Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


என்.டி.பி.சி., - வாரியம் மோதல்: மின் தேவை பூர்த்தியாவதில் சிக்கல்

Posted: 19 Apr 2017 09:23 AM PDT

என்.டி.பி.சி., என்ற, தேசிய அனல் மின்கழகத் துக்கும், தமிழக மின் வாரியத்துக்கும் இடையே, திடீர் மோதல் ஏற்பட்டுள்ளதால், கோடை காலத்தில், மின் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், வல்லுாரில், என்.டி .பி.சி., - தமிழக மின் வாரியத்துக்கு, கூட்டு அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு தலா, 500 மெகாவாட் திறனில், மூன்று அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், தமிழகத்துக்கு, 1,070 மெகாவாட் மின் சாரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மின் தேவையை பூர்த்தி செய்வதில், வல்லுார் மின் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. மின் வாரியம், 1,156 கோடி ...

பா.ஜ., தலைவர்கள் அத்வானி, உமா பாரதியிடம் மீண்டும்... விசாரணை! பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 19 Apr 2017 10:11 AM PDT

புதுடில்லி: பாபர் மசூதியை இடிக்க சதித் திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கை தினமும் விசாரித்து, இரு ஆண்டுகளுக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு உத்தரவு களையும் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது.

உ.பி.,யின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992 டிச., 6ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது, லக்னோ கோர்ட்டில் வழக்கு பதிவு ...

'எச் -- 1பி' விசா கட்டுப்பாடு அரசாணை; அமெரிக்க அதிபர் கையெழுத்து

Posted: 19 Apr 2017 10:12 AM PDT

வாஷிங்டன்: வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை பார்ப்பதற்காக அளிக்கப்படும் 'எச் - 1பி' விசா முறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வரும் புதிய அரசாணையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்; இது, இந்தியர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பாக அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

'வேலை வாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை' என்ற கோஷத்துடன், அதிபர் தேர்தலில் வென்றார் டொனால்டு டிரம்ப். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், அகதிகளுக்கு தடை உட்பட, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், 'அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வழங்கப் ...

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க உ.பி., முதல்வர் நடவடிக்கை

Posted: 19 Apr 2017 10:32 AM PDT

லக்னோ: உ.பி.,யில், தொடர்ந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும், முதல்வர் யோகி ஆதித்யநாத், தற்போது, அரசு நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது, தன் கவனத்தை திருப்பியுள்ளார்.

அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளோர், ஒரு மாதத்திற்குள் அந்த இடங்களை காலி செய்யாவிட்டால், கடும் நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள் ளார்.உத்தர பிரதேச முதல்வராக, பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற பின், மாநில நலன் கருதி பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இவரது தடாலடி நடவடிக்கைகளால், அரசு அலுவலர் கள், தாமதமாக வருவோர், தவறு செய்வோரை ...

பல முனை தாக்குதலால் அ.தி.மு.க.,விலிருந்து தினகரன்...ஓட்டம்!:சசிகலாவை சந்தித்த பின் கட்சி பதவியை துறக்கவும் முடிவு

Posted: 19 Apr 2017 11:03 AM PDT

அமைச்சர்கள் எதிர்ப்பு, பொது மக்கள் வெறுப்பு, வழக்குகள் குவிப்பு என, பல முனை தாக்குதலால், அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரன் ஓட்டம் பிடித்தார்.

போட்டி, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கைவிட்டு, கட்சியில் இருந்தே ஒதுங்கி விட்டதாக அறிவித்தார். சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பின், துணை பொதுச் செயலர் பதவியை துறக்கவும் முடிவு செய்துள்ளார். அவருக்கு கூஜா துாக்கிய, கூவத்துார் புகழ், எம்.எல்.ஏ.,க்கள், இப்போது பன்னீர் புகழ் பாடத் துவங்கி உள்ளனர்.சசிகலா சிறைக்கு சென்றதும், அவரால், அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட தினகரன், கட்சியை தன் வசம் கொண்டு ...

மோசடி வழக்கில் ஆஜரானார் தினகரன்; எழும்பூர் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு

Posted: 19 Apr 2017 11:08 AM PDT

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில், நேற்று தினகரன் ஆஜரானார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில், மாஜிஸ்திரேட் மலர்மதி முன், நேற்று காலை, 10:40 மணிக்கு தினகரன் ஆஜரானார்.அப்போது, அவரது வழக்கறிஞர் லோகநாதன், 'இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்; மாலை விசாரணைக்கு வருகிறது. அதனால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்' ...

பன்னீர்செல்வம் முதல்வராக வேண்டும்! அ.தி.மு.க., தொண்டர்கள் விருப்பம்

Posted: 19 Apr 2017 11:11 AM PDT

அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைவ தோடு, முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப் பேற்க வேண்டும் என்பது தான், அ.தி.மு.க., தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், முதல்வரான பன்னீர் செல்வம், சசிகலா குடும்பத்தினர் எதிர்ப்பு காரணமாக, பதவியை இழந்தார். சசிகலா குடும்பத்தை எதிர்த்து, கட்சி தொண்டர்கள் ஆதரவோடு, தனி அணியாக செயல்படத் துவங்கினார்.கட்சியை கைப்பற்ற, அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். கட்சியின் கீழ்மட்ட நிர்வாகி கள் மற்றும் தொண்டர்கள், அவருக்கு தான் ஆதரவாக நின்றனர். பொது மக்கள் ஆதரவும், அவருக்கே அதிகம்உள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலராக, ...

வெளிநாடு தப்ப திட்டம்? தினகரனை தடுக்க அதிரடி

Posted: 19 Apr 2017 11:13 AM PDT

புதுடில்லி:தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில், சசிகலா அக்கா மகன் தினகரனுக்கு, டில்லி போலீஸ், 'தேடப்படும் நபர்' என, குறிப்பிட்டு, 'நோட்டீஸ்' பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில், ஆளும் அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிரிவு காரணமாக, இரட்டை இலை சின்னத்தை, தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளது. இதையடுத்து, இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம், தினகரன் முயன்றதாக தெரிகிறது. அதற்காக, 60 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு, அந்த பணம், ஹவாலா மூலமாக கைமாறியது. இது பற்றி தகவலறிந்த டில்லிபோலீசார், சுகேஷ் சந்திர சேகரை கைது ...

மே 1 முதல் 'சிவப்பு சைரன்' கிடையாது; மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு

Posted: 19 Apr 2017 11:17 AM PDT

புதுடில்லி: வி.ஐ.பி., கலாசாரத்தை ஒழிக்கும் வகையில், ஜனாதிபதி, பிரதமர் முதற்கொண்டு எவருமே, வரும் மே, 1 முதல் 'சிவப்பு சைரன்' பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது என்று, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:காரில், 'சிவப்பு சைரன்' பொருத்தியபடி செல்லும், வி.ஐ.பி., கலாசாரத்துக்கு பொது மக்கள் இடையே கடும் எதிர்ப்பு உள்ளது. எந்த வொரு ஜனநாயக ...

உணவில் அதிருப்தி : பி.எஸ்.எப்., வீரர் 'டிஸ்மிஸ்'

Posted: 19 Apr 2017 01:00 PM PDT

புதுடில்லி: பாதுகாப்பு படையினருக்கு தரம் குறைந்த உணவு வகைகள் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய, பி.எஸ்.எப்., வீரர் தேஜ் பஹதுார் யாதவ், பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ஜம்மு - காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டிருந்த, பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ் பஹதுார் யாதவ், சமூக வலைதளத்தில் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் பதிவிட்ட வீடியோவில், பாதுகாப்பு படை வீரர்களுக்கு, தரத்திலும், அளவிலும் குறைந்த உணவு வகைகள் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
'வெறும் மஞ்சள் பொடியும், உப்பும் கலந்த தண்ணீர் நிறைந்த பருப்பு கடைசல், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™