Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பள்ளி பொது தேர்வுகளில் 'ரேங்கிங்' முறை ரத்து! தமிழக அரசு திடீர் அறிவிப்பு

Posted: 11 May 2017 10:11 AM PDT

சென்னை: 'இன்று வெளியாகும், பிளஸ் 2 தேர்வு முடிவில், 'ரேங்கிங்' முறை கிடையாது' என, தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை:
மாணவர்களுக்குள் கற்றலில், ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என, ரேங்கிங் முறை அறிமுகமானது. ஆனால், இந்த போட்டி, தற்போது பள்ளிகள் அளவிலான போட்டியாகி , உள்ளது. மாணவர்கள் கடும் நெருக்கடி, அழுத் தத்திற்கு ஆளாகின்றனர். முதல் மாணவர்களை பாராட் டும் போது, இடை மற்றும் கடைசி மாணவர்கள், தாழ்வு மனப்பான் மைக்கும், புறக்கணிப்புக்கும் ஆளாகின்றனர். இதில், தாக்குப் பிடிக்க ...

எல்லை பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்! துப்பாக்கி சூட்டில் பெண் பலியால் பதற்றம்

Posted: 11 May 2017 10:17 AM PDT

ஜம்மு: எல்லை கட்டுப்பாடு கோடு அருகே, பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியதில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அப்பாவி பெண் பலியானார். பாக்., ராணுவத்தின் தொடர் அத்து மீறலால், எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இந்திய - பாக்., எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி அருகே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில், நம் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்., ராணுவ வீரர்கள், நம் வீரர்கள் இருவரை சுட்டுக் கொன்று, அவர்களின் தலைகளையும் துண்டித்து ...

தினகரன் குரல் மாதிரி சோதிக்க போலீஸ் முடிவு

Posted: 11 May 2017 10:19 AM PDT

புதுடில்லி:தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள, தினகரன் மற்றும் இடைத்தரகர் சுகேஷ் சந்தர் ஆகியோரது குரல் மாதிரி கேட்டு, டில்லி போலீஸ் மனு தாக்கல் செய்துள்ளது.

அ.தி.மு.க., இரண்டாக பிரிந்ததால் முடக்கப் பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சசிகலா வின் அக்கா மகன் தினகரன் கைது செய்யப் பட்டு, டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கில், டில்லி சிறப்பு கோர்ட் உத்தரவின்படி, தினகரன், இடை ...

தண்டனையை திரும்ப பெற நீதிபதி கர்ணன் மனு

Posted: 11 May 2017 10:28 AM PDT

புதுடில்லி:கோர்ட் அவமதிப்பு வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப் பெறக் கோரி, நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோர்ட் அவமதிப்பு வழக்கில், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு, ஆறு மாத சிறை தண்டனை விதித்த சுப்ரீம் கோர்ட், உடனடியாக அவரை கைது செய்யும்படி, மேற்கு வங்க
மாநில போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்நிலை யில், நீதிபதி கர்ணன் கோல்கட்டாவிலிருந்து சென்னை சென்றார்.அவரை கைது செய்வதற்காக, கோல்கட்டா போலீசார்,நேற்று முன்தினம் சென்னை சென்றனர். அவரை, கோல்கட்டா போலீசாரால் கண்டுபிடிக்க முடிய ...

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மஹாத்மா காந்தியின் பேரன் கோபால்?

Posted: 11 May 2017 10:32 AM PDT

புதுடில்லி: இதற்கு முன் இல்லாத வகையில், ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் விறுவிறுப் படைந்து உள்ளது. மஹாத்மா காந்தியின் பேரனான, கோபாலகிருஷ்ண காந்தி, 71, தங்கள் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு, வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதிக் கான தேர்தல், வரும் ஜூலையில் நடக்க உள்ளது.
பா.ஜ., அணியில் யார்?இதில்,மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையில் ஆன தே.ஜ.,
கூட்டணி சார்பில், பல்வேறு பெயர்கள் பரிசீலனை யில் உள்ளன. ஜார்க்கண்ட் கவர்னராக உள்ள திரவுபதி முர்மு, ...

'பான்' கார்டுடன் 'ஆதார்' இணைப்புக்கு புதிய வசதி

Posted: 11 May 2017 10:34 AM PDT

புதுடில்லி: வருமான வரித்துறை வழங்கும், 'பான்' கார்டுடன், 'ஆதார்' எண்ணை இணைக்க, புதிய மற்றும் எளிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிதி மசோதாவில் கொண்டு வரப்பட்ட திருத்தத் தின்படி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. மேலும்,ஜூலை, 1 முதல், பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதுவரை, வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு விபரங்களுடன், 1.18 கோடி பேர், தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். வரு மானவரி கணக்கு தாக்கல் செய்யும் நட வடிக்கை ...

எஸ்.பி.ஐ., 'மொபைல் பேங்கிங்' சேவை கட்டணம் உயர்கிறது ?

Posted: 11 May 2017 10:47 AM PDT

பாரத ஸ்டேட் வங்கியின், 'மொபைல் பேங்கிங்' சேவையான, எஸ்.பி.ஐ., - 'பட்டி'யில் பணம் சேமித்து வைத்திருந்தால், அதை ஏ.டி.எம்.,க ளில் எடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு, 25 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

எஸ்.பி.ஐ., என்ற பாரத ஸ்டேட் வங்கி, ஏப்ரல் முதல், வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால், வாடிக்கை யாளர்களுக்கு, அபராதம் விதித்து வருகிறது. அதன்படி, மாநகர பகுதிகளில், 5,000 ரூபாய்; நகரம், 2,000 மற்றும் கிராமம், 1,000 ரூபாய் இருப்பு வைத்திருக்க வேண்டும்; அது குறைந் தால், குறைந்தபட்சம், 100 ரூபாய் அபராதம் ...

எதற்கு தர்மசங்கடம்?

Posted: 11 May 2017 10:52 AM PDT

சென்னை:''தி.மு.க., தலைவர், கருணாநிதியின் சட்டசபை வைர விழாவில், பா.ஜ., தலைவர் களை அழைத்து, அவர்களுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்த, நாங்கள் தயாராக இல்லை,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

அவர் அளித்த பேட்டி: டில்லியில், மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்; அதற்கு, தி.மு.க., நிச்சயம் பக்கபலமாக இருக்கும். 'அரசியல் தலைவர்களை எல்லாம், பா.ஜ.,வுக்கு எதிராக, தி.மு.க., ஒருங்கிணைக் கிறது' என, பா.ஜ., கூறுகிறது. இதுபற்றி கேட்பதற்கான தகுதி, பா.ஜ.,வினருக்கு இல்லை. 'திராவிட இயக்கங்களை ஒழிப்பது தான், எங்களுடைய முதல் வேலை' ...

தமிழக மந்திரிகளின் மோசடிகள் தொடர்ந்து அம்பலமாவது... அவலம்!

Posted: 11 May 2017 11:02 AM PDT

தமிழக மந்திரிகளின் மோசடிகள், தொடர்ந்து அம்பலமாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள் ளது. மந்திரிகள் விஜயபாஸ்கர், காமராஜை தொடர்ந்து, பெண் மந்திரி சரோஜா, 30 லட்சம் ரூபாய் கேட்டு, பெண் அதிகாரியை அடாவடி யாக மிரட்டி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, பாதுகாப்பு கோரி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், அமைச்சர்கள் கட்டுப்பாடின்றி, தன்னிச் சையாக செயல்படுகின்றனர். ஊழியர்கள் நியமனம், பணி இடமாற்றம், 'டெண்டர்' என, அனைத்திற்கும் லஞ்சம் பெறுவதாக, புகார் எழுந்துள்ளது.சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் ...

தண்டனையை திரும்ப பெற நீதிபதி கர்ணன் மனு

Posted: 11 May 2017 12:33 PM PDT

புதுடில்லி:கோர்ட் அவமதிப்பு வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப் பெறக் கோரி, நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோர்ட் அவமதிப்பு வழக்கில், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு, ஆறு மாத சிறை தண்டனை விதித்த சுப்ரீம் கோர்ட், உடனடியாக அவரை கைது செய்யும்படி, மேற்கு வங்க மாநில போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்நிலை யில், நீதிபதி கர்ணன் கோல்கட்டாவிலிருந்து சென்னை சென்றார்.அவரை கைது செய்வதற்காக, கோல்கட்டா போலீசார், நேற்று முன்தினம் சென்னை சென்ற னர். அவரை, கோல்கட்டா போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று ...

வி.ஐ.பி., பயண செலவு: குட்டு வாங்கும் 'ஏர் இந்தியா'

Posted: 11 May 2017 12:36 PM PDT

புதுடில்லி: 'ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு இயக்கப்பட்ட தனி விமானங்களுக்கான செலவு தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு, மத்திய கணக்கு தணிக்கை துறை அறிவுறுத்தியுள்ளது.

வி.ஐ.பி., பயண செலவு:
மத்திய அரசு நிறுவனமான, ஏர் இந்தியா, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்காக, பல்வேறு தனி விமானங்களை இயக்கி வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களுக்கான செலவு தொகையை, சம்பந்தப்பட்ட துறைகள், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு செலுத்தாமல், நிலுவையில் ...

27 முறை பறந்து ரூ. 275 கோடி செலவில் 43 நாடுகளுக்கு மோடி வெளிநாடு பயணம்

Posted: 11 May 2017 01:36 PM PDT

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி 2014- ஜூன் முதல் 2016-ம் ஆண்டு நவம்பர் வரையில் 43 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பார்லி. லோக்சபா தேர்தலில் பா.ஜ. அமோக வெற்றி பெற்றது. பிரதமராக மோடி பதவியேற்றார். அதுமுதல் பிரதமராக மோடி, வெளிநாடுகளுடன் பரஸ்பரம், நல்லுறவு, ஒத்துழைப்பை நல்கும் விதமாக அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார்.

27 முறை-43 நாடுகள்
இந்நிலையில் கடந்த 2014-16-ம் ஆணடுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயண விவரங்கள், செலவினங்களை பிரதமர் அலுவலகம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™