Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காலாவதியான இந்தி எதிர்ப்பு கைகொடுக்குமா திமுகவுக்கு

Posted: 03 Apr 2017 06:42 AM PDT

சென்னை: ‛‛இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறோம்; இந்தி மொழியை நாங்கள் எதிர்க்கவில்லை என்று சொல்லி, திடீர் என, இந்தி விவகாரத்தை வைத்து, மத்திய அரசை கடுமையாக எதிர்க்கத் துவங்கி இருக்கிறார் தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில், தமிழிலும் இந்தியிலும் ஊர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. அதாவது, ஆங்கிலம் தவிர்க்கப்பட்டு, இந்தி புதிதாக புகுந்துள்ளது. அதற்கு எதிராகத்தான், மு.க. ஸ்டாலின் பேசத் துவங்கி உள்ளார். இவரைத் தொடர்ந்து, தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரும், இதே விவகாரத்துக்காக மத்திய ...

ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்ய கூடாது..; தம்பிதுரை கெஞ்சல்!

Posted: 03 Apr 2017 09:57 AM PDT

சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படலாமென வதந்திகள் கிளம்பியுள்ள நிலையில், ''பணப் பட்டுவாடா குற்றச்சாட்டை நம்பி, தேர்தலை ரத்து செய்யும் முடிவை எடுத்துவிட வேண்டாம்,'' என, லோக்சபா துணை சபாநாயகரும், சசிகலா அணியைச் சேர்ந்தவருமான, தம்பிதுரை, தலைமை தேர்தல் கமிஷனரிடம் மன்றாடி கேட்டுள்ளார்.

மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, ஓட்டுகளை வாங்க, அரசியல் கட்சிகள் முயற்சிப்பது அதிகமாக நடப்பதாக, டில்லியில் ஒரு கருத்து நிலவுகிறது.தற்போது, சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தல் நெருங்கும் ...

தேர்தல் கமிஷனுக்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால். சவால்! ஓட்டு பதிவு இயந்திரத்தில் முறைகேடு சாத்தியமாம்

Posted: 03 Apr 2017 10:04 AM PDT

புதுடில்லி:''ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்றப்பட்ட மென்பொருளில் திருத்தம் செய்ய முடியாது என தேர்தல் கமிஷன் கூறுவதைஏற்க முடியாது; தேர்தல் கமிஷனுக்கு சவால் விடுக்கிறோம். எங்களிடம் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, 72 மணி நேரத்துக்கு தரட்டும்; அதிகாரிகள் முன்னிலையில், நிருபர்களின் கேமராக்கள் படம் பிடிக்கும் சூழலில், ஓட்டுப்பதிவு இயந்திரமென்பொருளை மாற்றி எழுத முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுகிறோம்,'' என, டில்லி முதல்வரும்,ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.டி

ல்லியில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ...

சிறந்த இன்ஜி., கல்லூரி: சென்னை ஐ.ஐ.டி., 'டாப்'

Posted: 03 Apr 2017 10:12 AM PDT

புதுடில்லி, :இந்திய கல்வி நிறுவனங்களுக்கான, 2017ம் ஆண்டுக்கான தரவரிசையை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான தரவரிசையில், சென்னை, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப மையம் முதலிடத்திலும், ஒட்டுமொத்த சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில், இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

சிறந்த கல்லுாரிகள் பட்டியலில், சென்னை லயோலா கல்லுாரி, நாட்டில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை, இரண்டாவது ஆண்டாக, நேற்று வெளியிட்டது. ...

ஆளுங்கட்சி ஆதரவுடன் 'அசையாத' ஆட்சியர்கள் கலெக்டர் கனவுடன் காத்திருக்கும் ஐ.ஏ.எஸ்.,கள்

Posted: 03 Apr 2017 10:30 AM PDT

கோவை,:தமிழகத்தில் ஏராளமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், கலெக்டர் வாய்ப்புக்காக ஆண்டு கணக்கில் காத்திருக்கும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவான அதிகாரிகள், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, கலெக்டராக பணியில் நீடித்து வருகின்றனர்.

கடந்த, 2011ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அனைத்து மாவட்டங்களிலும், ஆளுங்கட்சிக்கு வேண்டிய, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, கலெக்டராக நியமிக்கும் பணி துவங்கியது. அந்தந்த மாவட்டத்திலுள்ள அமைச்சர்களுக்கு வேண்டியவர்கள் அல்லது கட்சி மேலிடத்தால் நியமிக்கப்பட்டவர்கள் என, பல மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட கலெக்டர்கள், ...

'வேட்பாளரின் 'டிவி' பேட்டிதேர்தல் செலவு கணக்கில் சேரும்'

Posted: 03 Apr 2017 10:38 AM PDT

சென்னை, :''வேட்பாளர்களின் பேட்டி, 'டிவி'யில் அதிக நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டால், அது, அவரின் தேர்தல் செலவாக கருதப்படும்,'' என, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி, கார்த்திகேயன் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் அளித்த பேட்டி:ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்களின் பெயர்கள் அகர வரிசையிலும், தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் அடிப்படை யிலும் இடம் பெறும். ஓட்டுப்பதிவு, இணையதளத்தில் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால், அரசியல் கட்சிகள், எந்தவித முறைகேட்டிலும் ஈடுபட ...

அரசியலுக்கு சரிப்பட்டு வருவாரா ரஜினி? சமூக வலை தளங்களில் விவாதம்

Posted: 03 Apr 2017 10:44 AM PDT

'ரஜினி ஒருமுறை தேர்தலில் போட்டியிட்டால் தான், அவரது ரசிகர்களுக்கு உண்மை புரியும்' என, 'தினமலர்' இணையதள வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்' என, அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், 'அவர் அரசியலுக்கு வர வேண்டுமா; வேண்டாமா' என, சமூக வலை தளங்களில், பெரிய பட்டிமன்றமே நடந்து வருகிறது.இது குறித்து, 'தினமலர்' இணையதளத்தில் வாசகர்கள் கூறிய கருத்துக்கள்:
பாவம் ரசிகர்கள்
நிஜன் - சென்னை: போய் வேலைய பாருங்க; அவரு எப்போ வருவார்னு அவருக்கே தெரியாதுன்னு சொல்லியிருக்கார்.பாலாஜி - பெங்களுரூ: பாவம் ரசிகர்கள்; ...

ஜெ.,க்கு துரோகம் செய்த சசி குடும்பம் : பன்னீர்செல்வம் ஆவேசம்

Posted: 03 Apr 2017 10:50 AM PDT

சென்னை, ''சசிகலா குடும்பத்தினர், அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும், கபளீகரம் செய்து, ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துள்ளனர்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த, 1,500 நிர்வாகிகள், நேற்று பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சினிமா பாடலாசிரியர் சினேகனும், நேற்று, பன்னீர் அணிக்கு ஆதரவு தெரிவித்தார்.அப்போது, பன்னீர்செல்வம் பேசியதாவது: எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், கட்சியை மக்கள் ...

மே 14 க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால் அவமதிப்பு வழக்கு பாயும் என ஐகோர்ட் எச்சரிக்கை

Posted: 03 Apr 2017 10:55 AM PDT

சென்னை:உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை எனில், அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

ஒதுக்கீடு முறையாக இல்லை'உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், 2016 அக்டோபரில், இரண்டு கட்டமாக நடக்கும்' என, மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது. இதையடுத்து, 'உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக்கான ஒதுக்கீடு முறையாக இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆலந்துார் பாரதி, மனு தாக்கல் ...

ஒரு லட்சம் ஓட்டு: தினகரன் அணி புது 'ரூட்டு'

Posted: 03 Apr 2017 10:59 AM PDT

தொகுதி முழுவதும், பணத்தை வாரி இறைக்காமல், ஒரு லட்சம் வாக்காளர்களை மட்டும் தேர்வு செய்து, ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வீதம், 50 கோடி ரூபாய் செலவு செய்து, வெற்றியை வசப்படுத்த, தினகரன் அணியினர் முடிவு செய்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றால் தான், கட்சியையும், ஆட்சியையும், தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற, இக்கட்டான சூழலில், சசிகலா அக்கா மகன் தினகரன், இடைத்தேர்தலில் களமிறங்கி உள்ளார்.பொது மக்களிடம் எதிர்ப்பு பலமாக உள்ளதால், வெற்றி பெறுவது கடினம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. சர்வே அனைத்திலும், தி.மு.க.,வுக்கும், பன்னீர் அணிக்கும் இடையே ...

'நீதிபதியானதால் அரசியலுக்கு முழுக்கு': கேரள கவர்னர் சதாசிவம்

Posted: 03 Apr 2017 12:13 PM PDT

கோட்டயம் : ''நீதிபதியாக பதவியேற்றதால், அரசியலை ஓரங்கட்டி விட்டேன்,'' என, கேரள கவர்னர் பி.சதாசிவம் கூறினார்.

அரசியலுக்கு முழுக்கு:
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில், சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள கவர்னருமான, பி.சதாசிவம் பேசியதாவது: மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது, பலவற்றை இழக்க நேரிடுகிறது. மாணவ பருவத்தில், எனக்கும் அரசியலில் ஆர்வம் இருந்தது. நீதிபதியாக பதவியேற்ற பின், ...

ஜூன் வரை வெயில் வாட்டும்; இயல்பை விட அதிகரிக்கும்

Posted: 03 Apr 2017 01:11 PM PDT

சென்னை: 'கோடை வெயில் காரணமாக, அடுத்த இரு மாதங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குளிர் காலத்தின் பின் பருவம் முடிந்து, மார்ச், 1 முதல் கோடை வெயில் துவங்கியது. இதில், டெல்டா மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களில் துவக்கம் முதலே வெப்பம் அதிகமாக உள்ளது. தென் மாவட்டங்களில் சில பகுதிகளில், 40 டிகிரி செல்சியஸ்; சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில், 35 டிகிரி செல்சியஸ் வரை, வெப்பம் பதிவானது. ஆனால், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்துள்ளது.
அடுத்து வரும் மாதங்களில், ஜூன் வரை, ...

20,876 வாகனங்கள் மார்ச் 31ல் பதிவு

Posted: 03 Apr 2017 02:35 PM PDT

வாகனப் புகை மாசு குறைக்கும் நடவடிக்கையாக, 'பி.எஸ்., - 3' வாகனங்களை விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கான கெடு முடியும் நாளான, மார்ச், 31ல், தமிழகத்தில், வாகனப் பதிவு, மூன்று மடங்கு அதிகரித்தது.
நாடு முழுவதும், ஏப்ரல், 1 முதல், புகையை குறைவாக வெளியிடும், 'பி.எஸ்., - 4' தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தான் வாகனங்களைத் தயாரிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், 'பி.எஸ்., - 3' வாகனங்களை விற்பதற்கு கடைசி நாளில், பல மடங்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனால், வழக்கத்தைவிட, வாகன விற்பனை பல மடங்கு அதிகரித்தது. அன்று, வட்டார ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™