Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தனுஷ் போலி கையெழுத்து போட்டாரா..?

Posted:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தனுஷ் தங்களது மகன் என்று உரிமை கோரி, மதுரை மாவட்டம், மேலூர் அருகே மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன், மீனா தம்பதியினர் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிலிருந்து விலக்கு அளிக்க கோரி தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவருக்கு அங்க ...

விஷால் அணி வெற்றியும், எதிர் அணிகளின் தோல்வியும்

Posted:

நடிகர் சங்கத் தேர்தல் போல தமிழக மக்களிடம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு பரபரப்பை நடத்தி முடித்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கத் தேர்தல். நடிகர் சங்கத் தேர்தல் போலவே புதிய இளம் அணி வெற்றி பெறுமா அல்லது அனுபவம் வாய்ந்த மூத்த தயாரிப்பாளர்களின் அணி வெற்றி பெறுமா என திரையுலகத்தில் பெரும் ...

விஜய், சூர்யா படங்களுக்கு சிக்கல்?

Posted:

தமிழ்த் திரையுலகில் தனது படங்களை வாங்கிய வினியோகஸ்தர்கள் நஷ்டமடைந்தால் அவர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை கொடுக்கும் வழக்கத்தை ரஜினிகாந்த் ஆரம்பித்து வைத்தார். ஒரு நல்ல எண்ணத்தில் அவர் ஆரம்பித்து வைத்த அந்த விஷயம் அதன் பின் அவருக்கே எதிராகவும் அமைந்தது.

அந்த நஷ்ட ஈட்டுத் தொகை பெறும் விவகாரத்தை அதன் பின் மற்ற சில ...

'பிருந்தாவனம்' படத்தில் காது கேளாதவராக அருள்நிதி

Posted:

திருமணத்துக்குப் பிறகு அருள்நிதி நடித்த படம் - 'ஆறாது சினம்'. அறிவழகன் இயக்கிய இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதனால் அப்ஸெட்டான அருள்நிதி, நடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு தனக்கு பிரேக் கொடுக்கும் அளவுக்கு பொருத்தமான கதைகளை தேர்வு செய்யும் திட்டத்தில் கதைகளை கேட்க ஆரம்பித்தார்.
அழகிய தீயே, மொழி, ...

உதயநிதி ஸ்டாலின் படம், உறுதி செய்த பிரபுசாலமன்

Posted:

மைனா, கும்கி படங்களில் வெற்றி பெற்ற பிரபுசாலமன், அடுத்து இயக்கிய கயல், தொடரி படங்களில் தோல்வியை சந்தித்தார். குறிப்பாக அவர் கடைசியாக இயக்கிய தொடரி படம் வெற்றியைப் பெறாத நிலையில், அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன் வரவில்லை என்று சொல்லப்பட்டது. ஆனாலும் தயாரிப்பாளர் கிடைக்காவிட்டால் தானே தயாரிக்கும் ...

மூன்று நாளில் ரூ.18.70 கோடி வசூலித்த நாம் ஷபானா

Posted:

பேபி, தோனி படங்களை இயக்கிய நீரஜ் பாண்டேயின் கதையில் ஷிவம் நாயர் இயக்கத்தில், வெள்ளாவி பொண்ணு டாப்சி ஆக்ஷ்ன் நாயகியாக, கதையின் நாயகியாக அவதாரம் எடுத்து வெளியாகியுள்ள படம் ‛நாம் ஷபானா'. இப்படத்திற்கு விமர்சர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் படத்தின் வசூலும் சிறப்பாக இருக்கிறது. ‛நாம் ...

இர்பான்-கிர்த்தி இணையும் காமெடி படம்

Posted:

டில்லி பெல்லி, போர்ஸ்-2 படங்களை இயக்கியவர் அபினய் தியோ. தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதற்கு ‛ரைய்தா' என்று பெயர் வைத்துள்ளார். இதில் இர்பான் கான் மற்றும் கிர்த்தி குல்கர்னி முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். டில்லி பெல்லி படம் போன்று இந்த ரைய்தாவும் பக்கா காமெடி படமாக உருவாக உள்ளது. தற்போது ...

கவிஞராக நடிக்கும் ராஜ்குமார் ராவ்

Posted:

ராகினி எம்எம்எஸ், கேங்ஸ் ஆப் வசிப்பூர், டி-டே, குயின் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஜ்குமார், அஸ்வினி ஐயர் தவாரி இயக்கும் ‛பார்லி கி பார்பி' என்ற படத்திலும் நடிக்கிறார். இதில் ஆயுஸ்மான் குராணா மற்றும் கிர்த்தி சனோன் முன்னணி ரோலில் நடிக்க, ...

ஏப்., 10-ல் ‛ஹாப் கேர்ள்பிரண்ட்' டிரைலர்

Posted:

மொகித் சூரி இயக்கத்தில் அர்ஜூன் கபூர், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛ஹாப் கேர்ள்பிரண்ட்'. காதல் படமாக உருவாகி வரும் இப்படம் சேட்டன் பகத்தின் நாவலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகிற ஏப்., 10-ம் தேதி ஹாப் கேர்ள்பிரண்ட் படத்தின் டிரைலரை வெளியிட ...

என்னை தேர்வு செய்ததற்கான நம்பிக்கை வீண் போகாது - விஷால்

Posted:

நடந்து முடிந்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷால் அணி அமோக வெற்றி பெற்றது. தலைவராக விஷால் தேர்வு செய்யப்பட்டார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகை தந்தனர். விஷால் உள்ளிட்ட அனைவருக்கும் மேள - தாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் புதிய ...

திருப்தியான வசூலில் 'கவண், டோரா'

Posted:

மார்ச் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 31ம் தேதி "கவண், டோரா, அரசகுலம், அட்டு, நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல, செவிலி" ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் போட்டி என்பதே 'கவண்' படத்திற்கும், 'டோரா' படத்திற்கும்தான். கடந்த மூன்று நாட்களாக திருப்தியான வசூலைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் ...

தெலுங்கிலும் வெற்றி பெற்ற 'இறுதிச் சுற்று'

Posted:

சுதா கோங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் மற்றும் பலர் நடிக்க கடந்த ஆண்டு துவக்கத்தில் வெளிவந்த படம் 'இறுதிச் சுற்று'. ஒரு இடைவெளிக்குப் பிறகு மாதவன் நடித்த படம், நிஜ குத்துச் சண்டை வீரரான ரித்திகா சிங் நடித்த படம் என்ற சிறப்புகளுடன் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் வெற்றிப் படமாக ...

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடந்த அரசியல்

Posted:

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. விஷால் தலைமையிலான அணியினர் பெரும்பான்மையான பதவிகளைக் கைப்பற்றி எதிரணியினருக்கு அதிர்ச்சி அளித்தனர். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை முன்னிட்டு தேர்தலில் போட்டியிட விஷால் தலைமையிலான அணியினர் சில மாதங்களுக்கு முன்பே தங்களது பணியை ஆரம்பித்தனர். ...

கோல்மால் அகைன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

Posted:

ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ‛கோல்மால்' படங்களின் வரிசையில் நான்காம் பாகமாக தற்போது கோல்மால் அகைன் படம் உருவாகி வருகிறது. அஜய் தேவ்கன், தபு, பரிணீதி சோப்ரா, அர்ஷத் வர்சி, குணால் கேமு, துசார் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சிலவாரங்களுக்கு மும்பையில் ஆரம்பமானது. தற்போது முதற்கட்ட படப்பிடிப்பை ...

துல்கர் - ஸ்ருதிஹாசன் கூட்டணி சேர்ந்த காரணம் இதுதான்..!

Posted:

துல்கர் சல்மானுக்கு மலையாள திரையுலகம் தாண்டி ஓரளவு நல்ல அறிமுகம் இருக்கிறது. இதனால் அவரைத்தேடி பல நிறுவனத்தின் விளம்பரங்களும் வருகின்றன. துல்கரும் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்கிற பாணியில் விளம்பரப்படங்களுக்கும் நேரம் ஒதுக்கி நடித்து வருகிறார். அந்தவகையில் ஜியோனி என்கிற சீனாவின் மிகப்பெரிய மொபைல்போன் தயாரிப்பு ...

மகனுக்காக ரிலீஸ் தேதியை மாற்ற சம்மதித்த மம்முட்டி..!

Posted:

கடந்த மார்ச்-30ஆம் தேதி மம்முட்டி நடித்த 'தி கிரேட் பாதர்' படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படத்திற்கு கிடைத்துள்ள ஒப்பனிங் வரவேற்பை பார்த்தால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு குறையாமல் கூட்டம் இருக்கும் என்றே சொல்கிறது விநியோகஸ்தர் தரப்பு. ஆனால் இந்தநிலையில் திடீரென மம்முட்டியின் இன்னொரு படமான 'புத்தன் பணம்' ...

டைரக்சனில் இறங்கிய வினயா பிரசாத்

Posted:

பாண்டியராஜனுக்கு ஜோடியாக 1995ல் 'தாய்க்குலமே தாய்க்குலமே' படத்தில் அறிமுகமானவர் தான் கன்னட நடிகை வினயா பிரசாத். ஆனால் இவரை அனைவருக்கும் நன்றாக தெரிய வைத்தது 2004ல் வெளியான சந்திரமுகி படம் தான். நாசரின் மனைவியாக அதில் நடித்திருந்தார். ஆச்சர்யமாக 1993ல் வெளியான அதன் ஒரிஜினலான 'மணிச்சித்திரத்தாழு' படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ...

இயக்குனரை காதல் திருமணம் செய்த துல்கரின் முதல் கதாநாயகி..!

Posted:

துல்கர் சல்மான் மலையாளத்தில் அறிமுகமான முதல் படம் 'செகன்ட் ஷோ'. இந்தப்படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் இயக்கியிருந்தார். இந்தப்படத்தில் துல்கர் ஜோடியாக கௌதமி நாயர் நடித்திருந்தார். துல்கரின் மாமன் மகளான இவர் சந்தர்ப்ப சூழலால் ரவுடியாக மாறிய துல்கரின் காதலை உதறிவிட்டு செல்லும் கேரக்டரில் நடித்திருந்தார். துல்கரை போலவே ...

மோகன்லால் ரசிகர்களை தூண்டிவிடும் மேஜர் ரவி..!

Posted:

இரண்டு தினங்களுக்கு முன் வெளியான மம்முட்டியின் 'தி கிரேட் பாதர்' படம் முதல் நாள் வசூலாக 4 கோடியே 31 லட்சம் வசூலித்து இதுநாள் வரை சாதனை பட்டியல்களில் முதல் இரு இடங்களில் இருந்த கபாலி (4.20), புலி முருகன் (4.05) படங்களின் சாதனையை இந்தப்படம் முறியடித்துள்ளது.. கிட்டத்தட்ட 202 தியேட்டர்களில் வெளியான 'தி கிரேட் பாதர்' படம் சிறப்பு காட்சி, ...

9வது ஆண்டில் 'அயன்'

Posted:

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஹாரிஜ் ஜெயராஜ் இசையமைப்பில் சூர்யா, தமன்னா, பிரபு, ஜெகன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'அயன்' படம் இன்று 9வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி 'அயன்' படம் வெளியானது.
சூர்யா நடித்து வெளிவந்த கமர்ஷியல் படங்களில் 'அயன்' படத்திற்கு தனி இடம் உண்டு. 'காதல் தேசம், நேருக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™