Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


நேரம் மட்டும் இருந்திருந்தால் ஆர்.கே.நகரையும் பிடித்திருப்போம்! ஆர்யா

Posted:

சமீபத்தில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில், விஷால் அணியில் செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் ஆர்யா. சற்று இடைவெளிக்கு பின், அவர் நடிப்பில், கடம்பன் படம் வெளியாகவுள்ளதால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும், ஆர்யா அளித்த பேட்டி:

தயாரிப்பாளர் சங்கத்தில் உடனடியாக ...

உலக தரத்தில் வனமகன்!

Posted:

போகன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. தற்போது இவர், டிக் டிக் டிக் மற்றும் வனமகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வனமகன் படத்தில், சாயீஷா சைகல் என்பவர் நடிக்கிறார். இவர், ஏற்கனவே, தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள், ...

தோட்டா வெடிக்குமா?

Posted:

'கிரைம்' படங்களுக்கு இப்போது கோலிவுட்டில் நல்ல கிராக்கி நிலவுகிறது. இதை மனதில் வைத்து, 8 தோட்டாக்கள் என்ற படம் தயாராகிறது. போலீஸ் ஸ்டேஷனில் ஒரு துப்பாக்கி, மர்மமான முறையில் காணாமல் போகிறது. இதில் இருக்கும், எட்டு தோட்டாக்களும், வெவ்வேறு இடத்தில் வெடிக்கின்றன. இதற்கு பின்னணியில் இருப்பது யார் என்பது தான், படத்தின் கதையாம். ...

டுவிட்டரில் ரொமான்ஸ்!

Posted:

எங்கேயும் எப்போதும் படம் வெளியானதிலிருந்தே, ஜெய்யும், அஞ்சலியும், காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. ஆனால், இருவருமே தொடர்ந்து இந்த தகவலை மறுத்து வந்தனர். இதற்கு பின், அஞ்சலிக்கு ஏற்பட்ட பிரச்னைகளால், காதல் விவகாரம் குறித்து, அனைவரும் மறந்து போன நிலையில், தற்போது மீண்டும், அது தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. ...

காந்த புன்னகை

Posted:

கோலிவுட்டில் இப்போது, அதிதி ராவ் பற்றித் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. மணிரத்னம் படத்தின் நாயகி என்ற பெருமையுடன், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் அதிதி, பாலிவுட் மற்றும் டோலிவுட்டிற்கு ஏற்கனவே அறிமுகமானவர். காற்று வெளியிடை படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில், மிகவும் ஆர்வமாக பங்கேற்று வருகிறார் அதிதி. அந்த நிகழ்ச்சிகளுக்கு, ...

இனி இறங்குமுகம் இல்லை!

Posted:

'பிரியங்கா சோப்ராவின் திரையுலக வாழ்க்கையில் இனிமேல் இறங்குமுகமே இல்லை; ஏற்றம் மட்டும் தான்' என, கொண்டாடி குதுாகலிக்கிறது, பாலிவுட். அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும், 'புஜ்நெட்' என்ற இணையதளம், உலகிலேயே மிகவும் அழகான பெண் யார் என்ற கருத்து கணிப்பை நடத்தியது. இதில், இரண்டாவது இடத்தைபிடித்துள்ளதுடன், ஹாலிவுட் நடிகையர் ...

பாகுபலி-2 படத்துக்காக காத்திருக்கும் விக்ரம் - வேதா

Posted:

இன்னொரு ஹீரோ உடன் இணைந்து நடிக்கவே மற்ற ஹீரோக்கள் ஈகோ பார்ப்பார்கள். விஜய்சேதுபதி அது பற்றி எல்லாம் யோசிப்பதே இல்லை. கதாபாத்திரம் பிடித்தால் எத்தனை ஹீரோ உடன் வேண்டுமானாலும் நடிப்பார். இறைவி படம் இதற்கொரு உதாரணம்.
தற்போது மாதவன் உடன் இணைந்து விக்ரம்-வேதா என்ற படத்தில் நடித்து வருகிறார். காப் த்ரில்லராக உருவாகியிருக்கும் ...

அறம் படத்தின் தயாரிப்பாளர் நயன்தாராவா?

Posted:

விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தை இயக்கியபோது, கத்தி என்னுடைய கதை என்று சர்ச்சையைக் கிளப்பியவர் மீஞ்சூர் கோபி. அவர்தான் தற்போது தன்னுடைய பெயரை கோபி நயினார் என்று மாற்றிக்கொண்டு அறம் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா கதாநாயகியாக, மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அறம்' விரைவில் ரிலீசாகவிருக்கிறது. ...

மகிழ்ச்சியைக் கொடுத்த U/A

Posted:

சில வருடங்களுக்கு முன் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் செல்வராகவன் ஒருகட்டத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்திக்க ஆரம்பபித்தார். தனித்துவமான இயக்கத்திற்கு பெயர் போனவராக இருந்தாலும் இரண்டாம் உலகம் போன்ற படங்கள் செல்வராகவனின் பெயரை காலி பண்ணிவிட்டன. அதனால் கடும் நெருக்கடிக்கு ஆளானவர் சிம்புவை வைத்து படம் ...

மேனேஜர்களை ஓட ஓட விரட்டும் மடோனா

Posted:

மலையாளத்தில் வௌியான பிரேமம் என்ற ஒரு படம் கொடுத்த வெற்றியால் தமிழ் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது நடிகை மடோனா செபாஸ்டியனுக்கு. விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் பெரிய வெற்றி என்று இல்லாவிட்டாலும் மடோனாவை அடையாளம் காட்டியது. தொடர்ந்து கவண், பவர்பாண்டி என ...

விவேகம் என பெயர் வைக்கப்பட்டது ஏன்?

Posted:

வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, அஜித்தை வைத்து மூன்றாவது முறையாக இயக்கும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது அஜித்தின் சிக்ஸ் பேக்கை பார்த்து அவருடைய ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். தொடர்ந்து விவேகம் படத்தில் அஜித்தின் கெட்டப்பை வெளிப்படுத்துவது போல் புகைப்படங்கள் ...

26 வருடங்களுக்குப் பிறகு ராஜ்கிரண், பி.வாசு போட்டி

Posted:

தமிழ்த் திரையுலகில் வெளிவந்த குறிப்பிடத்தக்கப் படங்களில் 1991ம் ஆண்டு வெளிவந்த 'என் ராசாவின் மனசிலே, சின்ன தம்பி' ஆகிய இரண்டு படங்கள் மிக முக்கியமான படங்கள். இரண்டு படங்களுமே 1991ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளிவந்த படங்கள். இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி பெற்ற படங்கள்.

'என் ராசாவின் மனசிலே' படம் ...

லிங்கா கதை பஞ்சாயத்து - ராக்லைன் வெங்கடேஷ் கோர்ட்டில் ஆஜர்

Posted:

லிங்கா கதை பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜரானார். ரஜினி நடிப்பில் கேஎஸ்ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் படம் ‛லிங்கா'. இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருந்தார். லிங்கா படத்தின் கதை என்னுடையது. எனது முல்லை வனம் 999 கதையை திருடி தான் லிங்கா படத்தை எடுத்துள்ளனர் என்று ...

பீஷ்மராக அமிதாப் நடிக்கவில்லை

Posted:

மோகன்லால் நடிக்க இருக்கும் வரலாற்று படம் ரந்தமூழம். எம்.டி.வாசுதேவ நாயர் எழுதி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ரந்தமூழம் என்கிற வரலாற்று நாவலை பழசிராஜா புகழ் ஹரிஹரன் இயக்கப்போவதாகவும் அதில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கப்போவதாகவும் ஏற்கனவே செய்திகள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டன.
இந்தக்கதையில் உள்ள பிரதான ...

தமிழ் படங்களில் நடித்தது நன்றாக இருந்தது - கஜோல்

Posted:

பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கஜோல். திருமணம், குழந்தை பிறப்பு என அடுத்தடுத்து குடும்ப பொறுப்புகள் வந்ததால் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார். அதுவும் முதல் ரீ-என்ட்ரி படம் தமிழில். ஏற்கனவே தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்த கஜோல், இப்போது தனுஷ் நடிப்பில் ...

ஜூலை 21-ல் ‛இந்து சர்கார் ரிலீஸ்

Posted:

பிரபல இயக்குநர் மதுர் பண்டர்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‛இந்து சர்கார். 1975-ம் ஆண்டில் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட எமெர்ஜென்சியை மையப்படுத்தி இக்கதை உருவாகி உள்ளது. இதில் நீல் நிதின் முகேஷ், சஞ்சய் காந்தியாக நடிக்கிறார். அவருடன் கீர்த்தி குல்ஹரி, சுப்ரியா வினோத், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தின் ...

'பேகன் ஹோகி தெரி' பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted:

ராஜ்குமார் ராவ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பேகன் ஹோகி தெரி'. ரொமான்ட்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தை அஜய் கே பன்லால் இயக்குகிறார். அமுல் விகாஸ் மோகன், நிதின் உபத்தயா மற்றும் டோனி டிசோசா ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ...

ராணி முகர்ஜி நடிக்கும் ‛ஹிச்கி' படப்பிடிப்பு ஆரம்பம்

Posted:

பாலிவுட்டில் பிரபலமான நடிகை ராணி முகர்ஜி. முன்பு போன்று அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது ஒரு சில படங்களில், அதுவும் கதையின் நாயகியாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு இவரது நடிப்பில் ‛மார்தானி' படம் வெளிவந்தது. இப்படத்தை தொடர்ந்து ராணி முகர்ஜி அடுத்தப்படியாக ‛ஹிச்கி'- என்ற படத்தில் நடிக்கிறார். ...

கமலுக்கு, சந்திரஹாசன் பெரிய தூண் - பிரபலங்கள் புகழஞ்சலி

Posted:

சந்திரஹாசனின் மறைவையொட்டி அவருக்கு சென்னை காமராஜர் அரங்கில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் கமல், ரஜினி, சாருஹாசன், அனுஹாசன், அக்ஷ்ராஹாசன், சுஹாசினி, கேஎஸ்.ரவிக்குமார், கிரேஸி மோகன், இளையராஜா, விஷால், நாசர், அம்பிகா, பிரமிட் நடராஜன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பிரபலங்கள் பங்கேற்று பேசிய விபரம் ...

கணவருடன் ரம்பா சமரசம் - சேர்ந்து வாழ முடிவு

Posted:

கோர்ட்டின் அறிவுரையை ஏற்று, நடிகை ரம்பா - இந்திரகுமார் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரம்பா. கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை, 2010ல், ரம்பா திருமணம் செய்தார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™