Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


சீனாவுடன் உறவை மேலும் வலுப்படுத்த விரும்பும் கனடா

Posted: 02 Apr 2017 08:19 AM PDT

சீனாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான தனது ஆர்வத்தை கனடா சீனாவிடம் தெரிவித்துள்ளது. சீனாவுக்கான புதிய கனேடிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஜோன் மக்கலம் சீனாவிற்கு பயணித்துள்ள நிலையில், கனடாவின் இந்த விருப்பத்தை சீனாவிடம் தெரியப்படுத்தியுள்ளார். கடனாவில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று லிபரல் அரசாங்கத்தின் குடிவரவுத் துறை அமைச்சராக இருந்த ஜோன் மக்கலம் அண்மையில் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டு, கனேடிய அரசாங்கத்தினால் சீனாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த நியமனத்தினை அடுத்து கடந்த இரண்டு […]

The post சீனாவுடன் உறவை மேலும் வலுப்படுத்த விரும்பும் கனடா appeared first on TamilStar.com.

லிபரலுக்கு சவாலாக அமையும் ஒன்ராறியோ 2018 தேர்தல்

Posted: 02 Apr 2017 08:15 AM PDT

2018ஆம் ஆண்டு ஒன்ராறியோ மாநிலத்திற்கு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் கத்தலின் வின் தலைமையிலான லிபரல் கட்சி வெறும் 7 ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. "The Forum Research" அமைப்பு அண்மையில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் இருந்ததே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பில் பங்குபற்றியவர்களில் 43 சதவீதம் பேர் எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தலில் பழமைவாதக் கட்சிக்கும் அதன் தலைவர் பற்றிக் பிரவுனுக்கும் வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறே ஆன்ரியா ஹோர்வத் தலைமையிலான […]

The post லிபரலுக்கு சவாலாக அமையும் ஒன்ராறியோ 2018 தேர்தல் appeared first on TamilStar.com.

வட மாகாண அனைத்து பாடசாலைகளுக்கும் முக்கிய வேண்டுகோள்!

Posted: 02 Apr 2017 08:13 AM PDT

வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர் வரவினை பதிவுச் செய்வதற்குநேரக் கணிப்பு இயந்திரம் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம்,இரண்டாம் தவணையில் இருந்து கட்டாயமாக அமுல்படுத்தப்பட வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், முன்னதாக கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை மற்றும்இளைஞர் விவகார அமைச்சு அறிக்கை ஒன்றை பின்வருமாறு வெளியிட்டிருந்தது. வட மாகாணத்தில் உள்ள தேசிய மற்றும், மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் கல்விசார்மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் வரவை பதிவு செய்யும்இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். இரண்டாம் தவனையில் […]

The post வட மாகாண அனைத்து பாடசாலைகளுக்கும் முக்கிய வேண்டுகோள்! appeared first on TamilStar.com.

மின்னஞ்சலை உருவாக்கிய தமிழர் அமெரிக்க பாராளுமன்றத் தேர்தலில்!

Posted: 02 Apr 2017 07:40 AM PDT

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் சிவா ஐயாத்துரை போட்டியிடவுள்ளார். மேலவை மற்றும் கீழவை என இரண்டு அவைகள் கொண்ட அமெரிக்கப் பாராளுமன்றின் மேலவையில் சில வெற்றிடங்கள் உள்ளன. அதை நிரப்பும் வகையில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மின்னஞ்சலை உருவாக்கிய தமிழரான சிவா ஐயாத்துரை ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார். சைட்டோசோல்வ் எனும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றும் சிவா ஐயாத்துரை, நீண்ட காலமாக அமெரிக்காவிலேயே வாழ்ந்து […]

The post மின்னஞ்சலை உருவாக்கிய தமிழர் அமெரிக்க பாராளுமன்றத் தேர்தலில்! appeared first on TamilStar.com.

சமஷ்டியை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை! – ஜனாதிபதி

Posted: 02 Apr 2017 07:38 AM PDT

நாட்டை பிளவுப்படுத்தவோ அல்லது சமஷ்டி முறையை ஏற்படுத்தவோ தான் இடமளிக்கப் போவதில்லை என மாகாண முதலமைச்சர்களுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டை பிளவுப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுவதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வரைவு கூட இதுவரை தயாரிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அதேவேளை சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றக் கூடிய வகையிலான அரசியலமைப்புத் திருத்த யோசனை […]

The post சமஷ்டியை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை! – ஜனாதிபதி appeared first on TamilStar.com.

ஜனநாயகம் அதளபாதாளத்தை நோக்கி செல்கிறது!- பசில் ராஜபக்ச

Posted: 02 Apr 2017 07:35 AM PDT

நாட்டில் வாழும் சகல இனங்களின் உரிமைகளை பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்தை அதளபாதாளத்திற்கு தள்ளும் வகையில் செயற்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வென்னப்புவ தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்துவது ஜனநாயகத்தின் சிறப்பம்சம். எனினும் தற்போதைய அரசாங்கம் தேர்தலை நாளுக்கு நாள் ஒத்திவைத்து வருகிறது. இப்படி ஜனநாயகத்தை பாதுகாக்க […]

The post ஜனநாயகம் அதளபாதாளத்தை நோக்கி செல்கிறது!- பசில் ராஜபக்ச appeared first on TamilStar.com.

இலங்கையிலும் பொருளாதார நெருக்கடி

Posted: 02 Apr 2017 07:31 AM PDT

உலகப் பொருளாதார நெருக்கடியில் இலங்கையும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறை திஹாகொடை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். அதேவேளை பண்டிகை காலத்தில் அரிசி விலையை கட்டுப்படுத்த அரசியை இறக்குமதி செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

The post இலங்கையிலும் பொருளாதார நெருக்கடி appeared first on TamilStar.com.

சீனாவின் நட்புக் குறித்து இந்தியா பிரச்சினை எழுப்பவில்லை! – ரணில்

Posted: 02 Apr 2017 07:29 AM PDT

சீனாவுடனான இலங்கையின் நட்பினால் இந்தியாவுடனான தொடர்பிற்கு எந்தவித அழுத்தங்களும் இல்லை என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து இந்தியா மற்றும் சீன அரசாங்கங்கள் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும், சில இந்திய ஊடகங்களில் மட்டுமே இது குறித்த பிரச்சினை எழுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுடனான செவ்வியின் போதே, ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இதேவேளை, சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தமை குறித்து கருத்து வெளியிட்ட ரணில் […]

The post சீனாவின் நட்புக் குறித்து இந்தியா பிரச்சினை எழுப்பவில்லை! – ரணில் appeared first on TamilStar.com.

தேர்தலை நடத்தி கூட்டு எதிர்க்கட்சி பாடம் கற்பிக்கப்படும்: கிரியெல்ல

Posted: 02 Apr 2017 07:26 AM PDT

தேர்தல்களை இந்த வருடம் நடத்தி கூட்டு எதிர்க்கட்சியினருக்கு சிறந்த பாடத்தை கற்பிக்க போவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டி, நாவலப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். இந்த வருடம் பல தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி ஊழல், மோசடிகளில் சம்பந்தப்படாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். தமக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக கூறி வரும் ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியினருக்கு தேர்தலில் […]

The post தேர்தலை நடத்தி கூட்டு எதிர்க்கட்சி பாடம் கற்பிக்கப்படும்: கிரியெல்ல appeared first on TamilStar.com.

எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு உயர்கல்வி அமைச்சர் பதவி!

Posted: 02 Apr 2017 07:19 AM PDT

அமைச்சரவை மாற்றத்தின் போது எஸ்.பி திஸாநாயக்க உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அண்மையில் ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்த வேளையில் இதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் திஸாநாயக்க உயர்கல்வி அமைச்சராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு உயர்கல்வி அமைச்சர் பதவி! appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™