Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 03 Apr 2017 04:05 PM PDT

சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்த 57 வயது பெண்!

Posted: 03 Apr 2017 03:54 PM PDT

- - சாதனை படைக்க வயது ஒரு தடை இல்லை என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன் (Peggy Whitson) நிரூபித்திருக்கிறார். கடந்த வாரம் இரு உலக சாதனைகளைப் படைத்திருக்கும் அவருக்குத் தற்போது 57 வயது ஆகிறது. - எட்டாவது முறையாக விண்வெளி நடை என சொல்லப்படும் ஸ்பேஸ் வாக் (Spacewalk) செய்ததன் மூலம், அதிக முறை விண்வெளியில் நடந்த வீராங்கனை என்ற சாதனையை அவர் கடந்த வாரம் படைத்திருக்கிறார். விண்வெளிப் பயணம் 50-51 எனப் பெயரிடப்பட்டுள்ள மிஷன் மூலமாக, விண்வெளியில் ...

பூமியிலிருந்து நிலாவுக்கு லிஃப்ட்... சென்னை மாணவனின் ஐடியாவைப் பாராட்டிய நாசா!

Posted: 03 Apr 2017 03:48 PM PDT

- ஷாப்பிங் மால்களிலும், பெரிய அடுக்குமாடி கட்டடங்களிலும் ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்துக்குச் செல்ல லிஃப்ட் பயன்படுத்தியிருப்போம். ஆனால் இந்த மாணவன் கொஞ்சம் வித்தியாசமாக பூமியில் இருந்து நிலவுக்கு லிஃப்ட் வைக்க ஐடியா கொடுத்துள்ளார். "இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு பாஸ்" என நீங்கள் கேட்கலாம். ஆனா இது ஒரு நல்ல ஐடியான்னு நாசா பாராட்டி இரண்டாம் பரிசு கொடுத்திருக்கு, நாசா ஏம்ஸ் ஆராய்ச்சி நிலையம், சான் ஜோன்ஸ் ஸ்டேட் பல்கலைக்கழகம் மற்றும் நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டியோடு இணைந்து ...

ரஷ்யா மெட்ரோ ரயில் நிலையங்களில் பயங்கர குண்டு வெடிப்பு : 10 பேர் பலி

Posted: 03 Apr 2017 03:41 PM PDT

ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில்
நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பில்
10 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி
ள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளனராம்.

இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் குண்டு வெடிப்பு
நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் மூன்று
மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
-
---------------------------------
விகடன்

'இந்தியாவை அழிக்க நினைப்பவர்களுக்கு வங்கதேசத்தில் இடமில்லை': ஷேக் ஹசீனா

Posted: 03 Apr 2017 03:39 PM PDT

- - மூன்று நாள் வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராணுவ தலைமை அதிகாரி பிபின் ராவத், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். அப்போது இரு நாட்டு உறவுகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். வங்கதேச விடுதலை போரின் சமயத்தில் இந்தியா செய்த உதவிக்கு தங்கள் நாட்டின் சார்பாக நன்றி தெரிவித்தார் ஹசீனா. மேலும், இந்தியாவின் நட்பை வங்கதேச மக்கள் மதிப்பதாகவும், இந்தியாவை குறி வைக்கும் எந்த தீயசக்திக்கும் வங்கதேசம் இடம் தராது என உறுதியளித்துள்ளார். அணுசக்தி துறையில் இரு நாடுகளும் ...

ஒலிம்பிக் நாயகி சாக்‌ஷி மாலிக் மண வாழ்க்கையில் இணைந்தார்!

Posted: 03 Apr 2017 03:35 PM PDT

கடந்த 2016-ம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், குத்துச்சண்டைப் போட்டியின் 58 கிலோ பெண்களுக்கான பிரிவில் போட்டியிட்டு , இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கத்தை வென்று கொடுத்தவர் சாக்‌ஷி மாலிக். கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீரர், சத்தியவர்த். சாக்ஷி இந்தியாவுக்காக குத்துச்சண்டை களத்தில் பதக்கங்களை குவித்த இவர்கள் இருவருக்கும் கடந்த ...

வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க

Posted: 03 Apr 2017 09:47 AM PDT

இணையத்தின் மூலமும்  யூடியூப் மூலமும் பதிவிறக்கம் செய்யப்படும் வீடியோக்களில் லோகோ இணைத்திருப்பார்கள். சில வீடியோக்களில் தேதி மற்றும் பெயர்கள் இருக்கும்.அவ்வாறான லோகோவினை நீக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 7 எம்.பி கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  லோகோ நீக்க விரும்பும் வீடியொவினை தேர்வு செய்யவும்.  இதில் லோகோ இருக்கம் பகுதியை கர்சர் மூலம் தேர்வு செய்யவும். ...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - செய்திகள் - தொடர்பதிவு

Posted: 03 Apr 2017 07:32 AM PDT

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. அமைதியான முறையில் அங்கு தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 62 பேர் போட்டியிடுகிறார்கள். இதனால் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மேலும், தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடா செய்யப்ப டுவதாகவும் புகார் எழுந்தது. - துணை ராணுவ படையினர் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா மற்றும் ...

ரணம்

Posted: 03 Apr 2017 07:18 AM PDT

என்னவோ இப்பொழுதெல்லாம் படபடப்பதில்லை. இடையிடையே காந்துவதால் பக்குவப்பட்டுவிட்டதாக எண்ணமுடியவில்லை. எல்லோரையும்போல் பேசுகிறேன் சிரிக்கிறேன் உள்ளார்ந்த புழுக்கம் மனதில் கனமாய். மனதின் கனம் தாங்கமுடியாததாலோ என்னவோ இளைத்தவிட்டது உடல். சமீப காலமாக எல்லோரும் சொல்கிறார்கள் எப்படி இப்படி இளைத்திருக்கிறீர்கள் மெலியும் காரணத்தையும் சொல்லவேண்டுமாம். சிலபேருக்கு நொடிப்பு வேறு. மெலிவதா அழகு ஆரோக்கியம்தானே அழகு. யார் இவர்களுக்குப் புரிய வைப்பது. சிலபோது என்விழி ...

சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு -

Posted: 03 Apr 2017 05:50 AM PDT

கோடை
-
உறவகளின் திருவிழா
கோடை முழுவதும்
கொண்டாட்டம்...
கணக்கு, வழக்கு
பார்க்கும் வரை...
-
-----------------------
-

அமெரிக்காவில் கேரளா: எப்படி தெரியுமா??

Posted: 03 Apr 2017 05:48 AM PDT

- அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு, கேரளா என பெயரிட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சார்லஸ், பிரன்னா என்ற அமெரிக்க தம்பதி கடந்த 2006 ஆம் ஆண்டு கேரளா வந்தனர். அவர்கள் அங்கேயே சில ஆண்டுகள் வேலை பார்த்து மீண்டும் அமெரிக்கா சென்றனர். இதன்பின், அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு, கேரளா எனப் பெயரிட்டுள்ளனர். இந்த தம்பதிகள், தங்களது பெண் குழந்தையின் பெயர் கேரளா என வைத்திருப்பதால், மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளனர். தங்களுக்கு, ...

உரிய பாதையில் உரிமையைத் தேடு...

Posted: 03 Apr 2017 05:46 AM PDT

தேம்பித் தேம்பி நித்தம் ஏங்கும் பெண்ணே - நீ தேய்பிறையோ வளர்பிறையோ சொல்லு கண்ணே! ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நசுக்கும் உலகில் - நீ எடுத்துக் கொண்ட உரிமைகளை எண்ணிப்பாரு கண்ணே! - கழனி செல்ல உரிமையாம் கல்வி கற்க உரிமையாம் தொழில் செய்ய உரிமையாம் தொட்டதெல்லாம் பொன்னாகும் காசுக்கான உரிமையெல்லாம் கணக்காவே நடக்குது கல்யாண பேச்சில் மட்டும் நீயா சொன்னாக் கொதிக்குது. - பிள்ளைப்பெறும் இயந்திரமாய் பேறுகால வதையுடன் சீர் செனத்தி வரிசையாய் திரும்பத் திரும்ப முட்டுது. கிணத்துமீனை குளத்துமீனாய் மாற்றிப் ...

மத்தளத்தின் மறுபக்கம்

Posted: 03 Apr 2017 05:45 AM PDT

- கள்ளிப்பால் கதை கேளா காலமதில் அய்ந்தாறு பெண்மலர்களானாலும் ஆளுக்காள் ஆதரவாய் அருமையாய் கதம்பமென வளர்ந்ததொரு வசந்தம் - காடுமேடு ரசித்துலாவி காணாத தேசம் வந்து பார்த்து, பார்த்து கட்டிவச்ச பளிங்கு மாளிகை ஒண்ணு - ஒத்த பிள்ளை பெற்று விட்டால் ஓகோனு வாழ்ந்திட நினைச்சி பெற்றதுதான் பெற்றதிங்கே பெண்ணாக பிறந்திருந்தால் அம்மானு அரவணைத்து, ஆறுதலாய், கூட அழும் - புத்திரன் இல்லையென்றால் மேலோக நரகமென்று யாரோ சொன்னத நம்பி பெற்று விட்ட புத்திரனோ... - நிலவைக்காட்டி காட்டி சோறூட்டி வளர்த்ததினால் நிலவையே ...

கட்செவி/ முகநூல் படங்கள்

Posted: 03 Apr 2017 05:43 AM PDT

கட்செவி/ முகநூல்  படங்கள் 

முழுக்க முழுக்க ஆங்கில சொற்களுடன்  கட்செவி /முகநூலில்  வந்துள்ள சில படங்கள்,
ஈகரையில் மறுபதிவு செய்யப்படுகிறது. ஓரிரு சொற்கள் எனில் அவசியம் கருதியும்,
அதில் உள்ள நகைச்சுவை கருதியும் விட்டுவிடலாம் . முழுவதும் ஆங்கிலத்திலேயே 
இருக்கிறது எனில், ஈகரையில் பதிவிடுவது சரியில்லை என நினைக்கிறேன்.

பதிவர்கள் இதை மனதில் நினைவுகொள்ளவேண்டுகிறேன்.

ரமணியன்

உலகின் இரண்டாவது அழகி பிரியங்கா சோப்ரா

Posted: 03 Apr 2017 05:43 AM PDT

'அமெரிக்காவில் இருக்கும் பஸ்நெட் நடத்திய வாக்கெடுப்பில் உலகின் இரண்டாவது அழகியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட் துறையில் நுழைந்திருக்கும் பிரியங்கா சோப்ரா மிக குறுகிய காலத்தில் ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவின் பஸ்நெட் இணையதளம் உலகின் மிக அழகான பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாப் பாடகியும் நடிகையுமான பியான்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை இந்திய ...

எம். எஸ்.ஆபீஸ்

Posted: 03 Apr 2017 05:41 AM PDT

அன்பின் நண்பர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். எனக்கு எப்போது உதவி தேவைப்படடாலும் நான் முதலில் தெரிவுசெய்வது எனது ஈகரை நண்பர்களைத்தான் என்பதை மிக மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன். இன்றும் எனக்கு ஒரு உதவி தேவைப்படுகின்றது நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். எனக்கு எம். எஸ்.ஆபீஸ் 2013 அல்லது( எந்த வெர்சன் ஆக இருந்தாலும் பரவாயில்லை,) தேவைப்படுகிறது உதவ முடியுமா? எங்கேனும் பிரீ டவுன்லோட் செய்துகொள்ள முடியுமாயின் தெரியப்படுத்துங்கள். நடப்புகளுக்கு நன்றி.

இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா

Posted: 03 Apr 2017 05:35 AM PDT

இந்தியாவின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய மனித வளத்துறை அமைச்சகம். இப்பட்டியலில் தமிழ்நாட்டின் 22 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது. Chennai IIT, Loyola மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் இன்று இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் டாப் 100-ல் தமிழகத்தின் 22 கல்லூரிகளும், டாப் 20 பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் 4 தமிழக கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் ஐஐடி ...

அனைவருக்கும் கல்வி...

Posted: 03 Apr 2017 05:34 AM PDT

- -- அப்பாவும் படிக்கல அம்மாவும் படிக்கல பள்ளிக்கூடம் பக்கமா நாங்கூட ஒதுங்கல, இன்னும் நாங்கூட ஒதுங்க... - பிள்ளையாச்சும் படிக்கட்டும்னு பள்ளிக்கூடம் அனுப்பி வெச்சேன் புத்தகப் பலகையோடு தட்டையும் போட்டு வெச்சேன் சோத்து தட்டையும் போட்டு வெச்சேன் - அறிவியல் கருவிங்க அடுக்கி வைக்க அலமாரிங்க அத்தனையும் இங்கிருக்க ஆசிரியர் வகுப்பில் இல்லே, நல்லாசிரியர் வகுப்பில் இல்லே... - மாதாந்திர கூட்டம் நாலு பத்தலைனு பயிற்சி ஏழு வாரமொரு கணக்கெடுப்பு வாத்தியாரும் வீதியிலே... பாடம் சொல்ல ...

கருவேலம் அகற்றும்போது நடுகல் கண்டெடுப்பு

Posted: 03 Apr 2017 05:32 AM PDT

போடி: போடி அருகே கருவேம் அகற்றும்போது பழங்கால நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. போடி அருகே சிலமலை ஊராட்சிக்கு உள்பட்ட சூலபுரத்தில் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. குதுவல் மண் பகுதியில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல் ஒன்று கிடந்தது. அதில், வைகாசி மாதம் என்றும் போடயநாயக்கர் சூலப்புரம் எனவும் தெளிவாக இருந்தது. விவசாயி செல்வராஜ் கூறுகையில், ''இந்த கல் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய நடுகல்லாக தெரிகிறது. வீரர்கள் ...

சக்கர நாற்காலிப் பயணத்தை எளிதாக்கும் செயலி

Posted: 03 Apr 2017 03:32 AM PDT

- பிறக்கும்போதே எளிதில் உடையக்கூடிய எலும்புகளைக் கொண்டிருந்த முகமது நஜுலாவுக்கு தொடக்கப்பள்ளிக் காலத்தில் ஐந்து முறை கால்கள் முறிந்தன. அப் போதிருந்து சக்கர நாற்காலி யில்தான் அவரால் எங்கும் செல்ல முடிகிறது. பல நாட்கள் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டி இருந்தது. "இந்த சிரமமான காலகட்டத்தை விரைவில் கடந்துவிடலாம்," என்று கலங்கிய கண்களுடன் அவரது தாயார் ஆறுதல் கூறியதை நினைவுகூர்ந்தார் நஜுலா. தொடக்கப்பள்ளிக் காலத் தில் மற்ற மாணவர்கள் துள்ளி குதித்து ஓடும்போது, தன்னால் ...

வணங்கும் தெய்வம்!

Posted: 03 Apr 2017 02:35 AM PDT

காங்கேயம் காளைகளே நீங்கள் கலப்பைக்கு தோழர்களே உம்கொம்பால் முட்டாதே மேகங்களே உச்சி குளிர்ந்து கொட்டுது தூறல்களே நின் திமிலை நேசிக்கும் நாரைகளே நீல் கடல்போல் சூழ்ந்திடும் வரப்புகளே பொன் வாலில் புகுந்திடும் தென்றல்களே பூஞ்சிரிப்பால் திறக்குது நாற்றுகளே மண்புழு மாளிகையை மணக்கும் மணப்பாறை காளைகளே நின்  நுகத்தடி சீர் சுமக்க நீளும் நெல்கொண்ட  படச்சால்களே வைக்கோல்  கோயில்களே- நாங்கள் வணங்கிடும் தெய்வங்களே நீங்கள் வாழ்த்திடும் வயல்களே எங்கள் வயிற்றுக்கு பருக்கைகளே! -அதியணன்-

பெருந்தன்மை...

Posted: 03 Apr 2017 02:10 AM PDT

- திரைக்கடலோடி திரவியம் தேடு...' திருப்பதியை, தாரை வார்த்துவிட்டு, கண்ணகி கோயிலை, விட்டுக் கொடுத்து ஆற்று படுகைகளை வரைந்துப்பார்த்து அய்யப்பனுக்கு இருமுடிகட்டி மிஞ்சியதை கோவிந்தா, கோவிந்தாவென்று கொண்டு போய் உண்டியலில் கொட்டுவதால் போன இடமெல்லாம் தமிழன் சாகிறான்... - பவானி, பெரியாறு, சோலையாறு, வெள்ளாறாய், கேரள எல்லையில் ... பாலாறு, காவிரி கர்நாடக எல்லையில் - கிருஷ்ணா, வடபெண்ணை ஆந்திர முடிவில் நமக்கான தாமிரபரணியும் வைகையும் கை வையென காய்நுது கிடப்பதால் ,'திரைகடலோடி ...

‘ஆளுமா...டோலுமா’ பாடலுக்கு தலைவர் டான்ஸ் ஆடுவார் என்பதை....

Posted: 02 Apr 2017 10:14 PM PDT

- மன்னர் ஏன் கோபமா இருக்கிறார்? - ஆன்லைன் ஸ்டோர்ல பதுங்குகுழி எல்லாம் டெலிவரி செய்யமுடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்..! - ------------------------------------------ - தலைவர் ஏன் கோபமா இருக்கிறார்? - அவசரமாக கட்சி மாற அணுக வேண்டிய தொலைபேசி எண்' என்று அவர் ஃமேல யாரோ எழுதிப் போடிருக்காங்களாம்...! - -------------------------- - பேச்சாளர்: - முதமைச்சர் வேட்பாளர்களை பெரிய கட்சிகள் அறிவித்து விட்ட படியால், எள்கள் தலைவரை அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது ...

ஒரு விலங்கானது எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும்?

Posted: 02 Apr 2017 10:06 PM PDT

டெல்லி: - ஒரு விலங்கானது எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும்? பசுவை கோமாதா என்பவர்கள் முட்டாள்கள் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக அரசு அமைத்த மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கிலான மாட்டிறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும் மாடுகளை வதைப்பவர்களின் முட்டிகள் உடைக்கப்படும் என்ற கருத்துகளையும் பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். - பசுவை கோமாதா என்பவர்கள் ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 02 Apr 2017 09:01 PM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

தோழிகள்…

Posted: 02 Apr 2017 08:54 PM PDT

-மை.பாரதிராஜா 'துள்ளி விளையாடு' தீப்தி நம்பியார் - -- ஹீரோக்களின் காதலுக்கு காமெடியன்கள் உதவுவது போல ஹீரோயின் காதலுக்கு (படத்தில்தான் பாஸ்!) ஐடியாக்கள் அள்ளி வீசுவது… துள்ளி அணைப்பது… எல்லாம் தோழிகளின் வேலை! ஹோம்லி சல்வார் ஹீரோயினுக்கு அருகில் செம மாடர்ன் லுக்கில் அசத்துவார்கள். ஹீரோயின் கனவுகளுடன் திரைத்துறைக்கு வந்து கிடைத்த நண்பி கேரக்டர்களிலும் நல்ல ஸ்கோர் அள்ளும் அசத்தல் கேர்ள்ஸ் சிலரது மினி டேட்டா பார்ப்போமா? -

போர்விமானி vs டாக்டர்

Posted: 02 Apr 2017 08:46 PM PDT

- '''பையா'வுக்கு அப்புறம் full love story பண்ணியிருக்கேன். முதன்முறையா ரஹ்மான் சார் மியூசிக். வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இசை. பாடல்கள் எல்லாமே ஆல்ரெடி ஹிட்…'' உற்சாகமாய் வரவேற்கிறார் ஸ்மார்ட் அண்ட் ஸ்லிம் கார்த்தி. - ''நான் மணி சாரோட ஒர்க் பண்றது புதுசு இல்ல. 'நான் நடிகனாகவே ஆகிடலை சார்… இன்னமும் உங்க அசிஸ்டென்ட்தான்'னு அவர்கிட்டேயே சொல்லியிருக்கேன். - என் கேரியரிலேயே முக்கியமான ஒரு படமா 'காற்று வெளியிடை'யை கொடுத்திருக்கார். லவ் சீன்ஸைப் பொறுத்தவரை மணி சாரை அடிச்சுக்கவே ...

எனை நோக்கி பாயும் தோட்டா…!

Posted: 02 Apr 2017 08:38 PM PDT

இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’

Posted: 02 Apr 2017 05:51 PM PDT

- புதுடெல்லி, இந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்திய பேட்மிண்டன் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர். உள்ளூர் ...

ஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Posted: 02 Apr 2017 05:44 PM PDT

- ஜம்மு, காஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். ரூ.3,720 கோடி - காஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும், ஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் செனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம் ஆண்டு தொடங்கியது. - இமயமலை அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில் ரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை ஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும். - சுரங்கப்பாதை ...

கொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்

Posted: 02 Apr 2017 05:30 PM PDT

- கொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர். ஏப்ரல் 03, 05:15 AM பகோடா, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் ...

அமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது

Posted: 02 Apr 2017 05:10 PM PDT

வாஷிங்டன், - அமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை 5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில் பலாத்காரம் செய்து, அதை முகநூலில் ('பேஸ்புக்') நேரடியாக காட்டிய சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. - சிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி தொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார். அந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ...

நாளை பொழுது இன்னும் இனிமை!

Posted: 02 Apr 2017 05:06 PM PDT

- வாழ்தல் வரம் - ஆர்.வைதேகி எல்லாம் இருந்தும் வாழ்க்கையைப் பழிப்பவர்கள் சிலர். இருப்பதை எல்லாம் இழந்தாலும் வாழ்க்கையைக் கொண்டாடுபவர்கள் சிலர். பெங்களூரைச் சேர்ந்த ஷாலினி சரஸ்வதி இரண்டாவது ரகம். பெங்களூரில் மாரத்தான் ஓடும் பெண்களில் முக்கியமானவர்! - கைகால்கள், கருவில் சுமந்துகொண்டிருந்த உயிர் என எல்லாவற்றையும் இழந்தார். `இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை... நம்பிக்கையைத் தவிர' என்கிற நிலையில், அந்த நம்பிக்கையை வைத்தே வாழ்க்கையை வெற்றிகொண்டிருக்கும் எனெர்ஜெட்டிக் மனுஷி! ஷாலினியுடன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™