Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இந்தியாவின் மிக நீளமான பாலம் : 10 அம்சங்கள்

Posted: 26 May 2017 12:03 AM PDT

புதுடில்லி : அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். பா.ஜ.,அரசின் 3 ஆண்டு நிறைவு கொண்டாட்ட விழாவை துவக்கும் விதமாக இந்த பாலத்தை மோடி திறந்து வைத்துள்ளார்.இந்த பாலத்தின் சிறப்பம்சங்கள் :

1. பிரம்மபுத்திராவின் கிளை நதியான லோஹித் ஆற்றின் குறுக்கே 9.15 கி.மீ., தூரம் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது அசாமின் தோலா பகுதியையும், அருணாச்சல பிரதேசத்தின் சதியா பகுதியையும் இணைக்கிறது.
2. தற்போது வரை பிரம்மபுத்திரா நதியை படகு மூலம் மட்டுமே கடக்க முடியும். வெள்ளம் ...

ஜெ., படம் திறப்பதா தலைவர்கள் எதிர்ப்பு

Posted: 26 May 2017 09:24 AM PDT

சென்னை: தமிழக சட்டசபையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை திறக்க, கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

சட்டசபையில், ஜூலையில் நடக்கும், ஜெ., படம் திறப்பு விழா மற்றும் டிசம்பரில் நடக்கும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கும்படி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், சட்டசபையில், ஜெ., படம் திறப்பதற்கு, தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அதன் விபரம்:
தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன்:
ஒரு குற்றவாளிக்கு, அரசுக்கு சொந்தமான கடற்கரையில் ...

வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி!

Posted: 26 May 2017 09:57 AM PDT

புதுடில்லி: 'தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்கள், வேட்பு மனுத் தாக்கலின் போது, தங்கள் மற்றும் வாழ்க்கை துணையின் சொத்து விபரங்களுடன், அவர்களின் வருமானத்திற் கான ஆதாரங்கள் குறித்த விபரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்' என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் முதல், லோக்சபா தேர்தல் வரை, எவ்வகை தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுத் தாக்கலின் போது, தங்கள் சொத்து விபரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.
தேர்தல் கமிஷன் வாதம்
அதுமட்டுமின்றி, போட்டியிடும் நபர் ஆணாக ...

9 கி.மீ., நீள ஆற்றுப்பாலம்: மோடி திறந்து வைத்தார்

Posted: 26 May 2017 10:19 AM PDT

கவுகாத்தி: ''நாட்டில் வளர்ச்சி நிரந்தரமாக, உள் கட்டமைப்பு வசதி மேம்படுத்த வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அசாம் மாநிலத்தில், சர்பானந்த சோனேவால் தலைமையிலான, பாஜ., ஆட்சி நடக்கிறது.
நிறைவேற்றி உள்ளோம்
அசாம் - அருணாச்சல் மாநிலங்களை இணைக் கும் வகையில், அசாம் மாநிலம், சதியாவிலி ருந்து, அருணாச்சல பிரதேசத்தின் இட்டா நக ரில் உள்ள தோலா வரை, லோஹித் ஆற்றின்
குறுக்கே, 9.15 கி.மீ., துாரத்துக்கு பாலம் கட்டப்பட்டு உள்ளது.இந்தியாவிலேயே, ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள மிக நீளமான பாலம் இது தான்.இதை, பிரதமர் மோடி ...

ஊழலற்ற ஆட்சியே மத்திய அரசின் சாதனை: அமித் ஷா பெருமிதம்

Posted: 26 May 2017 10:27 AM PDT

''மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமை யில், பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், நாட்டில் ஜாதி அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., தலைமையிலான, மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட, எதிர்க்கட்சிகளால் முன்வைக்க முடிய வில்லை. இதன் மூலம், நாட்டில், துாய்மை யான அரசு நிர்வாகம் மற்றும் அரசியலுக்கு, பா.ஜ., வித்திட்டுள்ளது,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்து உள்ளார். கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அந்த ஆண்டு, மே, 26ல் நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். டில்லி யில் நடந்த ...

29ல் மா.செ.,க்கள் கூட்டம்: சசிகலா அணியில் பரபரப்பு

Posted: 26 May 2017 10:32 AM PDT

அ.தி.மு.க., - சசிகலா அணி எம்.எல்.ஏ.,க்கள், பல கோஷ்டிகளாக பிரிந்து, அரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள நிலையில், மாவட்ட செயலர்கள், தலைமை நிர்வாகிகள் கூட் டத்தை, முதல்வர் பழனிசாமி கூட்டிஉள்ளார்.

சசிகலா அணி எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர் அணிக்கு செல்வதை தடுக்க, அவர்களுக்கு, சசிகலா தரப்பில், பல வாக்குறுதிகள் அளிக்கப் பட்டன. அதை நம்பி, எம்.எல்.ஏ.,க்கள், சசிகலா அணியில் தொடர்ந்தனர். பேசிய தொகையில், 50 சதவீதம் முதலில் தரப்பட்டது; மீதித் தொகை வழங்கப்படவில்லை.முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்று, 100 நாட்கள் கடந்த நிலையில், வாக்குறுதிகள் எதுவும் நிறை ...

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீர்மானம்!

Posted: 26 May 2017 10:50 AM PDT

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர், சோனியா தலைமையில், 17 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், 'ஜனாதிபதி தேர்தலில், பொது வேட்பாளரை நிறுத்துவது' என, தீர்மா னிக்கப்பட்டு உள்ளது.

இந்த விஷயத்தில், ஏகமனதாக வேட்பாளரை தேர்வு செய்வதில், கருத்து வேறுபாடு ஏற்பட்டால், தீர்வு காண, குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை, 25ல் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ...

சுத்தி சுத்தி வாறாங்க 17 எம்.பி.,க்கள்; முதல்வர் பழனிசாமிக்கு அடுத்த 'செக்'

Posted: 26 May 2017 11:00 AM PDT

மதுரை: ஓ.பி.எஸ்., அணிக்கு தாவாமல் இருப்பதற்காக, நடந்த மறைமுக, 'டீலிங்'கை நிறைவேற்றுமாறு, 17 அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் முதல்வர் பழனிசாமியை, 'ரவுண்டு' கட்டி வருகின்றனர்.

ஜெ., மறைவிற்கு பின், கட்சியிலும், ஆட்சியி லும் மன்னார்குடி கும்பல் ஆதிக்கம் செய்ததால் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். பின், சசிகலாவிற்கு எதிராக அரசியல் செய்தபோது, ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவாக அமைச்சர்கள், 3 எம்.எல்.ஏ.,க்கள், 12 எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்தனர்.இதனால், அதிர்ச்சியடைந்த சசிகலா தரப்பு, ஓ.பி.எஸ்., பக்கம் மேலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள் ...

அரசியலுக்கு வராதீங்க! ரஜினிக்கு கமல் 'அட்வைஸ்'

Posted: 26 May 2017 11:05 AM PDT

''தற்போதைய அரசியல் நிலவரத்தில், அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது,'' என, ரஜினிக்கு, நடிகர் கமல் யோசனை தெரிவித்துள்ளார்.

கமல் கூறியதாவது:
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிய பேச்சு எழுந்துள்ளது. தற்போதைய அரசியல் நிலவரத்தில், யாரும் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. இதில், ஏன் ரஜினி உள் ளிட்ட நடிகர்களை மட்டும், தனியாக ஒதுக்க வேண்டும். பகுத்து அறிபவர்கள், யாருமே அரசியலுக்கு வர வேண்டாம். இந்தியனாக இருக்க, நாட்டையும், சட்டத்தையும் மதிக்க வேண்டும்.முக்கியமாக,வரி கட்டவேண்டும். அதை, நான் செய்து கொண்டு இருக்கிறேன். ...

'ஜெ., படம் வைத்தால் வீரப்பன் படம் வைப்போம்'

Posted: 26 May 2017 11:37 AM PDT

ஈரோடு : ''நீதிமன்றத்தால் குற்றவாளி என, தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை, சட்டசபையில் வைத்தால், ஐ.ஜி., அலுவலகத்தில் வீரப்பன், ஆட்டோ சங்கரின் படங்களை வைப்போம்,'' என, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.
அவமானம்:
ஈரோட்டில் அவர் கூறியதாவது: சட்டசபையில், ஜெ., படம் வைக்கப்பட உள்ளதாகவும், அதை திறக்க பிரதமரை அழைத்ததாகவும், முதல்வர் பழனிசாமி கூறுகிறார். நீதிமன்றத்தால் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டவரின் படத்தை, முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., போன்றோர் படங்களுடன் வைப்பது, அவர்களை ...

மேலும் 20 குவாரிகளுக்கு அனுமதி கோருகிறது அரசு!

Posted: 26 May 2017 12:32 PM PDT

மணல் தட்டுப்பாட்டை போக்க வசதியாக, மேலும், 20 குவாரிகளுக்கு, பொதுப்பணித் துறை அனுமதி கோரி உள்ளது.
தமிழகத்தில், 54 இடங்களில், மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதி முடிந்ததால், படிப்படியாக அனைத்து குவாரிகளும் மூடப்பட்டன. இதனால், மணல் தட்டுப்பாடு அதிகரித்து, கட்டுமானப் பணிகள் முடங்கின.
இந்நிலையில், 30 இடங்களில், மணல் குவாரிகள் திறக்க, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம், தமிழக அரசு விண்ணப்பித்தது. முறையான அனுமதி கிடைத்து, மே, 5 முதல் படிப்படியாக, 20 குவாரிகள் திறக்கப்பட்டுள்ளன; ...

மான்செஸ்டர் பயங்கரவாதியின் இறுதி தொலைபேசி உரையாடல்

Posted: 26 May 2017 01:28 PM PDT

மான்செஸ்டர் : இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி 'என்னை மன்னித்து விடுங்கள்' என தொலைபேசியில் கடைசியாக கூறியதாக, அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதி உரையாடல்:
மே 21ம் தேதி மான்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 59 பேர் காயமடைந்தனர். விசாரணையில், சல்மான் அமேதி, 22, என்ற இளைஞர் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. இந்நிலையில் குண்டுவெடிப்பை நடத்தும் முன், 'என்னை மன்னித்து விடுங்கள்' என தொலைபேசியில் சல்மான்அமேதி ...

மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?

Posted: 26 May 2017 03:04 PM PDT

தமிழக வனத்துறை சார்பில், மாபெரும் மரங்கள் வளர்ப்பு திட்டம், ஜெ., மறைவுக்கு பின், அடியோடு முடக்கப்பட்டு விட்டது.

தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில், வனத்துறை சார்பில், மாபெரும் மரக்கன்று நடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல்வராக, ஜெ., இருந்த போது, வனத்துறை பண்ணைகளில், நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டு விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வந்தன.
தமிழகத்திலுள்ள, 32 மாவட்டங்களில், சென்னை நீங்கலாக, மற்ற மாவட்டங்களுக்கு, மரக்கன்று வளர்ப்பு மற்றும் நடவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். ஆறு ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™