Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சபாஷ்! வி.ஐ.பி., கைதிகளும் இனி 'களி' சாப்பிட வேண்டும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு

Posted: 20 Apr 2017 09:10 AM PDT

லக்னோ: உ.பி.,யில், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக கூறிய, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காவல் துறையில் அதிரடி மாற்றங்க ளை அமல்படுத்த, பல்வேறு உத்தரவு களை பிறப்பித்துள்ளார். 'சிறையில் அடைக்கப் பட்டுள்ள கைதிகள் அனைவரும் ஒரே மாதிரி யாக நடத்தப்பட வேண்டும். பிக்பாக்கெட் திருடர்கள் முதல், வி.ஐ.பி., கைதிகள் வரை, அனைவருக்கும், ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட வேண்டும்' என, அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வர் பொறுப்பேற்ற திலிருந்து, அரசு நிர்வாகத்தில் ...

சசி குடும்பத்தை மொத்தமாக நீக்க வேண்டும் என பன்னீர் அணி...திட்டவட்டம்!:தேர்தல் கமிஷனில் கொடுத்த பத்திரத்தை வாபஸ் பெற வலியுறுத்தல்

Posted: 20 Apr 2017 10:25 AM PDT

சென்னை:'அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு துவங்க வேண்டுமானால், ஜெ., மர்ம மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு, அரசு பரிந்துரை செய்ய வேண்டும். சசிகலா, தினகரன் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தையும், கட்சியை விட்டு நீக்க வேண்டும்; அவர்களது நியமனம் தொடர்பாக, தேர்தல் கமிஷனில் கொடுத்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற வேண்டும்' என, பன்னீர் அணியினர் திட்டவட்டமாக அறிவித்து உள்ளனர்.

இதையெல்லாம் செய்ய முன்வராமல், பழனிசாமி அணியினர் நாடகம் ஆடுவதாகவும், பன்னீர் அணியினர் பகிரங்க புகார் தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க., அணிகளை இணைப்பதற் கான நடவடிக்கைகளை, இருதரப்பினரும் ...

சசி குடும்பம் நாடகம்: இ.பி.எஸ்., தந்திரம்! இரட்டை இலை சின்னத்திற்கான ஏமாற்று வேலை

Posted: 20 Apr 2017 10:30 AM PDT

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற, இடைத் தரகர் மூலம் மேற்கொண்ட முயற்சி, தோல்வி அடைந்ததால், சசிகலா குடும்பம் கட்சியை விட்டு விலகுவது போல நடித்து, அ.தி.மு.க.,வினரையும், மக்களையும் ஏமாற்ற, இ.பி.எஸ்., தரப்பினர் போட்ட தந்திரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தேர்தல் அறிவிப்பு
அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, பன்னீர் அணி சார்பில், தேர்தல் கமிஷனில், மனு கொடுக்கப்பட்டது. இம்மனு மீதான விசாரணை துவங்கும் முன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரு அணியினரும், இரட்டை இலை சின்னம் கேட்டதால், அது ...

தினகரன் மீதான டில்லி வழக்கு; வலை விரிக்கிறது வருமான வரித்துறை

Posted: 20 Apr 2017 10:33 AM PDT

இரட்டை இலை சின்னத்தை மீட்க, 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுப்பதாக பேரம் பேசிய வழக்கில், வருமான வரித்துறை யும் மூக்கை நுழைக்கிறது.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் வழங்கியதற்கான ஆவணங்கள், அமைச்சர் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கின. அதில், மற்ற அமைச்சர்கள் பெயர்கள் இருந்தன. அவர்களது பங்களிப்பாக, அந்த தொகையை தந்துள்ளனர். விஜயபாஸ்கர், அதற்கு ஒருங்கிணைப்பாளர் போல செயல் பட்டுள்ளார். இதற்கெல்லாம், மூளையாக செயல்பட்டவர் தினகரன். ஆனாலும், அவர் தனிப்பட்ட முறையில் பணம் ...

செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் மோடி

Posted: 20 Apr 2017 10:35 AM PDT

புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள, உலகின், 100 மிகுந்த செல்வாக்கு உள்ளவர்கள் பட்டியலில், இந்தியாவில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும், 'பேடிஎம்' நிறுவனர் விஜய் சேகர் சர்மா இடம் பெற்று உள்ளனர்.

டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும், உலகின், செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்காக, இதழின் ஆசிரியர்கள் குழு, மிகப் பெரிய பட்டியலை வெளியிடும். வாசகர்கள் அளிக்கும் ஓட்டு களின்அடிப்படையில், 100 பேர் பட்டியலை ஆசிரியர் குழு இறுதி செய்யும்.கடந்த, 2015ல் வெளியான பட்டியலில் பிரதமர் மோடியின் பெயர் ...

அரசு பதவிகள் ரூ.30 லட்சம் வரை ஏலம்? அமைச்சர் பெயரில் நடந்தது அம்பலம்

Posted: 20 Apr 2017 10:40 AM PDT

கோவை: தமிழக பதிவுத் துறையில், சார் - பதிவாளர்களுக்கு, 'டிரான்ஸ்பர்' வழங்குவதாக கூறி, அமைச்சர் பெயரில், 10 முதல், 30 லட்சம் ரூபாய் வரை, பேரம் பேசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர், நடவடிக்கை எடுக்காவிடில், பேரம் பேசிய தொலைபேசி உரையாடலை வெளியிடுவோம் எனவும், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இடமாறுதல்
தமிழக பதிவுத் துறையின், ஒன்பது மண்டலங் களில், 50 மாவட்ட நிர்வாக பதிவாளர்கள், 50 மாவட்ட தணிக்கை பதிவாளர்கள், 572 சார் - பதிவாளர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களில், மூன்றாண்டு பணி முடித்தோர், ஆண்டு தோறும், மே மாதத்தில், பொது இடமாறுதல் ...

எம்.எல்.ஏ.,க்கள் இடையே கருத்து வேறுபாடு

Posted: 20 Apr 2017 10:43 AM PDT

சென்னை: அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைவது தொடர்பாக, எம்.எல்.ஏ.,க்கள் இடையே, கருத்து வேறுபாடு நிலவுகிறது.

முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள், பேச்சு நடத்தி, பன்னீர் அணியை இணைக்க முயற்சித்து வருகின்றனர். இதற்கு, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இருதரப்பு, எம்.எல்.ஏ.,க்கள் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
தவறில்லை
சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் கூறியதாவது:குணசேகரன்: அ.தி.மு.க., நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, தியாகம் செய்ய, அனை வரும் தயாராக உள்ளோம். இருதரப்பிலும், உட்கார்ந்து ...

அரசு போக்குவரத்து இணையதளத்தில் இப்போதும் முதல்வர் ஜெ., தான்!

Posted: 20 Apr 2017 10:46 AM PDT

கோவை: அரசு விரைவு போக்குவரத்து கழக இணையதளத்தில் தொடர்ந்து முதல்வராக ஜெ., பெயர் இடம்பெற்றிருப்பது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் எட்டு பிரிவுகளில், அதிதுார பஸ் சேவையான அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் ஒன்று. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறையில், 300 கி.மீ-.,க்கு அதிக மான துாரமுள்ள வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், அல்ட்ரா டீலக்ஸ், வால்வோ, 'ஏசி' பஸ்கள் என நெடுந்துார விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கானஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதிக்கு, www.tnstc.in எனும் அரசு விரைவு ...

மந்திரிகளின் ஊழல்: ஸ்டாலின் ஆவல்

Posted: 20 Apr 2017 10:50 AM PDT

சென்னை: 'அமைச்சர்களின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் புனிதப் பணியில், வருமான வரித் துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள், சுதந்திரமாக செயல்பட வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
அ.தி.மு.க.,வில் ஒவ்வொரு நாளும், வெவ்வேறு அரிதாரம் பூசிஅரங்கேறும் நாடகங்கள் நடக்கின்றன. நேற்றுவரை பரம விரோதிகள், முதல் குற்றவாளிகள், ஊழல் பெருச்சாளிகள், இன்று கைகோர்த்து, ஊரை ஏமாற்றும் இன்னொரு அவதாரத்தை எடுத்திருக்கின்றனர். தமிழக மக்களை ஏமாற்றி, மாநிலத்தை மேலும் சுரண்டி,தமிழகத்திற்கே தலைகுனிவை ...

தோனிக்கு எதிரான வழக்கு; ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

Posted: 20 Apr 2017 11:52 AM PDT

புதுடில்லி: ஹிந்துக் கடவுளான விஷ்ணு போல் வேடமிட்டதாக, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு எதிராக, ஆந்திராவில் தொடரப்பட்ட வழக்கை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, ஹிந்துக்கடவுள் விஷ்ணு போல் வேடமிட்டுள்ள படம், ஒரு இதழின் அட்டையில் வெளியிடப்பட்டது.'தோனியின் ஒரு கையில், ஷூ வைத்திருந்தது, ஹிந்து மதத்தினரை புண்படுத்துவது போல் அமைந்துள்ளது' என, ஆந்திர மாநிலத்தில் அனந்தபூரில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ...

ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்

Posted: 20 Apr 2017 12:46 PM PDT

புதுடில்லி: டில்லியில் யமுனை நதிக் கரையில், வாழும் கலை அமைப்பு நடத்திய நிகழ்ச்சி தொடர்பாக, மத்திய அரசையும், பசுமை தீர்ப்பாயத்தையும் குறைகூறும் வகையில், கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்பின் தலைவர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேச்சுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரூ. 42 கோடி சேதம் : வாழும் கலை அமைப்பின் சார்பில், டில்லி, யமுனை நதிக் கரையில், கடந்த ஆண்டு, சர்வதேச கலாசார, யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியால், யமுனை நதி மாசடைந்துள்ளதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு ...

50 லட்சம் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு 'ரெடி'

Posted: 20 Apr 2017 01:51 PM PDT

தமிழகத்தில் இதுவரை, 50 லட்சம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் தயாராகி உள்ளன.
தமிழகத்தில், காகித ரேஷன் கார்டுக்கு பதில், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி, ஏப்ரல், 1ல் துவங்கியது. சென்னை, ஆர்.கே.நகரில், 12ல் இடைத்தேர்தல் நடக்க இருந்ததால், தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தது. இதனால், சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வந்தது. நேற்று வரை, 50 லட்சம் கார்டுகள் அச்சிடப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு, சப்ளை செய்யப்பட்டுள்ளன. அதில், 11 லட்சம் கார்டுகள், மக்களுக்கு வழங்கப்பட்டன.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™