Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


'சங்கமித்ரா' படத்தின் கதைக்களம் என்ன?- படக்குழு விளக்கம்

Posted: 17 May 2017 03:35 PM PDT

- 'சங்கமித்ரா' படத்தின் கதைக்களம் குறித்து கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்குபெறுபவர்களுக்கு ஒரு சிறு அறிமுகத்தை படக்குழு கொடுத்துள்ளது. பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கப்படவுள்ளது. இவ்விழாவிற்கு ஸ்பான்சர்களில் ஒருவராக தேனாண்டாள் பிலிம்ஸ் இடம்பெறவுள்ளது. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள 'சங்கமித்ரா' படம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ...

இமைக்கா நொடிகள்' பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted: 17 May 2017 03:34 PM PDT

அதர்வா, நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த 'இமைகா நொடிகள்' படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது படக்குழு. 'டிமான்ட்டி காலனி' படத்தைத் தொடர்ந்து கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் அஜய் ஞானமுத்து. அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தின் வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்து வருகிறார். இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப் தமிழில் நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், ...

மாற்றத்தை வரவேற்கும் காலம் அக்னி நட்சத்திரம்!

Posted: 17 May 2017 03:30 PM PDT

'அக்னி நட்சத்திரம் துவங்கிவிட்டதால், வெப்பம் அதிகரிக்கும்!' வானிலை ஆராய்ச்சி மையத்தின் இந்த அறிவிப்பு செய்தியைக் கேட்டதும், அது வெறும் தட்பவெப்பம் சார்ந்த மாற்றம் என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால்… அக்னி நட்சத்திரம் காலம் உயிர்த் தீவிரம் அதிகரிக்கும் காலம் - சத்குரு சத்குரு: வெயில் காலம் துவங்கிவிட்டது. இந்த மாதத்தில் அக்னி நட்சத்திரம் வருகிறது. நாம் விவசாய கலாச்சாரத்தில் இருந்திருந்தால், இந்த அக்னி நட்சத்திரம் என்பது மிக முக்கியமான ஒரு நிகழ்வு. ஏனெனில் வெயில் காலம் வந்தால் ...

உருக்காலையில் திட்டமிட்டு பணி முடக்கம்

Posted: 17 May 2017 03:28 PM PDT

சேலம் : உருக்காலையில், அதிகாரிகள் திட்டமிட்டு, பணிகளை முடக்கி உள்ளதால், 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதாக கூறும் மத்திய அரசு, தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலை ஊழியர்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தலைமை தபால் நிலையம் முன், ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் சுரேஷ்குமார் தலைமை ...

ஆலோசனை கூட்டம் முடியும் வரை கொசுக்கள் காத்திருக்காது மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்

Posted: 17 May 2017 03:24 PM PDT

புதுடெல்லி: நோய் பரப்பும் கொசுக்களை ஒழிப்பது குறித்து ஆலோசனை மட்டுமே நடத்தி வரும் மத்திய, மாநில அரசுகள், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததை சுட்டிக்காட்டி, 'ஆலோசனை கூட்டம் முடியும் வரை கொசுக்கள் காத்திருக்காது' என டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டெங்கு, சிக்குன்குனியா பாதிப்பு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அதில் ஒரு வழக்கு சட்டக் கல்லூரி மாணவர் கவுரி குரோவர் என்பவரால் தொடரப்பட்டது. அவ்வழக்கில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 7 ...

மஹாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்களின் தற்போதைய நிலை தெரியுமா..?

Posted: 17 May 2017 03:16 PM PDT

மஹாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்களான அனுராங் ஜெயின் மற்றும் தரங் ஜெயின் இருவரும் தங்கள் குடும்பத் தொழிலான மோட்டார் சைக்கிள் தொழிலில் சாதித்து தற்போது டாப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். - மஹாத்மா காந்தியின் ஐந்தாவது மகனாகக் கருதப்படுபவர் ஜமன்லால் பஜாஜ். பஜாஜ் மோட்டர் நிறுவனங்களின் நிறுவனரான இவரது மகள் வழி கொள்ளுப் பேரன்களான அனுராங் ஜெயின் மற்றும் தரங் ஜெயின் இன்று அதே தொழிலில் சிறந்து விளங்கி வருகின்றனர். - உலகின் டாப்- 500 பணக்காரர்களின் பட்டியலில் சகோதரர்கள் ...

இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus )

Posted: 17 May 2017 03:06 PM PDT

இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus ) 10 அம்சங்கள் இணையதள உலகிற்கு சவால் விடும் விதமாக உலகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்திற்குள் அதிகமான கம்ப்யூட்டர்களை தாக்கி உள்ளது ரான்சம்வேர் வைரஸ். ஹேக்கர்களால் பரப்பி விடப்பட்டு வரும் வான்னாக்ரை வைரசை பரப்ப உதவும் மால்சியஸ் சாப்ட்வேரே ரான்சம்வேர் என கண்டறியப்பட்டுள்ளது. ராம்சம்வேர் பற்றிய 10 விஷயங்கள் : 1. முதலில் இந்த வைரஸ் பரவலை கண்டுபிடித்துக் கூறியது ஆன்டிவைரஸ் நிறுவனமான அவஸ்த்தான். எடுத்த ...

பிழை திருத்தும் தமிழ் சாப்ட்வேர் 'சிடி' வெளியீடு

Posted: 17 May 2017 08:54 AM PDT

சென்னை: இலக்கண பிழைகளை திருத்தும், 'அம்மா மென்தமிழ் சொல்லாளர்' என்ற, தமிழ் சாப்ட்வேர், 'சிடி'யை, முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்டார். கம்ப்யூட்டரில், ஆங்கில மொழியில், பிழை திருத்த, சொல் திருத்த வசதி உள்ளது. அதேபோல், தமிழில், ஒற்றுப்பிழை, சந்தி உள்ளிட்ட இலக்கண பிழைகள் இல்லாமல் எழுதவும், தவறுகளை தானே சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளவும், எழுத்துருக்களை மாற்றிக் கொள்ளவும், 'அம்மா மென்தமிழ் சொல்லாளர்' என்ற பெயரில், புதிய தமிழ் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை, 300 ...

தமிழகம் முழுவதும் அஞ்சலக வாடிக்கையாளர்கள் 1 கோடி பேருக்கு சிப் ஏடிஎம் கார்டு: அனைத்து பயன்பாட்டிற்கும் உபயோகிக்கலாம்

Posted: 17 May 2017 06:57 AM PDT

வேலூர்: தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள 1 கோடி பேருக்கு புதிய எலக்ட்ரானிக் சிப் பொருத்திய ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா முழுவதும் 1 லட்சத்து 56 ஆயிரம் தபால் நிலையங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி என 4 மண்டலங்களில் 94 தலைமை தபால் நிலையங்கள் உட்பட மொத்தம் 12 ஆயிரத்து 185 தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன. தபால் அலுவலகங்களில் தபால் மற்றும் பார்சல் சேவையுடன் வங்கி சேவைகளுடன் கூடிய ஏடிஎம் வசதி, ...

நெயில் பாலீஷ் கசக்குது - ஆறு வித்தியாசங்கள் - கண்டு பிடிங்க...

Posted: 17 May 2017 03:23 AM PDT

குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி

Posted: 16 May 2017 11:33 PM PDT

வேல ராமமூர்த்தி தமிழ் ஹிந்து நாளிதழில் தொடராக எழுதிய " குருதி ஆட்டம் " நாவல் 27 வார தொடரில்( 25 - 27 )தொடர் 25 வைக்கோல் பிரி! இளவட்டங்களும் குமரிகளைப் போல் உறக்கமில்லாமல் அலைந் தார்கள். இரவு முழுக்க குமரி களின் தூக்கத்தைக் கெடுத்தது… 'கோலப் பொடி'. இளவட்டங்களுக்கு 'வைக்கோல் பிரி'. பெருங்குடி இருளப்பசாமிக்கு வகை வகையான நேர்த்திக்கடன்கள் உண்டு. சாதாரண தலைவலி, காய்ச்சலுக்கு 'ஒத்தப் பொங்கல்'. கனத்த நோவுக்கு 'ரெட்டைப் பொங்கல்'. வெட்டுக் குத்துக் கேஸு விடுதலைக்கு 'ஒத்தக் கிடாய்'. கொலைக் கேஸு ...

குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி

Posted: 16 May 2017 11:31 PM PDT

வேல ராமமூர்த்தி தமிழ் ஹிந்து நாளிதழில் தொடராக எழுதிய " குருதி ஆட்டம் " நாவல் 27 வார தொடரில்( 21 - 24 )தொடர் 21 ரெட்டை சந்தோஷம்! பொழுது இருளும் நேரம். கூட்டு வண்டி காட்டுக்குள் பாய்ந்து போய்க் கொண்டிருந்தது. காளைகளுக்கு கண் பழகிய தடம். வண்டிக்காரனின் கை படாமலே சிட்டாய் பறந்தன. ஓட்டிச் செல்லும் தவசியாண்டிக்கு மட்டுமான காட்டுப் பாதை என்பதால், குறுக்கே நரி, புலி என வன ஜந்துக்களின் அரவாட்டத்தையே காணோம். வண்டி வேகத்துக்கு, தவசியாண்டியின் பின் தலைமுடி காற்றில் பறந்தது. தவசியாண்டி போகிற போக்கில் ...

வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்விலே...(தொடர் பதிவு)

Posted: 16 May 2017 09:31 PM PDT

ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?

Posted: 16 May 2017 05:33 PM PDT


-

3 ஆண்டு நிறைவு கொண்டாட்டம் எதற்கு?- மத்திய அரசிடம் ராகுல் காந்தி கேள்வி

Posted: 16 May 2017 05:24 PM PDT

மத்தியில் ஆளும் பாஜக அரசு 3 ஆண்டுகளில் எதுவுமே சாதிக்கவில்லை. இதில் கொண்டாட்டம் எதற்கு என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. பாஜக ஆட்சியின் 3 ஆண்டுகள் நிறைவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் 26-ம் தேதி அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று 3 ஆண்டு ஆட்சி நிறைவு கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து வரும் ஜூன் 15-ம் தேதி வரை பாஜக சார்பில் ...

ஜனாதிபதி தேர்தல்: சோனியா காந்தியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு ...

Posted: 16 May 2017 05:21 PM PDT

புதுடெல்லி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதம் 25–ந்தேதி முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில், பொது வேட்பாளரை களமிறக்குவது பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து பேசி வருகிறார். அந்த வகையில் அவர் ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்–மந்திரியுமான நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ...

தமிழகத்தில் சரக்கு பூங்கா: மத்திய அரசு அமைக்கிறது

Posted: 16 May 2017 05:17 PM PDT

புதுடில்லி : தமிழகம் உட்பட, 15 இடங்களில், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன், பலதரப்பட்ட சரக்கு களை கையாளக்கூடிய பூங்காவை அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, தமிழகத்தில் சரக்கு பூங்காவை அமைக்க, தமிழக அரசுடன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் ஆகியோர் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, தமிழகத்தில், எண்ணுார் ...

பைனலுக்கு முன்னேறியது புனே அணி

Posted: 16 May 2017 05:04 PM PDT

- ஐ.பி.எல் பத்தாவது சீஸன் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. லீக் போட்டிகள் முடிந்து இன்று ப்ளே ஆஃப் போட்டிகள் தொடங்கின. புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. ப்ளே ஆஃப் சுற்றில் இன்று நடைபெற்ற குவாலிஃபயர் -1 ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. புனே அணி டாஸ் ...

வீட்டுக் குறிப்புகள்

Posted: 16 May 2017 04:00 PM PDT

தாய் கேட்ட பரிசு

Posted: 16 May 2017 03:58 PM PDTPost Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™