Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


திட்டங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி: மத்திய அமைச்சர் கிடுக்கிப்பிடியால் விறுவிறு

Posted: 21 May 2017 09:11 AM PDT

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின், 'கிடுக்கிப்பிடி' காரணமாக, தமிழகத்தில், கட்டுமான திட்டங்களுக்கு, ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கும் நடவடிக்கைகளை, வீட்டு வசதித்துறை அதிகாரிகள் துரிதப்படுத்தி உள்ளனர்.

மத்திய அரசு அறிவுறுத்தலால், கட்டுமான திட்டங்களுக்கு, ஒற்றைச்சாளர முறையில், அனுமதி வழங்கும் நடைமுறையை, மஹாராஷ்டிரா, குஜராத் உட்பட, பல மாநிலங்கள் செயல்படுத்த துவங்கி விட்டன. தமிழகத்தில், அரசு, கொள்கை ரீதியாக முடிவு எடுக்காததால், இந்த நடைமுறை செயல் பாட்டுக்கு வரவில்லை. சென்னை தலைமைச் செயலகத்தில், மே, 14ல், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி ...

இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க செயற்கைகோள் அனுப்புகிறது இஸ்ரோ

Posted: 21 May 2017 09:13 AM PDT

புதுடில்லி: இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க, அடுத்த, 18 மாதங்களில், மூன்று செயற்கைகோள்களை அனுப்ப, 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது.

உலக அளவில் இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்துவோர் உள்ள நாடுகள் பட்டிய லில், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, இரண்டாவது இடத்துக்கு இந்தியா முன்னேறி யுள்ளது. இதில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோ ரின் எண்ணிக்கை, 2016 டிசம்பரில், 43.2 கோடி யாக இருந்தது. இது, வரும் ஜூன் மாதத்தில், 46.5 கோடியாக உயரும் என, எதிர்பார்க்கப் படு கிறது.வினாடிக்கு, 4.1 ...

பிரதமர் மோடியை சந்திக்க டில்லி செல்கிறார் ரஜினி

Posted: 21 May 2017 09:17 AM PDT

புதுடில்லி: பிரதமர் மோடியை சந்திக்க, விரை வில், நடிகர் ரஜினிகாந்த் டில்லிக்கு செல்ல உள்ளார்

சென்னையில், நடிகர் ரஜினி காந்த், தன் ரசிகர் களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியை, மூன்று நாட்கள் நடத்தினர். இதில் பேசிய ரஜினி, அரசியலில் ஈடுபட போவதாக மறைமுகமாக கூறினார். இதற்கு, தமிழக, பா.ஜ., சார்பில், நேரிடையாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து, டில்லியில், பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: ரஜினிகாந்தை, தமிழகத்தை சேர்ந்தபா.ஜ., தலைவர் ஒருவர் சந்தித்துள்ளார்.அப்போதுபிரதமர் மோடியை ...

'62 ஆயிரம் நீதிபதிகள் நாடு முழுவதும் தேவை'

Posted: 21 May 2017 09:55 AM PDT

கோவை: ''நாடு முழுவதும், கீழமை நீதிமன்றங்களில், 60 ஆயிரம் நீதிபதிகளும், உயர் நீதிமன்றங்களில், 2,000 நீதிபதிகளும் தேவைப்படுகின்றனர்,'' என, சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசினார்.

கோவை அரசு சட்ட கல்லுாரியின் முதல் பட்டமளிப்பு விழா, பாரதியார் பல்கலையில் நேற்று நடந்தது. 1997 முதல் இதுவரை சட்ட படிப்பு முடித்து, விண்ணப்பித்திருந்த, 540 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.பட்டங்களை வழங்கி, உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசியதாவது: இந்தியா போன்ற நல்ல ஜனநாயக நாட்டில், 'சிவில்' வழக்குகள் அதிகரிக்க வேண்டும்; குற்றவியல் வழக்குகள் குறைய ...

ஆம் ஆத்மி தலைவர்களின் லீலைகள் அம்பலம்!: ரூ.400 கோடி ஊழல்வாதியுடன் தொடர்பு

Posted: 21 May 2017 10:09 AM PDT

புதுடில்லி: ''ஆம் ஆத்மியை சேர்ந்த நிர்வாகிகள், ரஷ்யாவிற்கு உல்லாசமாக சென்று வர, ஊழல் வழக்கில் சிக்கிய,டில்லி தொழிலதிபர் நிதியுதவி செய்தார்,'' என, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா குற்றஞ்சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி தலைவர் கள் மீதான இந்த புகாரால், டில்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டில்லியில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். கெஜ்ரிவால், அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம், ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக, முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா புகார் கூறினார்; இதையடுத்து அவர் கட்சியை விட்டு ...

சொத்து கணக்கு காட்டாமல் 1,856 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்...அலட்சியம்!

Posted: 21 May 2017 10:40 AM PDT

புதுடில்லி: நாடு முழுவதும், 1,856 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 2016ம் ஆண்டுக்கான, தங்களது அசையா சொத்துக்கள் குறித்த விபரங்களை தாக்கல் செய்யவில்லை.

உ.பி.,யில், அதிகபட்சமாக, 225 பேரும்; தமிழகத்தில், 50 அதிகாரிகளும், சொத்து கணக்கு காட் டாமல், 'டிமிக்கி' கொடுத்துள்ளனர். இவர்களின் பதவி உயர்வை ரத்து செய்வது குறித்து, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
நாடு முழுவதும், 6,500 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியில் உள்ளனர். இதில், 5,004 பேர், நாட்டின் பல மாநிலங்களில் பணியாற்றுகின்றனர்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான பணி விதிகளின் படி, ஒவ்வொரு அதிகாரியும், தங்களது முந்தைய ...

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா விவகாரம்; முதல்வர் பழனிசாமி அணியில் பிளவு?

Posted: 21 May 2017 10:46 AM PDT

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தலைமையில், 25 மாநில நிர்வாகிகள் புதிய அணியாக உருவாகி உள்ளதால், முதல்வர் பழனிசாமி அணியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசில், தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக் கும் என, எம்.எல்.ஏ.,க்களும், வாரியத் தலைவர் பதவி கிடைக்கும் என, மாநில நிர்வாகிகளும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.சமீபத்தில், முதல்வர் பழனிசாமி அரசை மிரட்டும் வகையில், முன்னாள் அமைச்சர் ...

போயஸ் கார்டன் பங்களாவில் குடியேறுகிறார் தீபக்?

Posted: 21 May 2017 10:55 AM PDT

ஜெயலலிதாவின் சொந்த வீடான, சென்னை போயஸ் கார்டன் பங்களாவில், விரைவில் குடியேற திட்டமிட்டுள்ளார் அவரின் அண்ணன் மகன் தீபக். இதுதொடர்பாக, ஜோதிடர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

பங்கேற்பு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண் ணன், ஜெயகுமாரின் மகன் தீபக். அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டிருந்த நேரத்தில், சசிகலா உறவு களுடன் நெருக்கமாக இருந்தார். மருத்துவ மனையின் முக்கிய ஆவணங்களில், தீபக் கையெழுத்திட்டதோடு, ஜெ., இறுதி சடங்கிலும், சசிகலாவுடன் பங்கேற்றார். சொத்துக்குவிப்பு ...

பெங்களூரு சிறையில் சசிகலாவை எம்.எல்.ஏ.,க்கள் சிலர் சந்தித்தது ஏன்?

Posted: 21 May 2017 10:59 AM PDT

சென்னை:அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி யும், எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து, முதல்வர் பழனிசாமியும், குறிப்பிட்ட சமுதாய அமைச்சர் களும் செய்யும் அடாவடி குறித்து, புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
திகார் சிறை
தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைதான தினகரன்,டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் டில்லி சென்ற, ...

என்.எஸ்.ஜி.,யில் இந்தியா இந்த ஆண்டு உறுப்பினராகுமா?

Posted: 21 May 2017 12:23 PM PDT

புதுடில்லி : என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினி யோக நாடுகள் குழுமத்தின் இந்த ஆண்டுக்கான கூட்டம், அடுத்த மாதம் நடக்க உள்ளது. சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால், இந்த குழுமத்தின் உறுப்பினராவதற்கு, இந்தியாவுக்கு இந்த முறையும் வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
என்.எஸ்.ஜி.,:
அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில், அணுசக்தி, கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு பகிர்ந்து கொள்ளும் வகையில் துவங்கப்பட்டது, என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமம். 48 நாடுகள் ...

"மன் கீ பாத்” நிகழ்ச்சிக்கு பலத்த வரவேற்பு : ஆல் இந்தியா ரேடியோ

Posted: 21 May 2017 12:57 PM PDT

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் எனப்படும் "மன் கீ பாத்" நிகழ்ச்சிக்கு பலத்த வரவேற்பு இருப்பதாக ஆல் இந்தியா ரேடியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறன்று பிரதமர் மோடி, "மன் கீ பாத்" எனப்படும் வானொலி நிகழ்ச்சி வாயிலாக மக்களிடம் உரையாற்றுவார்.
இந்தியாவில் இந்த நிகழ்ச்சி நேரடியாகவும், மற்ற 150 நாடுகளில், பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டும் ஒலிபரப்பப்படுகிறது. மன் கீ பாத் ஒலிபரப்பப்படும் போதெல்லாம் பிரதமர் மோடியின் பேச்சுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதாகவும், குறிப்பாக ...

மீண்டும் ஏவுகணை சோதனை : வடகொரியா அடாவடி

Posted: 21 May 2017 01:49 PM PDT

சியோல்: உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது.
கிழக்காசிய நாடான வடகொரியா, அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து, அந்நாட்டின் மீது, ஐ.நா., பொருளாதார தடை விதித்துள்ளது.
இருப்பினும், சில தினங்களுக்கு முன், வடகொரியா, 700 கிலோ மீட்டர் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை சோதனை செய்தது. இதற்கு ஐ.நா., பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், அந்நாடு நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. அணு ஆயுதங்களை ஏந்தி செல்ல, தாக்க, ...

ரஜினிக்கு சகாயம் ஆதரவா?

Posted: 21 May 2017 02:32 PM PDT

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் ஆதரவளித்துள்ளதாக சமூகவலைதளங்களில் வெளியாகி வரும் பதிவுகளுக்கு சகாயம் பதிலளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தில் அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி அரசியலில் நுழைந்தார். எந்த கட்சியில் நுழைவார்?, அல்லது புது கட்சி ஆரம்பிப்பாரா என பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதமே போய்கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் ரஜினியை தங்கள் கட்சி வசம் இழுக்க பல்வேறு கட்சி தலைவர்கள் ...

சர்வதேச நீதிமன்றத்தை நாடியது பெரிய தவறு :கட்ஜு

Posted: 21 May 2017 02:57 PM PDT

புதுடில்லி: ஜாதவ் விவகாரத்தில் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது பெரிய தவறு என மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்தார் என அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவ்வை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அடுத்த உத்தரவு வரும் வரையில் மரண தண்டனையை நிறைவேற்ற கூடாது எனவும் பாகிஸ்தானுக்கு உத்தவிட்டது.
இது குறித்து கருத்து கூறியுள்ள நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™