Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அமோகம்! டில்லி மாநகராட்சி தேர்தலில் அள்ளியது பா.ஜ.,! சவடால் பேசிய ஆம் ஆத்மி, காங்.,கிற்கு அடி

Posted: 26 Apr 2017 09:49 AM PDT

புதுடில்லி: தலைநகர் டில்லியில், மூன்று மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில், ஆளும், ஆம் ஆத்மி, காங்., கட்சிகளை அடியோடு வீழ்த்தி, பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில், பிரதான கட்சி களை அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில் வெற்றிகளை குவித்து ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு, மாநகராட்சி தேர்தல் வெற்றி மூலம், பா.ஜ., அதிர்ச்சி வைத்தியம் அளித்துள் ளது.டில்லியில், 2015, பிப்ரவரியில் நடந்த சட்டசபைத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி, பா.ஜ., - காங்., உள்ளிட்ட பிரதான கட்சிகளை பின்னுக்கு தள்ளி, ஆட்சியை கைப்பற்றியது. ...

பார்லி.,யை கேள்வி கேட்க முடியாது! சுப்ரீம் கோர்ட் கருத்து

Posted: 26 Apr 2017 09:54 AM PDT

புதுடில்லி: 'ஆதார் அடையாள அட்டையுடன், 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணை ஒருங்கிணைப்பது நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும், இந்த விஷயத்தில், பார்லிமென்டை, நாம் கேள்வி கேட்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆதார் அடையாள அட்டையுடன், பான் எண்ணை ஒருங்கிணைத்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை கட்டாயம் ஆக்கு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
விசாரணை
இந்த மனுக்களை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கியஅமர்வு ...

சசிகலா உறவினர் தினகரனின் 70 நாள் ஆட்டம் குளோஸ்

Posted: 26 Apr 2017 10:12 AM PDT

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப் பட்ட, சசிகலா அக்கா மகன் தினகரனை, ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, கோர்ட் அனுமதித்துள்ளது. தினகரனை சென்னை அழைத்து வந்து விசாரிக்கவும், போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் ஆளும் கட்சியான, அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்ததால், அந்த கட்சியின் தேர்தல் சின்னமான, இரட்டை இலை முடக்கப்பட்டது.சின்னத்தை பெறுவதற்காக, சசிகலா அணியைச் சேர்ந்த, அவரது உறவினர் தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்தர் மூலமாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 50 கோடி ...

அ.தி.மு.க., அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்!

Posted: 26 Apr 2017 10:16 AM PDT

சென்னை:சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, சசிகலா பேனர்கள், நேற்று காலை அகற்றப்பட்டன.

ஜெ.,இருந்தபோது,அவரைவாழ்த்தி, வரவேற்று, 'டிஜிட்டல்' பேனர்கள் அமைக்ப்பட்டி ருந்தன. அவர் மறைவுக்கு பின், ஜெ., பேனர்கள் அகற்றப் பட்டு, ஜெ., மற்றும் சசிகலா இருக்கும் புகைப்படத்துடன் கூடிய பேனர்கள்வைக்கப்பட்டன.சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா சிறை சென்ற பிறகும், பேனர்கள் அகற்றப்பட வில்லை. சமீபத் தில், பன்னீர் அணியினர், சசிகலா குடும்பத்தை, கட்சியை விட்டு விலக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, தினகரன் ...

சொத்து விபரங்களை சமர்ப்பிக்க உ.பி., முதல்வர் கடைசி கெடு

Posted: 26 Apr 2017 10:21 AM PDT

லக்னோ: உ.பி.,யில், சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத, அரசு அதிகாரிகள், ஊழியர் களுக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத், இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மே, 3க்குள், விபரங்களை சமர்ப்பிக்காதோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

உ.பி.,யில், மார்ச், 19ல், முதல்வர் பொறுப் பேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள் அனைவரும், தங்கள், அசையும், அசையா சொத்து விபரங்களை, உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
அதிரடி
இதையடுத்து, 'அரசு துறைகளில் பணியாற்றும் உயரதிகாரிகள், 15 நாட்களுக்குள், தங்கள் வருமானம், ...

கட்டமைப்பு திட்டங்களில் நவீன தொழில்நுட்பம்: மோடி அறிவுரை

Posted: 26 Apr 2017 10:26 AM PDT

புதுடில்லி: ''நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங் களை செயல்படுத்தும் போது, நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்; ஒருங் கிணைந்த செயல்பாடுகள் மூலமே, உள்கட்ட மைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த கூட்டத்தில், 'நிடி ஆயோக்' தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து விளக்கினார்.
130 கி.மீ., சாலைகள்:
அப்போது பேசிய அவர், முன் எப்போதும் இல்லாத வகையில், பிரதமரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒரு ...

'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜூலை 15ல் தீர்ப்பு

Posted: 26 Apr 2017 10:28 AM PDT

புதுடில்லி: தி.மு.க., வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., - எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் தொடர்புடைய, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு கோர்ட், ஜூலை, 15ல், தீர்ப்பளிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

காங்., தலைமையிலான, முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
சி.பி.ஐ., விசாரணை
அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது. '2ஜி' ...

கருத்து வேறுபாடு நீங்கினால் தான் பேச்சு! பன்னீர் அணி மீண்டும் திட்டவட்டம்

Posted: 26 Apr 2017 10:35 AM PDT

'இரு அணிகளுக்கும் இடையிலான, கருத்து வேறுபாடுகள் நீங்கும் போது, பேச்சு நடைபெறும்,'' என, முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அ.தி.மு.க., - பன்னீர் அணி சார்பில், சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, பன்னீர்செல்வம் வீட்டில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன்பின், முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி கூறியதாவது:அ.தி.மு.க., அலுவலகத்தில், நாங்கள் யாரை வெளியேற்ற வேண்டும் என, கோரிக்கை வைத்தோமோ, அதன் முதல் நடவடிக்கையாக, சசிகலா பேனர்களை அகற்றி உள்ளனர். அதில், எங்களுக்கு மகிழ்ச்சி.தொடர்ந்து இணக்கமான சூழ்நிலை ஏற்படும் நிலையில், பேச்சில் ஈடுபடுவோம். ...

தினகரன் கைது: கட்சிகள் வரவேற்பு

Posted: 26 Apr 2017 10:38 AM PDT

சென்னை:தினகரன் கைது நடவடிக்கையை, தமிழக கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தர ராஜன்:
அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இல்லாமல், யாரையும் கைது செய்ய முடியாது. வலுவான ஆதாரங்களுடன், 37 மணி நேர விசாரணைக்கு பின், தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில், பா.ஜ., மீது குற்றம் சுமத்துவது, அடிப்படை ஆதாரமற்றது.பா.ஜ.,வால் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரது கைது நடவடிக்கை, தமிழகத்திற்கே அவமானம். குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க வேண்டும்; சட்டம், தன் கடமையை செய்யும்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், ...

மனு கொடுக்க ஆளில்லை : அமைச்சர்கள் ஏமாற்றம்

Posted: 26 Apr 2017 12:48 PM PDT

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு, தொண்டர்கள் வராததால், மனு வாங்க வரும் அமைச்சர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். முதல்வர் பழனிசாமி உத்தரவுப்படி,
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், தினமும் ஐந்து அமைச்சர்கள், தொண்டர்களிடம் மனுக்கள் பெறுகின்றனர்.
நேற்று முன்தினம், அமைச்சர்கள் சீனிவாசன், ராதாகிருஷ்ணன், வளர்மதி, ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன் ஆகியோர், கட்சி அலுவலகம் வந்தனர். ஆனால், கட்சி தொண்டர்கள் யாரும் வரவில்லை; இரண்டு மணி நேரம் காத்திருந்தும், மூன்று மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன.
இந்நிலையில், நேற்று துரைக்கண்ணு, ...

ஜாதவை சந்திக்க அனுமதி மறுப்பு : பாக்., அரசு தொடர்ந்து அராஜகம்

Posted: 26 Apr 2017 01:41 PM PDT

புதுடில்லி: பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அந்நாட்டு ராணுவ கோர்ட்டால், துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட, இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை, இந்திய துாதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி வழங்க, பாக்., அரசு மறுத்துள்ளது.
நம் நாட்டு கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற குல்பூஷண் ஜாதவை, பாக்., ராணுவ வீரர்கள், கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தியாவிற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவருக்கு, அந்நாட்டு ராணுவ கோர்ட், துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை நிறைவேற்ற, ...

என்.ஜி.ஓ.,க்களை கட்டுப்படுத்த சட்டம் : அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 26 Apr 2017 02:33 PM PDT

புதுடில்லி: என்.ஜி.ஓ., எனப்படும், அரசு சாரா அமைப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், சட்டம்
இயற்றுவது குறித்து பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நடத்தி வரும், ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளை, பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, அதற்கு எதிராக நடவடிக்கை கோரி, சுப்ரீம் கோர்ட்டில், 2011ல், பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'அரசு நிதியை பெறும், என்.ஜி.ஓ.,க்கள் நிதி முறைகேடுகளில் ஈடுபடு வதை தடுக்க, மத்திய ஊரக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™