Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'பணம் கொடுத்தோரை தப்ப விடும் போலீசார்'

Posted: 05 Apr 2017 09:23 AM PDT

''பணம் கொடுத்தவர்களை பிடித்துக் கொடுத்தால், போலீசாரே தப்பிக்க விடுகின்றனர்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து, ராயபுரத்தில் நேற்று, 'குறைகள் நீங்கிட, வசதிகள் மேம்பட' என்ற தலைப்பில், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுடன், ஸ்டாலின் கலந்துரையாடினார்.
ஆளுங்கட்சி
அவர் பேசியதாவது: ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க் கள், வடசென்னை எம்.பி., என, அனைத்து பதவிகளிலும் ஆளுங்கட்சியினரே உள்ளனர்.
விசாரணை : ...

லாலு மகன்களின் மணல் ஊழல்... அம்பலம்? பீஹார் அரசியலில் திடீர் பரபரப்பு

Posted: 05 Apr 2017 09:36 AM PDT

பாட்னா: பீஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன்களும், அந்த மாநில அமைச்சர்களுமான, தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர், 90 லட்சம் ரூபாய் மதிப்பில், மணல் ஊழலில் ஈடுபட்ட தாக, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் அமைச்ச ரவையில் இருந்து நீக்கும்படி, எதிர்க்கட்சியான, பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன், ...

ஓட்டு இயந்திர விவகாரத்தால் அமளி : ராஜ்யசபா நடவடிக்கைகள் பாதிப்பு

Posted: 05 Apr 2017 09:38 AM PDT

புதுடில்லி: ஆளும், பா.ஜ.,வுக்கு சாதகமாக, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாக, ராஜ்யசபாவில் நேற்று, காங்., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கடுமையாக குற்றஞ்சாட்டி, அமளியில் ஈடுபட்டதால், சபை நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டன.

ராஜ்யசபாவில் நேற்று, ஆளும், பா.ஜ.,வுக்கு சாதகமாக, சட்டசபைத் தேர்தல்களில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டின.
பா.ஜ., பதிலடி :
காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், '' அடுத்து வரும் இடைத் தேர்தலிலும், ...

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

Posted: 05 Apr 2017 09:41 AM PDT

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நீக்கியதை எதிர்த்து, கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான, சொத்து குவிப்பு வழக்கில், இந்த ஆண்டு, பிப்., 14ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. ஜெயலலிதா கால மானதால், வழக்கில் இருந்து அவரை நீக்கி விட்டு, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோ ருக்கு, தலா, நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா, 10 கோடி ரூபாய் அபரா தத்தை, சுப்ரீம் கோர்ட் உறுதி ...

உள்ளாட்சி தேர்தலில் ஆர்வமில்லாத அரசால் பணிகள் தொய்வு

Posted: 05 Apr 2017 10:22 AM PDT

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் மாநில அரசு ஆர்வமில்லாததால் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்தாண்டு அக்டோபரில் இரு கட்டங்களாக நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதை எதிர்த்து தி.மு.க., தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பிற்கு தடை விதித்தது. ஏப்., 3ம் தேதி இந்த வழக்கில், மே 14க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால் அவமதிப்பு வழக்கை மாநில தேர்தல் ஆணையம் எதிர்கொள்ள நேரிடும் என உயர்நீதிமன்றம் ...

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்...ரத்தாகுமா?: தலைமை தேர்தல் அதிகாரியிடம் கட்சிகள் சரமாரி புகார்

Posted: 05 Apr 2017 10:27 AM PDT

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தினகரன் அணியினர், நேற்று முன் தினம் இரவு துவங்கி, விடிய விடிய பணத்தை வாரி இறைத்தனர். இது குறித்து, தலைமை தேர்தல் அதிகாரியிடம், அரசியல் கட்சிகள் சரமாரி புகார் தெரிவித்துள்ளதால், இடைத்தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதா மறைவால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், ஏப்., 12ல் நடக்க உள்ளது. தி.மு.க.,வில் மருதுகணேஷ்; அ.தி.மு.க., வின் பன்னீர் அணியில், மதுசூதனன்; சசிகலா அணியில், தினகரன் உட்பட, 62 பேர் போட்டி யிடுகின்றனர். அ.தி.மு.க., இரு அணிகளாக களம் காணும் நிலையில், தினகரனுக்கு, தொகுதியில் பலத்த எதிர்ப்பு ...

10ம் தேதி ஆஜராக வேண்டும் தினகரனுக்கு கிடுக்கிப்பிடி

Posted: 05 Apr 2017 10:31 AM PDT

சென்னை:'அன்னிய செலாவணி மோசடி வழக்கில், ஏப்., 10ல், தினகரன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்' என, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியரான சுசீலா என்பவர் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், சென்னையை சேர்ந்த பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனம், இந்தியன் வங்கியில் இருந்து, மூன்று கோடி ரூபாய் கடன் பெற்றது.இதில், 2.20 கோடி ரூபாயை எடுத்து, கோடநாடு. எஸ்டேட் வாங்க, சசிகலா பயன்படுத்தியதாகவும், இதில், அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்ட தாகவும், அமலாக்கத் துறை வழக்கு தொடுத்தது இதுபோல, மேலும் சில வழக்குகளை சசிகலா மற்றும் தினகரன் மீது ...

கல்வி கட்டண கமிட்டியிடம் பெற்றோர் எதிர்பார்ப்பு என்ன?

Posted: 05 Apr 2017 10:34 AM PDT

சுயநிதி பள்ளிகளுக்கான கல்வி கட்டண கமிட்டிக்கு புதிய தலைவராக, நீதிபதி மாசிலா மணி பொறுப்பேற்றுள்ள நிலையில், கட்டண விகிதம் முறையாக நிர்ணயிக்கப்படுமா என, பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

சுயநிதி பள்ளிகளுக்கான கல்வி கட்டண கமிட்டி தலைவராக இருந்த, நீதிபதி சிங்கார வேலுவின் பதவிக்காலம், 2015, டிசம்பரில் முடிந்தது. அதன்பின், சிறப்பு அதிகாரி மனோகரனின் பதவிக் காலமும் முடிந்து, கல்வி கட்டண கமிட்டி மூடப்பட்டது.இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளி யானதும், கட்டண கமிட்டியை நிர்வகிக்க, இணை இயக்குனர் ஸ்ரீதேவியும், அவருக்கு பின், இணை ...

ஐ.பி.எல்., கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வி

Posted: 05 Apr 2017 11:31 AM PDT

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பத்தாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் இன்று(ஏப்.,5) துவங்கியது. ஐதராபாத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின, காயத்தால் அவதிப்படும் கோஹ்லிக்கு பதில், பெங்களூரு கேப்டனாக களமிறங்கிய வாட்சன், 'டாஸ்' வென்று 'பவுலிங்' தேர்வு செய்தார்.
யுவராஜ் விளாசல்:
ஐதராபாத் அணிக்கு வார்னர் (14) ஏமாற்றினார். ஷிகர் தவான் 40 ரன்கள் எடுத்தார். ஹென்ரிக்ஸ், யுவராஜ் சிங் ஜோடி அதிரடியாக ...

சசிகலா சந்திப்பில் விதிமீறல்; சிறை துறை குட்டு அம்பலம்

Posted: 05 Apr 2017 11:33 AM PDT

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை, பார்வையாளர்கள் விதிகளை மீறி சந்திக்க, சிறைத் துறை அனுமதித்துள்ள தகவல், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலமாகி உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பிப்., 15ல், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.'அன்று முதல், சசிகலாவை, யார் யார், எப்போது, எந்த நேரத்தில் சந்தித்து பேசினர்' என, பெங்களூரைச் சேர்ந்த, சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, தகவலறியும் உரிமை
சட்டத்தின் கீழ், சிறைத் துறையினரிடம் கேள்வி ...

ரூ.2,000 நோட்டு செல்லாதா?

Posted: 05 Apr 2017 12:43 PM PDT

புதுடில்லி: ரூ 2,000 நோட்டும் செல்லாமல் போகுமா என்ற கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார்.
இது குறித்து ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், ''புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 2,000 ரூபாய் நோட்டை, செல்லாததாக அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை. இது தொடர்பாக, சிலர் வீணான புரளியை பரப்பி வருகின்றனர். இந்த, 2,000 ரூபாய் நோட்டில் புழக்கத்தில் விடப்படும் கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க, பல்வேறு அமைப்புகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன,'' என கூறினார். ...

காஷ்மீரில் கல்வீசி தாக்குதல் நடத்தும் இளைஞர்கள் தியாகிகள்:பரூக் பேச்சு

Posted: 05 Apr 2017 01:30 PM PDT

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கல்வீச்சி தாக்குதல் நடத்தும் இளைஞர்கள் காஷ்மீர் பிரச்னைக்காக தங்களை தியாகம் செய்து கொண்டவர்கள் என அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.காஷ்மீரில் வன்முறை போன்ற தொடர் சம்பவங்களின் போது போலீசார் மற்றும் பாதுகாப்புபடையினர் மீது போராட்டக்காரர்கள், இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது.இந்நிலையில் கடந்த 2-ம் தேதி காஷ்மீரில், ஷெனாய் , நஷ்ரீ பகுதியில் மிக பெரிய சுரங்கப்பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி பேசுகையில் காஷ்மீரில் சுற்றுலா மேம்பட ...

தலாய்லாமா விவகாரம்: இந்திய தூதருக்கு சீனா சம்மன்

Posted: 05 Apr 2017 02:07 PM PDT

இடாநகர்: திபெத் புத்தம தலைவர் தலாய் லாமா அருணாச்சலம் வந்ததையடுத்து ஆத்திரம் அடைந்த சீனா , இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட திபெத்தை சேர்ந்த, 14-வது புத்த மதத் தலைவர், தலாய் லாமா. இவர் திபெத் சுதந்திரம் பெற சீனாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுவதாகவும் குற்றம்சாட்டிய சீன கம்யூனிஸ்ட் அரசு 1958-ம் ஆண்டு அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது. தற்போது அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.இந்நிலையில் இந்தியாவில் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்க மாவட்டத்தில் உள்ள போம்டிலா நகருக்கு ...

வாக்காளர்களுக்கு தினம் ஒரு பரிசு - 'தொப்பி' அணியினர் முறைகேடு

Posted: 05 Apr 2017 03:18 PM PDT

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, தினகரன் அணியினர், தினம் தினம், விதவிதமான பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில், எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற துடிப்புடன், தினகரன் அணியினர், பணத்தை தண்ணீராக செலவழித்து வருகின்றனர். தேர்தல் கமிஷன் மட்டுமின்றி, பன்னீர் அணியினர் மற்றும் தி.மு.க.,வினரும், பணம் கொடுப்பதை தடுத்து வருகின்றனர்.
இதை தவிர்க்க, பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்க, நுாதன முறைகளை, தினகரன் அணியினர் கையாளத் துவங்கி உள்ளனர். நேற்று முன்தினம், 38வது வார்டில் வீடுதோறும் சென்று, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™