Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


குட்டி டீச்சர் – கவிதை

Posted: 03 May 2017 02:39 PM PDT

வரவேற்பறையை வகுப்பறையாக்கி குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி பாடமெடுக்கிறாள் என் குட்டி டீச்சர். பிராய கால வகுப்பறையின் பின் பெஞ்சிலமர்ந்து பணிவாகத்தான் முதலில் பாடம் கேட்டுக்கொண்டிருந்தேன். இடையில் ஏனோ மடியிலள்ளி முத்திட்டு கொஞ்சித் தீர்த்துவிட்டேன் குட்டி டீச்சரை. ஆட்ட விதிகளை மீறியதற்காக இப்போது குட்டு வாங்கிக் கொண்டிருக்கிறேன் நான் குட்டி டீச்சரிடம். – ——————————- – கார்த்திக் திலகன் குங்குமம்

அந்தநாள் ஞாபகம் – கடிதங்கள்!

Posted: 03 May 2017 02:00 PM PDT

அந்தநாள் ஞாபகம் – கடிதங்கள்! - பா.வெ. தபாலும் தந்தியும் தடைகள் இன்றி தழுவிய காலம் அது! ஊதா நிற காகிதத்தில் உள்ளத்தை அனுப்பிய உலகம் அது! காக்கி நிற உடையில் கடிதம் சுமந்து வரும் கண்கண்ட தெய்வம் - தபால்காரர்! வீட்டுக்கு அழையா விருந்தாளியாய்... வீட்டில் ஒருவராய்... விரும்பியே கடிதத் தகவல் விற்பவராய் ... தபால்காரர்! படிப்பற்ற பாமரனுக்கும் பக்குவமாய் படித்துக்காட்டும் பண்பும் பணிவும் பாசத்தை பரிசாக்கும்! கோடையிலும் குளிரிலும் கொட்டும் ...

இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)

Posted: 03 May 2017 01:17 PM PDT

இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. இதை கூகுள் நிறுவனமும் சர்வதேச அளவில் முதன்மை புள்ளியல் நிறுவனமான 'கே.பி.எம்.ஜி'யும் இணைந்து நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு டேட்டாக்கள் கிடைத்துள்ளன. அதில் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதல் மொழியாக இருக்கிறது. அந்த ஆய்வு குறித்த இன்ஃபோகிராஃபிக்ஸ். விகடன் ...

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

Posted: 03 May 2017 12:52 PM PDT

- ஒருநாள் அர்ஜூனன் வனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அப்போது வழியில் ஓரிடத்தில் ஒரு குரங்கு 'ராம நாமம்' ஜபித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தான். - அவனுக்கு நீண்டநாளாகவே ஒரு சந்தேகம். 'ராமர் மிகச் சிறந்த வில்லாளி' என்று சொல்கிறார்களே. அப்படி அவர் உண்மையிலேயே வில்லாளி என்றால், 'சேதுவுக்கும் இலங்கைக்கும் இடையில் வில்லால் பாலம் கட்டாமல், ஏன் வானரங்களைக் கொண்டு பாலம் கட்டவேண்டும்?' என்பதுதான் அந்தச் சந்தேகம். - -------------------

அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!

Posted: 03 May 2017 12:38 PM PDT

பாகுபலி' படத்தின் 2-வது பாகம் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. `இந்தப் படம் தற்போதைய தமிழக அரசியல் சூழலுக்குச் சரியாகப் பொருந்தும்விதத்தில் உள்ளது' என நெட்டிசன்களால் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்தப் படம் கார்ப்பரேட் ஆளுமைகளுக்கும் மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. இந்தப் படத்தின் கதாநாயகனான அமரேந்திர பாகுபலி, நமக்குக் கற்றுத்தரும் ஐந்து கார்ப்பரேட் பாடங்கள் இதோ.... அப்ரைசலை எதிர்க்காதீர்கள்: சில நேரங்களில் நீங்கள்தான் பதவி உயர்வுக்குத் தகுதியான நபர் என மொத்த அலுவலகமும் கொண்டாடும். நிர்வாகமும் ...

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு அட்டெண்டென்ஸ் எடுப்பார்கள்: யோகி அதிரடி

Posted: 03 May 2017 10:07 AM PDT

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புகைபடங்கள் அந்தந்த பள்ளிகளில் பெரிதாக ஒட்டப்பட வேண்டும் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் உத்தரவிட்டுள்ளார். ஒட்டப்பட்டுள்ள படங்களில் உள்ள ஆசிரியர்கள் சரியாக பள்ளிக்கு வருகிறார்களா என அதிகாரிகள் சோதனையின் போது மாணவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பணிக்கு வராததால் கல்வியின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், ...

உங்க அம்மாவுக்கும் மனைவிக்கும் ,எங்க சண்டை நடந்தது? –

Posted: 03 May 2017 10:02 AM PDT

– ஏன் அந்த நடிகை திருமணத்தை தள்ளிப் போட்டுட்டே இருக்காங்க..? – இன்னும் டைவர்ஸ் தேதி வரலையாம்! – என்.சாமிநாதன் – —————————- – நாய்க்கு கோம் வந்தா என்ன செய்யும்? – போய் நாய்கிட்டே கேளு! – அதான்டா கேட்கிறேன், பதிலைச் சொல்லு! – க.தமிழழகன் – ——————————- – உங்க அம்மாவுக்கும் மனைவிக்கும் கட்டு பலமா இருக்கு,எங்க சண்டை நடந்தது? – ஆஸ்பத்திரிக்கு என்னைப் பார்க்க வந்த இடத்துலதான்! – என்.சாமிநாதன் – ———————————

கோயிலாக வாழ்ந்த வீட்டை விட்டுக் கொடுத்தார் நடிகர் சிவகுமார்!

Posted: 03 May 2017 09:35 AM PDT

- காக்கும் கரங்கள்' மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் சிவகுமார், தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அனைவராலும் புகழப்படுபவர். - பல தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்த சிவகுமார், சென்னையில் முதல் முறையாக தி.நகர் பகுதியில் தனக்கான வீட்டைக் கட்டினார். கடந்த 40 வருடங்களாக அந்த வீட்டில்தான் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். - இவரின் பிள்ளைகளாக சூர்யா, கார்த்தி, பிருந்தா இந்த வீட்டில்தான் பிறந்தார்கள். தன் பேரப் பிள்ளைகளையும் இந்த வீட்டில்தான் கொஞ்சி மகிழ்ந்தார். ...

அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி

Posted: 03 May 2017 09:31 AM PDT

மோசடி புகாரில் சிக்கிய அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கட்டட ஒப்பந்தகாரரிடம் 30 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்த வழக்கில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை? புகார் ...

பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.21 ஆயிரம் அபராதம்!

Posted: 03 May 2017 09:27 AM PDT

உத்தரப்பிரதேசத்தில் தெருவில் நடந்தபடியே செல்போன் பேசிக்கொண்டு செல்லும் பெண்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் ஒன்று அபராதம் அறிவித்துள்ளது. மதுராவில் உள்ள மடோரா பஞ்சாயத்து உறுப்பினர்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர். இதன் படி தெருவில் நடத்து சென்றபடியே செல்போனில் பேசி செல்லும் பெண்களிடம் 21 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி நடத்திவருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உத்தரவை பிறப்பித்து ...

எஸ்பிஐ டெபாசிட் வட்டி குறைப்பு

Posted: 03 May 2017 09:25 AM PDT

பாரத ‌ஸ்டேட் வங்கி பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டியை அரை ‌சத‌விகிதம் வரை‌ குறை‌த்துள்ளது. 2 முதல்‌ 3 ஆ‌ண்டு வரையிலான டெபாசிட்டுகளுக்கு வட்டி 6.75 சதவிகிதத்திலிருந்து 6.25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. முதியோருக்கான டெபாசிட் வட்டியும் அரை சதவிகிதம் குறைக்கப்பட்டு 7.25 சதவிகிதத்தில் இருந்து 6.75 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் வரையான பிக்சட் டெபாசிட்களுக்கு வட்டி கால் சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 6.75 சதவிகிதமாக இருந்த வட்டி, 6.5 ...

தர்பூசணியின் மருத்துவ குணங்கள் !

Posted: 03 May 2017 09:18 AM PDT

தர்பூசணி பழம் என்று அழைக்கப்படும் இப்பழம் பெரும்பாலும் தர்பீஸ் என்று நகர்புரங்களில் அழைப்பார்கள். இப்பழம் வெளிர் பச்சை மற்றும் கரும் பச்சை நிறமும் வரி வரியாக ஒன்றை அடுத்து ஒன்று காணப்படும். இதன் உள்ளே நன்கு சிவந்த உண்ணத்தகுந்த சதை பகுதி காணப்படும். இந்த சதை பகுதி முழுக்க முழுக்க நீர் நிறைந்து காணப்படும். இந்த சதை பகுதியில் கருப்ப நிற கொட்டைகள் அதிகமாக காணப்படும். இது கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலில் உண்டால் தாகத்தையும் கலைப்பையும் தணிக்க கூடிய அற்புதமான பழம். இதை இயற்கை கடவுள் நமக்கு ...

திருவாரூரில் வெடித்தால் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு தரைமட்டமாகும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Posted: 03 May 2017 09:16 AM PDT

திருவாரூர், விளாம் பகுதியில் அரசு மதுபான லாரியில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சோதனையில் போது லாரியில் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. டாஸ்மாக் கிடங்கிற்கு மது பாட்டில்களை ஏற்றிவந்த லாரியில் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக மோகன் மற்றும் ராஜ்குமார் என இருவரை போலீஸ் கைது செய்தது தப்பி ஓடிய ஓட்டுநரை போலீஸ் வலை வீசி தேடி வருகிறது. இதற்கிடையே ...

கால் – கவிதை

Posted: 03 May 2017 07:18 AM PDT

- பிரம்மாண்டத்தை சுமந்து செல்லும் லாரியொன்றில் படுத்திருக்கிறார் சாந்தா கிளாஸ். செந்நிறக் குன்று ஒன்றை சுமந்துசெல்லும் அவ்வாகனத்தை பின்தொடர்கிறேன் – ஏதோவொரு ரிசார்ட்டிலோ பொருட்காட்சியிலோ வாயிலில் நடனமாடி பிள்ளைகளுக்குப் பரிசளிக்கப் போகும் வானளாவிய பொம்மைதான் அது – எனினும் அதன் கால் வெளியே நீட்டிக்கொண்டிருக்க அவ்வப்போது மேடுபள்ளங்களை அவ்வாகனம் கடக்கையில் மனம் பதறவே செய்கிறது. – மகாகுழியொன்றின் பலனாக சாந்தாகிளாஸின் ஒரு கால் மட்டும் கழன்று விழுவதையறியா லாரி ஓட்டுனர் வெகுதொலைவு ...

நனையும் பூமி – கவிதை

Posted: 03 May 2017 07:18 AM PDT

- 'நான் எப்போதும் உன்னை காதலனாய் நேசித்ததில்லை…' முதல் முத்தத்திற்கான ஒரு சிறிய இடைவெளியில் உடைக்கிறாய் உண்மையின் பெரும் எரிமலையை இனி இங்கு திரும்பவே திரும்பாத ஒரு தொடர்வண்டியில் ஏறி அமர்கிறேன். – உன் பெரும் இரகசியங்களுக்குள் நுழையுமென் பூனைகள் தகவல்கள் ஒன்றுமில்லாமல் திரும்புகின்றன என் தொட்டிகளில் இட்டதும் மரித்துவிடும் ஆரஞ்சு மீன்களைப் பரிசளித்து சுவாரஸ்யமான ஆட்டங்களை விளையாடிப் பார்க்கிறாய் – காய்களை சாமர்த்தியமாய் நகர்த்திவிட்டு எனக்கு ஆட்டங்கள் தெரியாதென பொய் சொல்லாதே… பூமி ...

மே 3 - உலக பத்திரிகை சுதந்திர தினம்

Posted: 03 May 2017 06:48 AM PDT

உலக பத்திரிகை சுதந்திர நாள் - இருக்கிறதா சுதந்திரம்? - உலக பத்திரிகை சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 1993-ம் ஆண்டு, மே மாதம் 3-ம் தேதியை உலக பத்திரிகை சுதந்திர தினமாகக் கொண்டாட, ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 136-வது இடத்தில் இருப்பதாகவும் சுதந்திரமாக பத்திரிகைகள் இயங்கும் சூழ்நிலை இந்தியாவில் இல்லை எனவும் ஒரு அறிக்கை கூறுகிறது. கடந்த 16 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 54 பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்கள் ...

இதயம் காக்கும்... கொழுப்பைக் குறைக்கும்... நம்ம ஊரு நிலக்கடலை!

Posted: 03 May 2017 06:36 AM PDT

இதயம் காக்கும்... கொழுப்பைக் குறைக்கும்... நம்ம ஊரு நிலக்கடலை! நிலக்கடலை... கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. 'ஏழைகளின் பாதாம்' என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன. நாகரிக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் மறந்து வருகிறோம். அந்தவரிசையில் ...

ஜூலை 1-ம் தேதி முதல் புதுச்சேரி-ஐதராபாத் இடையே விமான சேவை தொடக்கம்

Posted: 03 May 2017 06:09 AM PDT

புதுச்சேரி: ஜூலை 1-ம் தேதி முதல் புதுச்சேரி-ஐதராபாத் இடையே விமான சேவை தொடங்கப்படவுள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் மூலம் புதுச்சேரி-ஐதராபாத் இடையே சேவை ஆரம்பமாக இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறையுடன் முதலமைச்சர் நாராணயசாமி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அதற்கு ஒப்புதல் கிடைத்ததையடுத்து ஜூலை 1-ம் தேதி முதல் 2500 ரூபாய் கட்டணத்தில் புதுச்சேரி-ஐதராபாத் இடையே விமானம் இயக்கப்பட உள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் ...

காரைக்குடியில் அசத்தும் மாற்றுத்திறனாளி

Posted: 03 May 2017 06:08 AM PDT

- சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக யோகா மையம் மற்றும் மகா மகரிஷி அறக்கட்டளை மகாயோகம் சார்பில் யோகா சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் தஞ்சாவூரை சேர்ந்த குமரேசன் (22) என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞர், இந்தியன் புக் ஆப் ரெக்கார்டுக்காக 1 மணி நேரத்தில் 180 யோகாசனங்களை செய்து, பார்வையாளர்களை அசத்தினார். இது குறித்து அறக்கட்டளை நிர்வாகி ரமேஷ் ரிஷி கூறுகையில், 'ஒரு மணி நேரத்தில் 180 யோகாசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி இந்தியன் ...

ஹைதராபாத்தில் ‘விசா கடவுள்’; அலைமோதும் கூட்டம்

Posted: 03 May 2017 04:48 AM PDT

- ஹைதராபாத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கும் சில்கூர் பாலாஜி கோவிலுக்குச் செல்வோரின் 'விசா' வேண்டுதல்கள் நிறைவேறுவதாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரள்கின்றனர். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய இளையர்கள் பலரது விருப்பம் நிறை வேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் அமெரிக்க விசா கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதல்களே அந்தக் கோவிலில் வைக்கபப்டுவதாகக் கூறப்படுகிறது. அந்தக் கோவில் 500 ஆண்டுகள் ...

ஒன்னுமே புரியலே...!!

Posted: 03 May 2017 04:27 AM PDT

தமிழ்நாட்டில் நடந்து வரும் மர்மக் கொலைகள் சினிமா காட்சிகள் போன்று திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்த காட்சிகளாகத் தினச் செய்திகள் தாங்கி வெளி வருகின்றன. இப்பொழுதெல்லாம் துப்பறியும் சினிமாக் கதைகள் அதிகம் வெளிவருவதில்லை. என்றாலும், அரசியல்சார்ந்த சம்பவங்களால் நடைபெறும் ஊழல்களால் இது போன்று மர்மக் கொலைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. பலருடைய வாழ்க்கையே மர்மங்கள் நிறைந்ததாக இச்சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. தமிழகம் ஏன் இப்படியாகி விட்டது என்கின்ற விசனம் பலருடைய மனதில் கேள்விகளாக எழுகின்றன. ...

மதுரையில் கின்னஸ் சாதனை முயற்சி

Posted: 03 May 2017 01:38 AM PDT

- கின்னஸ் சாதனை முயற்சியாக டேக்வாண்டோ பூம்சே தற்காப்புக் கலையின் முக்கிய அசைவுகளை தொடர்ந்து 30 நிமிடங்கள் மாணவர்கள் செய்து காட்டினர். நாடு முழுவதும் புதுடெல்லி, ஹைதராபாத், மதுரை உட்பட 6 இடங்களில் நேற்று முன்தினம் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மொத்தம் 2,000 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு கின்னஸ் சாதனைக்காக பதிவு செய்யப்பட்டது. படம்: தமிழக தகவல் ஊடகம் - தமிழ்முரசு, சிங்கப்பூர்

டீ.வி.சீரியல் பார்த்து ஆம்பள அழலாமா…?!

Posted: 03 May 2017 01:28 AM PDT

சிலைகளைக் கண்டு குதூகலித்த கீர்த்தி

Posted: 03 May 2017 01:11 AM PDT

- தனது அண்மைய அனுபவம் குறித்து பார்ப்பவர்களிடம் எல்லாம் வியப்புடன் பேசுகிறார் கீர்த்தி சுரேஷ். சென்னை அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் சிலிக்கான் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளார் பிரபல ஓவியர் ஸ்ரீதர். அங்கு அன்னை தெரசா, அமிதாப் பச்சன், தோனி, ஜாக்கி சான், அர்னால்டு, சாய்பாபா, சார்லி சாப்ளின், மோனாலிசா, மைக்கேல் ஜாக்சன் போன்ற பல பிரபலங்கள் இங்கு சிலைகளாக உயிர் பெற்று உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த அருங்காட்சியகத்தை அண்மையில் பார்வையிட்டாராம். கீர்த்தி சுரேஷ், ஒவ்வொரு ...

என் ஆளோட செருப்பக் காணோம்’.

Posted: 03 May 2017 01:04 AM PDT

- அறிமுக நாயகன் தமிழ், 'கயல்' ஆனந்தி ஜோடி சேர்ந்துள்ள படம் 'என் ஆளோட செருப்பக் காணோம்'. இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பாலசரவணன், லிவிங் ஸ்டன், ரேகா, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், தளபதி தினேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கு கிறார் ஜெகன்நாத். இவர் ஏற்கெனவே 'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இதென்ன இப்படி ஒரு வித்தியாசமான தலைப்பு? என்று கேட்டால், மென்மையாகச் சிரிக்கிறார் ஜெகன்நாத். "ஒரு ...

தலைவருக்கு பன்றிக் காய்ச்சல் வந்திருச்சே...!

Posted: 03 May 2017 12:52 AM PDT

கொள்ளு தரும் 8 அபார மருத்துவப் பலன்கள்!

Posted: 02 May 2017 11:40 PM PDT

கொழுப்பு, உடல் எடை குறைக்கும்... கொள்ளு தரும் 8 அபார மருத்துவப் பலன்கள்! `கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு' பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது' என்கிறார்கள் மருத்துவர்கள். இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். ...

ஐயப்பனின் வரலாறு எப்புராணத்தில்இடம் பெற்றுள்ளது?

Posted: 02 May 2017 11:25 PM PDT

. பதினெட்டுப்படி ஏறும் ஒவ்வொருவரும்… கட்டுவது அவசியம் இருமுடி – 2. ஐயப்பனுக்கு மிகவும் விருப்பமான அபிஷேகம்…. நெய் – 3. ஐயப்பனைத் தாலாட்டித் தூங்க வைக்கும் பாடல்…. ஹரிவராசனம் – 4. எந்த ஆண்டில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கும்வழக்கம் உருவானது… 1950ல் மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரி இந்த முறையை உருவாக்கினார். – 5. ஐயப்பனின் வரலாறு எப்புராணத்தில்இடம் பெற்றுள்ளது? பூதநாத புராணம் – 6. மணிகண்டன் புலிப்பால் பெறச் செல்லும்போது யாரை வதம் செய்தார்… மகிஷி – 7. தர்மத்தை நிலைநாட்டிய அவதாரம் என்பதைக் ...

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது;

Posted: 02 May 2017 11:22 PM PDT

1.உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் (ஷில்லாவகில்) 2.தீமைகளைக் குறை; நன்மைகளை அதிகப்படுத்து; அதற்காக பாடுபடு (ஓர் அறிஞர்) 3.காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல (வின்ஸ்ட்டன் சர்ச்சில்) 4.நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது- டக்ளஸ் ஹட் 5.*மோசமான விமரிசனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ ...

ஏகாந்தமாய் இருப்பதே இன்பத்தை அடைய வழி

Posted: 02 May 2017 11:20 PM PDT

- 1.கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன் – ராபர்ட் பிராஸ்ட் 2.நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன (சுவாமி ராமகிருஷ்ணானந்தர்) 3.ஒருவர் இருந்தால் ஆனந்தம்; இருவர் என்றால் சுகம்; மூவர் இருந்தால் அபிப்பிராய பேதம், வம்பு; நால்வர் என்றால் சண்டை தவத்திற்கு ஒருவர்; தமிழுக்கு-உரையாடலுக்கு இருவர்; வம்புக்கு மூவர், சண்டைக்கு நால்வர். — 4.'ஏக் நிரஞ்சன், தோ சுகீ, தீன் கட்பட், சார் லட்பட்' என்று இந்தியில் ஒரு ...

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 02 May 2017 11:08 PM PDT

கருவிழிக்குள் வாழும் கனவு

Posted: 02 May 2017 11:04 PM PDT

ஒரு திருநங்கையின் புலம்பல்

Posted: 02 May 2017 11:03 PM PDT


-

நாக்கு..

Posted: 02 May 2017 11:03 PM PDT

இரவின் நாக்குகள் நீளமானவை நீண்டு கொண்டே செல்கிறது அந்த இரவு காலத்தின் விழுமியங்களை எல்லாம் விழுங்கி கொண்டு.. பளப்பளப்பான கத்தியைப்போல் நான்கு புறமும் சுழல்கிறது இரவின் நாக்குகளால் தெறித்து விழும் துளிகள் எல்லாம் இரத்தச் சிவப்பாய் கனன்று எரிகிறது கண்ணீர் துளிகளால் அவ்வெப்பொழுது அணைத்து கொண்டே இருக்கிறேன் ஆனாலும் அது என்னவோ அணைவதாயில்லை இதோ நான் விழித்துவிட்டேன் வாள் வீச்சைப் போல் நாக்குகள் சுழன்றாலும் என்னில் தெறித்து விழும் நியாமான கோபங்களை சமூகத்தின் ...

விடறதுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை…!!

Posted: 02 May 2017 10:50 PM PDT

பிச்சை எடுக்க தைரியம் வர தண்ணி அடிக்கிறேன்…!!

Posted: 02 May 2017 10:47 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™