Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கம்பரை ஆதரித்த வள்ளல் – பொ.அ.தகவல்

Posted: 21 May 2017 03:47 PM PDT

வரலாற்றில் இன்று 21.05.2017

Posted: 21 May 2017 03:45 PM PDT

996 – புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான். 1502 – போர்த்துக்கீச மாலுமி ஜொவாவோ டா நோவா புனித ஹெலெனா தீவைக் கண்டுபிடித்தார். 1792 – ஜப்பானில் ஊன்சென் மலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,300 பேர் கொல்லப்பட்டனர். 1851 – கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது. 1859 – பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது. 1864 – ரஷ்ய-கோக்கசஸ் போர் முடிவடைந்தது. 1871 – பிரெஞ்சு அரசுப் படைகள் பாரிஸ் கம்யூனைத் தாக்கினார். ஒரு வார முற்றுகையில் ...

எவரெஸ்ட்டில் ஏறி இந்திய பெண் உலக சாதனை

Posted: 21 May 2017 03:39 PM PDT

- இடாநகர் : உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட்டை, 5 நாட்களில், 2 முறை ஏறி, இந்திய பெண் அன்சு ஜம்சென்பா உலக சாதனை படைத்துள்ளார். அருணாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அன்சு ஜம்சென்பா. 2 குழந்தைகளுக்கு தாயான அன்சுவின் முழுநேர பொழுதுபோக்கு மலையேற்றம் தான்... 4வது பயணம் அன்சு, கடந்த 16ம் தேதி, நேபாளத்தை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை ப்யூரி ஷெர்பா உடன் இணைந்து எவரெஸ்ட் உச்சியை அடைந்தார். இது அன்சு மேற்கொள்ளும் 4வது பயணம் என்பதும், கடந்த 5 நாட்களில் அவர் மேற்கொள்ளும் 2 வது ...

முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை

Posted: 21 May 2017 03:31 PM PDT

மேற்கு வங்காள மாநிலத்தில் அரசு வேலைக்கான 'குரூப் டி' தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. மே 22, 2017, 03:30 AM மால்டா, இத்தேர்வை எழுதுவதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அங்கு சென்றிருந்தனர். தேர்வை எழுதி முடித்த அவர்கள் பீகார் திரும்புவதற்காக மால்டா மற்றும் என்.ஜே.பி. ரெயில் நிலையங்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் காத்திருந்தனர். மால்டா ரெயில் நிலையத்தில் மட்டுமே சுமார் 40 ஆயிரம் பேர் காத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில் பீகார் ...

நாடு முழுவதும் 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை

Posted: 21 May 2017 03:29 PM PDT

புதுடெல்லி, நாடு முழுவதும் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத இறுதியில் தங்களது முந்தைய ஆண்டின் அசையா சொத்து விவரங்களை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி தாக்கல் செய்யாவிட்டால் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாது. இந்தநிலையில், 2016–ம் ஆண்டுக்கான அசையா சொத்து கணக்கு விவரத்தை 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை என மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ...

மே 30-ம் தேதி தமிழகத்தில் அனைத்து உணவகங்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்:

Posted: 21 May 2017 03:26 PM PDT

சென்னை, தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே 30-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள் ஒருநாள் வேலைநிறுத்தம். ஜிஎஸ்டி வரி விதிப்பில் 5% முதல் 18% வரை உணவகங்களுக்கு வரிவிதிப்பதால், உணவுகள் விலை உயரும். வரிவிதிப்பு குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். மக்கள் நலன்கருதி வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி பன்படங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. – ———————- தினத்தந்தி

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது

Posted: 21 May 2017 03:25 PM PDT

- லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இரண்டு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவோர் நாளை முதல் ஹெல்மட் அணியாவிட்டால் பெட்ரோல் வழங்கப்படாது என்ற புதிய விதிமுறை நாளை அமலுக்கு வருகிறது. இதனால் லக்னோ பெட்ரோல் நிலையங்களில் அதிகமாக கூட்டம் காணப்பட்டது. முன்னதாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு கடந்த வாரம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்து இருந்தது. உத்தரபிரதேச முதல்-மந்திரியாக பதவியேற்ற நாள் முதல் யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பது ...

ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது

Posted: 21 May 2017 03:20 PM PDT

- ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது - ஹைதராபாத் இன்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரேயொரு ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றது. மும்பை அணிக்கு இது மூன்றாவது சாம்பியன் பட்டமாகும். புனே அணி தனது இலக்கான 130 ரன்களை அடைய முடியாமல் 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. அணியின் தலைவர் ஸ்மித் 50 ரன்களைக் கடந்தாலும் ஆட்டத்தின் இறுதி ஓபரில் விக்கெட்டை பரிதாபமாக பறிகொடுத்தார். இதனால் புனே அணியின் சாம்பியன் ...

இளைப்பாறல் - பகுதி-3

Posted: 21 May 2017 11:56 AM PDT

இளைப்பாறல் - பா.வெ. வயல்வெளி கடந்து ஊருக்குள் செல்கையில் வரலாறு ஏந்திய கோவில்கள் வரிசையாக தென்படும்! ஓட்டுக்கட்டிடத்தில் வீற்றிருக்கும் ஊர்ப்புற தெய்வங்கள் ஊர் மக்கள் வேண்டுதல்களை ஒன்றுவிடாமல் நிறைவேற்றும்! கண்கண்ட தெய்வத்தின் கோவில் சுவர்கள் கரிய தேர்வு எண்களுடன் காட்சியளிக்கும்! கணநேரமும் குறையாத வெள்ளந்தி நம்பிக்கைக்கு சாட்சியளிக்கும்! சுவர்களில் பதிந்த சித்திர உருவங்கள் விழியால் மெல்ல மிரட்டும்! தீயவற்றை விரட்டும்! எண்ணெய் ...

தங்கையை அருகில் வைத்துக்கொண்டு .....

Posted: 21 May 2017 09:19 AM PDT

தோழி : என்ன இது ? பகல் நேரத்திலேயே வந்துவிட்டாயே ! தலைவன் : ஆமாம் ! என்னால் என் காதலியைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை ; அவளைப் பார்க்காமல்  உணவும் செல்லவில்லை ; உறக்கமும் வரவில்லை ! அவளை சீக்கிரம் வரச்சொல் . தோழி : நீ அவளைத் திருமணம் செய்துகொண்டால் , இப்படித் திருட்டுத்தனமாக வந்து சந்திக்கவேண்டிய அவசியம் வராது அல்லவா ? தலைவன் : அதெல்லாம் காலாகாலத்தில் நடக்கும் ; நீ போய் அவளை அழைத்து வா ! தோழி : நான் அழைத்து வருகிறேன் ; ஆனால் இந்த இடத்தில் நீங்கள் இருவரும் பேசவேண்டாம் ! தலைவன் ...

இளைப்பாறல் - பகுதி-2

Posted: 21 May 2017 09:02 AM PDT

இளைப்பாறல் - பா.வெ. மிதிவண்டிகளில் மிதந்த காலம் அது! ஊருக்குள் புதியவராயினும் உதவி கேட்டால் மறுக்காமல் மிதிவாங்கும் மிதிவண்டியில் கூட மெல்ல ஏற்றிச் செல்லும் மனிதர்களின் மாண்பு மகத்தானது! உப்பு,கோலமாவு,ஐஸ் வண்டி, வளையல் வண்டி,எண்ணெய் வண்டி, பால்காரர், பாத்திரக்காரர் என ஊருக்குள் ஓடாய் தேயும் உழைப்பாளிகள் பலரின் ஒரே வாகனம் மிதிவண்டி! கொளுத்தும் வெயிலிலும் மிதிவண்டிப் பயணம் ... கொழுப்பில்லை; இரத்தக் கொதிப்பில்லை; சர்க்கரை சற்றும் ...

ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?

Posted: 21 May 2017 08:17 AM PDT


-

நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!

Posted: 21 May 2017 08:16 AM PDT

- நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்! - அதற்காக குதிரைப்படைக்குப் பதிலாக பொய்க்கால் குதிரைப்படை அமைப்பது சரியா..? - கு.வைரச்சந்திரன் - -------------------------- - வேகமாக ஓடுங்கள் அமைச்சரே! எதிரி நம்மை நிழல் போல தொடருகிறான்! - நமது நிழல்தான் மன்னா அது...!! - கி.ரவிக்குமார் - -------------------------- - என்னது டாக்டரோட கேம்புக்கு புலி வந்து நின்னுகிட்டு இருக்கு? - ப்ளட் டேஸ்ட் பண்ணத்தான்..! - கடலூர் சார்லி - ---------------------------- குமுதம்

பிஞ்சும் இருக்கு…!

Posted: 21 May 2017 08:11 AM PDT

புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா?

Posted: 21 May 2017 08:10 AM PDT

புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா? – சன்மானத்தைத் தந்த பிறகு….தன்மானம் ரொம்ப பெரிது மன்னா! – பாஷா – ——————————— – ஆர்.கே.நகர்ல இருந்து நிறைய சந்தேகமா, என்னவாம்? – மீண்டும் தேர்தல் நடக்கும்போது கொடுத்த பணத்துக்கு ஓட்டுப் போடணுமா? இல்லே புதுசா பணம் கொடுப்பாங்களான்னுதான்! – பாலவிஜயகுமார் – ——————————— ரிப்பீட்'னு ஒரு மாத்திரையை மட்டும் எழுதிக் கொடுத்து இருக்கீங்களே …புது மாத்திரையா டாக்டர்? – நேற்றைய மருந்தையே ரீப்பீட் பண்ணச் சொல்லி எழுதி இருக்கேன்! – நாகராசன் – ——————————– – மாறுவேடத்தில் ...

சில்லறை

Posted: 21 May 2017 08:07 AM PDT


சட்டையைக் கழற்றி
ஸ்டாண்டில் மாட்டினேன்
மாட்டும்போது பாக்கெட்டிலிருந்து
நோட்டும் விழுந்தது,
சில்லறையும் விழுந்தது
நோட்டு வீழ்ந்தபோத சத்தத்தைக் காணோம்
சில்லறை வீழ்ந்தபோது பெருஞ்சத்தம்
ஓ!..சில்லறை சத்தம் போடும்!!

—————————


அமுதபாரதி

தாகங்கள் -கவிதை

Posted: 21 May 2017 07:56 AM PDT


-
மேகம்
தன் கண்களிலிருந்த
பாரத்தை இறக்கின.
நிலம் மறைந்தது
நீரின் தத்தளிப்புகளால்.
யுவதி
கூந்தலை மணம் கமழும் புகையால்
உலர்த்திக்கொண்டிருந்தாள்.
அவனுள் பெருக்கெடுத்தன
நிறைவுகொள்ளா தாகங்கள்.



ந.பெரியசாமி

நன்றி-குங்குமம்

இன்னும் பசுமையாக

Posted: 21 May 2017 07:15 AM PDT

ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டு வீட்டின் உள்ளே வந்து விழுந்தது பந்து நடுங்கும் கைகளோடு பந்தை எடுத்து தள்ளாடி படியிறங்கினேன் – பயம் பரவிய முகத்தோடு வாசலில் நிற்கும் சிறுவனிடம் ஏதும் பேசாமல் சின்ன புன்னகையுடன் கொடுத்தேன் பந்தைப் போல துள்ளி ஓடினான் – வீட்டின் பின் மைதானத்தில் சிறுவர்கள் கால்பந்து விளையாடும் இரைச்சல் மொட்டை மாடியில் ரேணுகாவின் கண்ணாமூச்சி கண் மூடி அமர்ந்து பெருமூச்சோடு முழங்காலைப் பார்த்தேன் – கபடியில் பட்ட காயத்தின் தழும்பு இன்னமும் பசுமையாக. – —————————- – ...

மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன்

Posted: 21 May 2017 07:07 AM PDT

- நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் 'மூலநோய்' (Piles) முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசனவாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்தசோகை எனப் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள். எது மூலநோய்? சாதாரணமாக, நம் உடலில் உள்ள சிரை ரத்தக் குழாய்களில் (Veins) குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பு வால்வுகள் உள்ளன. இவை ரத்தத்தை இதயத்துக்குச் செலுத்துகின்றன; ...

தமிழின் முதல் தூது நூல்..

Posted: 21 May 2017 07:00 AM PDT


-

ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ல் முழு கடையடைப்பு போராட்டம்

Posted: 21 May 2017 06:56 AM PDT

சென்னை: அனுமதியின்றி சில நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கக் கோரியும், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரியும் நாடுமுழுவதும் மருந்து வணிகர்கள் அவ்வவ்போது கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை அனுமதிக்கக் கோரி ஏராளமான கோரிக்கைகள் மத்திய அரசுக்கு வந்தது. இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை தற்காலிகமாக ஒரு கமிட்டியை அமைத்து ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வது குறித்து ஆய்வு ...

ரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்

Posted: 21 May 2017 06:51 AM PDT

நான் இதுவரை இரண்டு சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறேன். 'ரத்தம் ஒரே நிறம்', 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை'. 'ரத்தம் ஒரே நிறம்' கதைக்கே ஒரு சிறிய சரித்திரம் உண்டு. முதலில் அது 'கறுப்பு சிவப்பு வெளுப்பு' என்ற தலைப்பில் குமுதத்தில் தொடர்கதையாக அட்டகாசமாகத் துவங்கியது, மணியம் செல்வனின் அழகான சித்திரங்களுடன். மூன்று வாரங்கள் சிறப்பாக வந்த பின் எதிர்பாராத ஓர் எதிர்ப்பு அதற்கு நாடார் இனத்தவரிடமிருந்து வந்தது. நான் அப்போது பெங்களூரில் இருந்தேன். எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் கடிதங்கள் வந்தன. தமிழில் புதுப்புது ...

அதிவேக இணைய யுகத்தில் நுழையப் போகிறது இந்தியா.

Posted: 21 May 2017 06:41 AM PDT

கடந்த ஆண்டு இன்டெர்நெட் பயன்பாட்டில், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனாவுக்கு அடுத்த இடத்தில் அமர்ந்தது இந்தியா. ஆனாலும் இணைய வேகம் (Internet speed) என்று வரும் போது, பல ஆசிய நாடுகளை காட்டிலும் பின்தங்கியுள்ளது. இதற்கு தீர்வாக மூன்று தொலைதொடர்பு செயற்கை கோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இன்னும் 18 மாதங்களுக்குள் செயற்கைகோள்களின் வடிவமைப்பு உள்ளிட்ட வேலைகள் நிறைவேறும் என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். - --------------------- விகடன்

அசத்தல் இரட்டையர்களின் அசாத்திய மதிப்பெண் பட்டியல் பார்க்கணுமா..?

Posted: 21 May 2017 06:39 AM PDT

- நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய திருநெல்வேலி இரட்டையர்களுக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. - -

நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?

Posted: 21 May 2017 06:35 AM PDT

ராகினி ஆத்ம வெண்டி மு. விகடன் -------------- - இந்தியாவின் முதல் அதி நவீன சொகுசு ரயில் 'தேஜாஸ்' நாளை முதல் மும்பை- கோவா இடையேயான தன் முதல் ரயில் சேவையை தொடங்குகிறது. தேஜாஸ் எக்ஸ்பிரஸ் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய 'தேஜாஸ் எக்ஸ்பிரஸ்' ரயில் நாளை முதல் மும்பை- கோவா இடையே இயக்கப்படவுள்ளது. தானியங்கி கதவுகள், நெருக்கடி இல்லாத உட்புற இருக்கைகள் என அசத்தல் கட்டமைப்புடன் தேஜாஸ் வடிவமைக்கப் பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. - மத்திய ...

தன்வினை தன்னைச்சுடும் – சிறுகதை

Posted: 21 May 2017 06:30 AM PDT


-

ஐன்ஸ்டீனின் சொல்வெட்டுகள்

Posted: 21 May 2017 06:28 AM PDT

இவன் மனிதனா? மடிக்கணினியா?

Posted: 21 May 2017 06:27 AM PDT

வலையில் வசீகரித்தவை

Posted: 21 May 2017 06:25 AM PDT

எத்தனை நூற்றாண்டு ஆனாலும் இந்தக் கேள்விக்கு இந்தப்பதில் மட்டும் மாறாதுபோ… – ஏன் லேட்டு? லேட்டாயிணுச்சு! – ஸ்ரீதேவிரம்யா – முகநூல் – —————————— – வெகு அதீதமாகப் குழ்ந்து விடுகிறீர்கள். பிறகெப்போதும் சிறுகுறை சொல்லக்கூட உங்களூக்கே வழியில்லாதபடி. – அரூபி (ட்விட்டர்) – ————————– – பக்கத்துல ஒரு அக்கா பேசிட்டு இருந்தாங்க. சரியா கேட்கலே சத்தமா பேசுங்கனு சொல்றதுக்குப் பதிலா சவுண்ட் வையுங்கனுட்டேன். திக்குனு பார்க்கிறாங்க! – ஐஸ்வர்யா – ட்விட்டர் – —————————– – அடுத்த தலைமுறைக்கு ...

சிக்கனம் என்பதன் அர்த்தம்…

Posted: 21 May 2017 06:22 AM PDT


-

கடற்கரைல மணல் எடுக்க டென்டர் விடுறாங்களாம்…!!!

Posted: 21 May 2017 06:20 AM PDT

நினைவு – கவிதை

Posted: 21 May 2017 06:17 AM PDT

தலைவர் வீட்டுல பிரச்னையாம்…!

Posted: 21 May 2017 06:15 AM PDT


-

மானங்காத்த மருது பாண்டியர்-வீர தமிழனின் வரலாறு .

Posted: 21 May 2017 05:09 AM PDT

ந .சஞ்சீவி -மானங்காத்த மருது பாண்டியர் வீர தமிழனின் வரலாற்றை மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : mediafire.com download/bbw6sywdkp38n7x/ManangathaMaruthuPandiyar%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் குறிப்பு : நூலின் அளவு 50MB . இந்த டவுன்லோட் லிங்க் உங்களுக்கு கஷ்டமாக நினைத்தால் கருத்து பெட்டியில் வேறு எந்த டவுன்லோட் லிங்க் கொடுத்தால் சுலபமாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் பட்சத்தில் புதிய டவுன்லோட் லிங்க் ...

காணவில்லை -கவிதை

Posted: 21 May 2017 04:22 AM PDT

பெயர் முகவரி காணாமல் போன தேதி காணாமல் போன அன்று அணிந்திருந்த சட்டையின் நிறம் – எல்லா சுவரொட்டிகளும் காணாமல் போனவர்கள் பற்றியதுதான் தவிர தொலைத்தவர்களைக் காணவில்லை – காணாமல் போன தேதி அன்று தொலைத்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? – ரசிகன் ஞானியார் – விகடன் படம்- இணையம்

வீட்டிலும் சைட் அடிக்கிறான்...!!!

Posted: 21 May 2017 04:19 AM PDT

- ரோட்டிலே சைட் அடித்தான் வீட்டிலே சைட் அடிக்கிறான் வெப் சைட்டில்! - ------------------------------ - பெருக்கிய போதும் கூட்டிய போதும் எல்லாமே கழிந்தது கணக்கு நோட்டு - ----------------------------- - பல் டாக்டர் அவர் பல்லைக்காட்டினார் அவளிடம் விழுந்தது அறை! - ------------------------

விடிந்திடலாம் -கவிதை

Posted: 21 May 2017 02:57 AM PDT

பிரிட்டிஷ் ஏஜெண்ட் -பேயோன் நூல் .

Posted: 21 May 2017 02:54 AM PDT

எழுத்தில் வாழ்நாள் சாதனைக்காக யுனெஸ்கோவின் இப்படியெல்லாம்கூடவா எழுதுவார்கள்?' விருது பெற்ற ஒரே எழுத்தாளரின் புதிய நூல். அச்சில் கிடைக்காமல் இலவச மின்னூலாக மட்டுமே கிடைப்பது இந்நூலின் தனிச் சிறப்புகளில் ஒன்று. ஆசிரியர் 2013இல் எழுதிய படைப்புகளில் பலவற்றின் தொகுப்பான இப்புத்தகத்தைப் படிக்கும்போதே 2013ஆம் ஆண்டு உலக வரலாற்றில் எவ்வளவு முக்கியமானது என்று அறியலாம். எழுதத் தொடங்கியதிலிருந்து ஒவ்வோர் ஆண்டையும் உலக வரலாற்றில் இடம்பெறச் செய்துவிடும் இவரது புதிய படைப்பு இப்போது தமிழில். ஆசிரியர் : ...

அம்மாவின் அல்சைமர் –

Posted: 21 May 2017 02:50 AM PDT

- கற்றுத் தந்ததை மறந்த சிறுமி போல் முற்றத்துக்கும் புழக்கடைக்கும் வழியறியாது கைபிசைந்து நிற்கிறாள் பணத்தை பாம்பென்றும் சோற்றை மண்ணென்றும் பெயர் மாற்றி வைக்கிறாள் ரெண்டு மாமாங்கப் பாழ் நெற்றியில் குங்குமம் தரித்தும் தும்பைப்பூ சிகையில் – துளி முல்லைச்சரம் சூட்டியும் அழகுபார்க்கிறாள் அவசரமாய் ஓடி அமரத் தெரியாமல் அடிக்கடி ஆடையை நனைத்துக்கொள்கிறாள் ஆரு பெத்த புள்ள இது அடிக்கடி ஊட்டுக்கு வருதென்று அவள் சொல்லும்போது மட்டும் ஆயிரம் ஊசி உயிர் துளைக்கும் வலியை என் செய்வதெனப் புரியவில்லை. – —————————— – ...

மொட்டு – கவிதை

Posted: 21 May 2017 02:48 AM PDT

- ஐம்பத்தைந்து நாட்கள் தள்ளிப்போன மாதவிலக்கை 'மொட்டு துளிர்த்திருக்கும்' என உவகையில் உள்ளுணர்ந்த கணத்தில் சட்டென கட்டவிழ்ந்து பூக்கா புதுமலர் உதிர, இனியும் நாம் வருந்தி ஆவது ஒன்றுமில்லை. – இதோ, இந்த ஓட்டு வீட்டிற்கு அப்பால் தென்னைமரங்களுக்குள் பக்கவாட்டு தண்டவாளங்களில் எதிரெதிர் திசைகளில் பாயும் ரயில்களின் பேரழகில் லயித்து பருகும் தேநீர் மிடறுகளின் இடையில் சில கவிதைகள் சொல்… அல்லது கேள்… போதும் – ———————— – வள்ளி மயில் குங்குமம்

தொடர்பு – கவிதை

Posted: 21 May 2017 02:47 AM PDT



--
எந்த
கொசுக்கடியும் இல்லை
அம்மா சுகமாக
தூங்குகிறாள் என்ற
தகவலை தொடர்ந்து
தெரிவிதுக் கொண்டிருந்தது
மின்விசிறி...!
-
------------------------
-ரவிச்சந்ததிரன்

உனக்கு நீதான் - சிறுவர் பாடல்

Posted: 21 May 2017 02:45 AM PDT

மெட்ராஸ் மாப்பிள்ளை - கவிதை

Posted: 21 May 2017 02:43 AM PDT

சூத்திரதாரி!

Posted: 21 May 2017 02:42 AM PDT

- – வாழ்க்கை போரில் தோற்று, 'ஏன் படைத்தாய்' என இறைவனை நிந்திக்கும் போதெல்லாம் கண் எதிரே வருகின்றனர் கை, கால் இழந்த ஊனமுற்றோர்… – ஊன்றுகோலே துணையாக உலகை நடை போடும் பார்வையற்றவர்… – சிக்னலில் இளைப்பாரும் வாகனங்களுக்கு இடையே இரக்கும் கரங்களுக்கு சொந்தக்காரர்கள்… – அடுத்த நொடி கடவுளுக்கு நன்றி சொல்கிறது மனம்! – தோல்விகளால் துவண்டு உள்ளம் சோர்வுறும் போதெல்லாம் கண் எதிரே கடந்து செல்கின்றனர் உச்சி வெயிலில் பார வண்டி இழுக்கும் தொழிலாளி… – பத்து ரூபாய்க்கு ரெண்டு சாலையோரம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™