Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


மனிட்டோபாவில் வீடு ஒன்றின் வெளியே மூவரின் சடலங்கள்

Posted: 05 Apr 2017 08:21 AM PDT

மனிட்டோபாவில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டதை அடுத்து அது குறித்த விசாரணைகளை கனேடிய மத்திய காவல்த்துறையினர் முன்னெடுத்துள்ளனர். மனிட்டோபாவின் செல்கிர்க் எனப்படும் இடத்தின் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் வெளியில் இருந்து இந்த சடலங்கள் நேற்று திங்கட்கிழமை இரவு ஏழு மணியளவில் மீட்கப்பட்டன. அங்கு துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக முறைப்பாடு கிடைத்ததை அடுத்து தாங்கள் அங்கு விரைந்ததாகவும், அப்போது அங்கு இந்த சடலங்கள் காணப்பட்டதாகவும் காவல்த்துறையினர் தெரிவிததுள்ளனர். அந்த சடலங்களில் ஒன்று பெண்ணினது என்றும், ஏனைய இரண்டும் […]

The post மனிட்டோபாவில் வீடு ஒன்றின் வெளியே மூவரின் சடலங்கள் appeared first on TamilStar.com.

மது போதையுடன் விமானத்தை செலுத்த முயன்ற விமானிக்கு சிறை

Posted: 05 Apr 2017 08:19 AM PDT

கனடாவில் மது போதையுடன் பயணிகள் விமானத்தை செலுத்த முயற்சித்த விமானி ஒருவருக்கு 8 மாதச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சண்விங் எயர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானி ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி கல்கரியில் இருந்து வின்னிபெக்கின் றெஜீனா ஊடாக மெக்சிக்கோவுக்கு பயணத்தை மேற்கொள்வதற்கு தயாரான விமானத்தி்னை செலுத்திச் செல்வதற்கு ஆயத்தமாகியிருந்தார். எனினும் அவர் தடுமாற்றத்துடன் காணப்பட்டதுடன், அவரின் நடத்தையிலும் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், முறைப்பாடு செய்ய்பட்டதை அடுத்து, அவர் போதையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இறுதி […]

The post மது போதையுடன் விமானத்தை செலுத்த முயன்ற விமானிக்கு சிறை appeared first on TamilStar.com.

சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்தில் முக்கிய பதவி! – யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி

Posted: 05 Apr 2017 08:11 AM PDT

இலங்கை இராணுவத்தின் முக்கிய பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐ.நாவின் முன்னாள் நிபுணரான யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தின் 58வது படைப்பிரிவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார். குறித்த படைப்பிரிவு பெருமளவான போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும், போர் முடிந்த பின்னர், சவேந்திர சில்வா இராஜதந்திர சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிடப் பிரதிநிதி […]

The post சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்தில் முக்கிய பதவி! – யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி appeared first on TamilStar.com.

காணிகளை விடுவிப்பதில் அரசு நேரடி தலையீடு செய்யாமைக்கான காரணம் என்ன? விளக்கமளித்த பிரதமர்

Posted: 05 Apr 2017 07:55 AM PDT

வடக்கில் காணப்படும் பெரும்பாலான காணிகள், வன ஜீவராசிகள் அமைப்பின் கீழும் இன்னும் சில பகுதிகள் தனியார் அமைப்புக்களின் கீழும் இருப்பதன் காரணமாகவே அவற்றை விடுவித்து மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் வடமாகாண மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி மீட்பு போராட்டங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் காணி விடுவிப்பு தொடர்பான மக்களின் போராட்டம் […]

The post காணிகளை விடுவிப்பதில் அரசு நேரடி தலையீடு செய்யாமைக்கான காரணம் என்ன? விளக்கமளித்த பிரதமர் appeared first on TamilStar.com.

யாழ். பல்கலைக்கழகத்தில் 353 விரிவுரையாளர் பதவிகளுக்கு வெற்றிடங்கள்! – விரைவில் நிரப்ப நடவடிக்கை

Posted: 05 Apr 2017 07:52 AM PDT

யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள கற்கை பீடங்களில் 353 விரிவுரையாளர்களுக்கான பதவிநிலை வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, யாழ்.பல்கலைக்கழகம் தொடர்பாக எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ்.பல்கலைக்கழகத்தில் தற்போது காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உயர்கல்வி அமைச்சு […]

The post யாழ். பல்கலைக்கழகத்தில் 353 விரிவுரையாளர் பதவிகளுக்கு வெற்றிடங்கள்! – விரைவில் நிரப்ப நடவடிக்கை appeared first on TamilStar.com.

அவுஸ்திரேலிய அமைச்சருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

Posted: 05 Apr 2017 07:50 AM PDT

அவுஸ்திரேலிய நாட்டின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ தலைமையிலான குழுவினர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார். குறித்த சந்திப்பு யாழ். கைத்தடியில் உள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகிய குறித்த சந்திப்பில் அவுஸ்திரேலிய நாட்டின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ உடன் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். வடமாகாண அலுவலகத்திற்கு வருகைதந்த கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸவிற்கு மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டுள்ளமை […]

The post அவுஸ்திரேலிய அமைச்சருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு appeared first on TamilStar.com.

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த ஐவருக்கு 20 வருட சிறை : நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 05 Apr 2017 07:46 AM PDT

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 4 பேரின் மேன்முறையீட்டு மனுவினை நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அத்துடன், மேன்முறையீடு செய்த நான்கு பேர் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நெதர்லாந்தில் சட்டவிரோதமான முறையில் நிதி சேகரித்த குற்றச்சாட்டு தொடர்பில் […]

The post விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த ஐவருக்கு 20 வருட சிறை : நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு appeared first on TamilStar.com.

வழிநடத்தல் குழுவில் முடிவு எடுக்கப்படவில்லை! – சுமந்திரனின் கருத்தை மறுக்கிறார் தினேஷ்

Posted: 05 Apr 2017 07:43 AM PDT

வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகமொன்றுக்குத் தெரிவித்திருக்கும் கருத்து முற்றிலும் தவறானது என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அரசியலமைப்பு சபையினால் அமைக்கப்பட்ட உபகுழுவின் செயற்பாடுகளை பிழையாக வழிநடத்தும் வகையில் சுமந்திரன், ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருப்பதாக தினேஷ் குணவர்த்தன சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் வழிநடத்தல் குழு இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாவும், அதிகாரப்பகிர்வு தொடர்பான முன்வைக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கை […]

The post வழிநடத்தல் குழுவில் முடிவு எடுக்கப்படவில்லை! – சுமந்திரனின் கருத்தை மறுக்கிறார் தினேஷ் appeared first on TamilStar.com.

ஐ.நா.தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இணங்கினால் ஒத்துழைக்க தயார்! இரா.சம்பந்தன்

Posted: 05 Apr 2017 07:36 AM PDT

ஐ.நா.தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் இணங்குமாகவிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மனிய பாராளுமன்றத் தலைவர் பேராசிரியர் நோர்பேர்ட் லம்மேர்ட் தலைமையிலான குழுவினரை சந்தித்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் பாராளுமன்றத்தின் தலைவர் பேராசிரியர் நோர்பேர்ட் லம்மேர்ட் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையிலான சந்திப்பு […]

The post ஐ.நா.தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இணங்கினால் ஒத்துழைக்க தயார்! இரா.சம்பந்தன் appeared first on TamilStar.com.

அமைச்சரவைக் கூட்டத்தில் வெடித்து பொங்கிய ரணில்- மௌனம் காத்தார் மைத்திரி!

Posted: 05 Apr 2017 07:33 AM PDT

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் சந்திம வீரக்கொடி மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுமையாக திட்டியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்தில் எண்ணை தாங்கிகள் சிலவற்றினை இந்திய நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் குறித்து, அமைச்சர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வாறு அரசாங்க சொத்துக்களை விற்பனை செய்வதன் ஊடாக மக்களை எழுப்பிவிட முடியுமா என இந்த அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த ரணில் […]

The post அமைச்சரவைக் கூட்டத்தில் வெடித்து பொங்கிய ரணில்- மௌனம் காத்தார் மைத்திரி! appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™