Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மனை விற்பனையை பதிய வேண்டாம் : சார் - பதிவாளர்களுக்கு உத்தரவு

Posted: 24 May 2017 09:25 AM PDT

'வீட்டுமனை மற்றும் மனைப்பிரிவு தொடர் பான விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய வேண்டாம்' என, சார் பதிவாளர்களுக்கு, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

அங்கீகாரமில்லா மனை விற்பனை பத்திரங் களை பதிவு செய்ய, சென்னை உயர் நீதி மன் றம், 2016, செப்., 9ல், தடை விதித்தது. இது மே, 12ல், தளர்த்தப்பட்டது. அங்கீகாரமில்லா மனை மறு விற்பனையை மட்டும் அனுமதிக்கும் வகையில், தமிழக அரசின், 2016 அக்., 20ல், அரசாணைப்படி, பத்திரப்பதிவு செய்ய உயர்நீதி மன்றம் அனுமதித்தது. இதன் படி, தமிழக அரசு அறிவித்துள்ள மனைகள் வரன்முறைத் திட்டத் தைச் செயல்படுத்த, நீதி மன்றம் அனுமதி அளித் தது. இருப்பினும், ...

'நீட்' தேர்வு முடிவு வெளியிட தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

Posted: 24 May 2017 10:15 AM PDT

மதுரை: 'நீட்' தேர்வு முடிவை வெளியிட, இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

மதுரையைச் சேர்ந்த, ஜொனிலா உட்பட, ஒன்பது பேர் தாக்கல் செய்த மனு: எம்.பி.பி. எஸ்.,- - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' என்ற தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்த, 2012ல் முடிவு செய்யப்பட்டது. மொத்தம், 180 வினாக்களில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தலா, 45 வினாக்கள் இடம்பெறும்.
அறிவிப்பு
மத்திய அரசின், 'நீட்' தேர்வுக்கு, 2016ல், உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 2016ல், 'நீட்' தேர்வை ஆங்கிலம், ஹிந்தியில் நடத்த ...

நினைவு இல்லமாகிறது ஜெ., வீடு: அமைச்சரவை இன்று முடிவு?

Posted: 24 May 2017 10:18 AM PDT

திருச்சி:மறைந்த முதல்வர், ஜெ.,யின் வீடான போயஸ் தோட்டத்தை நினைவு இல்லமாக்கும் வகையில், முதல் கட்டமாக, அதை அரசுடமை யாக்கும் அறிவிப்பு, இன்று அமைச்சரவை கூட்டத்துக்கு பின் வெளியிடப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் கார்டன் வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என, பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.பொதுமக்கள் மற்றும், அ.தி.மு.க.,வினரின் விருப்பத்தை நிறை வேற்றும் வகையில், போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவு இல்லமாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.முதல் கட்டமாக, போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கும் திட்டத்தை, ...

வருமான வரி சோதனையில் ரூ.600 கோடி பினாமி சொத்து... சிக்கியது!

Posted: 24 May 2017 10:22 AM PDT

புதுடில்லி: நாடு முழுவதும், 400 பினாமி பரி வர்த்தனைகள் நடந்துள்ளதை, வருமான வரித் துறை கண்டுபிடித்து உள்ளது. இதில் தொடர் புள்ள, 600 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன. இதனால், பினாமிகள் பெயரில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ள பண முதலைகள் பீதியடைந்து உள்ளனர்.

பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டம், 2016ல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ், 2016 நவ., முதல், வருமான வரித்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் தொடர்ச் சியாக, கடந்த வாரம், நாடு முழுவதும், 24 பினாமி பரிவர்த்தனை தடுப்பு மையங்களை, வருமான வரித்துறை அமைத்தது. இந்த மையங்களைச் சேர்ந்த ...

பினாமி சொத்து விவகாரம் லாலு மகள், மருமகனுக்கு சம்மன்

Posted: 24 May 2017 10:24 AM PDT

புதுடில்லி: பினாமி சொத்து பரிமாற்ற விவகாரம் தொடர்பாக, ராஷ்ட்ரீய ஜனதா தளதலைவர் லாலு பிரசாத்தின் மகள் மற்றும் மருமகனுக்கு, வருமான வரித்துறை, சம்மன் அனுப்பியுள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமை யிலான ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி; ராஜ்யசபா உறுப்பினர். இவருக்கு தொடர்புள்ள நிறுவனங்களில்,
கறுப்பு பணத்தைவெள்ளைஆக்குவது, பினாமி சொத்துகள் பரி மாற்றம் செய்வது உள்ளிட்ட முறை கேடுகள் நடப்ப தாக, அதிகளவில் புகார்கள் ...

சக மந்திரிகள், மூத்த அதிகாரிகளை முதல்வர் நம்பாததால் சா்ச்சை!

Posted: 24 May 2017 10:47 AM PDT

தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமருடன் பேச்சு நடத்த, சக அமைச்சர்கள், அதிகாரிகளை நம்பாமல், தன் உறவினரை அழைத்துச் சென்றது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியலில், இரு அணிகளாக செயல் படும், அ.தி.மு.க., தலைவர்கள் மத்தியில், மத் திய, பா.ஜ., அரசை ஆதரிப்பதில், கடும் போட்டி நிலவுகிறது. டில்லியிலிருந்து, பன்னீர் செல்வத்துக்கு கிடைத்து வந்த ஆதரவு மாறி விட்டதாக, முதல்வர் பழனிசாமி அணியினர் கூறத் துவங்கினர்.அதற்கு ஏற்றாற்போல, தமிழக அமைச்சர்கள் பலரும், டில்லி வந்து, மத்திய அமைச்சர்களை சந்தித்தனர். இதனால், பன்னீர்செல்வம் தரப்பு பதற்றம் அடைந்தது. இதையடுத்து ...

மக்களை சந்திக்க ஒரு மணி நேரம்; மந்திரிகளுக்கு கெஜ்ரிவால் உத்தரவு

Posted: 24 May 2017 10:53 AM PDT

புதுடில்லி: வார நாட்களில், தினசரி, ஒரு மணி நேரம், பொதுமக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, நிவர்த்தி செய்யும்படி, தன் அமைச்சர்களுக்கும், அதிகாரி களுக்கும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

டில்லியில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். ஆனால், சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும், அந்த கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால், மக்கள் மத்தியில், ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கு இழந்து வருகிறது.சமீபத்தில் நடந்த, பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில், ஆட்சியை பிடித்து ...

எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை

Posted: 24 May 2017 11:09 AM PDT

அ.தி.மு.க., - சசிகலா அணியில் உள்ள, எம்.எல்.ஏ.,க்களிடம் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், பன்னீர் அணி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு, பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆவணங்கள்
சமீபத்தில், பன்னீர்செல்வம் தலைமையில், முன்னாள் அமைச்சர் முனுசாமி, எம்.பி., மைத்ரேயன்,முன்னாள், எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர், டில்லியில் பிரதமரை சந்தித்தனர். அதில், பேசப் பட்ட விஷயங்கள் குறித்து, இந்த கூட்டத்தில் பன்னீர் செல்வம் ...

புதிய மாற்றங்களால் ஏற்படுமா 'கல்வி மறுமலர்ச்சி' மலருது மனஅழுத்தமில்லாத மாணவர் சமுதாயம்!

Posted: 24 May 2017 11:19 AM PDT

கற்றதை மனப்பாடம் செய்து பெற்ற மதிப் பெண்ணை கொண்டாடும் கல்வி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து மாணவரின் சிந்தனை திறனை அதிகரித்தும்,படைப்பாற்றலை ஊக்கு விக்கும் வகையில் தமிழக கல்வி துறையில் அடுத்தடுத்த மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

'மதிப்பெண்ணே மாணவர் அளவுகோல்,' என்ற மாயையை மாற்றி, மனஅழுத்தத்தை மாணவ ருக்குள் உற்பத்தி செய்யும் தேர்வு முறைக்கு விடை கொடுத்து, அறிவு தேடலை நோக்கிய கல்வித்துறையின் இப்புதிய பயணம் குறித்து பெற்றோர், பள்ளி முதல்வர்கள், கல்வி நிறுவன உரிமையாளர் என்ன சொல்கிறார்கள்...
தொடர்ந்து பொதுத் தேர்வுகள்
ஹேமா ஆட்ரே, ...

'உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!'

Posted: 24 May 2017 12:04 PM PDT

லக்னோ: எம்.பி., பதவியை ராஜினாமா செய்யாததால், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி, உ.பி., மற்றும் மத்திய அரசுக்கு, அலகாபாத் ஐகோர்ட் உத்தர விட்டுள்ளது.
உ.பி.,யில் நடந்த சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அந்த கட்சியை சேர்ந்த, எம்.பி.,க்கள் யோகி ஆதித்யநாத், முதல்வராகவும், கேஷவ் பிரசாத் மவுரியா, துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். இவர்கள், இன்னும், எம்.பி., பதவியை ராஜினாமா செய்யவில்லை. இந்நிலையில், எம்.பி., பதவியை ராஜினாமா ...

'ஆதாருக்கு பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை'

Posted: 24 May 2017 12:54 PM PDT

புதுடில்லி: 'ஆதார் பதிவுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் இல்லை' என, ஆதார் அடையாள அட்டை ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், அவர்களின் கண் கருவிழி பதிவு மற்றும் கைரேகை பதிவு அடிப்படையில், ஆதார் எண் உருவாக்கப்பட்டு, அதற்கான அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. இதில், பயனாளியின் பெயர், தந்தை பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்கள் இடம் பெறும்.
இந்நிலையில், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில கிராமங்களில், பலருக்கு ஒரே தேதியே அவர்களின் பிறந்த நாளாக ...

எதிரிகள் அத்துமீறினால் தலைமுறைகள் தாண்டி வருந்துவர் : பாகிஸ்தான் 'புலம்பல்'

Posted: 24 May 2017 01:44 PM PDT

இஸ்லாமபாத்: எதிரிகள் அத்துமீறினால், அவர்கள் தலைமுறைகள் கடந்து வருந்தும் அளவுக்கு பாகிஸ்தான் தயார் நிலையில் இருக்கிறது, என அந்நாட்டு விமானப் படைத் தளபதி சோஹைல் அமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: எதிரிகளின் எச்சரிக்கைகளை கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. எந்த சவாலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நாம் தயாராக இருக்கிறோம்.
எதிரிகள் அத்துமீறினால், தலைமுறைகள் கடந்து நினைத்து வருந்தும் அளவுக்கு எல்லையில் பாகிஸ்தான் படைகள் தயார் நிலையில் இருக்கின்றன, என்றார்.
இந்திய விமானப்படைத் தளபதி பி.எஸ்.தோனா, ...

மணல் தட்டுப்பாடு: 'எம் சேண்ட்' விலையும் எகிறியது

Posted: 24 May 2017 02:22 PM PDT

கோவை: -மணல் தட்டுப்பாடு காரணமாக, 'எம் சேண்ட்' எனப்படும், செயற்கை மணல், ஒரு லோடு, 21 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், காவிரி, பாலாறு உள்ளிட்ட ஆற்று படுகைகளில், 54 இடங்களில், மணல் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில், மே, 5 முதல் இடைத்தரகர் இல்லாமல், அரசே மணல் சப்ளை செய்கிறது. ஆனால் தினமும், 2,000 லோடு ஏற்றப்பட்ட குவாரிகளில், 25 முதல், 50 லோடுகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன. கரூர், திருச்சி மாவட்ட குவாரிகளில், உள்ளூர் லாரிகளுக்கு மட்டும் மணல் ஏற்றுகின்றனர்.
இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, 2,000 லாரிகள் மணல் ...

வாக்கு பதிவில் முறைகேடு செய்ய முடியாது : நஜீம் ஜைதி

Posted: 24 May 2017 03:04 PM PDT

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யவே முடியாது என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்பட 5 மாநிலத் தேர்தல்களிலும், டெல்லி மாநகராட்சித் தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து பாஜக வெற்றிபெற்றதாக கெஜ்ரிவால், மாயாவதி உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, கடந்த வாரம் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™