Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பி.எஸ்-4 வாகனங்கள்:7 பிரச்னைகள்

Posted: 02 Apr 2017 02:15 AM PDT

புகை மாசுவை கட்டுப்படுத்த, பாரத் ஸ்டேஜ் எனப்படும் பி.எஸ் - 3 தொழில்நுட்பத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களை மார்ச், 31ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்ய கூடாது; பதிவு செய்ய கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது, வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது. அவர்களுடன் சேர்ந்து டீலர்களும் பெரும் பாதிப்பை அனுபவித்து வருகின்றனர். பராத் ஸ்டேஜ் எனப்படும் புகை மாசு கட்டுப்பாடு, 2000ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில், ‛இந்தியா - 2000' என அழைக்கப்பட்டது. பின்னர் பி.எஸ் - 2, பி. எஸ் - 3 என படிப்படியாக அமல்படுத்தப்பட்டு தற்போது ...

எஸ்.பி.ஐ.,யுடன் 6 வங்கிகள் இணைப்பு: முடிந்தது பணி; காத்திருக்கிறது சவால்

Posted: 02 Apr 2017 10:31 AM PDT

புதுடில்லி: எஸ்.பி.ஐ., என்ற, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன், அதன், ஐந்து துணை வங்கி களும், பாரதிய மகிளா வங்கியும், ஏப்ரல், ௧ முதல் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த இணைப்பால், உலகிலேயே சொத்துகள் அடிப்படையில், முதல், 50 இடத்தில் உள்ள வங்கிகள் பட்டியலில், எஸ்.பி.ஐ., இடம் பிடித்துள்ளது.

நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியான, எஸ்.பி.ஐ., உடன், அதன் துணை வங்கிகளாக இருந்த, ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அண்டு ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலாவை இணைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இந்த முடிவிற்கு, துணை வங்கிகளின் ...

திருப்பம்...! ஓட்டு பதிவுக்கு புது இயந்திரம் வாங்க திட்டம்:மோசடிக்கு முயன்றால் வேலை செய்யாது

Posted: 02 Apr 2017 10:44 AM PDT

புதுடில்லி: மோசடி செய்தால், வேலை செய் வதை நிறுத்தும் நவீன தொழில்நுட்பத துடன் கூடிய மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை வாங்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுஉள்ளது.

சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலின்போது, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யப்பட்டதாக, பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. ஆனால், இதை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது. 'மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது' என, தெரிவித்துள்ளது.இந்த நிலையில், புதிய, 'எம்3' ரக தொழில் நுட்பத்துடன் கூடிய மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை ...

மது கடைகளை அகற்ற பல மாநில அரசுகள்... தயாரில்லை!:தமிழக 'டாஸ்மாக்' கடைகள் முன் நீண்ட வரிசை

Posted: 02 Apr 2017 10:58 AM PDT

புதுடில்லி: மாநில மற்றும் தேசிய நெடுஞ் சாலைகளை ஒட்டி, 500 மீட்டருக்குள் மதுக் கடைகள் செயல்பட, சுப்ரீம் கோர்ட் விதித்த தடை உத்தரவை அமல்படுத்த, பல மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன. அதற்குப் பதிலாக, மாநில நெடுஞ்சாலைகளை சாதாரண சாலைகளாக்கி, மதுக்கடைகளை நடத்தும், தில்லாலங்கடி வேலைகளில், ஈடுபட துவங்கி உள்ளன.

இந்த வேலைகளை செய்வதில், பா.ஜ., ஆளும் மாநில அரசுகள் முன்னணியில் உள்ளன. அதே நேரத்தில், தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் செயல்பட்ட பல டாஸ்மாக் கடைகள் மூடப் பட்டதால், மற்ற கடைகள் முன், நீண்ட வரிசை யில் காத்திருந்து, 'குடி'மகன்கள் மது வாங்கிச் ...

ரத்தம் சிந்தியது போதும்; வளர்ச்சிக்கு உதவுங்கள்: காஷ்மீர் இளைஞர்களுக்கு மோடி அறிவுரை

Posted: 02 Apr 2017 11:03 AM PDT

உதம்பூர்: ''போராட்டத்தில் ஈடுபடும் ஜம்மு - காஷ்மீர் இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும். கற்கள் மூலம் வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க வாருங்கள்,'' என, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜம்மு - ஸ்ரீநகரை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, நாட்டிலேயே முதலாவது மற்றும் ஆசியா விலேயே மிக நீளமான செனானி - நாசரி சுரங்க சாலையை, நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
யாருக்கும் பலனில்லை
இதன்பின், அந்த சாலையில் பயணம் செய்த அவர், உதம்பூரில் நடந்த ...

31ல் விற்ற 41 ஆயிரம் வாகனங்களை பதிவு செய்வதில் சிக்கல்

Posted: 02 Apr 2017 11:07 AM PDT

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், ஆய்வாளர்கள் பற்றாக்குறையால், மார்ச் 31ல் வாங்கிய, 41 ஆயிரம் வாகனங்களை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமும் 6,000
தமிழகத்தின், 81 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 60 பகுதி நேர அலுவலகங்கள் மூலம், ஆண்டுக்கு சராசரியாக, 16 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சனி, ஞாயிறு, அரசு விடுமுறை தினங்களை கழித் தால், தினமும், சராசரியாக, 6,000 வாகனங்கள் பதிவாகின்றன.இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலு வலகங்களில், ஊழியர்கள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உள்ளது. 104 வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடங்கள் ...

வங்கி கணக்கு தகவல் வேண்டும்! சுவிஸ் அரசுக்கு இந்தியா கோரிக்கை

Posted: 02 Apr 2017 11:09 AM PDT

புதுடில்லி: சுவிட்சர்லாந்தில் கறுப்புப் பணம் பதுக்கிய, 10 நிறுவனங்கள் மற்றும் நபர்கள் குறித்த, தகவல்களை அளிக்கும்படி, அந்நாட்டு அரசிடம், மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குறைந்தபட்சம், 10 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களை அளிக்கும்படி, சுவிஸ் அரசிடம் இந்தியா கோரியுள்ளது.
வரி ஏய்ப்பு
இவர்கள் அனைவரும், இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து, ஏராளமான பணத்தை, சுவிஸ் ...

ஸ்டாலின் செயல்பாட்டில் அதிருப்தி; அணி மாறும் மாவட்ட செயலர்கள்?

Posted: 02 Apr 2017 11:12 AM PDT

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அணுகு முறையில் அதிருப்தி அடைந்த, நான்கு மாவட்ட செயலர்கள், எட்டு எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., அம்மா அணிக்கு மாற, ரகசிய பேச்சு நடத்தி வருவதாக, பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க., செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப் பேற்ற பின், கட்சி ரீதியாக சில கொள்கை முடிவுகளை எடுக்கும் போது, தன்னிச்சையாக முடிவு எடுத்து அறிவிக்கிறார். கட்சியை வழி நடத்துவதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாணியில், ஸ்டாலினின் செயல்பாடு உள்ளதால், பல மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர்.சமீபத்தில், அ.தி.மு.க., அம்மா அணி வேட்பாளர் ...

ரசிகர்களை புறக்கணித்தார் நடிகர் ரஜினி

Posted: 02 Apr 2017 11:14 AM PDT

'நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்' என, அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் இருந்து, சென்னையில் குவிந்த ரசிகர்கள், அவரை சந்திக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நடிகர் ரஜினி, ஒவ்வொரு மாதமும், இரண்டா வது ஞாயிறு அன்று ரசிகர்களை சந்திப்பது வழக்கம். 1998ல், சந்திப்பு முடிந்து திரும்பிய சில ரசிகர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனால், ரசிகர்கள் சந்திப்பை நிறுத்தினார். பின், பிறந்த நாளின் போது மட்டும், வீட்டிற்கு வரும் ரசிகர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு, 2008 வரை நடந்தது.இந்நிலையில், நடிகர் ரஜினி வரும், 12 முதல், 17 வரை, ...

ரிசர்வ் வங்கி கவர்னரின் சம்பளம் உயர்ந்தது

Posted: 02 Apr 2017 12:12 PM PDT

புதுடில்லி: ரிசர்வ் வங்கியின் கவர்னர் மற்றும் துணை கவர்னர்களுக்கான சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இருப்பினும், ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தும் பல்வேறு தனியார் வங்கியின் தலைமை அதிகாரிகளை விட, இவர்களுடைய சம்பளம் குறைவு தான்.
உயர்வு:
ரிசர்வ் வங்கியின் கவர்னராக, உர்ஜித் படேல், 2016, செப்டம்பரில் பதவியேற்றார். ஆர்.காந்தி, எஸ்.எஸ்.முந்த்ரா, என்.எஸ்.விஸ்வநாதன், வி.ஆச்சாரியா ஆகிய நால்வரும் துணை கவர்னர்களாக உள்ளனர்.கவர்னரின் மாத அடிப்படை சம்பளம், 90 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ...

ஜி.எஸ்.டி.,யில் அதிர்ச்சி அளிக்க மாட்டோம்: மத்திய அரசு

Posted: 02 Apr 2017 01:29 PM PDT

புதுடில்லி: 'ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்யும்போது, யாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த மாட்டோம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் வருவாய் துறை செயலர் ஹன்ஸ்முக் ஆதியா கூறியதாவது: ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையை, வரும், ஜூலை, 1 முதல் நடைமுறை படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை வரும்போது, யாருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்த மாட்டோம். தற்போதுள்ள சரக்கு மற்றும் சேவைகளுக்கான வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களை, உடனடியாக சேர்க்க மாட்டோம்.
உதாரணமாக, கல்வி, ...

தினகரன் அணி நடத்திய பேரம்; ஓட்டம் பிடிக்கும் பன்னீர் அணி

Posted: 02 Apr 2017 02:55 PM PDT

சென்னை: எதிர்ப்பு அதிகமாகி உள்ளதால், பன்னீர்செல்வம் அணியின் பூத்ஏஜன்டுகளை, விலை கொடுத்து இழுக்கும் முயற்சியில், தினகரன் தரப்பு ஈடுபட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரனுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை; மாறாக, பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், முற்றுகையிடுவதும் தொடர்கிறது. அதனால், அவரை வெற்றி பெறவைக்க, ஆதரவாளர்கள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 'தங்களுக்கு சாதகமாக செயல்பட்டால், 1.5 லட்சம் ரூபாய் தருகிறோம்' என, பன்னீர் அணியில் உள்ள, பூத் ஏஜன்டுகளிடம், தினகரன் அணியினர் பேரம் பேசி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™