Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஒரு மகன் சிங்கப்பூர் போகிறான்!

Posted: 05 Apr 2017 12:04 PM PDT

சைக்கிளை உருட்டியபடி, அந்த பெரிய வீட்டை கடந்து செல்லும் போது,''ரவி...'' என்று, ஒரு அதிகார குரல்! நிமிர்ந்தால், வீட்டு வாசலில், அருணின் அப்பா நின்றிருந்தார். ''என்ன மாமா?'' ''உள்ள வா... உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.'' சைக்கிளை ஓரங்கட்டி, உள்ளே நுழைந்தேன். நாற்காலியில் உட்கார சொன்னவர், ''உன் சினேகிதன், என்ன காரியம் செய்துகிட்டிருக்கான் தெரியுமா...'' என்றார். ''ஏன் மாமா என்னாச்சு... அவன பாத்து, ரெண்டு நாளாச்சே...'' என்றேன். ''கடைசியா பாத்தப்ப, என்ன பேசினான்?'' ''பாஸ்போர்ட் ஆபிசுக்கு, அவசரமா ...

கோடை நோய்களை தவிர்க்க சில டிப்ஸ் !

Posted: 05 Apr 2017 11:22 AM PDT

கோடை நோய்களை தவிர்க்க சில டிப்ஸ் ! * வெயிலில் அலைவதால் தலையில் ஏற்படும் எண்ணெய் பிசுக்கை போக்க, கசகசாவை ஊற வைத்து, அரைத்து குளிக்கலாம். வடித்த அரிசி கஞ்சியை, வாரத்திற்கு ஒரிரு முறை தேய்த்து குளிப்பதும், பிசுபிசுப்பை நீக்கும். இரவு, விளக்கெண்ணையை உள்ளங்காலில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்க, நல்ல தூக்கம் வரும். * கோடையின் முக்கிய பிரச்னை, 'டீ ஹைட்ரேட்' என, சொல்லப்படும், உடம்பின் நீர் வற்றுதல் தான். உடலில், நீர் சத்து குறையும் போது, சோர்வு ஏற்பட்டு, பல பிரச்னைகளை கொண்டு வரும். இதற்கு, ...

படித்ததில் பிடித்தது - II :) -- தாய்நாட்டை காக்கும் வீரர்களுக்காக...

Posted: 05 Apr 2017 11:20 AM PDT

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! @krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா? சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது. அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான ...

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook

Posted: 05 Apr 2017 11:18 AM PDT

ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக...

The Secret Tamil Ebook
தரவிறக்கம் செய்ய

இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Posted: 05 Apr 2017 11:16 AM PDT


புதிதாக 200 ரூபாய் நோட்டுகள்

-

சில்லறை பிரச்சினையை போக்கும் விதமாக
புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய
ரிசர்வ் வங்கி தயாராகி வருகிறது.

அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள
நோட்டுக்கு அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அச்சடிக்கும் பணிகள்ஜு
ன் மாதம் தொடங்கும் என தெரிகின்றன.
-
---------------------------------

பழநியில் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

Posted: 05 Apr 2017 11:12 AM PDT

பழநி முருகன் கோயிலில் இன்று பங்குனி உத்திர விழாவுக்கான கொடியேற்றம் தொடங்கியது. தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடாகத் திகழ்வது திருஆவினன்குடி. பழனி மலைக்கோயிலின் நுழைவாயிலாக உள்ள இந்த கோயில்தான் மூன்றாம் படை வீடு. முருகனுக்கான அனைத்து விழாக்களும் இங்குதான் தொடங்கும். ஆண்டுதோறும் நடைபெறும் தைப் பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் புகழ்பெற்றவை. இந்த ஆண்டுக்கான தைப்பூசம் நிறைவடைந்த நிலையில், பங்குனி உத்திரத்துக்கான கொடியேற்று விழா இன்று ...

தகவல் சுரங்கம் - தொடர் பதிவு

Posted: 05 Apr 2017 11:11 AM PDT

இளநீர் சீசன் - இளநீரில் 99.5 சதவீதம் நீர் உள்ளதால் வெயில் காலத்தில், தாகத்தை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில், கோடை காலத்தில் கிடைக்கும் இளநீரில் பெரும்பாலும் பொட்டாசியம் உப்பே அதிகமாக இருக்கும். இதனால் இந்திய இளநீர் உவர்ப்புத் தன்மையுடனேயே உள்ளது. உலகளவில், இலங்கையில் இளநீரின் பயன்பாடு அதிகமாக உள்ளது.. இந்தியாவில் லட்சத்தீவு மற்றும் அந்தமான் நிகோபாரில் அதிக எண்ணிக்கையில் இளநீர் கிடைக்கின்றன. பிரேசில், வங்கதேசத்தில் கிடைக்கும் இளநீரே அதிக இனிப்புச் ...

ஓர் இனிய கார்காலம்…

Posted: 05 Apr 2017 11:11 AM PDT

- உன் வார்த்தைகளற்ற முன்பனிக்காலம் வாதையில் நகர்கிறது – உன் புன்னகையற்ற பின்பனிக்காலம் சோம்பலில் விடிகிறது – நீ அருகிலில்லா சிறுபொழுதும் கூட பெரும்பொழுதாய் நீள்கிறது – வைகறையும் யாமமும் கடந்து விழிகள் மலர்ந்தே கிடக்கிறது – கூட்டிவாயேன் ஓர் இனிய கார்காலத்தை குளிர் புன்னகையால் இதழ் சேர்ப்போம்! – ——————— இ.எஸ்.லலிதாமதி குமுதம் படம்: இணையம்

ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.

Posted: 05 Apr 2017 11:05 AM PDT

- 1. சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி புஷ்பங்களை ச மர்ப்பிக்கலாம். 2. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம். 3. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும். 4. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது. 5. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும். 6. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 ...

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்!

Posted: 05 Apr 2017 10:48 AM PDT

மனிதர்களிடம்தான் கோளாறுகள் இருக்கின்றன. மார்க்கங்களில் இல்லை' என்பார்கள். இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பறைசாற்றும்விதமாக ஒவ்வொரு காலத்திலும் அநேக நிகழ்வுகள், நம் மண்ணில் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இங்கு திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய அற்புதத்தைப் பார்ப்போம். - - வங்கக் கடலின் அலைகள் எழுப்பும் ஆரவார ஒலிகள் என்றும் ஒலிக்கும் திருச்செந்தூர் முருகப்பெருமான், தென் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, உலகமெல்லாம் வாழும் ஒட்டுமொத்த தமிழர்கள் ஒருமுறையேனும் சென்று வழிபட்டு ...

கும்பகோணம் டிகிரி காபி!

Posted: 05 Apr 2017 10:44 AM PDT

கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்! சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம். நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, ...

இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்

Posted: 05 Apr 2017 07:49 AM PDT

புதுடில்லி : உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வதற்கு இனி ஆதார் எண் அவசியமாக்கப்பட உள்ளது. வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் பயன்படுத்தப்பட உள்ளது. விமான பயணத்திற்கு ஆதார் தேவை : இதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையை கொண்டு வருவதற்கான புளூ பிரின்டை தயாரித்து தருமாறு பிரபல ஐடி நிறுவனமான விப்ரோவிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. இந்த அறிக்கையை மே முதல் வாரத்தில் விப்ரோ நிறுவனம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ...

ஐ.பி.எல். கிரிக்கெட் - தொடர் பதிவு

Posted: 05 Apr 2017 07:26 AM PDT

சென்னை: இந்தியன் பிரிமீயர் 'லீக்' என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. கோடிக்கணக்கில் பணம் புரண்டதால் இந்தப்போட்டி வர்த்தக ரீதியாக நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்களுக்கு நல்ல பொழுது போக்காகவும் அமைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ...

வாழை இலையில் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

Posted: 05 Apr 2017 07:25 AM PDT

நமது முன்னோர்கள் வாழை இலையில் சாப்பிடுவதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் நாகரீகம் வளர வளர வாழை இலையை நாம் சுத்தமாக மறந்துவிட்டோம், வாழை இலையில் சாப்பிடுவதால் உணவின் ருசி அதிகரிப்பது மட்டுமின்றி உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் என்பதை இனியாவது புரிந்து கொள்வோமா? வாழை இலையில் உணவை வைத்து சாப்பிடுவதால் தோலுக்குப் பளபளப்பைக் கொடுத்து, செரிமானக் குறைபாடு, பலகீனம், உடல்வலி, நாள்பட்ட சளி, ருசியின்மை ஆகிய குறைபாடுகள் நீங்கும் என நமது முன்னோர்களின் சித்த மருத்துவம் சொல்கிறது. கெட்டுப் போன அல்லது ...

இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Posted: 05 Apr 2017 07:24 AM PDT

மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு  உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம் புன்னகை

கருஞ்சிகப்பு நிறமாக மாறிய திருச்செந்தூர் கடல்..

Posted: 05 Apr 2017 07:19 AM PDT

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடல் பகுதி திடீரென கருஞ்சிகப்பு நிறத்தில் மாறி காட்சி அளித்தது. கடல் திடீரென நிறம் மாறியதால் மக்கள் அச்சமடைந்தனர். ரசாயன கழிவு கலந்தததே இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. வழக்கமாக கடலின் கரை பகுதி நீலநிறமாகவும், ஆழ்கடல் பகுதி பச்சை நிறமாகவும் காடசி தரும். ஆனால் நேற்று மாலை 3 மணி அளவில் திருச்செந்தூர் கடலில் கருஞ்சிவப்பு நிறத்தில் எண்ணெய் படலம் போன்று பரவி காணப்பட்டது. வள்ளி குகை அருகில் இருந்து கடலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ...

குளத்து நீர்

Posted: 05 Apr 2017 07:11 AM PDT

- குளத்தின் நீர்பரப்பு ஆம்பல் இலைகளினால் போர்த்தப்பட்டிருக்கிறது – நிலத்தைத் தொடமுயன்ற தோற்றுத் திரும்பும் சூரியனின் ஒளிக்கற்றைகளில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது இலைகள் – அங்கொன்றும் இங்கொன்றுமென காற்றில் புரளும் ஆம்பலின் இலைகளில் செம்மை படர்ந்திருந்தன – நெடுந்தூரம் கடந்து வந்த களைப்பிலும் தாகத்திலும் பாசி படர்ந்திருந்த நீர்ப்பரப்பில் தாகத் தனித்துக்கொண்ட – நீர்ப்பறைவைகளின் பாதம் பட்டு கலைந்த பாசி மீண்டும் மூடிக்கொண்டது – குளத்தின் ஆழம் ஒருபோதும் தீர்ந்துவிடாத தாகத்தைத் ...

உன்னுடன் வரும் எனது பொழுது

Posted: 05 Apr 2017 07:11 AM PDT

- நம்மை மழை நனைத்த பொழுது இன்னும் நீர்த்திவலைகளாக மனதில் படிந்திருக்கிறது . புத்தக அடுக்குகளிலிருந்து தலை நீட்டித் தெரியும் நான்காய் மடிந்த காகிதம் முழுமையாய் சொல்கிறது உனது துயரங்களை . விம்மியடங்கும் ஓசைகள் மெலிதாய் எழுகின்றன . கடிதம் புத்தகத்தினுள் வைக்கப்பட்டவுடன் மழை தொடங்கிவிட்டது . இங்கு வேறு யாருமில்லை புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட எனது விரல்களில் மழைத்துளி பட்டுத் தெறிக்கிறது மழை நனைத்துக் கொண்டிருக்கிறது மரங்களை செடிகளை பூக்களை பறவைகளை கூடவே உன்னையும் உன்னுடன் ...

பெண் கிடைக்காததால் ரோபோவை மணந்த இன்ஜினியர்

Posted: 05 Apr 2017 07:10 AM PDT

- பீஜிங் : சீனாவில் பெண் கிடைக்காததால், இன்ஜினியர் ஒருவர் ரோபோவை திருமணம் செய்து கொண்டுள்ளார். ரோபோவுடன் திருமணம் : சீனாவில் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் பெரும்பாலான தம்பதியர் ஆண் குழந்தைகளை மட்டுமே தேர்வு செய்து பெற்றுக் கொண்டனர். இதனால் சீனாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. இதன் விளைவாக சீனாவில் பெண்கள் கிடைக்காமல் ஏராளமான ஆண்கள் அதிக வயதான பிறகும் திருமணம் செய்து கொள்ளமல் உள்ளனர். இந்நிலையில் செங் ...

கோபுர தரிசனம் கோடி நன்மை.

Posted: 05 Apr 2017 07:09 AM PDT

1. சங்கல்பம் மிக முக்கியம். 2. கோபுர தரிசனம் கோடி நன்மை. 3. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர். 4. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும். 5. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும். 6. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது. 7. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு ...

நைஜீரியாவில் 336 குழந்தைகள் பரிதாப மரணம்!

Posted: 05 Apr 2017 07:08 AM PDT

- நைஜீரியா நாட்டின் மத்திய மற்றும் வடமேற்குப் பகுதிகளில் உள்ள மாநிலங்களில், கடந்த டிசம்பர் மாதம் முதல் மூளைக்காய்ச்சல் தொற்றுநோய் வேகமாகப் பரவிவருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 336 குழந்தைகள் பலியாகி இருக்கிறார்கள். இவர்களில் 5 முதல் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் அதிகம். மேலும், 3000-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். - நைஜீரியா அரசும் சர்வதேச சுகாதார அமைப்புகளும் இணைந்து, மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் ...

அது ஒரு விபத்து!

Posted: 05 Apr 2017 02:25 AM PDT

இரவு, மணி, 10:00; டிசம்பர் மாத குளிர். அதனுடன் இணைந்த ரம்மியமான மழை. ஆனால், என்னால் தான் ரசிக்க முடியவில்லை. ''வெறுப்பா இருக்குய்யா... இன்னைக்கு தான் கான்ஸ்டபிளா வேலைக்கு சேர்ந்திருக்கேன்; முதல் நாளே, இப்படி ஒரு பிணத்தை பாக்க வேண்டியிருக்கே...'' பெங்களூரின் பிரதான சாலையிலிருந்து பிரிந்து சென்ற ஆள் நடமாட்டமில்லாத அந்த குறுகிய சாலையில், இளஞ் சிவப்பு நிற ஸ்கூட்டியிலிருந்து விழுந்து கிடந்தாள் அப்பெண். கைகள் ஒரு புறமும், கால்கள் மறுபுறமும் சம்பந்தமில்லாமல் திரும்பி கிடந்தன. முகத்தின் இடது பாதியை, ...

பெரியவா கேட்ட ரவா தோசை !

Posted: 05 Apr 2017 02:03 AM PDT

"எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா?'- பெரியவா ! ஆசார்யா காஞ்சிபுரத்துல இருந்த காலகட்டம் அது. ஒருநாள் ராத்திரி வழக்கமான மடத்துக் காரியங்கள் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் தூங்கப் போறதுக்கு தயாராகிண்டு இருந்த நேரம் அது. கிட்டத்தட்ட பத்தரை... பதினொரு மணி இருக்கும் அந்த சமயத்துல ரொம்ப தொலைவுல இருக்கற ஒரு ஊர்ல இருந்து வயசான பெண்மணி ஒருத்தர். பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா. பரமாசார்யா அந்தப் பெண்மணிக்கு ஆசிர்வாதம் பண்ணிட்டு, மடத்துல கைங்கர்யம் செஞ்சுண்டிருந்த ஒருத்தரை கூப்பிட்டார். 'எனக்கு ...

நீங்களும் உங்க வேலையும்....

Posted: 05 Apr 2017 01:50 AM PDT

ஹாய் தருண்... என்ன இது...'' என, கண்கள் விரிய, கேட்டாள், மனிதவளத் துறை என அழைக்கப்படும் ஹெச்.ஆர்., மேனேஜர். பெரிய தொழிற்சாலைகள், அலுவலகங்களில் இத்துறை உண்டு. எப்படித் தான் இவளுக்கு சாத்தியமாகிறதோ தெரியவில்லை, முந்தைய நொடி வரை, 'ஹாய் மச்சான்...' என புன்னகை வழிய பேசிக்கொண்டிருப்பவள், அடுத்த நொடி, 'இன்னையோட நீங்க வீட்டுக்கு கிளம்பலாம்...' என்று கடிதத்தை நீட்டி விடுவாள். இவள் மட்டுமல்ல, ஹெச்.ஆர்., துறையிலிருக்கும் அனைவருக்குமே, இது கை வந்த கலை. இந்த வேலைக்கு ஆண்களை வைத்தால், இது போன்ற கல்தா ...

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Posted: 05 Apr 2017 01:15 AM PDT

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108  நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் !ரூ.90 லட்சம் ஊழல்: லாலு மகனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க பாரதிய ஜனதா கோரிக்கை

Posted: 05 Apr 2017 12:56 AM PDT

பாட்னா, மண் கொள்முதல் செய்வதில் ரூ.90 லட்சம் வரை ஊழல் நடந்துள்ளதையொட்டி அமைச்சர் பதவியில் இருந்து லாலு பிரசாத் மகன் தெஜ் பிரதாப் யாதவை நீக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கோரியுள்ளது. பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தில் ஜனதா தர்பார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலத்தின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மண்கொள்முதல் செய்வதில் ரூ.90 லட்சம் வரை ...

Whatsup தத்துவங்கள் !

Posted: 05 Apr 2017 12:53 AM PDT

படித்ததில் பிடித்தது! எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகிறோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும். தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன். உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை. குழந்தைகளிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருந்தோம் என தெரியும். வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என தெரியும். ஒருவர் உன்னைத் ...

ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் ! - பயத்தம் பருப்பு கோஸ்மல்லி !

Posted: 05 Apr 2017 12:08 AM PDT

ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள்  - பானகம் ! தேவையான பொருட்கள்: வெல்லம் (பொடி செய்தது) - 1 கப்   சுத்தமான தண்ணீர் - 4 கப் எலுமிச்சை பழ சாறு (தேவையான அளவு) 1/4 டீ ஸ்பூன் சுக்கு பொடி ஏலக்காய் பொடி 1/2 டீ ஸ்பூன் செய்முறை: பொடி செய்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி கொள்ளவும். வெல்ல தண்ணீரில்  ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடி இவற்றை சேர்த்து கலக்கவும். தேவையானால், எலுமிச்சை சாற்றினையும் சேர்க்கவும். குறிப்பு: பிரிட்ஜில் வைத்து பிறகு குளிர்ச்சியாகவும்  குடிக்கலாம்.

சுமார் உணவகம்

Posted: 05 Apr 2017 12:00 AM PDT

- தன்னை கைது செஞ்சு போலீஸார் வேன்ல ஏத்தறப்ப கூடிய கூட்டத்தை பார்த்து தலைவர் கேட்டாரே ஒரு கேள்வி! - என்னான்னு? - நான் மீடிங் பேசறப்ப எங்கேயா போயிடறீங்க, எல்லாரும்னுதான்! - பர்வின் யூனூஸ் - --------------------------------- - அந்த ஓட்டல் ஓனர் நேர்மையானவர்னு எப்படி சொல்றே? - சுமார் உணவகம்னு பேர் வெச்சிருக்காரே...! - அ.ரியாஸ் - ---------------------------------- - தலை ரொம்ப சுத்துது டாக்டர்! - கவலைப்படாதீங்க, ரெகுலேட்டர் வச்சி கண்ட்ரோல் பண்ணிடலாம்.!! - எஸ்.சடையப்பன் - ------------------------------------ -குமுதம் - தொடரும்...

மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017

Posted: 04 Apr 2017 11:23 PM PDT

மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள். முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். வள்ளி அவதரித்த தினம். பார்வதி தேவியை பரமேஸ்வரன் கரம்பிடித்த நாள் இது. மேலும் மதுரையில் மீனாட்சிதேவி- சுந்தரேசர் திருக்கல்யாண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும். தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள். ராமபிரான்- ...

காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.

Posted: 04 Apr 2017 11:15 PM PDT

- 1. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு. 2. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங்கள். 3. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதிற்குள் செய்து விடுங்கள். 4. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது. 5. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும். 6. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள். 7. ...

*பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்*

Posted: 04 Apr 2017 11:14 PM PDT

*பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்* 01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. *ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு 04. *ஆறு* - (River) – பெருகி ஓடும் நதி. 05. *இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம். 06. *உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு. 07. ...

'நாம ராமாயணம்' எம் எஸ் பாடியது !

Posted: 04 Apr 2017 11:13 PM PDT'நாம ராமாயணம்' எம் எஸ் பாடியது ! ஒரே பாடலில் ராமாயணம் முழுவதும் கேட்டு மகிழுங்கள் ! புன்னகை

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் ராமநவமி வாழ்த்துக்கள்

Posted: 04 Apr 2017 11:11 PM PDT

- மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது. தெய்வமாக இருந்தாலும், பூமியில் பிறப்பெடுத்து இறுதி வரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை எய்துகிறார். மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது. இன்று ஸ்ரீராம நவமி கொண்டாடப் படுகிறது. - சிவபெருமானிடம் ...

கோலாகலத்துடன் இன்று தொடங்குகிறது ஐபிஎல்! முதல் நாளில் சன்ரைசர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் மோதல்

Posted: 04 Apr 2017 11:06 PM PDT

- 2017-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இரவு எட்டு மணிக்கு தொடங்க உள்ள முதல் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன - டெல்லி, மொஹாலி, மும்பை, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் ஐபிஎல் தொடர் போட்டிகள் ...

பாலிதானா கோயில்கள் - ஒரே மலையில் 900 கோயில்கள்!!!

Posted: 04 Apr 2017 11:04 PM PDT

பாலிதானா கோயில்கள் - ஒரே மலையில் 900 கோயில்கள்!!! உலகிலேயே 900 கோயில்கள் உள்ள ஒரே மலையாக குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷத்ருஞ்சயா விளங்குகிறது. குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷத்ருஞ்சயா எனும் மலைகளில்தான் பாலிதானா கோயில்கள் என்று அறியப்படும் 900 ஜைனக் கோயில்கள் அமைந்துள்ளன. உலகிலேயே 900 கோயில்கள் உள்ள ஒரே மலையாக ஷத்ருஞ்சயா விளங்குகிறது. இந்தக் கோயில்கள் அனைத்தும் மார்பிள் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் 3000-த்துக்கும் அதிகமான படிக்கட்டுகளை கடந்து ...

உன் பெயர்…?

Posted: 04 Apr 2017 10:45 PM PDT

- காற்றில் படபடத்த வெற்றுத் தாளில் சில புள்ளிகள் வைத்தேன் கோடுகள் கிறுக்கினேன் ஒரு பூ வரைந்தேன் – ஒரு பறவையை சிறகசைக்கும்படி செய்தேன் கவிதைக்கான சொல் ஒன்றையும் எழுதிப் பார்த்தேன் – இன்னும் வட்டமாகவும் சதுரமாகவும் ஏதேதோ கிறுக்கிய நான் 'என்னை எழுதேன்' என்று சிணுங்கிய உன் பெயரை மட்டும் செல்லமாய் தவிர்த்தேன் – காகிதத்தில் எழுதி குப்பையில் வீசக் கூடியதா உன் பெயர்? – ————————–இ.எஸ்.லலிதாமதி குமுதம் படம்- இணையம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™