Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் - 10 அம்சங்கள்

Posted: 17 May 2017 02:01 AM PDT

இணையதள உலகிற்கு சவால் விடும் விதமாக உலகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்திற்குள் அதிகமான கம்ப்யூட்டர்களை தாக்கி உள்ளது ரான்சம்வேர் வைரஸ். ஹேக்கர்களால் பரப்பி விடப்பட்டு வரும் வான்னாக்ரை வைரசை பரப்ப உதவும் மால்சியஸ் சாப்ட்வேரே ரான்சம்வேர் என கண்டறியப்பட்டுள்ளது.ராம்சம்வேர் பற்றிய 10 விஷயங்கள் :1. முதலில் இந்த வைரஸ் பரவலை கண்டுபிடித்துக் கூறியது ஆன்டிவைரஸ் நிறுவனமான அவஸ்த்தான். எடுத்த எடுப்பிலேயே இந்த வைரஸ் உலக அளவில் 75,000 கம்ப்யூட்டர்களை முடக்கி விட்டது. தற்போது 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை இது லாக் செய்துள்ளது.2. ...

பதவி போனாலும் பங்களாவை காலி செய்யாதவர்களுக்கு...கிடுக்கிப்பிடி!

Posted: 17 May 2017 10:22 AM PDT

பதவிக்காலம் முடிந்தும், அரசு ஒதுக்கிய வீட்டை காலி செய்யாதவர்களை,அபராதம் விதித்து, காலி செய்ய வைக்கும் வகையில், புதிய சட்டத் திருத்தம் கொண்டு வர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் மத்திய அரசு ஊழியர் களுக்கு, அரசு இல்லங்கள் ஒதுக்கீடு செய்யப் படுகின்றன. ஆனால், பதவிக்காலம் முடிந்த பிறகும்,அவற்றை காலி செய்யாமல்,தொடர்ந்து வசிப்பதால், மற்றவர்களுக்கு வீடுகளை ஒதுக்க முடிவதில்லை.இது போன்றவர்கள் மீது, பி.பி.இ., சட்டம் எனப் படும், பொது சொத்துக்களில் இருந்து அங்கீ காரம் இல்லாமல் தங்குவோரை ...

ஜெட்லி - ஜெத்மலானி காரசார வாக்குவாதம்

Posted: 17 May 2017 10:24 AM PDT

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் உள்ளிட்டோர் மீதான அவதுாறு வழக் கில், அவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர் ராம்ஜெத்மலானிக்கும், மத்திய நிதி அமைச் சர் அருண் ஜெட்லிக்கும் காரசார வாக்குவாதம் நடந்தது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, டில்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக, 2000 - 2013ல் இருந்தபோது, பல்வேறு நிதி முறைகேடுகள் செய்ததாக, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலை வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி னார்.இது தொடர்பாக கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மூத்ததலைவர்கள் மீது, 10 கோடி ரூபாய் கேட்டு, அருண் ஜெட்லி அவதுாறு வழக்கு ...

தமிழக வி.ஐ.பி.,க்களின் வீடுகளில் தொடர்கிறது 'ரெய்டு!' 50 இடங்களில் வ வரித் துறை அதிரடி

Posted: 17 May 2017 10:31 AM PDT

தமிழக வி.ஐ.பி., வீடுகளில், வருமான வரித் துறையின் அதிரடி சோதனை தொடர்கிறது. முன்னாள் நிதி அமைச்சர், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி வீட்டில், சி.பி.ஐ., சோதனை நடத்திய பரபரப்பு அடங்குவதற்குள், சமையல் எண்ணெய் தயாரிக்கும் காளீஸ்வரி நிறுவனம், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள் உட்பட, நாடு முழுவதும், 50 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழகத்தில், சில மாதங்களாக, முக்கிய அரசியல் பிரமுகர்கள் மீது, மத்திய அரசு கட்டுப் பாட்டில் உள்ள வருமான வரித்துறை, அமலாக் கத் துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப் பான, சி.பி.ஐ., ஆகியவை, தொடர்ந்து சோதனை நடத்தி ...

3 நாள் பஸ் ஸ்டிரைக்: ரூ.40 கோடி இழப்பு

Posted: 17 May 2017 10:40 AM PDT

பஸ்கள் வேலை நிறுத்தம் காரணமாக, அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு, 40 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம், 22 ஆயிரத்து, 474 பஸ்கள் இயக்கப்படு கின்றன. நாள்தோறும், டிக்கெட் வசூல் வருவாயாக, 20.50 கோடி; இதர வருவாயாக, 4.40 கோடி என, 24.90 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வந்தது.இந்நிலையில், தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், 14ம் தேதி மதியம், பஸ்கள் வேலை நிறுத்தம் துவங்கி, 16ம் தேதி இரவு முடிவுக்கு வந்தது. போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: வேலை நிறுத்தத்தால், மூன்று நாட்களில் மட்டும், 40 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ...

ஒற்றை சாளர முறையில் திட்ட அனுமதி தாமதம் ஏன்?

Posted: 17 May 2017 10:48 AM PDT

'கட்டுமானத் திட்டங்களுக்கு, ஒற்றை சாளர முறையில்,அனுமதி அளிக்கும் நடை முறையை அமல்படுத்துவதில் தாமதம் ஏன்?' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு காட்டமாக கேட்டதால், அதிகாரிகள் திக்குமுக்காடி உள்ளனர்.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, சமீபத் தில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தலைமைச் செயலகத்தில், ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இதில், முதல்வர் பழனிசாமி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற னர். தற்போது, மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, அதிகாரி கள் ...

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுடன் அமைச்சர்கள் ரகசிய கூட்டம்: சசிகலா அணியில் குழப்பம்

Posted: 17 May 2017 10:55 AM PDT

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது, அதி ருப்தியில் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள், சென்னை யில், நேற்று ரகசிய கூட்டம் நடத்தியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவு பட்டது. சசிகலா அணியில், 122 எம்.எல்.ஏ.,க்கள்; பன்னீர் அணியில், 12 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சசிகலா அணி, எம்.எல்.ஏ.,க்கள், தற்போது பல குழுக்களாக பிரிந்துள்ளனர்.தினகரன் அணியில், ஏழு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின, எம்.எல்.ஏ.,க்களில், 27 பேர் அதிருப்தியில் உள்ள னர். அவர்கள் தனியே கூட்டம் கூட்டி, 'அமைச்ச ரவை யில் எங்கள் ...

'ஜெயகுமார் 'சூப்பர் டூப்பர்' முதல்வராக செயல்படுகிறார்'

Posted: 17 May 2017 10:57 AM PDT

சென்னை:''அமைச்சர் ஜெயகுமார், 'சூப்பர் டூப்பர்' முதல்வராக செயல்படுகிறார்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:
'ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிந்ததும், மானியக் கோரிக்கை விவாதங்களை வைத்துக் கொள்ளலாம்' என, பட்ஜெட் கூட்டத்தில், சபாநாயகர் கூறியிருந்தார். ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், சட்டசபையைக் கூட்ட கோரிக்கை வைத்தோம். சட்டசபை கூட்டத் தொடர் திடீரென முடித்து வைக்கப்பட்டதாக, அறிவிப்பு வந்தது. இதற்கு எதிராக, தி.மு.க., தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.தி.மு.க., ...

ஒரு குடும்பத்தின் பசிக்கு அ.தி.மு.க., பலியாக கூடாது; ஓ.பி.எஸ்., காட்டம்

Posted: 17 May 2017 11:03 AM PDT

திண்டுக்கல்:"ஒரு குடும்பத்தின் பசிக்கு அ.தி. மு.க., பலியாகி விடக் கூடாது" என, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

திண்டுக்கல்லில் அ.தி.மு.க.,( பன்னீர் அணி) கூட்டம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வ நாதன் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:குடும்ப அரசியலை வெறுத்த எம்.ஜி.ஆர்., நுாற் றாண்டு விழாவை கொண்டாடும் ஒரே தகுதி எங்களுக்கு மட்டுமே உள்ளது. எத்த னையோ சோதனைகளை தாங்கி எம்.ஜி.ஆரும், ஜெ.,வும் கட்சியை காப்பாற்றினர்.இந்த இயக்கத்தை ஒரு குடும்பத்தின் பசியில் சிக்க விட மாட்டோம். ஆட்சி யிலும், கட்சியிலும் ஒரு ...

எந்த ரகசிய தகவலையும் டிரம்ப் கூறவில்லை: ரஷ்ய அதிபர் புதின்

Posted: 17 May 2017 11:48 AM PDT

மாஸ்கோ : ரஷ்யாவிடம் எந்த ரகசிய தகவலையும், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறவில்லை என அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கடந்த வாரம் வாஷிங்டன் வந்தார். அவர், அங்கு அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பற்றிய முக்கிய ரகசிய தகவலை டிரம்ப் பகிர்ந்து கொண்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. அந்த தகவல், ரஷ்யாவிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாத தகவல் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் ...

தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர்; ஆங்கிலத்தில் நன்றி சொன்ன முதல்வர்

Posted: 17 May 2017 01:20 PM PDT

சென்னை: தமிழில் பிறந்த நாள் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி, ஆங்கிலத்தில் நன்றி கடிதம் அனுப்பினார்.
தமிழில் வாழ்த்து:
தமிழக முதல்வர் பழனிசாமியின் பிறந்த நாள், மே, 12ல், கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி, முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழில், கடிதம் அனுப்பினார். அதில், 'உங்கள் பிறந்த நாள் அன்று, என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில், மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி தந்து, இன்றுபோல் ...

பாலாற்றில் மேலும் 3 தடுப்பணைகள் கட்ட திட்டம்

Posted: 17 May 2017 02:27 PM PDT

பாலாற்றின் குறுக்கே, மேலும் மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்ட, ஆந்திரா அரசு திட்டமிட்டு வருகிறது.
கர்நாடகாவில் உற்பத்தியாகும் பாலாறு, தமிழகத்தில், 222 கி.மீ., பயணித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், வங்க கடலில் கலக்கிறது. இது, கர்நாடகா மாநிலத்தில், 93 கி.மீ., துாரம்; ஆந்திர மாநிலத்தில், 33 கி.மீ., துாரம் பயணிக்கிறது.
பாலாறு பன்மாநில நதி என்பதால், தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள், நீர் சேமிக்கும் கட்டமைப்புகளை அமைக்க முடியாது. ஆனால், அதை மீறி, குப்பம், சதானந்தசேரி உள்ளிட்ட, 12 இடங்களில், ஆந்திர அரசு, தடுப்பணைகளை ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™