Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரொரன்ரோவில் பயன்பாட்டில் இல்லாத வீடுகளுக்கு வரி

Posted: 31 Mar 2017 08:57 AM PDT

ரொரன்ரோவில் பயன்பாட்டில் இல்லாத வீடுகளின் உரிமையாளர்களுக்கு எதிர்காலத்தில் வரி விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு வரி விதிப்பது தொடர்பான நடைமுறையினை செயலாக்குவது குறித்து ரொரன்ரோ நகர நிர்வாகம் ஆலோசனை நடாத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி, ரொரன்ரோ நகரில் சுமார் 65,000 வீடுகளில் யாரும் வசிக்காது பயன்பாட்டில் இல்லாது காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு வீட்டினை பயன்படுத்தாது வைத்திருப்போருக்கு வரி விதிப்பது தொடர்பிலேயே தமது நகர நிர்வாகம் ஆலோசித்து […]

The post ரொரன்ரோவில் பயன்பாட்டில் இல்லாத வீடுகளுக்கு வரி appeared first on TamilStar.com.

தலையில் சுடப்பட்டு 54 வயது ஆண் கொலை – ஈட்டோபிக்கோவில் சம்பவம்

Posted: 31 Mar 2017 08:55 AM PDT

ஈட்டோபிக்கோவில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 54 வயது ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஈட்டோபிக்கோவில் வீடு ஒன்றின் வெளியே வைத்து 54 வயது ஆண் ஒருவர் சு்ட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றும், இன்று அதிகாலை 2.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஸ்கார்லெட் வீதி மற்றும் லோறன்ஸ் அவனியூ பகுதியில், La Rush Driveவில் அமைந்துள்ள வீடு ஒன்றின் வெளியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், அங்கு அந்த நபர் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் […]

The post தலையில் சுடப்பட்டு 54 வயது ஆண் கொலை – ஈட்டோபிக்கோவில் சம்பவம் appeared first on TamilStar.com.

முன்னேற வேண்டுமாயின் எண்ண ரீதியான மாற்றம் தேவை : ஜனாதிபதி

Posted: 31 Mar 2017 08:51 AM PDT

விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அவற்றுக்கு பின்னால், செல்லாமல் நாடு மற்றும் மக்களின் எதிர்காலத்திற்காக பொது இலக்கு மற்றும் நோக்கத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடு என்ற வகையில் முன்னேற வேண்டுமாயின் அனைவருக்குள்ளும் எண்ண ரீதியான மாற்றங்கள் தேவை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற அரசாங்கத்தின் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். உலகில் உள்ள சகல நாடுகளும் சுய அபிமானத்துடனும் இலக்கு நோக்கிய நகர்வுகளுடனேயே […]

The post முன்னேற வேண்டுமாயின் எண்ண ரீதியான மாற்றம் தேவை : ஜனாதிபதி appeared first on TamilStar.com.

மைத்திரி ஆட்சியில் தொடரும் மனித உரிமைமீறல்கள் – ஐ.நாவிடம் அறிக்கை!

Posted: 31 Mar 2017 08:49 AM PDT

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கடத்தல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் சாட்சியங்களுடன் கூடிய ஆவணமொன்று ஐ.நா மனித உரிமை பேரவையின் சர்வதேச காலாகால மீளாய்வுச் செயற்பாட்டிற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்பொன்றினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா ஜொஹானஸ்பேர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஸ்ரீலங்காவில் உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் (ஐ.ரி.ஜே.பி) என்ற அமைப்பே 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் வரை அதாவது மைத்திரி ரணில் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 48 கடத்தல் மற்றும் சித்திரவதை சம்பவங்களை உள்ளடக்கிய இந்த ஆவணத்தை […]

The post மைத்திரி ஆட்சியில் தொடரும் மனித உரிமைமீறல்கள் – ஐ.நாவிடம் அறிக்கை! appeared first on TamilStar.com.

வீரவங்சவின் நடிப்பு தோல்வியில் முடிந்தது!

Posted: 31 Mar 2017 08:46 AM PDT

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கட்டாயம் உண்ணாவிரதத்தை கைவிடுவார் என தான் அறிந்திருந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். உண்ணாவிரதம் இருப்பதால் நீதிமன்றம் பிணை வழங்காது. வீரவங்ச இதற்கு முன்னர் தும்முல்லை சந்தியில் ஐ.நா அலுவலகத்திற்கு அருகில் இவ்வாறான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். அப்போது போல் தற்போதும் வீரவங்சவின் நடிப்பு தோல்வியில் முடிவடைந்தது எனவும் கே.டி.லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

The post வீரவங்சவின் நடிப்பு தோல்வியில் முடிந்தது! appeared first on TamilStar.com.

13 வயது சிறுமியின் துயர் போக்க மைத்திரியிடம் சென்ற மகிந்த

Posted: 31 Mar 2017 08:42 AM PDT

விமலை விடவும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது அவருடைய மகளே, அதனை கருத்திற் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். விமலை பார்வையிட தேசிய வைத்தியசாலைக்கு நேற்று சென்றிருந்த மகிந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார். மேலும், விமலின் போராட்டம் வெற்றியையே பெற்றுள்ளது. அவர் அரசின் முறையற்ற செயல்களை மக்களுக்கு தெரியப்படுத்தவே விரும்பினார். அந்த வகையில் அது வெற்றியடைந்துள்ளது. இப்போது பிரச்சினை விமலை விடவும் அவருடைய மகளுக்கே. தந்தை தொடர்பில் அவர் மனவேதனை […]

The post 13 வயது சிறுமியின் துயர் போக்க மைத்திரியிடம் சென்ற மகிந்த appeared first on TamilStar.com.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார் நாமல் ராஜபக்ச

Posted: 31 Mar 2017 08:39 AM PDT

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பாரிய ஊழல்,மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடந்த ஊழல், மோசடி தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக நாமல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப சூழலில் உள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு நாமல் ராஜபக்ச இன்று முற்பகல் 11 மணிளவில் சென்றுள்ளார்.

The post ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார் நாமல் ராஜபக்ச appeared first on TamilStar.com.

மோடியின் கொழும்பு வருகைக்கு முன் இந்தியா செல்கிறார் ரணில்!

Posted: 31 Mar 2017 08:36 AM PDT

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்கள் இம்முறை இலங்கையில் பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது. பல நாடுகளின் தலைவர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்வில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார். இந்தியப் பிரதமரின் கொழும்பு பயணத்துக்கு முன்னதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

The post மோடியின் கொழும்பு வருகைக்கு முன் இந்தியா செல்கிறார் ரணில்! appeared first on TamilStar.com.

புலிகளை அழிக்க ராஜபக்சர்களுக்கு உதவிய முக்கியஸ்தரின் புதுப் போராட்டம் தொடரும்

Posted: 31 Mar 2017 08:34 AM PDT

விமல் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து கொண்டாலும் அடுத்த போராட்டத்திற்கு தயாராகவே இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், விமல் தனது அரசியல் பாதையில் ஒன்றிணைந்த தேசத்திற்காகவும், தேசிய உரிமைகளை நிலை நாட்டவும் அரும்பாடு பட்டவர். அதே போன்று பிரிவினை வாதிகளான விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு மகிந்த ராஜபக்சவிற்கும், பாதுகாப்பு செயலாளர் […]

The post புலிகளை அழிக்க ராஜபக்சர்களுக்கு உதவிய முக்கியஸ்தரின் புதுப் போராட்டம் தொடரும் appeared first on TamilStar.com.

ஜெனிவா தீர்மானத்தை கூட்டமைப்பு ஆதரித்தது ஏன்? – வடக்கில் விளக்கக் கூட்டங்களை நடத்துகிறார் சுமந்திரன்

Posted: 31 Mar 2017 08:30 AM PDT

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளித்தது தொடர்பில், மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டங்களை கூட்டமைப்பு நடத்தி வருகிறது. நேற்று முல்லைத்தீவில் இரண்டு இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்தக் கூட்டங்களை நடத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களின் ஒழுங்கு படுத்தலில் இடம்பெற்ற இந்த கூட்டங்களில், கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ.சுமந்திரன் கலந்து கொண்டிருந்தார். மேற்படி கூட்டங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டு பகுதியிலும் […]

The post ஜெனிவா தீர்மானத்தை கூட்டமைப்பு ஆதரித்தது ஏன்? – வடக்கில் விளக்கக் கூட்டங்களை நடத்துகிறார் சுமந்திரன் appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™