Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தண்ணீர் தண்ணீர் - ஒரு பக்க கதை

Posted: 16 May 2017 03:43 PM PDT

ஜெல்லி மீன்களின் பிரமாண்ட கண்காட்சி

Posted: 16 May 2017 03:40 PM PDT

பூனைகளுக்கு திருமணம்..!

Posted: 16 May 2017 03:35 PM PDT

நடந்து போன பீர்பாட்டில்...!

Posted: 16 May 2017 03:34 PM PDT

அமெரிக்காவில் சமையல்-French Baguette உப்புமா!

Posted: 16 May 2017 11:55 AM PDT


அருமையான கடவுள் படங்கள் :)

Posted: 16 May 2017 11:52 AM PDT

இளைப்பாறல் - பகுதி-3

Posted: 16 May 2017 09:44 AM PDT

இளைப்பாறல் - பா.வெ. வயல்வெளி கடந்து ஊருக்குள் செல்கையில் வரலாறு ஏந்திய கோவில்கள் வரிசையாக தென்படும்! ஓட்டுக்கட்டிடத்தில் வீற்றிருக்கும் ஊர்ப்புற தெய்வங்கள் ஊர் மக்கள் வேண்டுதல்களை ஒன்றுவிடாமல் நிறைவேற்றும்! கண்கண்ட தெய்வத்தின் கோவில் சுவர்கள் கரிய தேர்வு எண்களுடன் காட்சியளிக்கும்! கணநேரமும் குறையாத வெள்ளந்தி நம்பிக்கைக்கு சாட்சியளிக்கும்! சுவர்களில் பதிந்த சித்திர உருவங்கள் விழியால் மெல்ல மிரட்டும்! தீயவற்றை விரட்டும்! எண்ணெய் ...

இளைப்பாறல் - பகுதி-2

Posted: 16 May 2017 09:38 AM PDT

இளைப்பாறல் - பா.வெ. மிதிவண்டிகளில் மிதந்த காலம் அது! ஊருக்குள் புதியவராயினும் உதவி கேட்டால் மறுக்காமல் மிதிவாங்கும் மிதிவண்டியில் கூட மெல்ல ஏற்றிச் செல்லும் மனிதர்களின் மாண்பு மகத்தானது! உப்பு,கோலமாவு,ஐஸ் வண்டி, வளையல் வண்டி,எண்ணெய் வண்டி, பால்காரர், பாத்திரக்காரர் என ஊருக்குள் ஓடாய் தேயும் உழைப்பாளிகள் பலரின் ஒரே வாகனம் மிதிவண்டி! கொளுத்தும் வெயிலிலும் மிதிவண்டிப் பயணம் ... கொழுப்பில்லை; இரத்தக் கொதிப்பில்லை; சர்க்கரை சற்றும் ...

இளைப்பாறல் - பகுதி-1

Posted: 16 May 2017 09:33 AM PDT

இளைப்பாறல் - பா.வெ. தெளிவற்ற தேடலில் தினம்தினம் தேய்ந்து திக்கற்ற ஓட்டத்தில் ஓடி நாளும் ஓய்ந்து நவீனமும் நாகரிகமும் நையப்புடைத்த நம்மை, மிச்சமின்றி உச்சமாய் விழுங்கி நிற்கும் - செல்ஃபோனும் சின்னத்திரையும் இடைவிடாத இணையமும், மிச்சம் வைத்த எச்சத்தையும் விடவில்லை பணப்பேய்! அவசரகதியில் உணவு, அலுவல் சுமைகள், ஆர்ப்பரிக்கும் பரபரப்பு, விரைவில் தொலைந்த மனிதம், வீண் ஆடம்பர விரயம், வெறுமை வீசும் வரவு - இவை அழைத்த தடம் - நம் அன்றாடம் ...

சமூக விழுமியம் – மயிர்

Posted: 16 May 2017 06:59 AM PDT

நீண்ட நாட்களுக்குப் பிறகு என் பதிவை இடுகிறேன். தொடர் - ௫ சமூக விழுமியம் – மயிர் தொடர் 5 (ஐங்குறுநூற்றிலிருந்து) முன்தொடர் சுருக்கம் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் இருக்கிறது என்றாலும் அது செயற்கை மணம் ஊட்டப்பெறுகின்ற போதுதான் மற்றவர் மனம் விரும்பும் வகையில் இருப்பதனைக் குறுந்தொகைப் பதிவிலிருந்து கண்டோம். இனி………………. தொடர் – 5 ஐங்குறுநூற்றில் இடம்பெறும் மயிர் எனும் உறுப்பு குறித்த பதிவுகளை இத்தொடர் முன்வைக்கிறது. ஐங்குறுநூற்றில் இடம்பெறும் ஐவகை நிலம் சார்ந்த பாடல்கள் ...

புதிய முகம் அறிமுகம்

Posted: 16 May 2017 06:49 AM PDT

பெயர்: குமார்
சொந்த ஊர்: மதுரை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம் வாயிலாக
பொழுதுபோக்கு: புத்தகங்கள் படிப்பது
தொழில்: ஆய்வக பயிற்று விப்பாளர்
மேலும் என்னைப் பற்றி: தீவிர நூல் வாசிப்பேன்

அறிமுகம்

Posted: 16 May 2017 06:09 AM PDT

பெயர்:பிரவீன் குமார்
சொந்த ஊர்:திருக்கழக்குன்றம்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்:தோழர் ஒருவரால் அறிந்தேன்
பொழுதுபோக்கு: விவசாயம்
தொழில்: ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் - குழந்தை வளர்ச்சிதுறையில்
மேலும் என்னைப் பற்றி:

கனவுகள்

Posted: 16 May 2017 05:39 AM PDT

கனவுகள் கனவுகளை கெட்டியாயப் பிடித்துக் கொள்ளுங்கள் கனவுகள் செத்துப் போனால் வாழ்க்கை பறக்க முடியாத சிறகொடிந்த பறவை. கனவுகளை கெட்டியாயப் பிடித்துக் கொள்ளுங்கள் கனவுகள் காணாமற்போனால் வாழ்வு பனிபடிந்த ஒரு களர்நிலம். - Langston Hughes (Dreams) வாழ்க்கையின் கீதம் சோக கீதங்கள் இசைக்காதீர்; வாழ்க்கை ஒரு வெறுங்கனவென்று. உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மா செத்துப்போனது. நீங்கள் பார்க்கும் விஷயங்கள் உண்மையல்ல. வாழக்கை நிஜமானது; வாழ்க்கை செயல் முனைப்புடையது. கல்லறை அதன் இலக்கல்ல மண்ணாயிருக்கிறாய்;மண்ணுக்குத் ...

வர்தா புயலின் தாண்டவம் (2016 டிசம்பர்) சென்னையில் !

Posted: 16 May 2017 05:18 AM PDT

வர்தா புயலின் தாண்டவம் (2016 டிசம்பர்) சென்னையில் ! ௧.  புயலின் போது - ௨.  புயலுக்குப்பின்  சாலைகளில் மரங்கள்!-

அகதிகள் தாகத்துக்கு கழிவறை நீரைக் குடிக்கிறார்கள்

Posted: 16 May 2017 05:09 AM PDT

மலேசிய  குடிநுழைவுத்துறை  மையங்களில்    தடுத்து  வைக்கப்பட்டிருக்கும்   அகதிகளும்    அரசியல்   புகலிடம்    நாடி     வந்தோரும்     தாகம்    தீர்க்கக்  கழிவறை    நீரை   அருந்த    வேண்டியிருப்பதாக   த   கார்டியன்   செய்தி   வெளியிட்டுள்ளது. "எங்களுக்கு    உணவுடன்   ஒரு   சிறு   கோப்பையில்    தண்ணீரும்   கொடுக்கிறார்கள்,   அது  இல்லை   என்னும்போது   கழிவரை   நீரைத்தான்   குடிக்கிறோம்",  என   18-வயது   ரோஹிஞ்யா   அகதி   மவ்யுரா பேகம்    அந்த   யுகே    நாளேட்டிடம்   தெரிவித்தார். ஓராண்டாக    ...

நுனிப் புல் திண்போமா ?

Posted: 16 May 2017 04:47 AM PDT

நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ...

ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை!

Posted: 16 May 2017 04:24 AM PDT

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, வரும் ஜூன் முதல் ஏழு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தடையால், தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மாணவர்கள், இளைஞர்கள், கடந்த ஜனவரி மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்ககப்பட்டது. இதன்படி, ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடந்த பகுதிகளுக்கு மட்டும், கலெக்டர்கள் அனுமதி அளித்து வருகின்றனர். கடந்த ...

குருதி ஆட்டம்(16-20) - வேல ராமமூர்த்தி

Posted: 16 May 2017 01:20 AM PDT

வேல ராமமூர்த்தி தமிழ் ஹிந்து நாளிதழில் தொடராக எழுதிய " குருதி ஆட்டம் " நாவல் 27 வார தொடரில்( 16 - 20 )தொடர் 16 எப்போ வர்றான்? கடல் நீர் சுழித்து இழுத்த இழுப்பில், கப்பலின் அடிவாரத்தில் மோதிச் சிதறுண்டு சல்லி சல்லியானான் டி.எஸ்.பி. ஸ்காட். அதிகாரத்தின் உச்சத்தில் கோலோச்சிய நாட்களில், தான்போய் கால் வைத்த அடிமை தேசத்துப் பெண்களை எல்லாம் கரு சுமக்க வைத்தவன். சதை சதையாகப் பிய்த்தெறியப்பட்டான். பலாத்காரம் செய்து கரும்புள்ளிக் குத்தியவனின் சதையை ருசிக்க, ஆப்பிரிக்கக் கண்டத்து கென்ய நாட்டுத் ...

வரலாற்றில் இன்று - பாகம் 2 - முடிவுற்றது.

Posted: 16 May 2017 01:19 AM PDT

வரலாற்றில் இன்று   [size=13]பாகம் இரண்டு [/size] நம் ஈகரையில் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து வந்து கொண்டிருந்த 'வரலாற்றில் இன்று' இரண்டாம் பாகம் நாளையுடன் வெற்றிகரமாக நிறைவடைகிறது. இத்தொடரின் வெற்றிக்கு காரணமாய் இருந்த நமது அனைத்து உறவுகளுக்கும், நிர்வாக குழுவினருக்கும், தலைமை வழிநடத்துனர்களுக்கும், நிறுவனருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். விரைவிலேயே இதன் தொகுப்பு மின்னூலாக வெளி வரும். இனி, நாளையிலிருந்து 'வரலாற்றில் இன்று' வேறு வடிவத்தில் தொடரும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். - ...

குருதி ஆட்டம்(12-15) - வேல ராமமூர்த்தி

Posted: 16 May 2017 01:18 AM PDT

வேல ராமமூர்த்தி தமிழ் ஹிந்து நாளிதழில் தொடராக எழுதிய " குருதி ஆட்டம் " நாவல் 27 வார தொடரில்( 12 - 15 )தொடர் 12 வன ஓவியம்! "அப்பா!" மகள் செவ்வந்தியின் அலறல், தவசியாண்டியை உலுக்கியது. குடிசைக்கு வடக்கே, வெகுதூரக் காட்டுக்குள் இருந்தான். உயிரோடு பிடிபட்ட ஓர் உடும்பு, தவசியாண்டியின் கைப் பிடியில் இருந்து விடுபட முறுக்கிக் கொண்டிருந்தபோது தான், செவ்வந்தியின் அலறல் சத்தம் கேட்டது. "அப்பா…!" ஒரே சத்தம்தான். மறு சத்தமில்லை. சிறு குழந்தையாய் காட்டுக்குள் வந்ததில் இருந்து, எதைக் கண்டும் செவ்வந்தி ...

குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி

Posted: 16 May 2017 01:13 AM PDT

வேல ராமமூர்த்தி தமிழ் ஹிந்து நாளிதழில் தொடராக எழுதிய " குருதி ஆட்டம் " நாவல் 27 வார தொடரில்( 9 - 11 )தொடர் 9 ங்ங்ஙஅ... பெருங்குடி தெருக்களில் உடையப்பனின் கால்பட்டு, எத்தனையோ வருடங்கள் ஆகி இருக்கும். உடையப்பனை 'அரண்மனை' என்று ஊரார் சொல்ல ஆரம்பித்ததில் இருந்து 'நடை'மறந்துப் போச்சு. ஏறுனா… கூட்டு வண்டி. எறங்குனா… அரண்மனை. வர்றது, போறது எல்லாம் கூட்டு வண்டியிலேதான். அரண்மனைக்குள்ளே ரெண்டு கூட்டு வண்டி நிற்கும். ஒண்ணு… 'அரண்மனை' உடையப்பனுக்கு. இன்னொன்னு அன்றாடம் வந்து போகும் வைப்பாட்டிகளுக்கு. ...

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு

Posted: 16 May 2017 01:11 AM PDT

டாக்டர் பட்டம் பெற்ற செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) -ன் 7-ஆம் ஆண்டு மாணவர்சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ...

குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி

Posted: 16 May 2017 01:08 AM PDT

வேல ராமமூர்த்தி தமிழ் ஹிந்து நாளிதழில் தொடராக எழுதிய " குருதி ஆட்டம் " நாவல் 27 வார தொடரில்( 6 - 8 )தொடர் 6 தேசம் திரும்பி, பழி முடி! இடுப்புக் கத்தியை உருவிய அரியநாச்சி, நீண்டு தொங்கிய தன் கூந்தலை, கை நிறையக் கோதி, ஒரு முழ அளவுக்கு நுனிமுடியை அறுத்தாள். இரண்டு கைகளிலும் ஏந்தி, உஸ்தாத் அப்துற் றஹீமை ஏறிட்டுப் பார்த்தாள். "அண்ணேன்… இது எங்க குரு காணிக்கை!" கைக் கூந்தலை உஸ்தாத்தின் காலடி யில் வைத்தாள். உதட்டோரம் சிரித்துக் கொண்ட உஸ்தாத், "அரியநாச்சி… நான் மலேசிய மண்ணில் பிறந்து ...

அன்னாசி சாக்லேட்

Posted: 16 May 2017 01:07 AM PDT


-

குருதி ஆட்டம் (1-5) - வேல ராமமூர்த்தி

Posted: 16 May 2017 01:01 AM PDT

வேல ராமமூர்த்தி தமிழ் ஹிந்து நாளிதழில் தொடராக எழுதிய " குருதி ஆட்டம் " நாவல் 27 வார தொடரில் முதல் 5 வார தொடர் குருதி ஆட்டம் 1 இருட்டுக் கோடாங்கி இது.. செறுபகை வென்ற சேது நாட்டு வாள். சதிகளின் தலை அறுத்துச் சதுராடிய வாள். வெட்டுப்பட்டுச் சரிந்த வேங்கைகளின் ரத்தம் நக்கிய ஓநாய்களின் நாக்கறுத்த வாள். ஆழிப் பேரலையாய் சுழித்து எழுகிறது தவசியாண்டியின் கோடாங்கிச் சத்தம். வனக் கன்னி செவ்வந்தியின் சுவாசம் தழுவி மணக்கின்றன வண்ணப் பூக்கள். வைக்கோல் பிறிகளுக்குள் ஒளிந்திருக்கும் மறத் தோள்கள், வாளெடுத்து ...

பிங்க் நிலா !

Posted: 15 May 2017 10:22 PM PDT



பிங்க் நிலா ! பெங்களூரில் இன்று கிருஷ்ணா எடுத்தது புன்னகை

மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை

Posted: 15 May 2017 10:20 PM PDT

சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கு: தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி வசம் ஒப்படைக்க தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுகவின் ஆர்எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார். . டாஸ்மாக் கடைகளை திறக்கவே இதுபோன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறினார். தவறு: அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கூறியதாவது: நெடுஞ்சாலைகளை ...

உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க.

Posted: 15 May 2017 10:17 PM PDT

ஒரு விடயம் (விஷயம்-விடயம் என்ற சொல்லுக்கு பற்றியம் என்பது தான் சரியான தமிழ் சொல் என கணினி மொழிமாற்றி அகராதி சொல்கிறது) உண்மை என்றோ, அல்லது அது இருக்கின்றது என்றோ, நிறுவப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படுதல் நம்பிக்கை. ஆங்கிலத்தில் belief எனலாம்.இதற்கு எதிர் மூடநம்பிகை (Superstitious Belief/fetish) என சொல்லலாமா, அவநம்பிக்கை எனலாமா (disbelief/distrust ) தெரியவில்லை. மூடநம்பிக்கை என்பது- அறிவுக்கு பொருந்தாத, பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து அல்லது கோட்பாடு என்று அகரமுதலி விளக்கம் கொடுக்கிறது. ...

நகரும் படிக்கட்டுகள் எப்படி இயங்குகின்றன?

Posted: 15 May 2017 10:13 PM PDT

நகரும் படிக்கட்டுகள் எப்படி இயங்குகின்றன? மிக உயரமான எண்ணற்ற படிக்கட்டுகளைப் பார்த்தால் பலருக்கும் ஒருவித ஆயாசம் தோன்றும். யாரால் இவ்வளவு படிகளை ஏறமுடியும் என்று பெருமூச்சு விட்டால், "பின்னே என்ன உன்னை தூக்கிக் கொண்டு அந்தப் படிகளே நகருமா என்ன?" என்று கூட இருப்பவர்கள் கிண்டலாகக் கேட்கக் கூடும். ஆனால் இப்போது நகரும் படிகள் நகர மக்களுக்கு சகஜமான ஒன்றாகிவிட்டன. எஸ்கலேட்டர் எனப்படும் இவை பெரிய மால்களிலும், ரயில் நிலையங்களிலும் பெருமளவில் காணப்படுகின்றன. அந்தக் காலத்தில் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்களைத்தான் ...

தவணைக் கறி - கவிதை

Posted: 15 May 2017 10:08 PM PDT

வங்கிக் கடனில் முளைத்த பயிர்கள் தப்பியப் பருவமழையில் கருகின சருகை மென்று சப்புக்கொட்டிய கால்நடைகள் சரளைக் கல்லையும் மெல்லுகின்றன இடையிடையே கானலைக் குடிக்கும் மொடக் மொடக் சத்தம்... சதுரங்கக் கட்டங்களாகப் பிளந்த நிலத்தின் மீது தாவித்தாவி தவணை வசூலிக்கும் லத்திகள். வெடித்த நிலத்தில் ஒளிந்த வெளுத்தக் கோவணங்களைக் கூடிக் கொறிக்கும் வெள்ளெலிகள் மண்வெட்டியைப் பிளந்து குளிர்காய்கின்றன. மக்கும் குப்பைகளும் மக்காத குப்பைகளும் கொட்டிப் பிளந்த அக்குழி மேல் பொழிகிறது செல்லாப் பணங்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™