,கொம்புமே உண்டு மாடல்ல. 5.தன் தலையை தானே விழுங்கும் பிராணி எது? 6.இளமையில் கொம்புண்டு,வளர்ந்ததும் கொம்பில்லை. விடுவிக்கப்படடால் அடுத்த நாடு மலேசியா.

புத்தியுள்ள காகம்

Posted: 10 May 2017 09:27 AM PDT



அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்

Posted: 10 May 2017 09:01 AM PDT

- ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. - ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். - இவர்கள் ஆந்திர பொலிசாரால் நடத்தப்படும் விதத்தை பார்த்தால் அத்தனையும் பகீர் ரகம். - செம்மரம் கடத்தியதாக கருதப்படும் தமிழர்கள் பாலீதின் பையால் மூடியுள்ள லாறி ஒன்றிலிருந்து இறக்கப்படுகிறார்கள். - - அதில் ஒருவரை மனிதனாக கூட ...

தொடங்கியது புதிய தொலைக்காட்சி.

Posted: 10 May 2017 08:57 AM PDT

இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருக்கும் 'டைம்ஸ் நௌ' என்ற ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகம் அகில இந்திய அளவில் குறுகிய காலகட்டத்தில் புகழ்பெற்றதற்குக் காரணம் அதன் முக்கிய செய்தியாளர்களில் ஒருவரான அர்னாப் கோஸ்வாமி. குரலை உயர்த்தி அவர் நடத்திய விவாதங்கள், எத்தகைய அரசியல் பிரபலமாக இருந்தாலும் அஞ்சாமல் அவர்களை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்த துணிச்சல், பல உணர்ச்சிகரமான, மக்கள் பேசவே தயங்கும் விவகாரங்களை தொலைக்காட்சி விவாதங்களில் கொண்டு வந்து மக்கள் மன்றத்தில் கொண்டு சென்ற துணிச்சல் ...

கணினியில் Windows Defender பாவிக்கிறீர்களா?

Posted: 10 May 2017 08:54 AM PDT

சில பாதுகாப்பு தவறுகள் ஏற்பட்டுள்ளன. கணினியில் Windows Defender பாவித்தால் உடனே 1.1.13704.0. என்ற வேர்சனுக்கு அப்டேட் செய்து கொள்ளவும்.

சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு

Posted: 10 May 2017 08:36 AM PDT

- புதுடில்லி: ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி பினாகி சந்திர கோஷ், மே 27 ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமித்வா ராய் ஆகியோர் கடந்த பிப்., 14ம் தேதி தீர்ப்பு அளித்தனர். இதில், ஜெயலலிதா இறந்து விட்டார். மற்ற மூன்று பேரும் பெங்களூரு ...

பொறியியல் மாணவர்கள் கலந்தாய்வை புறக்கணிப்போம்! அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் எச்சரிக்கை

Posted: 10 May 2017 06:44 AM PDT

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கலந்தாய்வை புறக்கணிக்கப்போவதாக அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. - பொறியியல் பல்கலைக்கழகங்களுக்கான தாய் பல்கலைக்கழகமாக அண்ணாப் பல்கலைக்கழகம் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் பொறியியல் கல்விக்கான கலந்தாய்வை அண்ணாப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்தப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் கடந்த மே மாதத்திலேயே முடிவடைந்த நிலையில் இன்னமும் துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது ...

அறிமுகம்

Posted: 10 May 2017 06:39 AM PDT

பெயர்:சி.ரவிக்குமார்
சொந்த ஊர்: காரைக்கால்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம் வாயிலாக
பொழுதுபோக்கு:புக் படிப்பது மியூசிக்
தொழில்: அக்கௌன்ட்
மேலும் என்னைப் பற்றி: நிறைய வாசிக்க விரும்புவேன்

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்!

Posted: 10 May 2017 06:34 AM PDT

விஷ்ணுபுரம் சரவணன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி. - - அது பெரிய காடு. அந்தக் காட்டின் ஓரத்தில் சாலை ஒன்று இருக்கிறது. அந்தக் காட்டில் அடிக்கடி தீ பற்றும். அதனால், அதிகாரிகள் வந்து காட்டைப் பார்வையிடுவார்கள். ஒருநாள் முயலை விரட்டிக்கொண்டு ஓடிய நரியின் முதுகில் பொத்தென்று ஒன்று விழுந்தது. அலறிக்கொண்டே திரும்பிப் பார்த்தது நரி. வெயில் பட்டு பளபள என மின்னியது அந்தப் பொருள். அந்தப் பொருளுக்குள் ஒரு திரவம். நரி பயத்துடன் பின்நோக்கிச் செல்ல, இதுதான் நல்ல வாய்ப்பு என முயல் ஓடிவிட்டது. – நரி, அந்தப் ...

மாங்காயில் கீறல் இருக்கே?

Posted: 10 May 2017 06:33 AM PDT

மாங்காயில் கீறல் இருக்கே? – நான்தான் சொன்னேன்ல…அது வடு மாங்கான்னு! – எம் மிக்கேல்ராஜ் – ———————————- – முதலைக்கறி சாப்பிட நன்றாக இருக்குமா? – வேண்டாம் மன்னா..! ஒண்ணோ, ரெண்டோ கிழட்டு முதலைகள்தான் அகழியில் நீந்துது…! – வி.சகிதாமுருகன் – —————————குமுதம் தொடரும்...

இரும்பு பெண்மணி ஐரோம் ஷர்மிளா,திருமணம்...

Posted: 10 May 2017 06:32 AM PDT

- - இம்பால்: மணிப்பூரைச் சேர்ந்த இரும்பு பெண்மணி ஐரோம் ஷர்மிளா, தனது நீண்ட கால காதலரான இங்கிலாந்தை சேர்ந்த டெஸ்ட்மான்ட் கெடின்கோவை திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார். இவர்களது திருமணம் தமிழ்நாட்டில் (2017)ஜூலை கடைசி வாரத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. போராளியான இவர் சர்ச்சைக்குரிய ஆயுதப் படை (சிறப்பு அதிகாரம்) சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டு காலம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். சமீபத்தில் நடந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் ஐரோம் ஷர்மிளா தனிக்கட்சி ...

ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம்

Posted: 10 May 2017 06:28 AM PDT

ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம் சென்னை: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 3 - 0 என தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் அரங்கில் 759 ரன்கள் எடுத்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 477 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் ...

நீதிபதி கர்ணனை தேடி ஆந்திரா கிளம்பிய கோல்கட்டா போலீசார்

Posted: 10 May 2017 06:28 AM PDT

நீதிபதி கர்ணனை தேடி ஆந்திரா கிளம்பிய கோல்கட்டா போலீசார் சென்னை: கோர்ட் அவமதிப்பு குற்றத்துக்காக, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி, சி.எஸ்.கர்ண னுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து சென்னைக்கு கர்ணனை கைது செய்ய வந்த கோல்கட்டா போலீசார்,தமிழக போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து அவர் ஆந்திராவின், தடா மாவட்டத்தில் இருப்பது மொபைல் போன் மூலம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்ய கோல்கட்டா போலீசார் ஆந்திரா கிளம்பி சென்றனர். நன்றி தினமலர் ரமணியன் ...

தூங்கும் கிராமம் -மர்மம் துலங்கியது.

Posted: 10 May 2017 06:26 AM PDT

கலாச்சி கிராமம்,கஜகஸ்தானில் வாரக்கணக்கில் தூங்கும் மக்களின் மர்மம் இறுதியில் துலங்கியது.அருகே உள்ள  ரூசிய காலத்து உரேனிய சுரங்கத்தில் இருந்து வெளியேறும் கார்பன்மொனொக்சைட்,மற்றும் ஹைட்ரொகார்பன்(carbon monoxide and hydrocarbon) காற்றில் கலப்பதால் மயக்கம்,நினைவிழப்பு,தூக்கம் ஏற்படுவதாக ரூசிய விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து சுரங்கம் மூடப்பட்டது. மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலைமை கட்டுக்குள் வந்ததும் மக்கள் மீள் குடியேற்றப்படுவார்கள் என சொல்லப்படுகிறது. அணு ...

உடல் நலம் இல்லை

Posted: 10 May 2017 06:24 AM PDT

உடல் நலம் இல்லை

ரமணியன்

நான், நம்பிக்கை!

Posted: 10 May 2017 06:17 AM PDT

- – நிறுக்கும் தராசின் மதிபீடு நிறுத்த முடியா தென்னை நான் காற்று – மூலம் சிறிதெனச் சொல்லி மூலையில் முடக்கலாகா தென்னை நான் நதி – இரவிற்குள் இறக்கி வைத்தாலும் இருட்டு நெருங்கா தென்னை நான் மதி – எழுத்தினை எரித்திடினும் எழுந்திடுவேன் மீண்டும் மீண்டும் நான் எண்ணம்… – வருந்தாது வளைந்திடுவேன் உடையாத உள்ளங்கொண்டு நான் மூங்கில் – அற்ப வலிகளைப் பொறுத்துச் சிற்பமாய் சிறந்து நிற்பேன் நான் நம்பிக்கை…! – ———————- நதிநேசன் நன்றி- நமது நம்பிகை

அடங்கொய்யால…

Posted: 10 May 2017 06:15 AM PDT

எல்லோருக்கும் சமைச்சுப்போட்டு மாளாதுங்க..!

Posted: 10 May 2017 06:11 AM PDT


-

ஆஸ்திரேலியா பார்லிமென்ட் -கைக்குழந்தைக்கு பால் கொடுத்து அசத்திய பெண் எம்.பி

Posted: 10 May 2017 06:06 AM PDT

சிட்னி: ஆஸ்திரேலியா பார்லிமென்ட் வரலாற்றில் முதல் முறையாக, பெண் எம்.பி., ஒருவர் தன் கைக்குழந்தைக்கு பால் கொடுத்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியா பார்லிமென்ட்டின் மேல்சபையில் எம்.பி.,யாக இருப்பவர் லாரிசா வாட்டர்ஸ். அவருக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. பார்லிமென்ட்டில், நேற்று ஒரு ஓட்டெடுப்பு நடந்தது. இதில் பங்கேற்க லாரிசா குழந்தையுடன் வந்து இருந்தார். சபை நடந்து கொண்டிருக்கும் போது குழந்தைக்கு பால் கொடுத்து அசத்தினார். இது குறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ...

கெஜ்ரிவாலின் ஊழல் மைத்துனர் மர்ம மரணம்

Posted: 10 May 2017 06:05 AM PDT

புதுடில்லி: ஊழலுக்கு எதிராக கட்சி துவக்கிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான ஊழல் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊழல் புகாரில் சிக்கிய அவரது மைத்துனரின் திடீர் மரணமும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது. பொதுப்பணித்துறையில் மோசடி - கெஜ்ரிவாலின் மைத்துடனர் சுரேந்தர் பன்சால். இவர், ரேணு கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் டில்லி மாநில பொதுபணித்துறை சார்பில் பல ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த, 2015 ஏப்ரல் ...

அமிர்தானந்த மயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

Posted: 10 May 2017 05:52 AM PDT

திருவனந்தபுரம்: கேரளவை சேர்ந்த பிரபல ஆன்மிக தலைவர் மாதா அமிர்தானந்த மயிக்கு மத்திய அரசு இசட் பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது .கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், வல்லிகாவு கிராமத்தில் அமிர்தானந்த மயி ஆஸ்ரமம் உள்ளது. இவரது ஆன்மிக அமைப்பு சார்பில், இந்தியாவின் பல பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இவரது ஆஸ்ரமத்தின் கிளைகள் உள்ளன. இவருக்கும், இவரது ஆஸ்ரமத்திற்கும் அச்சுறுத்தல் உள்ளது என, மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. ...

pazhaiya thuppariyum novelgal

Posted: 10 May 2017 05:19 AM PDT

ஈகரை சொந்தங்களே,பழம் பெரும் எழுத்தாளர்களான ஆரணி குப்புசாமி முதலியார்,வடுவூர் துரைசாமி ஐயங்கார்,ஜே.ர்.ரெங்கராஜு ஆகியோர் படைத்த அற்புதமான துப்பறியும் கதைகள் இருந்தால் பகிருமாறு அன்புடன் வேண்டுகிறேன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™