Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து

Posted: 02 Apr 2017 04:01 PM PDT

- புதுடெல்லி - துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் தமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பிரதமர் வாழ்த்து துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர், ...

ஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை

Posted: 02 Apr 2017 03:58 PM PDT

புதுடெல்லி, ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ...

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

Posted: 02 Apr 2017 03:54 PM PDT

- அமிர்தசரஸ்: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு உடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார். சண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47). இவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன் காரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு திரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது. இதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில் சேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி கிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து வந்தார். ...

பன்னீர் செல்வத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

Posted: 02 Apr 2017 03:49 PM PDT

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் பன்னீர் செல்வம் அணியினர் இரட்டைமின் விளக்கு சின்னத்தில் போட்டியிடுகின்றனர். தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு பன்னீர் செல்வம் அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கு மிரட்டல் விடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தேனி அருகே பன்னீர் செல்வம் கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் ...

இயக்குனர் கவுதமன் சென்னையில் திடீர் கைது

Posted: 02 Apr 2017 08:20 AM PDT

-- டெல்லியில் 20 நாட்களாக தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குரல் கொடுத்து வந்தார் இயக்குநர் கவுதமன். இவர் காவல் துறையிடம் முறையான அனுமதி பெற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்களுடன் போராட போவதாக கூறியிருந்தார். இதையடுத்து வள்ளுவர் கோட்டத்தில் ஒன்றிணைந்து அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த துவங்கினர். அப்போது காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவருடன் போராட்டத்தில் ...

வெட்கம் அணிகிறாள்

Posted: 02 Apr 2017 07:49 AM PDT

- உன்னை உனக்கு முதலில் அறிமுகம் செய்தது நான்தான்... - ------------------ - என் பார்வைகளின் பாரம் தாங்காமல் வெட்கம் உன்னை அணிந்து கொண்டது - --------------------- - கண்கள் கொண்டு நீ காயம் செய்கிறாய்... - -------------------- - நம்மை அணிந்து கொண்டு நிர்வாணம் மறைத்தோம் - -----------------------

விசில் சத்தம் நிறைய கேட்குதே...!!

Posted: 02 Apr 2017 07:48 AM PDT

- கபாலியோட கல்யாணத்துக்கு போலீஸ்காரர் என்ன செய்தார்? - நூறு ரூபாய் மொய் எழுதிட்டு, மாமூல்ல கழிச்சுக்கச் சொல்லிட்டார்! - கே.ஜெகதீசன் - ------------------------------------- - லைப்பை மாற்ற சில யோசனைகள்னு புத்தகம் எழுதினேன், ஒண்ணு கூட விற்கலை! - அப்புறம் எப்படி புத்தகத்தை விற்பனை செஞ்சீங்க? - வொய்ப்பை மாற்ற சில யோசனைன்னு அட்டையை மட்டும் மாற்றினேன்! - ஜி.சுந்தரராசன் - ------------------------------------- வாரமலர் -

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)

Posted: 02 Apr 2017 03:55 AM PDT

- - தத்துவம் படித்து ஆன்மிகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் புருஸ்லீ - ------------------------------------ - மரண தண்டனை ரத்துக்க ஐ.நா சபை கொண்ட வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் 115. - ---------------------------------- - இந்தியாவின் முதல் உயர்நீதிபதி ஓமன-குஞ்சம்மா (கேரளா) - --------------------------------- - திமிங்கலம் ஒரு நாளைக்கு 3 டன் உணவை சாப்பிடுகிறது - --------------------------------- - ஒட்டகம் ஒரே நேரத்தில் 90 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கும். ஆனால் ...

கலை அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட்

Posted: 02 Apr 2017 03:14 AM PDT

+2க்குப் பிறகு… +2க்குப் பிறகு உயர்படிப்பு என்றால் எஞ்சினியரிங்கும், மருத்துவமும்தான் என்ற நிைலமை கடந்த சில ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கண்டது மறுப்பதற்கில்லை. நான்காண்டுகள் எஞ்சினியரிங் படித்துவிட்டு, படிப்புக்குத் தொடர்பில்லாத நிறுவனங்களில் எல்லாம் நேர்காணலுக்குக் கால்கடுக்க நின்றுகொண்டிருக்கும் மாணவர்களைப் பார்த்து பெரும்பாலான மாணவர்கள் கலை அறிவியல் படிப்புகள் பக்கம் திரும்பிய வரலாறும் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. - -கலை அறிவியல் படிப்பைத் தேர்வு செய்யும் ...

வைகை எக்ஸ்பிரஸ்

Posted: 02 Apr 2017 03:08 AM PDT

கொலை எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்கள். மற்றொரு இளம்பெண்ணுக்கு மூளைச்சாவு. - - இந்தக் குற்றங்களைச் செய்த கொலையாளி யாரென் பதை தடதடக்கும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் துப்பறிகிறார் ரயில்வே சிறப்புப் போலீஸ் அதிகாரியான ஆர்.கே.விசாரணையை பல்வேறு கோணங்களில் துப்பறியும் ஆர்.கே.வுக்கு, இந்தக் கொலைகளுக் கான அடிப்படைப் பின்னணியும், கொலைகளுக்குப் பின்னால் இன்னும் சிலர் இருக்கும் அதிர்ச்சித் தகவலும் ...

ஜல்லிக்கட்டு காளையுடன் ஆர்.கே.நகரில் வலம் வந்த மதுசூதனன்!!

Posted: 02 Apr 2017 02:42 AM PDT

- ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதனன் ஜல்லிக்கட்டு காளையுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜெயலலிதா மறைந்ததையடுத்து அவருடைய தொகுதியான ஆர்.கே.நகருக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் மற்றும் வேட்புமனு பரிசீலனைகள் நிறைவடைந்த நிலையில் தீவிர வாக்குச் சேகரிப்பு நடைபெற்று வருகிறது. - தி.மு.கவைச் சேர்ந்த மருது கணேஷ், டி.டி.வி.தினகரன், மதுசூதனன், தீபா ஆகியோர் முக்கிய ...

அரைமொட்டை அடித்து போராட்டத்தை தொடரும் விவசாயிகள்

Posted: 02 Apr 2017 02:38 AM PDT

- - டெல்லி ஜந்தர் மந்தரில் 20 நாள்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று அரைமொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயக்கடன் தள்ளுபடி என அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் உறுதியாக அறிவித்துள்ளனர். கடந்த 14-ம் தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அச்சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் காலவரையற்ற போராட்டம் தொடங்கப் பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பது, விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைத் ...

ஈராக் விமானப்படை தாக்குதலில் ஐ.எஸ் முக்கிய தலைவர்கள் பலி

Posted: 02 Apr 2017 02:35 AM PDT

- சிரியா உள்நாட்டுப் போரில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிராக அமெரிக்க ஈராக் படைகள் ஒன்றிணைந்து அவ்வப்போது அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஈராக் விமான படை, அல்-குயிம் என்னும் பகுதியில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவராகிய அயத் அல் ஜுமைலி உட்பட 40 கும் மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட அல்-ஜுமைலி, ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அல்-பக்தாதியின் ...

பவர்பாண்டி 'கிராமத்தில் ஒரு ரொமான்ஸ்' ட்ரெய்லர்!

Posted: 02 Apr 2017 02:29 AM PDT

- தனுஷ் முதன்முறையாக படம் இயக்குகிறார் என்பதே 'பவர்பாண்டி' திரைப்படத்துக்கு ஒரு சுவாரஸ்யதன்மையைக் கொடுத்தது. அதுவும், வழக்கமான பாணிகளில் இருந்து விலகி ராஜ்கிரணை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து உருவாக்கிய கதைக்களம் என்பதால், அதன் எதிர்பார்ப்பு கூடியது. பின்னர், பட்டயகிளப்பும் வகையில் வெளியான பாடல்கள் மற்றும் ட்ரெயலர் அந்த சுவாரஸ்யதன்மையை தக்க வைத்தது. இந்நிலையில், 'கிராமத்தில் ஒரு ரொமான்ஸ்' (A Romance in the Village) என்ற அத்திரைப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. முதல் ...

ஏப். 2 - உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்

Posted: 01 Apr 2017 11:35 PM PDT

- ஆட்டிசம் என்றால் என்ன? ஆட்டிசம் ஒரு குறைபாடே தவிர நோய் அல்ல. இதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து முறையான பயிற்சிகளை அளித்தால், குழந்தைகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்கிறார் ஆட்டிச விழிப்புணர்வு பயிற்சியாளர் பாலபாரதி. இதுகுறித்து மேலும் பேசும் அவர், வெளியில் இருந்து பார்த்தால் கண்டுபிடிக்க முடியாத குறைபாடு ஆட்டிசம். ஆட்டிச குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்ல வளர்ச்சி பெற்றிருப்பர். ஆனால் சிந்திப்பதை சரியாக வெளிப் படுத்த தெரியாத/ முடியாத ...

விவிபாட் இயந்திரத்தில் இருந்து பாஜகவுக்கு மட்டுமே வாக்களித்ததாக ரசீது வெளியானதால் அதிர்ச்சி:தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டு உத்தரவு

Posted: 01 Apr 2017 11:29 PM PDT

மத்தியபிரதேச மாநிலம் பிந்த் தொகுதி இடைத்தேர்தலுக்காக மின்னணு வாக்கு இயந்திரங்களை சோதித்தபோது சமாஜ்வாதி கட்சிக்கு அளித்த வாக்கு பாஜகவுக்கு விழுந்ததாக ரசீது வெளியானதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பிந்த் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்துவ தற்கான பணிகள் அங்கு முழுவீச் சில் நடந்து வருகின்றன. வாக்கா ளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்வதற்கான (விவிபாட்) இயந்திரமும் அந்த தொகுதிக்கு முதல் முறையாக கொண்டு வரப்பட்டுள்ளது. ...

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Posted: 01 Apr 2017 10:57 PM PDT

உறவுகளே! உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேணும் நோக்கில் கிடைக்க முடியாத தமிழ் நூல்களைத் திரட்டி மின்நூல் களஞ்சியம் ஆக்கியுள்ளேன். இங்கு அறுபதிற்கு மேற்பட்ட தலைப்புகளின் கீழ் ஐந்நூறிற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. ஆங்கில வழியில் தமிழ் கற்றல் (தமிழை மறந்த நம்மாளுகளுக்கும் தமிழை விரும்பும் பிறமொழிக்காரர் கற்கவும்), தமிழிலக்ணம், தமிழிலக்கியம், இதழியல், படைப்பாளியாக (கவிஞராக, எழுத்தாளராக, ...) மருத்துவம், உளவியல், உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) எனப் பயன்தரும் பல நூல்கள் உள்ளன. இவற்றையெல்லாம் ...

எஸ்.பி.ஐ.,யுடன் இணைந்த 6 வங்கிகள்

Posted: 01 Apr 2017 06:26 PM PDT

புதுடில்லி :பாரதிய மகளிர் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் உள்பட 6 வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியுடன் சனிக்கிழமை(நேற்று) முறைப்படி இணைந்தன. இதன்மூலம், உலகிலேயே சொத்துகள் அடிப்படையில் முதல் 50 இடத்தில் உள்ள வங்கிகளில் எஸ்பிஐயும் இடம்பெற்றுள்ளது. ஸடேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய 5 வங்கிகளின் ...

காரில் பின் தொடர்ந்து வந்த கல்லூரி மாணவர்கள்: போலீசில் ஸ்மிருதி புகார்

Posted: 01 Apr 2017 05:01 PM PDT

புதுடில்லி: தனது காரை 4 இளைஞர்கள் பின் தொடர்ந்து விரட்டி வந்ததாக மத்திய பெண் அமைச்சர் ஸ்மிருதி இராணி போலீசில் புகார் கூறியுள்ளார். மத்திய பெண் அமைச்சர் ஸ்மிருதி இராணி, 41, இவர் தன் காரில் சென்று கொண்டிருந்த போது பின்னால் 4 இளைஞர்கள் தொடர்ந்து விரட்டி வந்ததாகவும், தனது காரை ஓவர்டேக் செய்ய முயன்றதாகவும் போன் மூலம் போலீசில் புகார் அளித்தார். அந்த இளைஞர்கள் யார் ? தகவலறிந்த டில்லி சாணக்கியபுரி போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் ராம்லால் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. ...

ஜெயிலில் பெண்ணுடன் நடனம்:வார்டன் சஸ்பெண்ட்

Posted: 01 Apr 2017 04:57 PM PDT

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் ஜெயிலில் உள்ளே நடைபெற்ற விழாவில் பெண்ணுடன் நடனமாடிய வார்டன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து அந்த ஜெயிலின் தலைமை வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஜிந்த் சிறையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது வெளியிலிருந்து நடன பெண்களை அழைத்து வந்து போலீசாரும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடியது வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஐ.ஜி. நடவடிக்கை போலீஸ் சீருடையில் நடனமாடும் ...

கண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்?

Posted: 01 Apr 2017 04:45 PM PDT

- தலைவரு பாங்க் மேனேஜரை அடிச்சுட்டாராமே, ஏன்? - சின்ன வீட்டுடன் கட்சிப்பணத்தை பாங்கில் டெபாசிட் போடப்போனவரிடம்'இது நிரந்தர வைப்புதானே?ன்னு மானேஜர் கேட்டாராம்! - ஆர்.ரகோத்தமன் - -------------------------------------- - கண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்? - பெத்த அப்பனை சார் போட்டு கூப்பிடுறியே இதுதாண்ட மகனே! - வெ.சீதாராமன் - --------------------------------------- - எதிரிகள் கடற்கரை வழியாக ஊடுருவி இருக்கிறார்கள் அவர்களைக் கவனிக்காமல் எப்படி கோட்டை விட்டீர்கள், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™