Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கட்டப்பாவ காணோம் – சினிமா விமரிசனம்

Posted: 11 May 2017 02:22 PM PDT

சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்

Posted: 11 May 2017 01:51 PM PDT

1) உச்சியில் தோகை, உள்ளங்காலில் ரோமம், உடலெல்லாம் வரிகள் – அது என்ன? – 2) சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – அவள் யார்? – 3) குப்பை மேட்டில் குதறுவாள், கொஞ்சிப்பேணி பிள்ளை வளர்ப்பாள் – அவள்ர யார்? – 4) தாயோ கடல், தந்தையோ சூரியன் – அவன் யார்? – 5) கல்லை சுமந்து கறிக்கு ருசியாவான் – அவன் யார்? – 6) மண்ணில் துளிர்த்து பூக்காமல், காய்க்காமல் மாலையாகும், மருந்தாகும் – அது என்ன? – 7) சட்டையைக் கழற்றினால், சாப்பாடு தயார் – அது என்ன? – 8) மணமில்லா பூ, மாதர்கள் சூடாத பூ மண்டைத்தடி ...

ஜாதகம் கனிக்க வேண்டும்

Posted: 11 May 2017 01:44 PM PDT

தேதி-24/07/1993
நேரம்-7pm
இடம்-சென்னை

பிராணாயாமத்துக்கான எளிய பயிற்சிகள்

Posted: 11 May 2017 10:52 AM PDT

பிராணாயாமத்துக்கான எளிய பயிற்சிகள் நாடி சுத்தீ : நாடிகள் அழுக்குகளால் அடைப்பட்டு இருந்தால் அவற்றுள் வாயு வடிவப் பிராணன் நுழைய முடியாது. எனவே, நாடிகளைத் தூய்மையாக்கும் முறைகளில் நிர்மானு, சமானு என்ற இரண்டு வகைகள் உண்டு. நிர்மானு என்பது, உடலைத் தூய்மை ஆக்கும் முறைகளில் நாடி சுத்தம் செய்வது. சமானு என்பது வேதமந்திர பீஜ மந்திரத்துடன் மூச்சை இழுத்துவிட்டுச் செய்வது. பிராணாயாமத்தின் பொதுவான அளவு 1:4:2. அதாவது, உள் மூச்சு ஒன்று, கும்பகம் நான்கு, வெளி மூச்சு இரண்டு. இப்படி ஒரே ஒரு பிராணாயாமம் ...

பொன்விழா – கவிதை

Posted: 11 May 2017 08:16 AM PDT

ரோஜாக்களை விற்பவன்

Posted: 11 May 2017 08:15 AM PDT

- தொன்மங்களின் சாட்சியாக எஞ்சியிருக்கிற துருப்பிடித்த ட்ரங்க் பெட்டியில் ரோஜாச் செடிகளை நிரப்பிக்கொண்டு விற்பனைக்கு கிளம்பியவன் – வாசல் தெளித்தாற்போல அப்போது பெய்திருந்த சிறுமழை நனைத்திருந்த வீதிகளின் வழியே 'ரோஸ்…ரோஸ்…' எனக் கூவியபடி செல்கிறான். – மென்காற்றின் இளவெப்பமென மிதந்த அவன் குரல் தான் சூட நினைத்து சூடாமல் வந்த ஒற்றை ரோஜாவை நினைவுபடுத்துகிறது அவளுக்கு – மற்றொருவனுக்கு அப்பாவின் இறுதி யாத்திரையில் வீசப்பட்ட ரோஜாக்களின் பன்னீர் மணம் கமழ்ந்து இன்னொரு துக்க கணத்துக்கு இட்டுச் ...

மிஞ்சிய ஒரு கேள்வி...

Posted: 11 May 2017 08:12 AM PDT

ஒரு திருநங்கையின் புலம்பல்

Posted: 11 May 2017 08:10 AM PDT


-

கருவிழிக்குள் வாழும் கனவு

Posted: 11 May 2017 08:09 AM PDT

நனையும் பூமி – கவிதை

Posted: 11 May 2017 08:07 AM PDT

- 'நான் எப்போதும் உன்னை காதலனாய் நேசித்ததில்லை…' முதல் முத்தத்திற்கான ஒரு சிறிய இடைவெளியில் உடைக்கிறாய் உண்மையின் பெரும் எரிமலையை இனி இங்கு திரும்பவே திரும்பாத ஒரு தொடர்வண்டியில் ஏறி அமர்கிறேன். – உன் பெரும் இரகசியங்களுக்குள் நுழையுமென் பூனைகள் தகவல்கள் ஒன்றுமில்லாமல் திரும்புகின்றன என் தொட்டிகளில் இட்டதும் மரித்துவிடும் ஆரஞ்சு மீன்களைப் பரிசளித்து சுவாரஸ்யமான ஆட்டங்களை விளையாடிப் பார்க்கிறாய் – காய்களை சாமர்த்தியமாய் நகர்த்திவிட்டு எனக்கு ஆட்டங்கள் தெரியாதென பொய் சொல்லாதே… பூமி ...

குட்டி டீச்சர் – கவிதை

Posted: 11 May 2017 08:06 AM PDT

வரவேற்பறையை வகுப்பறையாக்கி குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி பாடமெடுக்கிறாள் என் குட்டி டீச்சர். பிராய கால வகுப்பறையின் பின் பெஞ்சிலமர்ந்து பணிவாகத்தான் முதலில் பாடம் கேட்டுக்கொண்டிருந்தேன். இடையில் ஏனோ மடியிலள்ளி முத்திட்டு கொஞ்சித் தீர்த்துவிட்டேன் குட்டி டீச்சரை. ஆட்ட விதிகளை மீறியதற்காக இப்போது குட்டு வாங்கிக் கொண்டிருக்கிறேன் நான் குட்டி டீச்சரிடம். – ——————————- – கார்த்திக் திலகன் குங்குமம்

கால் – கவிதை

Posted: 11 May 2017 08:04 AM PDT

- பிரம்மாண்டத்தை சுமந்து செல்லும் லாரியொன்றில் படுத்திருக்கிறார் சாந்தா கிளாஸ். செந்நிறக் குன்று ஒன்றை சுமந்துசெல்லும் அவ்வாகனத்தை பின்தொடர்கிறேன் – ஏதோவொரு ரிசார்ட்டிலோ பொருட்காட்சியிலோ வாயிலில் நடனமாடி பிள்ளைகளுக்குப் பரிசளிக்கப் போகும் வானளாவிய பொம்மைதான் அது – எனினும் அதன் கால் வெளியே நீட்டிக்கொண்டிருக்க அவ்வப்போது மேடுபள்ளங்களை அவ்வாகனம் கடக்கையில் மனம் பதறவே செய்கிறது. – மகாகுழியொன்றின் பலனாக சாந்தாகிளாஸின் ஒரு கால் மட்டும் கழன்று விழுவதையறியா லாரி ஓட்டுனர் வெகுதொலைவு ...

கறுப்பு பணம் – கவிதை

Posted: 11 May 2017 08:03 AM PDT

‘காதல்’ அவசரம் தடைபோடாதீர்கள்!

Posted: 11 May 2017 08:02 AM PDT

– பெருநகரத்து கலவரத்தில் பால் வண்டி ரேசன் வண்டி ஆம்புலன்ஸ் இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு தன் காதலியைப் பார்க்க அவசரமாய் டூவீலரில் போய்க் கொண்டிருக்கும் இளைஞன் முணுமுணுத்தாவாறே செல்கிறான் 'காதல்' அவசரம் தடைபோடாதீர்கள்! – ——————– பாக்யாவேலு – மணிசங்கர் மூக்குத்திப் பூக்கள் – கவிதை தொகுப்பிலிருந்து

கூடா நட்பு - கவிதை

Posted: 11 May 2017 08:01 AM PDT

த.கோமளீஸ்வரன் கவிதைகள் - தொடர் பதிவு

Posted: 11 May 2017 08:00 AM PDT

முரண்! - கவிதை

Posted: 11 May 2017 07:59 AM PDT

- மோசடி மன்னனுக்கு வெளிநாட்டில் பாதுகாப்பு சோற்றுக்கு வித்திடும் விவசாயிக்கோ உள்ளூரில் தடியடி! - கம்பிகளின் வாசலில் வெள்ளை வேட்டியின் சாஷ்டாங்க நமஸ்காரம்! - நாட்டை அழகாய் ஆள ஆட்சியிலிருப்போருக்கு மனமில்லை ஆளப்படுவோருக்கு பணமில்லை! - அடுப்பெரிக்க விறகுண்டு... வயிற்றை நிரப்ப சோறுண்டா? மீத்தேன் தேவையில்லை... பட்டினி போக்கும் பசுமை வயல் போதும்! - என்னை போன்றோருக்கு பேனா முனையில் மட்டுமே வீரமும், வீரியமும்! - தனக்கான கடமைகள் கட்டி வைத்திருக்க சமூகத்தின் சங்கடம் தீர்ப்பது ...

வனத்தின்குரல் – கவிதை

Posted: 11 May 2017 07:58 AM PDT


-

-
படித்ததில் பிடித்தது

முடிந்த கதைகள் – கவிதை

Posted: 11 May 2017 07:57 AM PDT


-

-
படித்ததில் பிடித்தது

நிலாக் காலம் – கவிதை

Posted: 11 May 2017 07:56 AM PDT


-

-

-
படித்ததில் பிடித்தது

மயில் அகவல் - கவிதை

Posted: 11 May 2017 07:55 AM PDT


-

உணவு விடுதியல்ல… இது இன்னொரு வீடு... (கருணைவேல், சொர்ணலட்சுமி)

Posted: 11 May 2017 07:53 AM PDT

கருணைவேல், சொர்ணலட்சுமி… இவர்களைத் தெரியுமா? கோவையிலிருந்து சுமார் 79 கிலோ மீட்டர் தொலைவில் ஈரோடு மாவட்டம் சீனிபுரத்தில் உள்ள யு.பி.எம் உணவகத்திற்கு சென்றவர்களால் மறக்க முடியாத பெயர்கள் கருணைவேல், சொர்ணலட்சுமி. அந்த உணவகத்தில் ஆடம்பரமான ஜோடனைகள் இல்லை… குளிர்சாதன வசதி இல்லை… இருந்தும் கூட்டம் குறைவதில்லை… விலைமிகுந்த கார்கள் அந்த உணவகத்தின் முன்னே அணிவகுத்து நிற்கின்றன... வார இறுதி நாட்களில் பல கிலோமீட்டர்கள் பயணித்து அங்கே வருபவர்கள் பலர்… ஒரு நேரத்தில் 50 பேர் வரை அமர்ந்து ...

தர்பூசணியின் மருத்துவ குணங்கள் !

Posted: 11 May 2017 07:52 AM PDT

தர்பூசணி பழம் என்று அழைக்கப்படும் இப்பழம் பெரும்பாலும் தர்பீஸ் என்று நகர்புரங்களில் அழைப்பார்கள். இப்பழம் வெளிர் பச்சை மற்றும் கரும் பச்சை நிறமும் வரி வரியாக ஒன்றை அடுத்து ஒன்று காணப்படும். இதன் உள்ளே நன்கு சிவந்த உண்ணத்தகுந்த சதை பகுதி காணப்படும். இந்த சதை பகுதி முழுக்க முழுக்க நீர் நிறைந்து காணப்படும். இந்த சதை பகுதியில் கருப்ப நிற கொட்டைகள் அதிகமாக காணப்படும். இது கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலில் உண்டால் தாகத்தையும் கலைப்பையும் தணிக்க கூடிய அற்புதமான பழம். இதை இயற்கை கடவுள் நமக்கு ...

பிச்சை எடுக்க தைரியம் வர தண்ணி அடிக்கிறேன்…!!

Posted: 11 May 2017 07:51 AM PDT

வர்மக்கலை

Posted: 11 May 2017 06:17 AM PDT

மறைத்தே வைத்திருந்து மறைவாகவே செயல்படுவதுதான் வர்மக்கலை அல்லது மர்மக்கலை. இது உடலின் உறுப்புகளில் மர்மமாக அதாவது மறைபொருளாகக் காணப்படும் இடங்களப் பயன்படுத்தி போர்க்கலையும், வைத்தியமுறையும் செயற்படுத்தப்பட்டன. செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. வர்மக்கலை எளிமையானது. ஏழைக்கும் எளிதில் கிடைக்கக்கூடியது. வர்மம் மர்மமோ, மாயமோஇ தந்திரமோ அல்ல; விஞ்ஞான ரீதியில் ஆனது. வர்மக்கலை ஆபத்துக் காலங்களில் தங்களைத் தாங்களே காத்துக்கொள்வதற்காகப் பயிற்று விக்கப்பட்டது. இது அடுத்தவர்களின் அழிவிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ...

மாதத்தின் ஒவ்வொரு பௌர்ணமிக்கென்றும் ஒரு பெயருண்டு.

Posted: 11 May 2017 06:14 AM PDT

மாதத்தின் ஒவ்வொரு பௌர்ணமிக்கென்றும் ஒரு பெயருண்டு. அமெரிக்கப் பழங்குடியினர் இப்பெயர்களை இட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நடக்கும் நிகழ்வுகளைக்கொ ண்டு இப்பெயர்களை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். பெயரைக் கேட்டாலே பெயர்க்காரணமும் விளங்கி விடும். - ஜனவரி- Wolf Moon - ஓநாய் நிலவு- இந்த மாதத்தில் கடும் பனி மற்றும் குளிர் காரணமாக காட்டுக்குள் உணவு கிடைக்காமல் ஓநாய்கள் கிராமங்களில் புகுந்து கோழி ஆடு போன்றவற்றைத் தூக்கிச் சென்று விடுவது, மற்ற மாதங்களை விட அதிகமாக நடக்குமாம். ...

ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன்

Posted: 11 May 2017 06:11 AM PDT

- 'தேடுவதிலும் புரிந்துகொள்வதில் உள்ள மகிழ்ச்சியே இயற்கையின் சிறந்த பரிசு' - ஆல்பர்ட் ஐன்ஸ்டின். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களை கொண்டு உருவானது இயற்கை. இந்த பஞ்சபூதங்கள் இல்லாமல் நாம் உயிர் வாழ்வது சாத்தியமில்லை. இந்த பஞ்சபூதங்கள் தனிமனித ஆரோக்கியத்திலும் அதீத செல்வாக்கு செலுத்துகிறது. பஞ்சபூதங்களும் நம் உடலும்எலும்பு, தசை, நகம், முடி போன்றவை நிலமாகவும், ரத்தம், நிணநீர், சிறுநீர், வேர்வை போன்றவை நீராகவும், பார்வைத்திறன், செரிமானத்துக்கு உதவும் ...

எட்டு வித்தியாசம் - கண்டு பிடிங்க

Posted: 11 May 2017 06:09 AM PDT

வயிறும் மனசும் நிறைஞ்சாச்சு!

Posted: 11 May 2017 06:08 AM PDT

எந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றாலும் சோற்றுக்குத் தொட்டுக்க என்ன என்று கேட்பதுதான் வழக்கம். ஆனால் இலை முழுவதும் விதவிதமாய் மட்டன், சிக்கன் என்று அடுக்கி, சோற்றை தொட்டுக்கொள்ள வைத்தால்.. இப்படி ஒரு ஹோட்டல் ஈரோட்டில் இருக்கிற விபரம் அறிந்து சென்றோம். - ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலிருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சீனபுரம் என்ற கிராமம். அங்கு சென்று யு.பி.எம் ஹோட்டல் எனக் கேட்டாலே 'இப்படியே நடந்து போனீங்கனா வகை வகையா காருக நிற்கும். அதுதான் ...

உயிரிகள் உலகம்: வாய்க்குள் இயந்திரம்!

Posted: 11 May 2017 06:03 AM PDT

- - காட்டில் வாழும் விலங்குகளில் தலைவன் யார்? சிங்கம் என்று சொல்லிவிடுவீர்கள். காட்டிலும், நாட்டிலும் வாழும் பறவைகளில் யார் தலைவன் என்பதை உங்களால் காட்டமுடியுமா? மயிலையோ, கழுகையோ நீங்கள் சொல்லலாம். ஆனால், இவற்றைத் தாண்டி இன்னொரு பறவை உள்ளது. இந்தப் பறவைக்கு இயற்கை வழங்கிய திறமை மிகவும் அளப்பரியது. அந்தப் பறவையின் பெயர் மரங்கொத்திப் பறவை! மரத்தைக் கொத்தும்போது இந்தப் பறவையின் தலை அசைவைக் கவனித்திருக்கிறீர்களா? அது மரத்தைக் கொத்தும்போது "கிர்ர்ர்ர்…" என்ற ஓசையுடன், அதன் தலை ...

செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...

Posted: 11 May 2017 06:03 AM PDT

தேவைப்படும் பொருட்கள்: பென்சில், ஸ்கேல், கத்தரிக்கோல், வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டு, க்ளூ ஸ்டிக், விதவிதமான நிறங்களில் பட்டன்கள்! செய்யலாமா குட்டீஸ்...? 1. முதலில் வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டை 20x10 செமீ அளவில் கட் செய்து, அதை இரண்டாக மடித்துக் கொள்ளவும். அதில் நான்கு துளைகள் உள்ள சற்று பெரிய பட்டனை கரடியின் தலையாக ஒட்டவும். 2. பிறகு அதை விட பெரிய பட்டனை அதன் கீழே ஒட்டவும். (இதுதான் கரடியின் உடல்) 3. பிறகு நான்கு வயலட் கலர் சிறிய பட்டன்களை இந்த பெரிய பட்டனின் நான்கு புறங்களிலும் ...

தண்ணீருக்குள் எடுக்கப்படும் `அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு

Posted: 11 May 2017 06:01 AM PDT

அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் முழுக்க முழுக்க தண்ணீருக்குள் இருக்கும்படி எடுக்கப்பட உள்ளதாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார். - - கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பிரம்மாண்ட வசூலைக் குவித்த படம் 'அவதார்'. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 2.8 பில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்தது. மேலும் `டைட்டானிக்' படத்தின் வசூல் சாதனையையும் 'அவதார்' முறியடித்திருந்தது. அதனைத் தொடர்ந்து 'அவதார்' படத்தின் மேலும் 4 பாகங்கள் ...

விடறதுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை…!!

Posted: 11 May 2017 05:57 AM PDT

பேசும் கிளி (காணொளி)

Posted: 11 May 2017 05:55 AM PDT

மதுக்கடை கூடாது என்று கிராமசபை பரிந்துரைத்தால் அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம்

Posted: 11 May 2017 05:51 AM PDT

சென்னை: மதுக்கடை கூடாது என்று கிராமசபை பரிந்துரைத்தால் அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கமாட்டோம் என தமிழக அரசு தெரிவித்தது. வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். 3 ஆயிரம் கடைகளை மூடி வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய உள்ளோம் என அரசு தெரிவித்தது. 3 ஆயிரம் கடைகள் மாற்றப்பட உள்ள நிலையில் 12 வழக்குகளே வந்துள்ளன ...

நீ எப்போது கற்க போகிறாய் ?

Posted: 11 May 2017 05:50 AM PDT

அவரிடம் கேட்டால் என்ன இவரிடம் கேட்டால் என்ன அவர்கள் ஏதாவது செய்வார்கள் அல்லது இவர்களாவது ! என் தாயே ! புரிந்து கொள் ! சொந்தங்களும் , பந்தங்களும் நட்புகளும் சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் ! நாம் சோகங்களையும் , பாரங்களையும் பகிர்ந்து கொள்ளவோ உதவவோ அல்ல ! வாழும் போது நம்மோடு சிரிக்கும் கூட்டம் தான் ! வீழும் போது நாம் பின்னின்று சிரிக்கும் ! நான் வாழ்க்கை பாடம் கற்று விட்டேன் ! நீ எப்போது கற்க போகிறாய் ?

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!

Posted: 11 May 2017 05:47 AM PDT

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! இது என்னுடைய 50000 வது பதிவு! 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் ஏற்கனவே இந்த திரி இல் எல்லாம் சொல்லிவிட்டேன்.....என்றாலும்......50000 பதிவுகள் என்பது .......எனக்கே மிகவும் மலைப்பாகத் தோன்றுகிறது...............எப்படி இவ்வளவு type  செய்தோம் என்று ..........எல்லாம் உங்கள் அனைவரின் ஊக்கத்தால், ஆதரவால் தான் ..............அது தொடர வேண்டுகிறேன்..............     இன்று ஒரு நல்ல தலைப்பில் பதிவு போடவேண்டும் என்று எண்ணி இருந்தேன்............எதுவுமே தோன்றவில்லை..........பிரமிப்பு ...

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி புதிய சாதனை

Posted: 11 May 2017 05:41 AM PDT

- இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி, புதிய சாதனையை படைத்துள்ளார். - மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கணை கோஸ்வாமி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுபவர். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், இதுவரை 153 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளவர் 181 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கணையாக உள்ளார். - கடந்த 2002-ம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் ...

அந்தநாள் ஞாபகம் - வீடுகளும் உறவுகளும்!

Posted: 11 May 2017 03:02 AM PDT

அந்தநாள் ஞாபகம் - வீடுகளும் உறவுகளும்! - பா.வெ. தபால்காரர் கண்ணில் பட தவறிய தனிக்குடும்பம் ஏதும் புதிதாய் ஊருக்குள் புகுவதில்லை! வாழையடி வாழையாய் வாழ்ந்த வீடுகள் வரிசையாய் நின்று தெரு போக வழிவிடும்! அனேக வீடுகள் அரைவட்ட வாசலுடன் வெயில் தாங்கும் ஓடுகளையும் குளிர் வாங்கும் கூரைகளையும் அணிந்து நிற்கும்! சாணக் குளியல் போடும் சகதியற்ற வாசல்களில் காற்றில் திரியும் கணக்கற்ற கிருமிகள் கூட காணாமல் போகும்! மக்களின் ...

VITAMIN D - வைட்டமின் டி

Posted: 11 May 2017 12:15 AM PDT

ரமணீயன் ஐயாவின் பதிவுக்கு பின்னோட்டமா இதை போடலாம் என்று தான் நினைத்தேன் , பிறகு அனைவருக்கு பயனுள்ள பதிவு தானே தனியாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன் VITAMIN D - வைட்டமின் டி வைட்டமின் டி என பொதுவாக சொல்லபட்டாலும் அதில் இரு வகைகள் உண்டு. ஒன்று தாவரங்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி2. இன்னொன்று சூரியன் மூலம் நமக்கு கிடைக்கும் வைட்டமின் டி3. இந்த இரண்டையும் ஒப்பிடவே முடியாது. டி2வால் நமக்கு எப்பலனும் கிடையாது. ஆனால் டி3 இருக்கே? அதுமட்டும் ஒரு மருந்தாக கடையில் விற்க்கபட்டால் ...

சுத்தம் செய்யும் வேலையை மறைத்து மகள்களைப் படிக்க வைத்த அன்புத் தந்தை

Posted: 10 May 2017 11:51 PM PDT

- தான் செய்துவரும் வேலையை மறைத்து, வேறு பணி செய்வதாகக் கூறி அவரது மகள்களைப் படிக்க வைத்துள்ளார் அன்பான தந்தை ஒருவர். முகநூலில் இந்த உண்மையை செய்தியாளர் ஒருவர் கடந்த 6-ம் தேதி பதிவிட்ட வேகத்தில், உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதனைப் பார்த்து, தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த உருக்கமான செய்தியை மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்தத் தந்தை, கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யும் தொழில் செய்து வருகிறார். ஆனால், தனது மகள்களிடம் ...

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சுதாகரனுக்கு பிடிவாரண்ட்!

Posted: 10 May 2017 08:15 PM PDT

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவின் அண்ணன் மகன் சுதாகரனை கோர்ட்டில் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. - சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியிருந்த சுதாகரனுக்கு விதிக்கப்பட்டிருந்த 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து சசிகலா, இளவரசி ஆகியோருடன் சேர்ந்து சுதாகரனும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் மூலம் 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனும் ...

ரிலீசாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற `ஒரு கிடாயின் கருணை மனு'

Posted: 10 May 2017 05:10 PM PDT

- ஈராஸ் இன்டர்நே‌ஷனல் மீடியா லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'ஒருகிடாயின் கருனை மனு'. விதார்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக டப்பிங் கலைஞர் ரவீணா அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜார்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 'காக்காமுட்டை' இயக்குனர் மணிகண்டனின் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் சங்கையா இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். - கிராமத்து பின்னணியில் 3 நாட்களில் நடக்கும் கதையில், வேண்டுதலுக்காக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™