Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


"இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!"

Posted: 26 May 2017 12:28 PM PDT

"இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!" - மழையாய் பொழிந்த விநோத உயிர்கள் கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பரவலாகப் பெய்த மழையைக் கண்டு 'அப்பாடா' என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்கூறும் நல்லுலக மக்கள். ஆனால், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலுள்ள லாலாப்பேட்டை பகுதி மக்களோ, 'முந்தாநாள் இரவு பெய்த மழையின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளலை. மழை எப்போ வருமோ என்று அதிர்ச்சியாயிருக்கு' என்று மிரட்சியோடு சொல்கிறார்கள்.  'தமிழகத்தையே குஷிப்படுத்தி இருக்கும் மழை, இவர்களை மட்டும் கிலிப்படுத்தக் ...

சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்

Posted: 26 May 2017 12:14 PM PDT

இரட்டை ரெயில் பாதை அமைப்பு: சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம் பதிவு: மே 26, 2017 11:23 மாலைமலர் சென்னை-கன்னியாகுமரிக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இந்த பணி தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் இருந்து திருச்சி வரையிலான 334 கிலோ மீட்டர் தூரத்தில் பெரும்பாலான இடங்களில் இரட்டை வழிப்பாதை அமைக்கப்பட்ட நிலையில் வாலடி- திருச்சி இடையிலான 20 கிலோ மீட்டர் தூரத்தில் மட்டும் பணிகள் நடந்தன. இந்த ...

கூடவே நுழைந்தவன் !

Posted: 26 May 2017 12:04 PM PDT

என்னுடன் பணிபுரிந்தவன்தான் இன்று ஏழெட்டு வீடுகளுக்கு சொந்தக்காரன் ! ஆள் அம்பு சேனையென ஆயிரம் பேரை வைத்து வேலை வாங்குகிறான் ! ஒரு காலத்தில் கந்தல் உடை அணிந்து திரிந்தவன்தான் ! ஆனால் இன்று காலையில் உடுத்திய உடையை , மாலையில் உடுத்துவதில்லை ! இரண்டு ரூபாய்க்கு இட்டலி வாங்கித் தின்று பசியாறியவன் இன்று சர்வருக்கு இருபது ரூபாய் டிப்ஸ் கொடுக்கிறான் ! ஓட்டை சைக்கிளிலே பயணம் செய்தவன் இன்று ஆடிக் காரிலே அமர்க்களமாய் செல்கிறான் . பழைய நண்பன் என்னை மறக்காமல் " பால் காய்ச்சுகிறேன் ...

ஓரம்போ-ஓரம்போ ட்ரம்ப் வருகிறேன் ஓரம்போ.

Posted: 26 May 2017 12:01 PM PDT

நேட்டொ மாநாட்டில், மோன்டேனெக்ரோ நாட்டு பிரதமரை தள்ளிவிட்டு முன்னுக்கு வந்த காட்சி, போட்டோவுக்கு நான் தான் முன்னுக்கு நிற்ப்பேன் கையை பிடிச்சா வெட்டிப் புடுவேன்.

பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி

Posted: 26 May 2017 11:57 AM PDT

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்தவர் சொல்வது என்ன? அந்த இருட்டான இரவு நேரத்தில் என்ன நடந்தது என்று மனம் திறந்து முதன்முறையாக சொல்கிறார் ஒசாமா பின்லேடனின் நான்காவது மனைவி அமால். ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி இணைந்து எழுதிய, "த எக்ஸைல்: த ப்ளைட் ஆஃப் ஒசாமா பின் லேடன் அபவுட் ...

ரமதான் -நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் ! 

Posted: 26 May 2017 11:36 AM PDT

ரமளான் மாதத்தின் ஆரம்பத்தையும், முடிவையும் தெரிந்து கொள்வதற்கு பிறைதான் அடையாளமாகும். ஆனால் மேகம் தெளிவில்லாமல் இருந்து ரமளான் மாதத்தின் பிறை தென்படவில்லையானால் நோன்பு மாதத்துக்கு முந்திய ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக கணக்கிட்டு அதற்கு அடுத்த நாள் ரமளான் நோன்பை நோற்க வேண்டும். காரணம் சந்திர மாதத்தில் முப்பது நாளை விட அதிகமாக ஒரு மாதமும் வரமுடியாது. "முப்பது நாட்களாகவும் இருபத்தி ஒன்பது நாட்களாகவும் தான் மாதம் வரும் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். இன்று பிறை தெரியாததால் 28  முதல் ரமளான் ...

#அதிசய மூலிகை..!

Posted: 26 May 2017 09:38 AM PDT

அதிசய மூலிகை..! எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்த அம்மையாருக்கு கணுக்காலுக்கு மேல் புண் ஏற்ப்பட்டு பெரிதாகி அழுகி இருபுறமும் ஓட்டை தெரியும் அளவு வளர்ந்து படுத்த படுக்கையாகி விட்டார். மருத்துவர்கள் முழங்காலிற்கு கீழ் காலை அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் மேலே ஏறி ஆபத்தாகி விடும் என்று கூறிவிட்டார்கள். அந்த அம்மையாருக்கு சர்கரை நோய் பல ஆண்டுகளாக நீரிழிவு நோய். அந்த அம்மையார் கதறிவிட்டார். பக்கத்து வீடாகையால் எங்களுடன் சண்டையில் பேசாமல் இருந்தார்கள்.என் தந்தை அந்த அம்மையாரின் ...

இதற்கொரு கவிதை தாருங்களேன்

Posted: 26 May 2017 09:14 AM PDT

இதற்கொரு கவிதை தாருங்களேன்



ரமணியன்

படம் முகநூல் நன்றி

உடனே மருத்துவர் ஆக முடியுமா?

Posted: 26 May 2017 04:02 AM PDT

இந்தியாவிற்கான வளர்ச்சி நிதியை குறைக்க டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை

Posted: 26 May 2017 12:45 AM PDT

வாஷிங்டன் கடந்த 2016 ஆம் ஆண்டில் 85 மில்லியன் டாலர்களாக இருந்த உதவி 2018 ஆம் ஆண்டிற்கு 33.3 மில்லியன் டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமான நிதியுதவி யு எஸ் எய்ட் எனும் திட்டத்தின் கீழ் செயல்படும் சுகாதார திட்டங்களுக்காக இருந்து வந்த நிலையில் அதுவும் 35.5 மில்லியன் டாலர்களில் இருந்து 19.6 மில்லியன் டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பாதுகாப்புத் துறை தொடர்பான கல்வி மற்றும் பயிற்சிக்கு 1.2 மில்லியனிலிருந்து 1.3 மில்லியனாக உயர்த்தப் பட்டுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு ...

பாகிஸ்தான் பெண்கள் 3 பேருக்கு 100 ரூபாய்க்கு போலி ஆதார் கார்டு

Posted: 26 May 2017 12:38 AM PDT

- பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தம்பதி, ஒரு இளம்பெண்ணை குற்றப் பிரிவு போலீசார் நேற்று பெங்களூரில் கைது செய்தனர் இவர்கள் பாகிஸ்தான் கராச்சி பகுதியை சேர்ந்த சமீரா (வயது 25), காசிப் சம்சுதீன் (30), அவரது மனைவி கிரண் குலாம் (25) என்று தெரிந்தது. பாகிஸ்தானை சேர்ந்த சமீரா கத்தாரில் வேலை செய்தபோது கேரளாவை சேர்ந்த முகமது சிகாப் என்பவர் காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளனர். முகமதுவை திருமணம் செய்து கொள்ளத்தான் சமீரா உறவினர்கள் இருவருடன் சட்டவிரோதமாக ...

நாடுகலக்கி

Posted: 26 May 2017 12:23 AM PDT

"நாடுகலக்கி" என்பது என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் அது திருமலை சேதுபதி மன்னரது சிறந்த குதிரை யைக் குறிப்பதாகும் . பெரும்பாலும் அந்தக் குதிரை சிறந்த அரபு நாட்டுக் குதிரையாக இருத்தல் வேண்டும்.திருமலை சேதுபதி மன்னர் நாடுகலக்கிய செயல்களுக்கு அந்தக் குதிரை உறுதுணை யாக இருந்து இருக்க வேண்டும் திருமலை சேதுபதி இராமேசுவரம் தீவுப்போரில், மதுரை மன்னரது படைகளை " நாடு கலக்கி" என்னும் நல்ல தொரு பரியைக் கொண்டு கலக்கமுறச் செய்தார் என இராமப் பையன் அம்மானை பாடுகிறது இத் தகைய தொரு நல்ல பரியொன்றை ...

பரவச ஈக்கள்

Posted: 25 May 2017 11:25 PM PDT

நாறு இருக்கும், ஆயிரம் இருக்கும் அதற்குக் கூடுதலாகவும் மீன் கூடையின் ஈயவிளிம்பில் மரணத்தின் உப்பு வாசனை மொய்க்கும் பரவச ஈக்கள். – பார்க்க பார்க்க மினுமினுத்தன எத்தனை கோடியோ இன்பம் வைத்த சிறகுகள். – இத்தனையும் வண்ணத்துப் பூச்சிகளாக இருந்துவிடும் எனில் அவை அமர அத்தனை எண்ணிக்கைப் பூக்களுக்கு எகே போவேன் நான் என் சிவனே – ——————– மீனைப்போல இருக்கிற மீன் – கல்யாண்ஜி கவிதை நூலிலிருந்து

சமோசா விற்கும் வியாபாரியின் மகன் --ஐ ஐ டி தேர்வில் 6 ம் இடம்

Posted: 25 May 2017 11:19 PM PDT

சமோசா விற்கும் வியாபாரியின் மகன் --ஐ ஐ டி தேர்வில் 6 ம் இடம் சாலையோரம் சமோசா விற்கும் வியாபாரியின் மகன் ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் ஆறாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஐதராபாத்: சாலையோரம் சமோசா விற்கும் வியாபாரியின் மகன் ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் ஆறாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சாலையோரம் சமோசா கடை நடத்தி வருபவர் சுப்பா ராவ், இவரது ...

ஸ்பூனையும் சாப்பிடலாம்

Posted: 25 May 2017 09:29 PM PDT

சரியான லொள்ளு

Posted: 25 May 2017 09:03 PM PDT

சரியான லொள்ளு



ரமணியன்

நன்றி முகநூல்

உங்கள் மடியில் இருப்பது – கவிதை

Posted: 25 May 2017 06:54 PM PDT

– பச்சைக்கிளிகள் அமர்வதும் பறப்பதுமாக இருந்தது அந்தத் தொலைதூரச் சிறுமரம். – வளைந்து திரும்பும் ரயில் சன்னலில் இருந்து பார்க்கிறேன். – இன்னொரு சன்னலோரம் இருக்கும் உங்களிடமும் காட்டுகிறேன். – எதிர்ப் பயணிகளுக்கே உரிய இயலாமை நிரம்பிய உங்கள் எளிய சிரிப்பிலிருந்து விடுபட்டு, அந்தச் சிறுமரம் நோக்கிப் பறந்து அமர்ந்து பறந்து நான் றித்து வந்த கனிதான் இப்போது உங்கள் மடியில் இருப்பது – ——————– மீனைப்போல இருக்கிற மீன் – கல்யாண்ஜி கவிதை நூலிலிருந்து

கூடவே வெளியேறுபவன் – கவிதை

Posted: 25 May 2017 06:52 PM PDT

ரொட்டியை எப்படி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்..?

Posted: 25 May 2017 06:50 PM PDT

நண்பேண்டா – நெகிழ வைத்த சந்திப்பு

Posted: 25 May 2017 06:47 PM PDT

பச்சைக்கிளிகள்

Posted: 25 May 2017 06:35 PM PDT

மெலிதான காடு, விளைநிலம், பழத்தோட்டம் தேடிப்போனேன் அவளைக் காண உயர்ந்த மரத்துளைகளில் கண்மேய கிளிப்பச்சை சேலையடுத்தி-அதோ தோழிகளோடு சப்தமிட்டு வந்தவளே சிகப்பு ஆரம் கழுத்தில் காணேன் காதலன் கழுத்திலதைக் கண்டேன் 'கீக்கீ'ஒலி உன்னிருப்பிடம் உணர்த்தியது பறந்தாலும், அமர்ந்தாலும் கூவல். குஞ்சுகளைத்திருடி விற்பான் மனிதன் எதையும் காசாக்கிடும் தந்திரம் அழகு மாளிகையில் தங்கச்சிறை கபட சமுதாயம் மகிழ சோதிடம் பொம்மை பீரங்கி இயக்கி வித்தை பசப்புக்காரன் மொழி பழகிய விந்தை பச்சை அழகியை சிறையிடலாமா அதற்கு ...

விடுவித்தல்

Posted: 25 May 2017 06:24 PM PDT


சிலுவை ஒரு அழகான வடிவம்
குறுக்கும் மறுக்குமான
கிராமத்து தெருக்களாக
ஆணிகளின் உறுதிக்கும்
குறைவில்லை.

அறையப்பட்டவரை அகற்றினால்
விடுவித்து விடலாம் சிலுவையை.

—————————
மீனைப்போல இருக்கிற மீன் – கல்யாண்ஜி
கவிதை நூலிலிருந்து

வித்தியாச கொழுக்கட்டை & புதினா சட்னி

Posted: 25 May 2017 06:12 PM PDT

இனிதானே எல்லாம் – கவிதை

Posted: 25 May 2017 05:58 PM PDT

மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்!

Posted: 25 May 2017 05:56 PM PDT

இது பால்பாயிண்ட் பேனா யுகம். பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பால்பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்துவதையே சவுகரியமாகக் கருதுகிறோம். ஃபவுண்டன் பேனாக்களில் இங்க் நிரப்பிப் பயன்படுத்துவது நேர விரயம் என நினைக்கிறோம். ஆனால் பிளாஸ்டிக்கினால் ஆன பால்பாய்ண்ட் பேனாக்கள் எத்தகைய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என யோசித்திருக்கிறோமா? கவனிக்கப்படாத பாதிப்பு பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் குறித்து மக்கள் மத்தியில் இன்று ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், அவற்றின் ...

பல்சுவை – டிப்ஸ்

Posted: 25 May 2017 05:53 PM PDT


-
வெயில் காலத்தில் சிலருக்கு அக்கி வரலாம்.
இதற்கு அருகம்புல் வேரைச் சுத்தம் செய்து,
வேக வைத்துக் கடைந்து கொள்ளுங்கள்.

இதனுடன் நெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இந்தக் கலவையை அக்கி உள்ள இடத்தில் பூசி
சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வந்தால்,
சீக்கிரமே குணமாகும்
-
நா.ராஜேஸ்வரி
-
-----------------

நூல்கோல் பகோடா & மொறு மொறு தோசை

Posted: 25 May 2017 05:49 PM PDT

தண்ணீரில் காய்கறி வளர்க்கலாம்: சென்னை இளைஞரின் புதுமை வழி

Posted: 25 May 2017 05:40 PM PDT

ப. முரளிதரன் தி இந்து ------------------------ - மண்ணில்லாமலேயே காய்கறி, பூக்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைச் சாகுபடி செய்துவருகிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர். மாடித் தோட்டத்தில் இந்த முறையைப் பின்பற்றிக் காய்கறிகளை வளர்க்கலாம் என்கிறார் அவர். சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் ராம் கோபால். மென்பொருள் பொறியாளரான இவர் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில், விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் 'பியூச்சர் பார்ம்' என்ற விவசாய நிறுவனத்தையும் தற்போது சேர்த்து நடத்தி ...

பூச்சிகளின் தேசம்

Posted: 25 May 2017 05:28 PM PDT

- - சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ஏ.சண்முகானந்தம், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், எழுத்தாளர். ஒளிப்படக் கலையைக் கற்றுக்கொண்ட காலத்தில் இருந்து பூச்சிகளைப் படமெடுப்பதில் கவனம் செலுத்திவருகிறார். மீனாட்சி வெங்கடராமன் எழுதிய A Concise Field Guide to Indian Insects, Arachnids என்ற ஆங்கிலப் புத்தகத்தில் இவர் எடுத்த பூச்சிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இவர் எழுதிய 'தமிழகத்தின் இரவாடிகள்: ஓர் அறிமுகம்' (தடாகம் வெளியீடு) என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. பல்லுயிரிய ...

ஒரு வானம்

Posted: 25 May 2017 05:15 PM PDT



மூடிய அறை
ஒரு பொருட்டல்ல ஓவியனுக்கு
ஒரு பறவையை வரைகிறான்
பறந்து அது
ஒரு வானத்தை
உண்டாக்கி விடுகிறது
உடனடியாக.

————————
மீனைப்போல இருக்கிற மீன் – கல்யாண்ஜி
கவிதை நூலிலிருந்து

அசையாது – கவிதை

Posted: 25 May 2017 05:10 PM PDT



கொழுந்து இலைகளின்
கசப்பு நல்லது
துளிர்
ஒப்பற்ற தாமிர நிறம் உடையது.
எல்லாம் தெரியும்,
இப்போதைக்கு அது
அசையாது இருக்கிறது
உறைந்த கண்ணீராக
அற்புதப் பிற்பகல் வெயிலில்
என்பது உட்பட

————————
மீனைப்போல இருக்கிற மீன் – கல்யாண்ஜி
கவிதை நூலிலிருந்து

ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை

Posted: 25 May 2017 05:08 PM PDT

பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுகிறார் கும்ப்ளே:

Posted: 25 May 2017 05:06 PM PDT

இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள அனில் கும்ப்ளேவின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை விநியோகித்து அதற்கான தேர்வு பணிகளைத் தொடங்கியுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவித்தது. விராட் கோலி தலைமையிலும் மற்றும் அனில் கும்பளேவின் பயிற்சியிலும் இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டதாக பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளது. வரும் ஜூன் 2-ம் தேதி தொடங்க உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் ...

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது உயிர் தப்பினார் மகாராஷ்டிரா முதல்வர்

Posted: 25 May 2017 04:50 PM PDT

- மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் சென்ற ஹெலிகாப்டர் நேற்று லத்தூர் அருகே அவசரமாக தரையிறங்கும்போது மோதி நொறுங்கியது. இந்த சம்பவத்தில் முதல்வரும் அவருடன் சென்ற அதிகாரிகளும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிவதற்காக பாஜ கட்சி 'ஷிவார் சம்வாத் சபா' என்ற பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது. இதனையொட்டி அம்மாநில முதல்வர் பட்நவிஸ் வறட்சி பாதித்த மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள லத்தூருக்கு நேற்று ...

வங்கக் கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

Posted: 25 May 2017 04:48 PM PDT

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடல்பகுதியில் இருந்து ஈரப்பதம் உள்ள காற்று வீசத் தொடங்கியுள்ளது. மேலும் வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, வில்லிபுத்தூரில் 50 மிமீ மழை பெய்துள்ளது. முதுகுளத்தூர், கோவில்பட்டி, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™