Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஐந்து மாநில கவர்னர்கள் விரைவில் நியமனம்

Posted: 03 May 2017 10:12 AM PDT

புதுடில்லி: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங் களுக்கு, விரைவில் முழு நேர கவர்னர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில், முன்னாள் கவர்னர் ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஆக., 30ல் நிறைவடைந்தது. இதையடுத்து, மஹாராஷ்டிரா மாநில கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு, தமிழக கவர்னராக, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது; இதுவரை முழுநேர கவர்னர் நியமிக்கப்படவில்லை.அதேபோல், ஆந்திரா, தெலுங்கானா மாநில கவர்னராக உள்ள நரசிம்மனின் பதவிக் காலம் நிறைவடைந்தும், அவரே அந்தப் பொறுப்பில் நீடிக்கிறார். குஜராத் மாநில கவர்னர் ஓம் பிரகாஷ் ...

'ஆயுர்வேத மருந்துகளை உலகம் ஏற்கும் காலம் வரும்'

Posted: 03 May 2017 10:25 AM PDT

டேராடூன்:''ஆயுர்வேத மருந்துகளை, உலகம் முழுவதும் உள்ள மக்கள், ஏற்கும் காலம் வரும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

உத்தரகண்ட் மாநிலத் தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இமயமலை யில் அமைந்து உள்ள பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி கோவில்கள், குளிர் காலத்தில் மூடப்படுவது வழக்கம். குளிர் காலம் முடிந்து, கோடை காலம் துவங்கியதை அடுத்து, கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்கள், சமீபத்தில் திறக்கப்பட்டன.
ருத்ராபிஷேகம்
கேதார்நாத் கோவில், நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர ...

விவசாயி தற்கொலை பிரச்னையில் வார்த்தை ஜாலம்... வேண்டாம்! உறுதியான நடவடிக்கை அவசியம் என்கிறது சுப்ரீம் கோர்ட்

Posted: 03 May 2017 10:32 AM PDT

விவசாயிகள் தற்கொலை வழக்கில், 'வார்த்தை ஜாலங்கள் தேவையில்லை; விவசாயிகளின் பிரச்னைகளை போக்க, தீர்க்கமான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தமிழக அரசை கடிந்து கொண்டனர்.

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப் படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும், தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்து வருவதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், சுப்ரீம் ...

மந்திரி காமராஜ் மீது வழக்கு பதியாத அரசுக்கு சுப்ரீம் கோர்ட்... குட்டு!

Posted: 03 May 2017 10:38 AM PDT

புதுடில்லி:'தமிழக உணவுத் துறை அமைச்சரும், அ.தி.மு.க., அம்மா அணியைச் சேர்ந்தவருமான, காமராஜ் மீதான, 30 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக் காதது ஏன்' என, கண்டனம் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், 'அமைச்சர் என்றால், சட்ட விதிகளுக்கு மேலானவரா' என, கேள்வியும் எழுப்பியுள்ளது.

இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, வரும், 8ம் தேதிக்குள், விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்த, எஸ்.வி.எஸ்.குமார், தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது நடவடிக்கை கோரி, ...

தீர்ப்பை மாற்றக்கோரி சசிகலா மனு

Posted: 03 May 2017 10:40 AM PDT

புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை மறு சீராய்வு செய்யக் கோரி, சசிகலா தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த, ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இதை, கடந்த பிப்ரவரி யில்,சுப்ரீம்கோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து,சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோர், பெங்களூரு சிறையில் அடைக்கப் ...

ரூ.17 ஆயிரம் கோடி கொடுங்க!: மத்திய அரசுக்கு தங்கமணி வேண்டுகோள்

Posted: 03 May 2017 10:44 AM PDT

''தமிழ்நாடு மின் வாரியத்தில், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள, 17 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. அதை மானியமாகவோ, கடனாகவோ, மத்திய அரசு வழங்க வேண்டும்,'' என, தமிழக மின்துறை அமைச்சர், தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாடு, டில்லியில் நேற்று நடந்தது. அதில், தங்கமணி பேசியதாவது:மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழ கம், ஜெ., அரசின் முயற்சியால், தற்போது, மின் மிகை மாநிலமாக மாறி யுள்ளது. கடந்த, 2013 - 14ம் ஆண்டில், 13 ஆயிரத்து, 985 கோடி ரூபாயாக இருந்த, மின் வாரியத்தின் இழப்பு, 2016ல், 3,675 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நடப்பாண்டில், இழப்பே இல்லாத நிலையை ...

கோடநாடு கொலையில் அறிவியல் ஆதாரம் சேகரிப்பு

Posted: 03 May 2017 10:48 AM PDT

கோவை:''கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணைக்கு தேவையான அறிவியல் பூர்வமான ஆதாரங்களைச் சேகரித்துள்ளோம்,'' என, நீலகிரி மாவட்ட, எஸ்.பி., முரளிரம்பா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், கோத்த கிரி, கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சயான், 35, கடந்த 29ம் தேதி, குடும்பத்துடன் காரில் சென்றபோது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தான்.கோவையில் சிகிச்சை பெற்றுவரும் சயானிடம் நீண்ட இழுபறிக்கு பின், கேரளா போலீசார் நேற்று முன்தினம் விசாரித்தனர். கோடநாடு கொலை தொடர்பாக, சயானிடம் எதுவும் கேட்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ...

கன்டெய்னர் லாரிகளில் சிக்கிய ரூ.570 கோடி ஜெ.,பங்களாவிலிருந்து கடத்தியதாக சந்தேகம்!

Posted: 03 May 2017 10:53 AM PDT

மர்மங்கள் நிறைந்த கோடநாடு கொலையில், தோண்டத் தோண்ட புது, புது தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

கடந்தாண்டு, தமிழக சட்டசபை தேர்தலின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு, திருப்பூரில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் குறித்த சந்தேகம், போலீஸ் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது.
அம்பலம்
திருப்பூர் அருகே, 2016, மே 13ல், வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், மூன்று, 'கன்டெய்னர்' லாரிகளில், 570 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். பணத்துக்கு பாதுகாப்பாக காரில் வந்த நபர்கள், 'இந்த பணம் கோவை, எஸ்.பி.ஐ., தலைமை அலுவலகத்தில் இருந்து, ஆந்திரா ...

ஜெ., பாணியில் பழனிசாமி: அரசு விழாவில் தடபுடல் வரவேற்பு

Posted: 03 May 2017 10:59 AM PDT

அரசு விழாக்களில் பங்கேற்ற போது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட அதே தட புடல் வரவேற்பு ஏற்பாடு, தற்போது முதல்வர் பழனிசாமிக்கும் அளிக்கப்படுகிறது.

ஜெ., முதல்வராக இருந்த போது, அரசு விழாக் களில் பங்கேற்க வரும் அவரை வரவேற்று, வழிநெடுகிலும், 'டிஜிட்டல்' பேனர்கள் வைப்பர். கொடி, தோரணம் என, விழா நடைபெறும் பகுதியை கலங்கடிப்பர். அதேபோல், வெளிமாவட்டங்களுக்கு ஜெ., சென்றால், கட்சியினர் தாரை, தப்பட்டை, மேளதாளம் முழங்க, பூரண கும்ப மரியாதை கொடுப்பர். அவர் மறைவுக்கு பின், முதல்வராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம், எளிமையாக இருந்தார். ஜெ., பயன்படுத்திய முதல்வர் ...

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Posted: 03 May 2017 11:53 AM PDT

நாகப்பட்டினம்: நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் 4 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம் அருகே வேதாரண்யத்திலுள்ள ஆறுகாட்டுத் துறையை சேரந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அப்பொழுது மீனவர்களை இலங்கை படையினர் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் மீனவர்கள் குமாரசாமி, செந்தில், அமுதகுமார், கலைமணி ஆகிய 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் ...

இந்தியாவில் 12 ஆண்டுகளில் 770 பில்லியன் டாலர் கருப்பு பணம்; அமெரிக்க நிறுவனம் கணிப்பு

Posted: 03 May 2017 01:01 PM PDT

புதுடில்லி: 12 ஆண்டுகளில் 770 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கருப்பு பணம் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளதாக அமெரிக்க நிறுவனம் கணித்துள்ளது.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலக பொருளாதாரத்தை கண்காணிக்கும் நிறுவனம் கருப்பு மற்றும் சட்டவிரோத பண நடமாட்டம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் 2005ம் ஆண்டு முதல் 2017 ஆண்டுகளுக்கிடையே இந்தியாவிற்குள் 770 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கருப்பு பணம் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளதாகவும், அதே காலத்தில் 165 பில்லயன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணம் ...

4வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை உறுதி

Posted: 03 May 2017 01:54 PM PDT

புதுடில்லி: 4வது சிறுமியை கொடுரமாக பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரனுக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

நாக்பூரை சேர்ந்த வசந்தசம்பத் டூபாரே என்பவர் கடந்த 2008 ம் ஆண்டு ஏப்., மாதம் 4 வது சிறுமியை பலாத்காரம் செய்து தலையை கல்லால் அடுத்து கொடுரமாக கொலை செய்துள்ளார். இவருக்கு மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம். தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு சீராய்வு செய்யும் படி டூபாரே தரப்பில் இருந்து டில்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று ...

ராம் கங்கையில் மின்னணு கழிவுகளை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்: தீர்ப்பாயம் எச்சரிக்கை

Posted: 03 May 2017 02:44 PM PDT

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாயும் ராம் கங்கை ஆற்றில் மின்னணு கழிவுகளை கொட்டுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் மொரதாபாத் நகர் வழியாக கங்கை ஆற்றின் கிளையான ராம் கங்கை ஆறு பாய்கிறது. இந்த ஆற்றில் பெருமளவிலான எலக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து ஆய்வு செய்தது.
இதில், சர்க்கரை ஆலைகள், டிஸ்லரி கம்பெனிகள், காகிதம், துணி மற்றும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™