Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கார்த்தி மீது எப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?: 10 அம்சங்கள்

Posted: 16 May 2017 05:30 AM PDT

சென்னை: காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சி.பி.ஐ., இன்று (மே 16) சோதனை நடத்தி உள்ளது. இது குறித்து சி.பி.ஐ., பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1. புகார் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள்
மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம், அதன் அப்போதைய இயக்குனர் இந்திராணி முகர்ஜி மற்றும் பலர்
ஐ.என்.எக்ஸ் நியூஸ் நிறுவனம், அதன் அப்போதைய இயக்குனர் பீட்டர் முகர்ஜி மற்றும் பலர்
எண், 16, பைக்ராப்ட்ஸ் கார்டன் ரோடு, ஆயிரம் விளக்கு, சென்னை ...

வைரஸ் தாக்குதல் பின்னணியில் வட கொரிய 'ஹேக்கர்'கள்

Posted: 16 May 2017 09:50 AM PDT

புதுடில்லி: இந்தியா உட்பட, 150க்கும் மேற்பட்ட நாடுகளில், லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களை பாதித்துள்ள, 'வான்னாக்ரை' வைரஸ் தாக்குதலின் பின்னணியில், வடகொரியாவை சேர்ந்த, 'ஹேக்கர்கள்' இருப்பதாக, இந்திய வம்சாவளி கம்ப்யூட்டர் பாதுகாப்பு தொழில்நுட்ப நிபுணர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின், என்.எஸ்.ஜி., எனப்படும், தேசிய பாதுகாப்பு அமைப்பின் பிரதான கம்ப்யூட்டரில் சேமித்து வைக்கப்பட்டிருந்த, 'மால்வேர்' என்ற வகையை சேர்ந்த, வைரஸ், சமீபத்தில் களவாடப்பட்டது. 'வான்னாக்ரை' என்ற பெயரில், கட்டவிழ்த்து விடப்பட்ட அந்த வைரஸ், 150க்கும் மேற்பட்ட நாடுகளில், ...

பினாமி' வழக்கில் பீஹார் 'மாஜி' முதல்வர் லாலுவுக்கு சிக்கல்! ரூ.1,000 கோடி முறைகேடு தொடர்பாக ஐ.டி., ரெய்டு

Posted: 16 May 2017 09:57 AM PDT

புதுடில்லி: பீஹார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான, லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய, 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, பினாமி பரிவர்த்தனைகள் புகாரையடுத்து, டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள, 22 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று, அதிரடி சோதனை நடத்தினர்.

ஏற்கனவே, லாலு மீதான கால்நடை தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், வருமான வரித்துறையின் இந்த அதிரடிச் சோதனை, அவரது அரசியல் வாழ்வை, கேள்விக்குறியாக்கியுள்ளது.பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையில், ...

1,400 ஆண்டு பழமையான நடைமுறை 'தலாக்': முஸ்லிம் சட்ட வாரியம் கோர்ட்டில் வாதம்

Posted: 16 May 2017 10:01 AM PDT

புதுடில்லி: 'அயோத்தியில் ராமர் பிறந்தார் என ஹிந்துக்கள் நம்புவதைப்போலத் தான், 'தலாக்' முறையும், கடந்த, 1,400 ஆண்டுகளாக முஸ்லிம் மதத்தினர் நம்பிக்கையாகவும், வழக்கத்திலும் உள்ளது; இதை, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என கூற முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டது.

முஸ்லிம்கள், 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளை, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய கோடைக்கால அமர்வு விசாரித்து வருகிறது.கடந்த மூன்று நாட்களாக, மனுதாரர்கள் மற்றும் தலாக் ...

அமைச்சர்கள் டில்லி செல்வது ஏன்?

Posted: 16 May 2017 10:05 AM PDT

தமிழக அமைச்சர்களின் டில்லி பயணம் அதிகரித்துள்ள நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில், அதிகாரிகள் உட்பட அனைவரையும் தவிர்த்து, மத்திய அமைச்சர்களுடன் தனியாக பேசும் புதிய நடைமுறை உருவாகியுள்ளது.

வருவது ஆச்சரியமாக உள்ளது
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, டில்லியில் நடக்கும் மாநாடுகளில் பங்கேற்க வரும் அமைச்சர்கள், வந்த சுவடே தெரியாமல் சென்னைக்கு திரும்பி விடுவர். இந்நிலையில், சமீப காலமாக, தமிழக அமைச்சர்களின் டில்லி வருகை அதிகரித்துள்ளது. தங்கள் துறை சார்ந்த கருத்தரங்குகளில் பங்கேற்கின்றனர் என்றாலும், மத்திய அமைச்சர்களை ...

பஸ் 'ஸ்டிரைக்' ஒத்திவைப்பு: ரூ.1,000 கோடி தர அரசு சம்மதம்

Posted: 16 May 2017 10:12 AM PDT

சென்னை: அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதால், மூன்று நாட்களாக தொடர்ந்த ஸ்டிரைக்கை, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், நேற்றிரவு ஒத்திவைத்தன.

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான, ௧௩வது ஊதிய ஒப்பந்தம் குறித்து, ஐந்து கட்டங்களாக பேச்சு நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, 'மே, 15 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தப்படும்' என, அரசு போக்குரவத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. ஆனால், மே, 14 பிற்பகலில், ஸ்டிரைக் துவங்கியது. நேற்று, மூன்றாவது நாளாக, ஸ்டிரைக் நீடித்ததால், பொதுமக்கள் திணறினர்.
இந்நிலையில், அமைச்சர்கள் ...

கருணாநிதி வைர விழா: மம்தா, பட்நாயக் மறுப்பு

Posted: 16 May 2017 10:33 AM PDT

சென்னை: கருணாநிதியின் சட்டசபை வைர விழாவில் பங்கேற்க, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக் ஆகியோர் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரம் கூறியதாவது: தி.மு.க., தலைவர் கருணாநிதி, சட்டசபை உறுப்பினராகி, இந்த ஆண்டுடன், 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
அதற்கான வைர விழா, சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், ஜூன், 3ல் நடக்கிறது. விழாவில், பஞ்சாப், மேற்கு வங்கம், பீஹார், கர்நாடகா, ஆந்திரா, கேரளா முதல்வர்களை சந்தித்து, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி அழைப்பு விடுத்து வருகிறார். அதில், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, ...

'வாட்ஸ் ஆப்'பை கட்டுப்படுத்த புதிய வழிமுறை அறிமுகம் : மத்திய அரசு உறுதி

Posted: 16 May 2017 10:36 AM PDT

'சமூகதளமான, 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவோரின் தனிமனித உரிமையை பாதுகாக்கும் வகையில், இதுபோன்ற சமூகதளங்களை கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் புதிய வழிமுறை அறிமுகம் செய்யப்படும்' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'வாட்ஸ் ஆப்' சமூகதளத்தை, 'பேஸ்புக்' சமூகதளத்தை நடத்தி வரும், 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் விலைக்கு வாங்கியது. அதைத் தொடர்ந்து, 2016ல் புதிய தனிநபர் கொள்கையை வாட்ஸ் ஆப் அறிவித்தது. இதன் மூலம் பயனாளிகளின் தகவல்கள், பேஸ்புக் சமூகதளத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை, நீதிபதி தீபக் ...

விபரீதம்! பஸ்சை இயக்கிய புது டிரைவரால் பெண் பலி; திருப்பூர் மாவட்டத்தில் அரங்கேறியது விபத்து

Posted: 16 May 2017 10:58 AM PDT

திருப்பூர்: பஸ் ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க, அரசு செய்த தற்காலிக ஏற்பாட்டால், விபரீதம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில், தற்காலிக டிரைவராக்கப்பட்ட, பேக்கரி ஊழியர், அரசு பஸ்சை ஓட்டிச் சென்று, விபத்தை ஏற்படுத்தி உள்ளார். அதில், பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். பிரச்னையை முடிக்காமல், மெத்தனப் போக்கை அரசு தொடருமானால், இதுபோன்ற விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என தெரிகிறது.
ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு பஸ் ஊழியர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், நேற்று மூன்றாவது நாளாக, அரசு பஸ்கள் ...

அனைத்து பள்ளிகளிலும் வங்க மொழி கட்டாயம்!

Posted: 16 May 2017 12:15 PM PDT

கோல்கட்டா: 'மேற்கு வங்கத்தில், வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு வரை வங்க மொழிப் பாடம் கட்டாயமாகிறது' என, மாநில அரசு அறிவித்துள்ளது.
அதிரடி:
மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். மாநிலத்தில் வங்க மொழி பயன்பாட்டை அதிகரிக்கவும், வருங்கால சந்ததியினர் வங்க மொழியில் சரளமாக பேசவும், எழுதவும் அறியும் வகையிலும், அனைத்து பள்ளிகளிலும், வங்க மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி, மாநில அரசு அதிரடி அறிவிப்பை ...

புகார் அனுப்பிய மணமகனுக்கு ரயில்வே அமைச்சர் உதவி

Posted: 16 May 2017 01:13 PM PDT

பாட்னா: 'ரயில் குறித்த நேரத்தில் வந்து சேராவிட்டால், தன் திருமணம் நின்று விடும்' என, புகார் அளித்த மணமகனுக்கு, ரயில்வே அமைச்சரின் உதவியால் திருமணம் நடந்தது.
பீஹார் மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த, நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இங்குள்ள ஆராவில் வசிக்கும், சுஷில் குமார் என்பவருக்கு, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, டில்லியில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முதல் நாள், ஆராவில் இருந்து டில்லி செல்லும் மகத் எக்ஸ்பிரஸ் ரயிலில், மணமகன் உட்பட, 86 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.
இரவு, 7:00 ...

அரசியல்ரீதியாக டொனால்ட்டிற்கு எதிராக புதிய இயக்கம்: ஹிலரி அதிரடி

Posted: 16 May 2017 02:07 PM PDT

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிராக புதிய அரசியல் இயக்கத்தை முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளின்டன் துவங்க உள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக ஹிலரி கிளின்டன் போட்டியிட்டார். இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டெனால்ட் டிரம்ப்பிடம் தோல்வியுற்றார்.இந்நிலையில் டெனால்ட்டிரம்பிற்கு எதிராக ஹிலரி கிளின்டன் புதிய அரசியல் நடவடிக்கை குழுவை துவக்கியுள்ளார்.‛‛ ஒன்றிணைவோம் '' என்ற கோஷத்துடன் துவங்க திட்டமிட்டுள்ளார். இந்த இயக்கத்திற்காக ஐந்து முற்போக்கு குழுக்களை அமைத்து ...

சோனியாவுடன் மம்தா ஆலோசனை

Posted: 16 May 2017 03:41 PM PDT

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகள் கூட்டாக சேர்ந்து, பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, காங்., தலைவர் சோனியாவுடன், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி, நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஜனாதிபதி தேர்தல், வரும் ஜூலையில் நடக்க உள்ளது. இந்த தேர்த லில், பா.ஜ.,வுக்கு கடும் போட்டியை அளிக்கும் வகையில், பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக, காங்., தலைவர் சோனியா, பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று, ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™