Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மே 25ம் நாள் உலக தைராய்டு தினம்

Posted: 24 May 2017 03:03 PM PDT

மே 25ம் நாள் உலக தைராய்டு தினம் உலக அளவில் தைராய்டு நோயின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், மே 25ம் நாள் உலக தைராய்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இதனுடைய முக்கிய நோக்கம். தைராய்டு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி, அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதும், அகற்றுவதும் ஆகும். இத்தினம் 2008லிருந்து கொண்டாடப்படுகிறது. உலக அளவில் பெண்கள் ஆண்களை விட இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 20 கிராம் எடையில் கேடய வடிவில் உள்ள தைராய்டு சுரப்பி உடலில் உள்ள திசுக்கள், செல்கள், ...

ஜப்பான் செல்லும் சுடரொளி!

Posted: 24 May 2017 11:04 AM PDT

- கிராமத்து இளம் பெண்ணின் எளிமையான தோற்றம். கண்ணில் தீர்க்கமான பார்வை. அதற்கேற்ப அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் சுடரொளி. பெயருக்கேற்ப, அறிவியல் ஆர்வத்தைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்துள்ளார் அவரது ஆசிரியை கலையரசி. விவசாயிகளைக் காப்பற்ற முடியாதா? மாணவி சுடரொளி சேலத்தை அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர். சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது பிளஸ் 1 படித்துவருகிறார். அவருடைய தந்தை சுடலேஸ்வரன் பெயிண்டிங் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். தாய் பாப்பாத்தி, ...

புதுக்கவிதை

Posted: 24 May 2017 10:43 AM PDT

நிலைமை ரொம்ப மோசமாக இல்லை..!! * நிலைமை ரொம்ப மோசமாக இல்லை சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது சமாளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அத்தனையும் ஆராயப்பட்டுள்ளது. எப்படியும் சமாளிக்கலாம் என்றுதான் மையக் குழு முடிவு செய்துள்ளது நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். விமர்சகர்கள் கரித்துக் கொட்டுகிறார்கள். நிலைமை ரொம்ப மோசமாக இல்லை சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது எப்படியும் சமாளித்தே தீர வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருக்கிறோம் என்பதை மட்டும் தைரியமாகச் சொல்லிக் கொள்கிறோம். சமாளித்து ...

ரெண்டுபேரும் எப்ப சேருவாங்களோ ?

Posted: 24 May 2017 10:41 AM PDT

டீக்கடை பெஞ்சில் அமர்ந்து செய்தித்தாளைத் துருவித் துருவிப் படித்துக் கொண்டிருந்தார் இஸ்மாயில் பாய் .எதிரே உட்கார்ந்திருந்த குப்பண்ணாவைப் பார்த்து , " என்ன குப்பண்ணா சார் ! ரெண்டு பேரும் ஒன்னுசேர  மாட்டாங்க போலிருக்கே ! இழுத்துகிட்டே போவுதே ! பேச்சுவார்த்தை நடத்தக் குழுவெல்லாம் அமைச்சதா சொன்னாங்களே ! இதோ இன்னிக்கி சேந்துடுவாங்க ; நாளைக்கு சேந்துடுவாங்கன்னு சொல்றாங்களே தவிர ஒன்னும் சேர்ந்தபாடில்லையே ! " ' இஸ்மாயில் பாய் ! கண்டிஷன் மேல கண்டிஷன் போட்டா எப்படி சேரமுடியும் ? " " அப்படி என்ன ...

ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:

Posted: 24 May 2017 10:39 AM PDT

கஜினி முகமதுவின்வடக்குப் பிரதேச தொடர் படையெடுப்புகளின் காலகட்டத்தில்தான் ராஜேந்திர சோழனின் கங்கைப்படையெடுப்பும் நடந்தது .அப்போது கத்தியவாரை (குஜராத்) ஆண்டு வந்த சோலங்கி மீது கஜினி முகமது படையெடுத்த அதே கால கட்டத்தில் தான், தெற்கே சோழ நாட்டிலிருந்து இராசேந்திர சோழன் வங்காளத்தின் மீது படையெடுத்தார் . இது குறித்து ஒரு விரிவான விவாதம் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் பொன்னியின் செல்வன் எனும் மடலாடல் குழுவில் நடைபெற்றது நினைவிருக்கிறது . நமது வரலாறு இன்றுவரை சரியான முறையில் ஆதாரத்துடன் நிறுவப்படவில்லை ...

‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம்

Posted: 23 May 2017 10:40 PM PDT

உலகம் முழுவதும் 100க்கு அதிகமான நாடுகளில் உள்ள கணினிகளை ஆக்கிரமித்து பணம் பறிக்கும் 'வானாகிரை' வைரஸ் தாக்குதலிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு ஒன்றை பிரெஞ்சு பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். பிரிட்டன், ஸ்பெயின், ஜப்பான், இந்தோனீசியா, தைவான் உள்ளிட்ட சுமார் 150 நாடுகளைச் சேர்ந்த 300,000 கணினிகள் இந்தத் தாக்குதலால் பாதிக்கப் பட்டுள்ளன. உலகிலேயே மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட கணினித் தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் தாக்கிய கணினிகளில் உள்ள தகவல்களைப் ...

மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி

Posted: 23 May 2017 07:44 PM PDT

சென்னை : சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது. நாட்டின் 12 முக்கிய பெரும் துறைமுகங்களில் சென்னை துறைமுகமும் ஒன்று. 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்துறைமுகம் சரக்கு போக்குவரத்தில் முதன்மையாக விளங்கியது. நகரமயமாதலால் துறைமுகத்தின் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது. துறைமுகத்துக்கு அதிக வருவாய் ஈட்டி கொடுத்த நிலக்கரி இறக்குமதிக்கு ஐகோர்ட் திடீர் தடை விதித்தது. அதேசமயம், நாளுக்கு நாள் போக்குவரத்து ...

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை

Posted: 23 May 2017 06:20 PM PDT

- ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் ------------------- ஹாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் படத்தின் கதைக்களத்தை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழில் கவனம் செலுத்தி வந்த படங்களைத் தொடர்ந்து, ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதற்காக 3 மாதங்கள் தேதிகள் ஒதுக்கி நடித்து வருகிறார். கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கு 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ...

கொரிய மொழியில் திருக்குறள்

Posted: 23 May 2017 05:36 PM PDT

சென்னை: கொரிய மொழியில் அச்சிடப்பட்ட, திருக்குறள் நுாலை, முதல்வர் பழனிசாமி, நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார். 'கொரிய மொழியில், திருக்குறள் வெளியிடப்படும்' என, தமிழக அரசு, 2015ல், அறிவித்திருந்தது. இதற்காக, 36 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. உலக தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம், திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு, கொரிய மொழியில் அச்சிடப்பட்டுள்ளது. இந்நுாலை, முதல்வர் பழனிசாமி, நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார். முதல் பிரதியை பெற்ற, சென்னையில் உள்ள, தென் கொரியா துாதர் ...

உலக சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக ஆப்பிரிக்கர் தேர்வு

Posted: 23 May 2017 05:36 PM PDT

- ஜெனீவா டெட்ராஸ் அதானோம் கேப்ரேயேசுஸ், சுருக்கமாக உலக அளவில் டெட்ராஸ் எனும் அழைக்கப்படும் ஆப்பிரிக்கத் தலைவரான அவர் மொத்தமுள்ள 185 உலக சுகாதார நிறுவனத்தின் வாக்களிக்கும் உரிமையுள்ள   உறுப்பினர்களில் 133 பேரின் வாக்குகளைப் பெற்று தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பிரிட்டனின் பிரதிநிதியை தோற்கடித்தார். டெட்ராஸ் 2006 ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து தலைவர் பதவியிலிருக்கும் மார்கரெட் சான் என்பவருக்கு அடுத்த தலைவராக பதவியேற்கவுள்ளார். தேர்தல் இரகசிய வாக்கெடுப்பு ...

பாவமும் சாபமும் நீங்கும்! -பெரம்பலூர் மதனகோபால ஸ்வாமி கோயில்

Posted: 23 May 2017 05:24 PM PDT

- பெரம்பலூர் மதனகோபால ஸ்வாமி கோயில் -------------------- பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மிக பிரமாண்டமான தோற்றத்துடன் அமைந்துள்ளது அருள்மிகு மதனகோபால ஸ்வாமி ஆலயம். 9ம் நூற்றாண்டில், சுந்தரபாண்டிய மன்னன் கட்டிய, புராதன் பெருமைகள் கொண்ட கோயில் இது. இங்கே உள்ள அனுமன் சந்நிதியும் அதன் மேல் அவரின் தந்தை வாயுபகவானின் வாகனமான மானும் இருப்பதும் விசேஷம் என்கின்றனர். வியாக்ரபாதர் மற்றும் பஞ்சபாண்டவர்களுக்கும் இங்கு சந்நிதி உண்டு. -

கல்யாண கோதண்டராமர்

Posted: 23 May 2017 05:18 PM PDT

ரம்மியமான சூழல், பச்சைப்பசேல் வயல்வெளிகள், நெல்லும் கரும்பும் விளைந்து செழுமையாகக் காட்சி தரும் கிராமம். பார்க்கும்போதே லட்சுமிகரமாகத் தோன்றும் அந்தக் கிராமத்துக்கு லட்சுமிபுரம் என்றே பெயர் இருப்பது பரம பொருத்தம். குறிச்சி என்ற பெயரிலும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. - இந்த ஊரில் அமைந்துள்ள கல்யாண கோதண்டராம சுவாமி ஆலயத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள், புஷ்பவல்லித்தாயார், கல்யாண கோதண்ட ராமர் மற்றும் கிருஷ்ணருக்கு தனித்தனிச் சன்னதிகள் உள்ளன. இத்தலம் ஒரு காலத்தில் தாடகையின் ...

பாம்பு, முயல், மந்திரி..! குருவின் வார்த்தைகளில் உண்மை உணர்ந்த சைதன்யன் கதை!

Posted: 23 May 2017 05:06 PM PDT

- சைதன்யன்! நாமதேவரின் குருகுலத்தின் மிகச் சிறந்த மாணவன் அதிபுத்திசாலி. மற்ற மாணவர்களைவிட குரு அவனை அதிகம் நேசிப்பார். நாமதேவர் தனக்குத் தெரிந்த வித்தைகள் அனைத்தையும் சைதன்யனுக்கு பயிற்றுவித்திருந்தார். சைதன்யனுக்கு 18 வயது ஆனதும் குரு அவனை அழைத்தார். சைதன்யா "நீ தெரிந்துகொள்ள வேண்டிய அத்தனை வித்தைகளையும் கற்றுக் கொண்டாய். இனிமேல் நீ இங்கிருக்க வேண்டிய தேவை இல்லை. எனவே உன்னை பெற்றெடுத்த தாய் தந்தையரிடம் சென்று அவர்களுக்கு பணிவிடை செய்! உன்னுடைய வாழ்வில் கடவுள் எப்போதும் ...

இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!

Posted: 23 May 2017 04:58 PM PDT

இந்தி படிக்க வேண்டும் என்பதை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தி தாய் மொழி அல்லாத மாநில அரசுகள் மீது இந்தி திணிக்க முயற்சித்து வருவதாக பிஜேபி அரசு மீது பல்வேறு மாநிலங்களில் இருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்தியை தாய்மொழியாக கொண்டிராத மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்தன. இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™