Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நிதியாண்டு மாற்றம்: 10 அம்சங்கள்

Posted: 25 Apr 2017 03:34 AM PDT

புதுடில்லி: டில்லியில் கடந்த ஏப்., 22ம் தேதி நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, ' தற்போது, நாம் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை கடைப்பிடித்து வருகிறோம். இதை ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நிதியாண்டாக மாற்ற முன் வர வேண்டும்' என, கூறினார். இந்த நிதியாண்டு மாற்றம் குறித்த, 10 அம்சங்கள் வருமாறு:1. இந்தியாவில், ஏப்., - மார்ச் நிதியாண்டு, 1867 ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 150 ஆண்டுகளுக்கு முன் இதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் ...

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க பா.ஜ., அடுத்த குறி!: உ.பி., வெற்றியை தொடர்ந்து உற்சாகம்

Posted: 25 Apr 2017 09:19 AM PDT

கோல்கட்டா: உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட, ஐந்து மாநில தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, மேற்கு வங்கத்தை குறி வைத்து, பா.ஜ., களமிறங்கியுள்ளது. அங்கு, 2021ல் ஆட்சியமைக்கும் இலக்குடன், 'மிஷன் பெங்கால்' திட்டத்தை, பா.ஜ., தலைவர் அமித் ஷா, நேற்று துவக்கி உள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின், அடுத்தடுத்து நடந்து வரும் சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., அசத்தல் வெற்றியை பெற்று வருகிறது; டில்லி, பீஹார் உள்ளிட்ட, ஒரு சில மாநிலங்கள் மட்டுமே கை நழுவியது.
'மிஷன் பெங்கால்'
சமீபத்தில், உ.பி., உத்தரகண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்த ...

நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய அரசு புது வியூகம்

Posted: 25 Apr 2017 10:20 AM PDT

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட் தாக்குதலில் பலியான, சி.ஆர்.பி.எப்., வீரர்களின் உடல்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று அஞ்சலி செலுத்தினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நக்சலைட்டுகளை ஒழிக்க, மத்திய அரசு புது வியூகம் வகுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

சத்தீஸ்கரில், பா.ஜ.,வை சேர்ந்த ரமண் சிங் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிக ளில், சாலை போக்குவரத்தை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.
சாலை பணிகள்
சுக்மா ...

கோடநாடு காவலாளி கொலையில் திடீர் திருப்பம்; குற்றவாளிகளை 'காட்டி கொடுத்த ஜெ., அறை'

Posted: 25 Apr 2017 10:34 AM PDT

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில், திடீர் திருப்பமாக, போலீசாருக்கு முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன. காயத்துடன் உயிர் தப்பிய காவலாளி, கிருஷ்ண பகதுாரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில், மறைந்த, முன்னாள் முதல்வர் ஜெ.,க்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இதன் காவலாளி ஓம்பகதுார், நேற்று முன்தினம் அதிகாலை, மர்ம நபர்களால் அடித்து கொல்லப்பட்டார். உடன் வேலை செய்யும் காவலாளி கிருஷ்ண பகதுார், 35, என்பவர் காயத்துடன் தப்பினார். இவர் அளித்த வாக்குமூலத்தில், '10க்கும் மேற்பட்ட முகமூடி ஆசாமிகள், ஓம் பகதுாரை அடித்து கொன்று, என்னையும் ...

புதிய மது கடைகள் திறக்க ஐகோர்ட் தடை!

Posted: 25 Apr 2017 10:41 AM PDT

சென்னை: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கொண்டு வந்து, மதுக் கடைகளை திறக்கும் அரசின் முயற்சிக்கு, தடங்கல் ஏற்பட்டுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், மது கடைகளை திறக்கவோ, இடமாற்றம் செய்யவோ, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மது கடைகளை அகற்றும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில், 3,120 கடைகள் மூடப்பட்டன.இதையடுத்து, மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குள் வரும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை, மாநகராட்சி, நகராட்சி சாலைகளாக ...

நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் ஊரில் சோகம்

Posted: 25 Apr 2017 10:45 AM PDT

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம், பேஜி கிராமத்தில் நேற்று முன் தினம் பாதுகாப்பு பணியில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ஈடுபட்டிருந் தனர். அப்போது, ஆயுதங்களுடன் வந்த நக்சல்கள், திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 25 வீரர்கள் உயிரிழந்தனர்.

இவர்களில் மதுரை - அழகுபாண்டி, சேலம் மாவட்டம் - திருமுருகன், திருவாரூர் - பத்மநாபன், செந்தில்குமார் ஆகிய நால்வரும் அடக்கம்.அழகுபாண்டியின் கிராமம் அழுகிறது அழகுபாண்டி,28, மதுரை மாவட்டம் பேரையூர் முத்துநாகையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்; இவரது தந்தை முன்னாள் ராணுவ வீரர் பிச்சை அழகு.அழகுபாண்டி 2009ல் மத்திய ரிசர்வ் ...

தமிழக அரசு மீண்டும்... ஸ்தம்பிப்பு! 5 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Posted: 25 Apr 2017 10:50 AM PDT

ஆளும் கட்சிக்குள் நிலவும் குழப்பம் காரணமாக, ஏற்கனவே தள்ளாடி வரும் தமிழக அரசு நிர்வாகம், ஐந்து லட்சம் அரசு ஊழியர் களின், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால், மீண்டும் ஸ்தம்பித்துள்ளது. கொளுத்தும் கோடையில், அரசு பணிகள் நடைபெறாததால், தத்தளிக்கும் மக்களுக்கு, அடி மேல் அடி விழும் வகையில், அரசு ஊழியர்கள் போராட்டம் அமைந்துள்ளது.

பன்னீர்செல்வம் பதவி விலகலுக்கு பின், புதிய முதல்வராக, பழனிசாமி பொறுப்பேற்றார். சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி நிர்வாகம் இருப்பதால், அவரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அதனால், அரசுப் பணிகள் ...

கட்சி நிதி விவகாரத்தால் அணிகள் இணைப்பு தாமதம்

Posted: 25 Apr 2017 11:01 AM PDT

சசிகலா குடும்பத்தை முற்றிலும் நீக்க, அமைச்சர்கள் தயங்குவது, அ.தி.மு.க., இரு அணிகள் இணைப்பு பேச்சு துவங்குவதற்கு, முட்டுக்கட்டையாக உள்ளது.

இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
சசிகலா குடும்பத்தினர், கட்சியை விட்டு விலக முன்வரவில்லை. அவர்கள், விலகுவது போல் நடிப்பது; இரு அணியினரும் இணைந்த பின், பின்னாலிருந்து கட்சியை இயக்குவது என, திட்ட மிட்டு உள்ளனர்.ஏனெனில், கட்சி நிதி என்ற பெயரில், 'மணல் குவாரி, டாஸ்மாக், கேபிள், டிவி' என, மாதந்தோறும், பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது.
இதுதவிர,மின்சாரம் உட்பட, பல்வேறு ...

லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது

Posted: 25 Apr 2017 11:30 AM PDT

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் டில்லியில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷனுக்கு ரூ 50 கோடி லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக எழுந்த புகாரில், தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு போலீசார் நேற்று(ஏப்.,25) 4 வது நாளாக விசாரணை நடத்தினர் . சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று விசாரணை நீடித்த நிலையில் நேற்று(25ம்தேதி) நள்ளிரவில் தினகரன் கைது செய்யப்பட்டார்.
போன் அழைப்புகள் ஆய்வு:
சில நாட்களுக்கு முன்னர் டில்லியில் ரூ 1.30 ...

‛தினகரன் கைதால் அதிர்ச்சியடையவில்லை': நாஞ்சில் சம்பத்

Posted: 25 Apr 2017 12:40 PM PDT

சென்னை: ‛தினகரன் கைதால் அதிர்ச்சியடையவில்லை; சதித்திட்டத்தை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க தயார்' என அ.தி.மு.க., அம்மா அணியின் செய்தித்தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
மகிழ்ச்சி:
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தினகரன் கைதுக்கு பின்னால் சதித்திட்டங்கள் உள்ளன. தினகரன் கைதால் நான் அதிர்ச்சியடையவில்லை. சவாலை அவர் சந்திப்பார். சதித்திட்டத்தை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க தயாராக உள்ளோம். தினகரன் இப்போது தான் பலம் பெருகிறார். இதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன். ...

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தினகரன் கைது!டில்லி போலீஸ் அதிரடி

Posted: 25 Apr 2017 12:44 PM PDT

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பாக, 4- வது நாளாக, நடந்த விசாரணையின் முடிவில், தினகரன் நேற்று இரவு, டில்லி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான, அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்ததால், அந்த கட்சியின் சின்னமான, இரட்டை இலை முடக்கப்பட்டது. சின்னத்தை பெறுவதற்காக, தினகரன், சுகேஷ் சந்தர் என்ற இடைத்தரகருக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் தர முன்வந்ததாக தெரிகிறது. தினகரன் - சுகேஷ் சந்தர் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவு ஆதாரம் அடிப்படையில், 'விசாரணைக்கு நேரில் ஆஜ ...

தினகரன் கைது; தலைவர்கள் கருத்து

Posted: 25 Apr 2017 01:53 PM PDT

சென்னை: இரட்டை இலை' சின்னம் பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரா வாக்குமூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. அம்மா அணியின் தினகரனிடம் கடந்த 4 நாட்கள் விசாரணைக்கு பின் நள்ளிரவில் தினகரனை டில்லி போலீசார் கைது செய்தனர்.

கைது குறித்து தலைவர்கள் கருத்து வருமாறு:
தினகரன் கைது விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது. இதன் மூலம் பா.ஜ.,வால் தமிழகத்தில் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
-பா.ஜ.மாநில தலைவர் தமிழிசை.தினகரன் கைது மூலம் மோசமான முன்னுதாரணத்தை ...

இன்று(ஏப்.26) தினகரன் கோர்ட்டில் ஆஜர்; ஜாமீன் கிடைக்குமா?

Posted: 25 Apr 2017 02:44 PM PDT

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான தினகரன், இன்று(ஏப்.,26) மதியம் 2 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அங்கு அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
தினகரன் கைது:
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பாக, 4- வது நாளாக, நடந்த விசாரணையின் முடிவில், தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகிய இருவரும் நேற்று நள்ளிரவு, டில்லி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™