ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
- ‘ஏ ஃபார் ஆப்பிள்’னு ஏன் பேர் வெச்சேன்?” - இயக்குநர் அட்லி லாஜிக்
- டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
- உய்ய ஒரே வழி என்றும் உடையவர் திருவடி
- சிரி....சிரி...சிரி ...
- சிரி....சிரி...சிரி ...
- துருக்கி நாட்டுக் கதை !
- மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !
- ஆன்மீகக் குட்டி கதை!
- ருத்ராட்சம் அணியும் முறை !
- வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்
- அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம் ! - 26-4-2017
- விவரிக்க வார்த்தைகள் இல்லை!
- 3D ஓவியங்கள் !
- காகம் ஓர் அழகு
- புத்தியுள்ள காகம்
- விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
- வாழ்க்கை வசந்தமாகும் !-படித்ததில் (கேட்டதில்) பிடித்த வரிகள் !
- கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) – மஹாபிஷேகம் – மண்டலாபிஷேகம் –
- மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை
- தியானா - ஒரு பக்க கதை
- சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய்.
- பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
- இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது
- மே 19-ம் தேதி ரிலீசாகும் ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’
- கருவழியா வந்ததெவும் நிரந்தர மில்ல !
- அறிமுகம்...லியோ !
- மலேசியாவின் 15-வது புதிய மாமன்னராக, சுல்தான் முகமட் நேற்று திங்கட்கிழமை அரியணையில் அமர்ந்தார்.
- சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.
- பிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவில் மக்ரோன் முன்னிலை
- உலக மாஸ்டர்ஸ் போட்டி: இந்தியாவை சேர்ந்த 101 வயது பாட்டி தங்கம் வென்றார் திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017 விளையாட்டு
- படித்ததில் பிடித்தது - II :) -- இப்படியும் சில பெண்கள்! :(
- வரலாற்றுத் துணுக்குகள்
- தர்மம் தழைக்கட்டும்!
- சொர்க்கத் தீவு – ஒரு பக்க கதை
- பவர்கட் - ஒரு பக்க கதை
- பதியன் - ஒரு பக்க கதை
- மனநிலை கொதிநிலையாகும்போது...
- பெண்!
- ஒரு தீர்வு!
- அட்வைஸ் – ஒரு பக்க கதை
- திவ்யஸ்ரீ - ஒரு பக்க கதை
- மூர்த்தி சொன்னது நடக்குமா? – ஒரு பக்க கதை
- பெங்களூர் அணி ஐபிஎல் ஸ்கோர்: கலக்கல் மீம்ஸ்!!
| ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம் Posted: 25 Apr 2017 03:42 PM PDT -- ஆமதாபாத் : ஜனாதிபதி வேட்பாளராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேலை, பாரதிய ஜனதா கட்சி முன்னிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜூலை மாதத்திற்குள் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பா.ஜ. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டுவீட்டரில் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி தேர்தலுக்கான ... |
| ‘ஏ ஃபார் ஆப்பிள்’னு ஏன் பேர் வெச்சேன்?” - இயக்குநர் அட்லி லாஜிக் Posted: 25 Apr 2017 03:27 PM PDT - ராஜா ராணி, தெறி படங்களுக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார் அட்லி. இதோடு கமல்ஹாசனின் அசோசியேட்டான 'ஐக்' இயக்குநராக அறிமுகமாகும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தினை தனது 'ஏ ஃபார் ஆப்பிள்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் அட்லி. அதைப் பற்றியும் தனது அடுத்த தயாரிப்புகள் பற்றியும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் இயக்குநர் அட்லி. - -------------------------------- - |
| டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில் Posted: 25 Apr 2017 03:16 PM PDT டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில் டெல்லி : அதிமுக துணைப் பொதுச்செயலாளராக கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சசிகலாவினால் நியமனம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் சரியாக 70 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் ரீ எண்ட்ரியான டிடிவி தினகரன் இப்போது திகார் சிறையில் தள்ளப்பட்டுள்ளார். கடந்த 70 நாட்களாக குட்டி இளவரசர் போல அதிமுக தலைமை அலுவலகம், போயஸ் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்த தினகரன் இப்போது ... |
| உய்ய ஒரே வழி என்றும் உடையவர் திருவடி Posted: 25 Apr 2017 11:27 AM PDT ராமானுஜா... சித்திரைக்கும் சீர்மை கொடுத்த ராமானுஜா !!! திருவாதிரைக்கும் திருவான ராமானுஜா !!! ஸ்ரீபெரும்புதூருக்கு ஸ்ரீயைத் தந்த ராமானுஜா !!! காந்திமதியின் கருவறையில் வந்துதித்த ராமானுஜா !!! கேசவ சோமயாஜியின் தவப்பயனே ராமானுஜா !!! பெருந்தேவியின் தாகத்தையும் தீர்த்த ராமானுஜா !!! வரதனையும் வழித்துணையாக்கிய ராமானுஜா !!! திருக்கச்சி நம்பியைப் பெருமைபடுத்திய ராமானுஜா !!! ஆளவந்தாரின் 3 விரல்களையும் நிமிர்த்தின ராமானுஜா !!! பெரிய நம்பிகளின் திருவடி நிழலில் ... |
| Posted: 25 Apr 2017 11:17 AM PDT மனைவி : எங்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என்ன? அழகான முகமா? அன்பான மனமா? பணிவான குணமா? கணவன் : "உன்னோட இந்த காமெடி தான்..!!" -------------------------------------------- கணவன் : "கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?" மனைவி : "ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க?" கணவன் : "இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்" -------------------------------------------- மனைவி : "பாவி மனுசா.. இவதான் உன் சின்ன வீடு செட்டப்பா? பாக்க பிச்சைக்காரி மாதிரி இருக்கா?!" கணவன் ... |
| Posted: 25 Apr 2017 11:17 AM PDT மனைவி : எங்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என்ன? அழகான முகமா? அன்பான மனமா? பணிவான குணமா? கணவன் : "உன்னோட இந்த காமெடி தான்..!!" |
| Posted: 25 Apr 2017 11:11 AM PDT என்னை ஆழமாக சிந்திக்க இயங்க வைக்க காரணமாக இருந்த துருக்கி நாட்டுக் கதை ஒன்றிருக்கிறது. . . . துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான். அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள். அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. ... |
| மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் ! Posted: 25 Apr 2017 11:08 AM PDT மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் ! சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான். "ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?" என்று கேட்டான். அதற்கு சாக்ரடீஸ், "மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்" என்றார். மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. "கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்" என்றான். "கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் ... |
| Posted: 25 Apr 2017 11:05 AM PDT ஆன்மீகக் குட்டி கதை! என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றான் ஒரு அரசன் ஞானியிடம். உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா என்று ஞானி கேட்டார். என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை என்றான். அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு என்றார் ஞானி. எடுத்துக் கொள்ளுங்கள் என்றான் ... |
| Posted: 25 Apr 2017 11:03 AM PDT ருத்ராட்சம் அணியும் முறை ! ருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை ருத்ராட்சம் அணிவதாயின் முதலில் உண்மையான ருட்ரட்சத்தை அறிந்து வாங்க வேண்டும். ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து இருபத்தியொரு முகங்கள் வரை உள்ளன. ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட கூட அதன் தரம் உயரும், அளவு குறைய குறைய தரம் குறையும். பத்ராட்சம் என்ற மணி ருத்ராட்சம் போலவே இருக்கும், அவை நல்ல பலன்களைத் தராது. உண்மையான ருத்ராட்சத்தை நீரில் போட்டால் மூழ்கி ... |
| வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம் Posted: 25 Apr 2017 10:57 AM PDT வங்கிகளில் பணம் அனுப்பும் முறை RTGS, NEFT ,IMPS , UPI பற்றி தெரிந்து கொள்வோம்!!! AAA. RTGS : Real Time Gross Settlement. வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் RTGS மூலம் பணம் அனுப்பலாம். (வங்கிக் கிளைகளின் வேலை நேரத்தைப் பொறுத்து இது மாறுபடும்). குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் அனுப்ப வேண்டும். தொகை அனுப்பிய உடனேயே பெறுநரின் வங்கிக்கு தகவல் தரப்படும். அடுத்த 30 நிமிடங்களுக்குள் தொகையை பெறுநரின் வங்கிக் ... |
| அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம் ! - 26-4-2017 Posted: 25 Apr 2017 10:55 AM PDT அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம். நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம். பொருட்கள் - தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள் அன்னம் - வறுமையும், கடனும் நீங்கும் துணி - ஆயுள் அதிகமாகும் தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும் தீபம் - கண்பார்வை தெளிவாகும் அரிசி - பாவங்களை போக்கும் நெய் - நோய்களை போக்கும் பால் - துக்கம் நீங்கும் தயிர் - இந்திரிய சுகம் பெருகும் பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும் தங்கம் - குடும்ப தோஷங்களை நீக்கும் வெள்ளி - மனக்கவலை நீங்கும் பசு - ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் ... |
| Posted: 25 Apr 2017 10:54 AM PDT விவரிக்க வார்த்தைகள் இல்லை! விமானத்தின் கூரையில் எட்டு கிளிகள், எட்டுத்திக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது. இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும். ஆனால் கையில் வராது! இதுவும் அந்த கல்லில் இணைந்தது தான் !. இந்த சிற்பத்தை சுற்றி அழகிய சிறிய வடிவிலானா சிற்பங்கள் அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றது. அதுவும் அதே கல்லில் தான் , இவற்றை எல்லாம் அலங்கங்கரிக்க ஒரே கல்லினால் செய்யப்பட்ட நான்கு கற்சங்கிலிகள், நான்கு ... |
| Posted: 25 Apr 2017 10:52 AM PDT 3D ஓவியம்........ |
| Posted: 25 Apr 2017 10:51 AM PDT காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது பழமொழி... அது என்ன காக்கைக்கும்..? காகம் ஒரு அழகற்ற பறவையாக பார்க்க படுகிறது.. அனால் என் பார்வையில் நீயும் ஒர் அழகே... அழகான சாம்பல் நிற மேனி , இறகிலும் முகத்திலும் அடர் கருமை கூர்மையான அலகு , பகிர்ந்து உண்ணும் குணம் இவை அனைத்துமே அழகானவைகள்... குயிலும் கருப்புதான் ஆனால், அவற்றின் குரல் வளம் இனிமையாக இருப்பதனாலோ என்னவோ அவை அழகாக பார்க்கப்படுகிறது. எனினும், அவற்றின் முட்டைகளையும் நீ பாதுகாப்பதனால் நீயே மிகச் சிறந்த அழகு... மயிலுக்கு ... |
| Posted: 25 Apr 2017 10:49 AM PDT |
| விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்: Posted: 25 Apr 2017 10:42 AM PDT கும்பாபிஷேகத்தின்போது விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்: – * அனுக்ஞை (அனுமதி வாங்குதல்) – - செயல்களைச் செய்யும் ஆற்றல்மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்தெடுத்து இச்செயலை செய்வதற்கு இறைவனிடம் அனுமதி பெற்று நியமனம் செய்தல். – * சங்கல்பம் – - இளைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல். – * பாத்திர பூஜை – - இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை பாத்திரஙகளை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல். – * கணபதி பூஜை ... |
| வாழ்க்கை வசந்தமாகும் !-படித்ததில் (கேட்டதில்) பிடித்த வரிகள் ! Posted: 25 Apr 2017 10:42 AM PDT - வெற்றி சில நிமிடங்களில் கிட்டிட வாழ்க்கை திரைப்படம் அன்று ! - பயிற்சி செய் ! முயற்சி செய் ! தோல்வி கிடைத்தால் காரணத்தை ஆராய்ந்தால் அடுத்தப் போட்டியில் அதனைத் தவிர்த்திடு ! - வெற்றி வசமாகும் ! வாழ்க்கை வசந்தமாகும் ! – கவிஞர் இரா.இரவி – ———————— |
| கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) – மஹாபிஷேகம் – மண்டலாபிஷேகம் – Posted: 25 Apr 2017 10:40 AM PDT * கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) – - யாகசாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்து பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார். – * மஹாபிஷேகம் – - கும்பாபிஷேகம் முடிநத பிறகு மூல விக்ரகத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல். – * மண்டலாபிஷேகம் – - பிறந்த குழந்தையாக பாலரூபியாக விக்ரகத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை 48 நாட்கள் விசேஷ அபிஷேக பூஜைகள் செய்து முழுமையான ஆற்றலை அடையச் செய்வது. – குண்டங்களின் ... |
| மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை Posted: 25 Apr 2017 10:39 AM PDT சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கு: தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி வசம் ஒப்படைக்க தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுகவின் ஆர்எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார். . டாஸ்மாக் கடைகளை திறக்கவே இதுபோன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறினார். தவறு: அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கூறியதாவது: நெடுஞ்சாலைகளை ... |
| Posted: 25 Apr 2017 10:35 AM PDT ![]() |
| சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Posted: 25 Apr 2017 10:31 AM PDT சிந்துதாய் -Sindhutai Sapkal - Mother of Orphans – என்ற இந்த சமூக சேவகி, வசதியற்ற இடையர் குலத்தில் பிறந்து ,நான்காவது வகுப்பை பள்ளியில் முடித்த போது, பத்து வயதில், 30 வயதுள்ள மாடு மேய்ப்பவரை திருமணம் செய்து வைத்தனர். இன்று பூனேயில் நான்கு அநாதை விடுதிகளை நடத்தி வரும் இந்த சமூக சேவகியின் ஆரம்ப வாழ்க்கை சோகமானது. இருபது வயதில் மூன்று மகன்களுக்கு தாயாகியதும்,அப்போது 9 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் கணவனால் அடித்து விரட்டப்பட்டு , தனது குழந்தையை மாட்டுத் தொழுவத்தில் பிரசவித்ததாகவும், தொப்புள் ... |
| பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் Posted: 25 Apr 2017 07:05 AM PDT - பாடியவர்: நேகா பேசின் படம்: சத்தம் போடாதே இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடல்: நா முத்துகுமார் ---------- பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன் – எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே அடங்காமலே அலை பாய்வதேன் மனம் அல்லவா – பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன் – கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பார மரங்கள் இல்லை கலங்காமாலே கண்டம் தாண்டுமே – ஓ ஹோ – முற்றுபுள்ளி அருகில் ... |
| இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது Posted: 25 Apr 2017 07:03 AM PDT - இந்திய திரையுலகின் உயரிய விருதாக கருதப்படுகிறது 'தாதா சாகேப் பால்கே' விருது. 2016-ம் ஆண்டுக்கான இந்த விருதை பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத் பெறுகிறார். அவருக்கு வயது 87. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என தனது தனித்துவ படங்கள் மூலம் தடம் பதித்தவர் விஸ்வநாத். சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர். 'குருதிப்புனல்', 'யாரடி நீ மோகினி', 'உத்தம வில்லன்' உட்பட பல தமிழ்ப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கே.விஸ்வநாத். 1965 ... |
| மே 19-ம் தேதி ரிலீசாகும் ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ Posted: 25 Apr 2017 07:02 AM PDT - '36 வயதினிலே' என பெரிய மாஸ் ரீ-எண்டரி கொடுத்த ஜோதிகாவின் அடுத்த படம் 'மகளிர் மட்டும்'. இப்படம் மே மாதம் 19-ம் தேதி வெளிவர இருக்கிறது. கெத்தான லுக், பெரிய மோட்டார் பைக் என மோஷன் போஸ்டரும் , டீசரும் வெளியாகி 'மகளிர் மட்டும்' திரைப்படத்துக்கான ஆர்வத்தை அதிகப்படுத்தி இருந்தது. வரும் திங்கட்கிழமை இசை வெளியிடப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், 'மகளிர் மட்டும்' மே 19-ம் தேதி வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 'குற்றம் கடிதல்' திரைப்படத்துக்காக தேசிய ... |
| கருவழியா வந்ததெவும் நிரந்தர மில்ல ! Posted: 25 Apr 2017 06:53 AM PDT படம் : கங்காரு பாடலாசிரியர் : வைரமுத்து இசையமைப்பாளர் : ஸ்ரீநிவாஸ் பாடல் : தாயும் கொஞ்ச காலம்… பாடியவர் : ஹரிஹரசுதன் கருவழியா வந்ததெவும் நிரந்தர மில்ல ! கட்டையில போகுறவரையில் சுதந்திர மில்ல ! இங்கு சுதந்திரமில்ல ! ஏதும் நிரந்தரமில்ல ! தாயும் கொஞ்ச காலம், தகப்பனும் கொஞ்ச காலம். ஊரும் கொஞ்ச காலம் – அந்த உறவும் கொஞ்ச காலம். தாயும்… நெனச்சு நெனச்சு பார்த்தாக்கா நீயும் கொஞ்ச காலம் உன் நெனபும் கொஞ்ச காலம் சரித்துரத்து மன்னர்களும் கொஞ்ச கொஞ்ச காலம் அந்த சந்திரனும் சூரியனும் இன்னும் ... |
| Posted: 25 Apr 2017 06:40 AM PDT வணக்கம்.. என் பெயர் லியோ... தமிழ்நாடு, கடலூர் மாவட்டத்தில் ஆங்கில ஆசிரியராக பணி செய்கிறேன். நூல்களை படிப்பதிலும் பிறருக்கு பகிர்வதிலும் மிகுந்த ஆர்வமுடையவன்... உங்களோடு இணைவதில் பெரும் மகிழ்ச்சி. |
| மலேசியாவின் 15-வது புதிய மாமன்னராக, சுல்தான் முகமட் நேற்று திங்கட்கிழமை அரியணையில் அமர்ந்தார். Posted: 25 Apr 2017 05:16 AM PDT சுல்தான் முகமட் 5 (Sultan Muhammad V) ,அரியணை ஏறும் நாளில், இஸ்தானா நெகாரா எனப்படும் மாமன்னர் மாளிகை இந்த வைபவத்திற்காக விமரிசையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.மாமன்னர் அரியணை அமரும் விழா காரணமாக நாட்டில் பொதுவிடுமுறையும் அனுசரிக்கப்பட்டது. 1957 ஆகஸ்ட் 31 இல் பிரித்தானியாவில் இருந்து விடுதலை அடைந்தது முதல் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பதவி மாற்றம் நடைபெறுகிறது. 1963 செப்டெம்பர் 16 இல் மலேசிய கூட்டரசு ஆக மாறிய போதும் 1965 இல் சிங்கப்பூர் தன்னை விடுவித்துக் கொண்டது மலேசியாவில் பதின்மூன்று ... |
| சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம். Posted: 25 Apr 2017 05:06 AM PDT சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம். இரெண்டு ஆண்டுகள் 4000 அறிவை/ஆர்வம் தூண்டும் பதிவுகள் ரமணியன் |
| பிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவில் மக்ரோன் முன்னிலை Posted: 25 Apr 2017 01:35 AM PDT - பாரீஸ் - பிரான்ஸ் அதிபர் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் என் மார்சே அணியின் எம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் இருக்கிறார். மக்ரோனுக்கு அடுத்த படியாக அதிக வாக்குகள் பெற்று தேசிய முன்னணி கட்சியின் மெரைன் லி பென் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹொலாந்தே பதவி காலம் முடிவடைந்த நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்தது. ஞாயிற்றுக்கிழமை நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 97% சதவித ஓட்டுகள் பதிவாகின. ... |
| Posted: 25 Apr 2017 01:33 AM PDT - ஆக்லாந்து : உலக மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் பந்தயத்தில் 101 வயது பாட்டி தங்கம் வென்று உள்ளார். 17-வது தங்கம் ஆக்லாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த 101 வயது பாட்டி கவுர் தங்க பதக்கம் வென்று உள்ளார். இந்திய முதிய தடகளவீரரக்ள் வாங்கிய 17 வது தங்கபதக்கம் இதுவாகும். கவுர் குறிப்பிட்ட பந்தய தூரத்தை 1 நிமிடம் 14 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்று உள்ளார். 2009-ம் ஆண்டு 100 மீட்டரில் ... |
| படித்ததில் பிடித்தது - II :) -- இப்படியும் சில பெண்கள்! :( Posted: 24 Apr 2017 11:28 PM PDT வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! @krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா? சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது. அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான ... |
| Posted: 24 Apr 2017 11:26 PM PDT வரலாற்றுத் துணுக்குகள் -1 சீர்காழியில் கிடைத்த கல்வெட்டு ஒன்று "ஆளுடைய பிள்ளையார் கோயிலில் ஆளுடைய பிள்ளையார் வடிவத்தை எழுப்பியவர் மூன்றாம் குலோத்துங்கனுடைய அடுக்களைப பெண்டுகளில் மூத்தவளான இராஜவிச்சாதிரி என்பவளாவாள் " என்று குறிப்பிடுகிறது , இதில் இருந்து அறியப்படும் செய்திகள் 1) மன்னரின் சமையலறைப் பெண்களுக்கு கூட பட்டப்பெயர் இராஜவிச்சாதிரி என்று இருந்திருக்கிறது . 2) அவர்கள் ஆளுடைய பிள்ளையார் வடிவத்தை அமைக்கும் அளவிற்கு வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள் . 3) ... |
| Posted: 24 Apr 2017 11:24 PM PDT சம்பாதிப்பது முக்கியமல்ல; அது, பிறருக்கும் பயன்பட வேண்டும். அதற்கு தேவை மனம். பணம் இருப்போருக்கு மனமிருப்பதில்லை; மனம் இருந்தால் பணமிருப்பதில்லை. இந்த இரண்டும், மனிதனுக்கு வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை விளக்குவதே அட்சய திரிதியை நன்னாள். சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கவுமாரம் மற்றும் சவுரம் எனும், சிவன், திருமால், சக்தி, விநாயகர், முருகன் மற்றும் சூரியன் வழிபாட்டு மதங்களை ஒன்றிணைத்து, 'சனாதன தர்மம்' எனும் இந்து மதமாக இணைத்த பெருமைக்குரியவர், ஆதி சங்கரர். இவரது குலதெய்வம், எர்ணாகுளம் ... |
| Posted: 24 Apr 2017 11:20 PM PDT - ![]() |
| Posted: 24 Apr 2017 11:18 PM PDT ![]() |
| Posted: 24 Apr 2017 11:17 PM PDT ![]() |
| Posted: 24 Apr 2017 11:16 PM PDT 'வீணா, என் கோபத்தை கிளறாதே; அப்புறம், என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது...' 'பேசாம போயிடு... அப்புறம், நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்...' என்று, கொதிநிலைக்கு வந்து விட்ட மனநிலைக்காரர்கள், இவ்வாறு சுய வாக்குமூலம் கொடுப்பர். ஆம்... மனநிலையானது, கொதிநிலைக்கு உயர்ந்து விட்டால், ஒரு மனிதன், எதிராளிக்கு மட்டுமல்ல, தனக்குமே கெடுதல்களை தேடிக் கொள்கிறான். இது, அவனுக்கும் புரிகிறது; அதனால் தான், 'நான் மிருகமாயிடுவேன்...' என்கிறான். ஆனால், எந்த ஒரு மனிதனும், கொதிநிலைக்கு உடனே போவது இல்லை. சட்டென்று, ... |
| Posted: 24 Apr 2017 11:15 PM PDT நீளமான காரிடரின் இரு மருங்கிலும், நாற்காலிகள் போடப்பட்டும், மையத்தில், சிவப்பு கம்பளமும் விரிக்கப்பட்டிருந்தது. நடுவில், சில நாற்காலிகள் போடப்பட்டு, முன்புற டேபிளில், 'வெல்வெட்' துணி விரிப்பில், அலங்கரித்த, பூச்சாடி வைக்கப்பட்டிருந்தது. வங்கியின் பெயரும், அது துவங்கப்பட்ட ஆண்டும், மற்ற குறிப்புகளும் எழுதப்பட்ட, 'பேனர்' பின்புறம் தொங்க, மற்றொருபுறம், அன்று வங்கியில் இருந்து, விருப்ப ஓய்வு பெறும் வர்ஷாவின் புகைப்படமும், வாழ்த்தும் இடம் பெற்றிருந்தது. இத்தனை நாளும், வங்கிக்கும், அதன் கிளை ... |
| Posted: 24 Apr 2017 11:14 PM PDT 'காலை, 6:00 மணிக்கு வந்துடுறோம் சார்...' என்று, பேரூராட்சி ஊழியர்கள், தலையிலடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்லியிருந்ததால், சீக்கிரமே எழுந்து விட்டார், சுந்தரம். 'தூங்கும் நேரமாக வந்து, அரைகுறையாக அள்ளிப் போட்டு போய் விடுவரோ...' என்று நினைத்து, இரவெல்லாம் அவருக்கு தூக்கமே வரவில்லை. அவர் மனைவி சும்மா இல்லாமல், ''அவங்க, வருவாங்கன்னா நினைக்கிறீங்க... எத்தனை நாளு இப்படி சொல்லி, வராம போயிருக்காங்க. அவங்க வேலை நேரமே, 10:00 மணிக்கு தான் ஆரம்பிக்குது; இதுல எப்படி, காலையில், 6:00 மணிக்கு வருவாங்க; ... |
| Posted: 24 Apr 2017 11:14 PM PDT நாத்தனார் சித்ரா தனது புருஷனிடம் காரணமில்லாமல் கோபித்துக்கொண்டு, அடிக்கடி அண்ணன் வீட்டுக்கு வந்து மாதக்கணக்கில் தங்குவது, அண்ணி அம்பிகாவிற்கு எரிச்சலைத் தந்தது. நாத்தனாரிடம் நேரடியாகச் சொல்ல முடியாமல் அம்பிகா கையைப் பிசைந்துகொண்டிருந்தபோது, வேலைக்காரி வேலம்மா வந்தாள். ''அட, இவ்ளோதானா? நான் பார்த்துக்கறேன்!'' என்றவள் சித்ராவிடம் என்ன சொன்னாளோ தெரியவில்லை… அடுத்த அரை மணி நேரத்தில் சித்ரா புகுந்த வீட்டுக்குப் புயலாகப் புறப்பட்டாள். அம்பிகாவிற்கு ஆச்சரியம். ''வேலம்மா, சித்ராகிட்ட ... |
| Posted: 24 Apr 2017 10:34 PM PDT ![]() |
| மூர்த்தி சொன்னது நடக்குமா? – ஒரு பக்க கதை Posted: 24 Apr 2017 10:33 PM PDT - ![]() |
| பெங்களூர் அணி ஐபிஎல் ஸ்கோர்: கலக்கல் மீம்ஸ்!! Posted: 24 Apr 2017 10:25 PM PDT ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


.jpg)



