Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


மார்க்கம் – த்ரோன்ஹில் உள்ளிட்ட 5 தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல்

Posted: 03 Apr 2017 08:30 AM PDT

மார்க்கம் – த்ரோன்ஹில் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இடைத் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. அல்பேட்டாவில் இரண்டு நாடாளுமன்ற ஆசனங்களும், ஒன்ராறியோவில் இரண்டு ஆசனங்களும், கியூபெக்கில் ஒரு ஆசனமும் வெற்றிடமாக உள்ள நிலையிலேயே அவற்றை நிரப்புவதற்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகின்றது. அல்பேட்டாவின் கல்கரியில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர், மற்றும் முன்னாள் அமைச்சர் ஜேசன் கெனி ஆகியோர் நாடாளுமன்ற […]

The post மார்க்கம் – த்ரோன்ஹில் உள்ளிட்ட 5 தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல் appeared first on TamilStar.com.

ஹமில்ட்டனில் இந்த ஆண்டின் முதல் கொலைச் சம்பவம் – சந்தேக நபர் கைது

Posted: 03 Apr 2017 08:25 AM PDT

ஹமில்ட்டன் பகுதியில் நபர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி் உயிரிழந்துள்ளதை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. Parkdale Avenue North மற்றும் Brittannia Avenue பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குறித்த நபர் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் காயங்களுடன் உயிராபத்தான நிலையில் மீட்கப்பட்டார். தகவல் அறிந்து குறித்த இடத்திற்கு விரைந்திருந்த காவல்த்துறையினரே காயங்களுடன் கிடந்த அந்த நபரை மீட்டதுடன், உடனடியாகவே அவரை மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்திருந்தனர். எனினும் […]

The post ஹமில்ட்டனில் இந்த ஆண்டின் முதல் கொலைச் சம்பவம் – சந்தேக நபர் கைது appeared first on TamilStar.com.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் ஒரு வேண்டுகோள்!

Posted: 03 Apr 2017 08:22 AM PDT

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அன்பு வணக்கம். அண்மைக் காலமாக கலைப்பீட மாணவர்களின் போராட்டத்தை கண்டோம். அதற்கு முன்னர் மருத்துவ பீட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இரண்டு போராட்டமும் வீதியோரத்தில் நடந்ததாயினும் ஒரு போராட்டம் படிக்க விடவேண்டாம் என்பதாகவும் மற்றைய போராட்டம் படிக்க விடுமாறும் கேட்பதாக இருந்தது. மருத்துவ பீட மாணவர்களின் போராட்டம் இலங்கை மத்திய அரசின் கொள்கையுடன் சார்வுபட்டது என்பதால் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நிர்வாகம் அதற்கு பொறுப்பன்று, மாறாக கலைப்பீட மாணவர்களின் போராட்டத்திற்கு தீர்வு காணும் […]

The post யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் ஒரு வேண்டுகோள்! appeared first on TamilStar.com.

கோத்தபாயவையும் விமலையும் ஒதுக்கி விட்ட சகாக்கள்! திசை மாறும் அரசியல்

Posted: 03 Apr 2017 08:17 AM PDT

இராணுவம் சார்ந்தவர்கள் அரசியலுக்கு பொறுத்தமற்றவர்கள், கோத்தபாய மற்றும் பொன்சேகா இருவருக்குமே இது பொருந்தும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே இதனைக் கூறினார். மேலும், விமல் வீரவங்சவின் உண்ணாவிரதத்திற்கும் நான் எதிர்ப்பு தெரிவிக்கின்றேன். நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையில் போராட்டம் செய்யப்படுவது பொறுத்தமற்றது. இந்த விடயத்தில் விமல் உண்ணாவிரதம் இருக்க மாட்டார் என்றே நான் நினைத்திருந்தேன். முன்னாள் ஜனாதிபதியும் விமல் உண்ணாவிரதம் இருக்க மாட்டார் என்றே […]

The post கோத்தபாயவையும் விமலையும் ஒதுக்கி விட்ட சகாக்கள்! திசை மாறும் அரசியல் appeared first on TamilStar.com.

புதிய அரசியலமைப்பில் ஆளுநரின் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு – ஜீ.எல் பீரிஸ்

Posted: 03 Apr 2017 08:14 AM PDT

புதிய அரசியல் அமைப்பின் மூலம் ஆளுனரின் அதிகாரங்கள் பெருமளவில் குறைக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பில் ஒற்றையாட்சிக் கொள்கையை உறுதிப்படுத்திவிட்டு, உட்பிரிவுகளில் அதற்கு முரணான வகையிலான திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் ஆளுநரின் அதிகாரங்கள் குறைக்கப்படவுள்ளது. ஆளுநரின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் ஆளுனர் முதலமைச்சருக்கு பொறுப்புக் கூறும் நிலை ஏற்படும் என்றும் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். ஆளுனர் அரசாங்கத்தின் நேரடி பிரதிநிதியாக இல்லாமல் மாகாணங்களின் பிரதிநிதிகளாக மாற்றப்படுவார்.

The post புதிய அரசியலமைப்பில் ஆளுநரின் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு – ஜீ.எல் பீரிஸ் appeared first on TamilStar.com.

வடக்கின் பிரச்சினைகள் – ஜனாதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்!

Posted: 03 Apr 2017 08:11 AM PDT

வடக்கின் முக்கிய பிரச்சினைகளைக் கவனத்தில் எடுத்து விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ​நேற்று ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். வட மாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளும் சென்ற வாரம் தங்களுடைய அன்புக்குரியவர்கள் காணமற் போனமை பற்றி என்னைச் சந்தித்துப் பேசினார்கள். அதே போல தங்களுடைய காணிகளை விடுவிப்பது பற்றி இடம்பெயர்ந்து வாழ்வோர் என்னுடன் தொடர்புகொண்டார்கள். மேலும் வேலையற்ற பட்டதாரிகளும் சந்தித்துப் பேசினார்கள். அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் […]

The post வடக்கின் பிரச்சினைகள் – ஜனாதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்! appeared first on TamilStar.com.

இந்தியப் பிரதமர் மே 11இல் இலங்கைக்கு விஜயம்

Posted: 03 Apr 2017 08:08 AM PDT

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மே மாதம் 11ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக புத்தசாசன மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என்றும் நீதியமைச்சர் கூறியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தியிருப்பதாக தெரிவித்த அமைச்சர், சர்வதேச வெசாக் வைபவத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் மோடி, பிரதம அதிதியாக கலந்து கொள்ள உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

The post இந்தியப் பிரதமர் மே 11இல் இலங்கைக்கு விஜயம் appeared first on TamilStar.com.

விமலின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

Posted: 03 Apr 2017 08:04 AM PDT

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. விமல் வீரவங்சவை இந்த மாதம் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேவேளை,விமல் வீரவங்ச தாக்கல் செய்திருந்த பிணை மனுவும் இன்றைய தினம் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விமலின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் […]

The post விமலின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு appeared first on TamilStar.com.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த சந்திரிகா தகுதியானவரல்ல! – சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted: 03 Apr 2017 08:01 AM PDT

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான காரியாலயத்தின் தலைவராக இருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தகுதி அற்றவர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம் எற்பாடு செய்த ஜெனிவா களமும் தமிழ்த் தலைமைகளும் எனும் தலைப்பிலான கலந்துரையாடலிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

The post நல்லிணக்கத்தை ஏற்படுத்த சந்திரிகா தகுதியானவரல்ல! – சுரேஸ் பிரேமச்சந்திரன் appeared first on TamilStar.com.

ரணிலுக்கு பச்சைக்கொடி காட்டிய மஹிந்த!

Posted: 03 Apr 2017 07:57 AM PDT

தமது ஒப்பந்த முறைக்கமைய ஹம்பாந்தோட்டை திட்டம் செயற்படுத்தப்பட்டால், அதற்கு ஆதரவு வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையை இணைத்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தான் தொடர்பில் போலி பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார். ஏன் இப்படி பொய்யான விடயங்களை கூறுகின்றார்? ஹம்பாந்தோட்டை விற்பனை செய்யும் யோசனை என்னிடம் காணப்பட்டதில்லை. ஹம்பாந்தோட்டை நான் பிறந்த மாவட்டம். எங்கள் முறைக்கமைய இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்பட்டால் […]

The post ரணிலுக்கு பச்சைக்கொடி காட்டிய மஹிந்த! appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™