Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜனாதிபதி தேர்தல்: 10 அம்சங்கள்

Posted: 24 Apr 2017 02:26 AM PDT

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2012ம் ஆண்டு ஜூலை, 25ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவர், ஐந்து ஆண்டுகள் அப்பதவியை வகிக்க வேண்டும். அதன்படி, வரும் ஜூலை, 25ம் தேதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தி, புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும். இந்த தேர்தல் தொடர்பாக, 10 முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போட முடியாது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள், 31 சட்டசபைகளின் எம்.எல்.ஏ.,க்கள் தான் ஓட்டு போட வேண்டும். அந்த வகையில், 784 எம்.பி.,க்கள், 4,114 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட உள்ளனர்.2. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் விதிகள் - 1974ன் கீழ், எம்.பி., ...

துணிகரம்! கோடநாடு எஸ்டேட் காவலாளி படுகொலை; ஜெ., அறையில் முக்கிய ஆவணங்கள் கொள்ளை?

Posted: 24 Apr 2017 09:41 AM PDT

மறைந்த முதல்வர், ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட் காவலாளி, நள்ளிரவில், வாகனங்களில் வந்த முகமூடி கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்; மற்றொரு காவலாளி, படுகாயத்துடன் உயிர் தப்பினார். ஜெ., அறையில் உள்ள முக்கிய ஆவணங்களை கொள்ளை அடிக்கும் திட்டத்துடன், மர்ம கும்பல் வந்ததா என, போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால், போயஸ் கார்டன் வீடு உள்ளிட்ட, ஜெயலலிதாவின் பிற சொத்துகளின் கதி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள, ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கோடநாடு எஸ்டேட், 900 ஏக்கர் பரப்பு கொண்டது. இதன் ...

ஜம்மு - காஷ்மீரில் பி.டி.பி., தலைவர் கொல்லப்பட்டதால் வன்முறை! சுமுக தீர்வு காண பிரதமரிடம் மெஹபூபா வலியுறுத்தல்

Posted: 24 Apr 2017 09:50 AM PDT

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், ஆளும், மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரை, பயங்கரவாதிகள்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதால், வன்முறை வெடித்துள்ளது.

மாணவர்களின் போராட்டமும் தீவிரமடைந்து உள்ளதால், பிரச்னைக்கு பேச்சு மூலம் சுமுக தீர்வு காணும்படி, பிரதமர் மோடியிடம், முதல்வர் மெஹபூபா முப்தி வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ஜம்மு - காஷ்மீரில், பி.டி.பி., எனப்படும், மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மெஹபூபா முப்தி முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், சட்டம் ...

சசி குடும்பத்தை நீக்கினால் தான் பேச்சு! பன்னீர் அணி மீண்டும் போர்க்கொடி

Posted: 24 Apr 2017 10:03 AM PDT

சென்னை:''அ.தி.மு.க.,வை கபளீகரம் செய்து கொண்டிருக்கும் சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் முழுமையாக நீக்கினால் தான் பேச்சு நடைபெறும்,'' என, பன்னீர் அணி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

பன்னீர் அணி சார்பில், முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி அளித்த பேட்டி:ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது; அவர் கொலை செய்யப்பட்டார் என, கட்சியினர் சந்தேகமடைந்து உள்ளனர். அதை போக்கவும், நீதியை நிலைநாட்டவும், சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என, மத்திய அரசிடம், தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.
கருத்துக்களை பரிமாற வேண்டும்
கட்சியை ...

பிற மாநிலத்தவரும் தமிழ் படிக்க வேண்டும்! முதல்வர்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

Posted: 24 Apr 2017 10:08 AM PDT

புதுடில்லி : ''தொன்மையான தமிழ் மொழியை, பிற மாநில மாணவர்கள் கற்கும் வகையில், அந்த மாநில அரசுகள், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும்,'' என, பிரதமர் மோடி பேசினார்.

மாநில முதல்வர்கள் பங்கேற்ற, 'நிடி ஆயோக்' கூட்டத்தில், பிரதமர் பேசியதாவது: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு, 'ஒன்றுபட்ட பாரதம்; ஒப்பற்ற பாரதம்' என்ற, அவரது தாரக மந்திரத்தை, நாம் கையில் எடுக்க வேண்டும். இந்தியா, பன்முகத்தன்மை உடைய நாடாக திகழ்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை பலப்படுத்த, நாம் தொடர் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். ஒரே தேசத்தில் வசித்தாலும், ...

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு தடைபட்டது ஏன்?

Posted: 24 Apr 2017 10:30 AM PDT

அ.தி.மு.க., பொதுச் செயலரின் அதிகாரத்தை குறைத்து, அப்பதவியை பன்னீர் அணிக்கு ஒதுக்கும் முடிவால், இரு அணிகள் இணைப்பு பேச்சு, நேற்று தடைபட்டது.

முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரு குழுக்களும், நேற்று, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், பேச்சு நடத்த திட்டமிட்டன.
அவசர ஆலோசனை
அதன் காரணமாக, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை, 11:45 மணிக்கு, முதல்வர் பழனிசாமி வந்தார். அவரை தொடர்ந்து, அமைச்சர்கள், ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் ...

கிடுக்கிப்பிடி கேள்வியால் திணறிய தினகரன்; சுகேஷை தெரியும் என இறுதியாக ஒப்புதல்

Posted: 24 Apr 2017 10:33 AM PDT

'இரட்டை இலை' சின்னம் பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பான விசாரணையில், இடைத்தரகர் சுகேஷ் சந்தரை, தனக்கு தெரியும் என, சசிகலா அக்கா மகன் தினகரன் ஒப்புக் கொண்டுள்ளார்.

அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்ததால், தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, தினகரன் சார்பில் லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது.இது தொடர்பாக, சுகேஷ் சந்தர் என்ற இடைத்தரகரை, 1.30 கோடி ரூபாய் ரொக்கத்துடன், டில்லி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். 'இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, ...

தமிழகத்தில் இன்று 'பந்த்:' பஸ்கள் ஓடுமா?

Posted: 24 Apr 2017 10:55 AM PDT

தமிழகத்தில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இன்று நடத்தும், 'பந்த்'திற்கு, வணிகர் சங்கங்கள், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழல் உள்ளது. ஆனால், 'பஸ்கள் வழக்கம் போல இயங்கும்; மக்கள் கவலைப்பட வேண்டாம்' என, அரசு அறிவித்துள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, தி.மு.க., - காங்., - மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள், இன்று, மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றன. இதற்கு ஆதரவு தரும்படி, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், வணிகர் ...

அரசு ஒத்துழைத்தால் ஜூலைக்குள் உள்ளாட்சி தேர்தல்; ஐகோர்ட்டில் கமிஷன் மனு

Posted: 24 Apr 2017 11:09 AM PDT

சென்னை: நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு தரப்பில் பணிகளை நிறைவேற்றுவதை பொறுத்து, ஜூலைக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 2016 அக்டோபரில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த, உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தார். புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, 2016 டிசம்பருக்குள் தேர்தலை முடிக்கவும் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் கமிஷன் மேல்முறையீடு செய்தது. வாக்காளர் பட்டியல் ...

நக்சல்கள் தாக்குதல்: காயமடைந்த வீரர்களுக்கு முதல்வர் ஆறுதல்

Posted: 24 Apr 2017 11:39 AM PDT

ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் காயமடந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் அம்மாநில முதல்வர்சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பேஜி கிராமத்தை, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் அமைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தும் நோக்கில், நேற்று பிற்பகல், பயங்கர ஆயுதங்களுடன் வந்த 300 நக்சலைட்டுகள், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில், 26 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். தகவலறிந்த ...

தினகரன் மீண்டும் இன்று(ஏப்.,25) மாலை ஆஜராக உத்தரவு

Posted: 24 Apr 2017 12:27 PM PDT

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு விசாரணைக்காக, 4வது நாளாக மீண்டும் இன்று(ஏப்.,25) மாலை 5 மணிக்கு ஆஜராக தினகரனுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
4வது நாளாக...
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, தினகரன் சார்பில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லியில் தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 3வது நாளாக நேற்று(ஏப்.,24) நடந்த விசாரணை 9 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த நிலையில், நள்ளிரவு 12.45 மணிக்கு விசாரணை முடிந்தது. இந்நிலையில், ...

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மவுசு

Posted: 24 Apr 2017 01:33 PM PDT

சென்னை : 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், சமச்சீர் கல்வியில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், மாநில பாடத்திட்டம் இணைக்கப்பட்டு, பாடம் கற்று தரப்படுகிறது. இந்த திட்டத்தில், 12 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மருத்துவப் படிப்புகளில் சேர முடியும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. முன், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படித்த மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க, மாநில ...

பசு மாடுகளுக்கு 'ஆதார்' மத்திய அரசு புது திட்டம்

Posted: 24 Apr 2017 02:39 PM PDT

புதுடில்லி : 'பசு மாடுகள் கடத்தப்பட்டு, கொல்லப்படுவதை தடுக்கும் வகையில், அவற்றுக்கு, 'ஆதார்' எண் போன்ற, அடையாள எண் வழங்க வேண்டும்' என, மத்திய அரசு அமைத்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

உ.பி., குஜராத் உட்பட பல மாநிலங்களில், சமீபத்தில், பசு மாடுகளை கடத்தி கொன்றதாக பலர் மீது தாக்குதல் நடந்தது; இதை தொடர்ந்து, பசு பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம் கமிட்டி ஒன்றை அமைத்தது.
இந்நிலையில், 'நாள்தோறும் ஆயிரக்கணக்கான பசுக்கள், வங்கதேசத்திற்கு கடத்தி செல்லப்பட்டு, கொடூரமாக கொல்லப்படுகின்றன. இதை தடுக்க, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™