Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சேகர் ரெட்டி 'போட்டு' கொடுத்ததால் அமைச்சர் விஜயபாஸ்கர்... மாட்டிக்கிட்டார்!

Posted: 07 Apr 2017 09:50 AM PDT

சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி கொடுத்த தகவல் காரணமாகவே, அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரித்துறை வலையில் வசமாக மாட்டியுள்ளார். குட்கா அதிபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட, பல கோடி மாமூல் பட்டியலில், அமைச்சர் பெயர் இருந்ததும், வருமான வரித் துறை அதிரடிக்கு ஆதாரமாகி உள்ளது. அமைச்சருக்கு வைத்த குறியில், அவரது துறையைச் சேர்ந்த மருத்துவ பல்கலை பெண் துணை வேந்தரும் தப்பவில்லை.
அதேநேரத்தில், தினகரனுக்கு ஆதரவாக அணி மாற, பணம் கைமாறியதால், ச.ம.க., தலைவர் சரத்குமார் வீட்டிலும், 'ரெய்டு' நடத்தப்பட்டு உள்ளது. இவர்கள் பதுக்கிய ...

பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்க... பரிசீலனை ! ஏற்ற, இறக்கத்தை சமூக வலைதளத்தில் அறிய வாய்ப்பு

Posted: 07 Apr 2017 09:59 AM PDT

புதுடில்லி:பெட்ரோல், டீசல் விலையை, தினமும் மாற்றுவது குறித்து, எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. இதனால், அரசியல் காரணிகளால், இவற்றின் விலையில் பாதிப்பு இருக்காது. விலை ஏற்ற, இறக்கத்தை, சமூக வலைதளங்களில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல், விலைளை, இரண்டு வாரத்துக்கு ஒரு முறை, எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால், பெட்ரோல், டீசல், விலையை குறைத்தும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியும், எண்ணெய் ...

கெய்க்வாட் 'பறக்கலாம்' ஏர் இந்தியா அனுமதி

Posted: 07 Apr 2017 10:10 AM PDT

மும்பை :விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா, எம்.பி., ரவீந்திர கெய்க்வாட், மன்னிப்பு கேட்டதை அடுத்து, அவர் விமானத்தில் செல்ல விதிக்கப்பட்ட தடையை, ஏர் இந்தியா நிறுவனம் திரும்ப பெற்றது.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, சிவசேனா, எம்.பி.,யான ரவீந்திர கெய்க்வாட், சமீபத்தில், ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார்; இருக்கையை மாற்றிக் கொடுத்தது தொடர்பாக, விமான நிறுவன ஊழியரை, ரவீந்திர கெய்க்வாட் செருப்பால் அடித்தார். இதையடுத்து, ரவீந்திர கெய்க்வாட் உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, அவர், விமானத்தில் செல்ல,ஏழு முறை ...

புதிய ரூ.200 நோட்டுகளை வங்கிகளில் வழங்க முடிவு

Posted: 07 Apr 2017 10:14 AM PDT

புதுடில்லி: ஏ.டி.எம்.,களில் பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, புதிய, 200 ரூபாய் நோட்டுகளை, வங்கி கிளைகள் மூலம் நேரடியாக வழங்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடி, கடந்த ஆண்டு, நவ., 8ல், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தார்.
இதையடுத்து, புதிதாக 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஆனால்,இந்த புதிய நோட்டுகளுக்கு ஏற்ப, ஏ.டி.எம்.,கள், மாற்றியமைக்க வேண்டி இருந்தது. இதனால், பல நாட்கள், ஏ.டி.எம்.,கள்முழுமையாக முடங்கின.
நிலைமை இப்போது சீராகி, ஏ.டி.எம்.,களில், 2,000 - 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன. எனினும், சில பகுதிகளில், ...

விஜயபாஸ்கரை நீக்குங்கள்: ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted: 07 Apr 2017 10:28 AM PDT

சென்னை, :'வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான, அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.

ஸ்டாலின் அறிக்கை:ஊழல் செய்து, கணக்கில் காட்டாத வருமானத்தை வைத்துள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை வரவேற்கத்தக்கது. அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், காமராஜ் மற்றும் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர், வருமான வரி அதிகாரிகளுடன் பிரச்னை செய்தது, கடும் கண்டனத்திற்குரியது.வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான, அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக, ...

கமிஷனரிடம் புகார்; அமைச்சர் கைதாவாரா?

Posted: 07 Apr 2017 10:35 AM PDT

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது, சென்னை போலீஸ் கமிஷனரிடம், வருமான வரித்துறையினர் புகார் அளித்துள்ளதால், அவர் கைதாக வாய்ப்புள்ளதாக, போலீசார் கூறினர்.சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள விஜயபாஸ்கர் இல்லத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, வீட்டு வசதித்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர், காவலை மீறி உள்ளே புகுந்து, வாக்குவாதம் செய்தனர். அவர்களுடன் சேர்ந்து, விஜயபாஸ்கரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பாதுகாப்பு கேட்டு புகார்
மேலும், சில ஆவணங்களையும், ...

சசி - பன்னீர் அணிகளுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

Posted: 07 Apr 2017 10:50 AM PDT

அ.தி.மு.க.,வின் இரு அணிகளுக்கும், தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலில் சசிகலா அணிக்கு, அ.தி.மு.க., அம்மா கட்சி என்ற பெயரும், தொப்பி சின்னமும்; பன்னீர் அணிக்கு, அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா கட்சி என்ற பெயரும், 'மின் கம்பம்' சின்னமும் ஒதுக்கப்பட்டன.
விளக்கம் கேட்டு, நோட்டீஸ்
'பன்னீர் அணியினர், மின் கம்பம் சின்னத்தை,இரட்டை மின் விளக்கு மின் கம்பம் என, பிரசாரம் செய்கின்றனர். அது, இரட்டை இலை சின்னத்தைநினைவுபடுத்துவது போல உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்' என, சசிகலா ...

கர்நாடகா கோரிக்கை நிராகரிப்பு; இனியாவது காவிரி நீர் கிடைக்குமா?

Posted: 07 Apr 2017 10:59 AM PDT

கர்நாடகாவின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்து உள்ளதால், இனியாவது காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தின் தேவைக்காக, ஆண்டுதோறும் வழங்க வேண்டிய, 193 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா முறையாக வழங்குவது கிடையாது. 2016 ஜூன் முதல் வழங்க வேண்டிய நீரில், 150 டி.எம்.சி.,க்கு மேல் கர்நாடகா நிலுவை வைத்துள்ளது.
இதனால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை மற்றும் சம்பா பருவ சாகுபடிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. உச்ச ...

தமிழகத்தில் காற்றாலை சீசன் துவங்கியது ஒரே நாளில், 2.20 கோடி யூனிட் உற்பத்தி

Posted: 07 Apr 2017 11:07 AM PDT

கோவை,: நடப்பாண்டு, காற்றாலை சீசன் துவங்கியுள்ளது. 6ம் தேதி, ஒரே நாளில், 2.20 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்லடம், உடுமலை, தேனி, திருநெல்வேலி, கயத்தாறு, கன்னியாகுமரி, துாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 11 ஆயிரத்து, 800 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.ஆண்டுதோறும் மே முதல், செப்., வரை தென்மேற்கு பருவ காற்று சீசன் இருப்பது வழக்கம். கடந்தாண்டு சீசனில், தமிழகத்தின் மொத்த மின் நுகர்வில், காற்றாலைகளின் பங்களிப்பு, 30 சதவீதம் வரை உயர்ந்தது.வரலாற்றில் முதல் முறையாக, 2016ல் காற்றாலை சீசன், இரு மாதங்களுக்கு முன், மார்ச் ...

லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் திருப்பதியில் லட்டு தட்டுப்பாடு?

Posted: 07 Apr 2017 12:03 PM PDT

திருமலை: லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் திருப்பதி கோயிலில் லட்டு பிரசாதம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் வருகை
திருப்பதி கோயிலில் லட்டு பிரசாதம் பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பக்தர்களுக்காக தேவஸ்தானம் தினமும் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் லட்டுகள் வரை தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு ஒரு நாளைக்கு லட்டு பிரசாதம் தயாரிக்க 10 டன் நெய், 400 மூட்டை கடலைமாவு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கற்கண்டு, சர்க்கரை போன்றவை தேவைப்படுகிறது. பள்ளி விடுமுறை மற்றும் கோடைக்காலம் துவங்கிய நிலையில் ...

ஏமாற்றியவர்கள் தப்ப முடியாது! அருண் ஜெட்லி எச்சரிக்கை

Posted: 07 Apr 2017 01:30 PM PDT

புதுடில்லி, ''வங்கிக் கணக்கில் அதிக அளவில், 'டிபாசிட்' செய்து மோசடி செய்தவர்கள் தப்பிக்க முடியாது. கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும்,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.லோக்சபாவில், இது தொடர்பான விவாதத்தின்போது, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, வங்கிகளில் அதிக அளவில் டிபாசிட் செய்யப்பட்டது குறித்து ஆராயப்பட்டது. அதன்படி, வருவாய்க்கு அதிகமாக, 18 லட்சம் வங்கிக் கணக்குகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கணக்கு வைத்துள்ளவர்களுக்கு விளக்கம் கேட்டு, ...

தினகரன் அணிக்கு எதிராக கருத்து கணிப்பு; புதிய தலைமுறை 'டிவி' ஒளிபரப்பு நிறுத்தம்

Posted: 07 Apr 2017 03:05 PM PDT

புதிய தலைமுறை, 'டிவி' நடத்திய கருத்து கணிப்பு, தினகரன் அணிக்கு எதிராக அமைந்ததை தொடர்ந்து, அதன் ஒளிபரப்பு, 15 மாவட்டங்களில், அரசு கேபிளில் இருந்து நீக்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி, 'ஆர்.கே.நகர் மக்களின் நாடித் துடிப்பு' என்ற தலைப்பில், புதிய தலைமுறை, 'டிவி' சார்பில், வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. கருத்து கணிப்பு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட, சிகிச்சை குறித்து, நீதி விசாரணை வேண்டும் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™