Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்

Posted: 19 Apr 2017 03:47 PM PDT

புதுடில்லி: சிரியா குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது போட்டோகிராபர் ஒருவர், பலரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. சிரியாவின் அலிப்போ பகுதியில் கடந்த வாரம், பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 126 பேர் பலியாகினர். இவர்களில் 80 க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இச்சம்பவத்தை போட்டோ எடுப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் பலர் அங்கு குவிந்தனர். நெகிழ வைத்த போட்டோகிராபர் : - - அவர்களில் அப்த் அல்கதர் ஹபக் என்பவர், யாரும் எதிர்பாராத ...

அருணாச்சலில் 6 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா

Posted: 19 Apr 2017 03:44 PM PDT

பீஜிங் : தலாய் லாமாவின் இந்திய வருகைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி அறிவித்துள்ளது. இந்தியாவை பழிவாங்கும் சீனா : இந்திய - சீன எல்லையில் உள்ள 3488 கி.மீ., தூரம் வரையிலான பகுதியை 1962 போரின் போது சீனா கைப்பற்றியது. இந்தியாவால் அருணாச்சல பிரதேசம் என அழைப்படும் பகுதியை சீனா தெற்கு திபெத் என்றே அழைத்து வருகிறது. இந்தியா - சீன இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இதுவரை 19 சுற்று பேச்சுவார்த்தை ...

மே-1ம் தேதிமுதல் இணையதளத்தில் இன்ஜினியரிங் விண்ணப்பம்: அமைச்சர்

Posted: 19 Apr 2017 03:41 PM PDT

சென்னை: மே மாதம் 1ம் தேதி முதல் இன்ஜினியரிங் படிப்பிற்கான விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலை.யில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மே மாதம்1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இன்ஜினியரிங் படிப்பிற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜூன் மாதம் 3-ம் ஆன் லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 20-ம் தேதி இன்ஜினியரிங் படிப்பிற்கான ரேண்டம் ...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி

Posted: 19 Apr 2017 03:34 PM PDT

அமிர்தசரஸ்: பஞ்சாபில் இளம் தம்பதியினருக்கு பிறந்த 8 மாத பெண் குழந்தை நாளுக்கு நாள் எடை அதிகரித்து அவதியுறுகிறது. காரணம் தெரியாமல் டாக்டர்கள் திணறி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த சூரஜ்குமார், ரீனா தம்பதியினருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்ததும் மற்ற குழந்தைகள் போன்றே இயல்பான எடையுடன் இருந்தது. பின்னர் நான்கு மாதங்களுக்கு பின்னர் திடீரென குழந்தையின் எடை அதிகரிக்க துவங்கியது. தற்போது அதன் எடை 17 கிலோவுக்கு மேல் அதிகரித்து ...

‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்

Posted: 19 Apr 2017 03:32 PM PDT

- இந்தி திரை உலகில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட சினிமாக்களை தேர்ந்தெடுத்து, சிறப்பாக நடித்து பெயரைத் தட்டிச் செல்பவர் சோஹா அலிகான். - இளம் வயதிலே குணால் கெமுவை திருமணம் செய்து கொண்ட இவர், இப்போதும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு தனது நடிப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி அவர் சொல்லக்கேட்போம்! - * நான் 12 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன். திருமணத்திற்கு பிறகு என்னிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. திருமணத்திற்கு ...

உதிர்ந்ததும், மலர்ந்ததும் ஒரே நாள் - M.M.S

Posted: 19 Apr 2017 12:50 PM PDT

என்னை தன்மேல் அமரவைத்து ஆளாக்கிவிட்டு சாய்ந்ததொரு ஆலமரம் இதே நாளில்!! அம்மா என்றே அழைத்ததால் அம்மாவாகவே வளர்த்தவள் தாய் போல கருவில் என்னை சுமக்கவில்லை, உதிரத்தை பாலாக்கி எனக்கு கொடுக்கவில்லை இவையிரண்டு மட்டுமே பெறாத தாய் எனக்கு செய்யாத காரியம்!! இடுப்பு தேய என்னை தூக்கி சுமந்தவள் - நான் நல் வாழ்க்கை வாழ்வதை உடனிருந்து காணாமல் காலனுக்கு இரையானவள் என் பாட்டி!! ஆம் உதிர்ந்து ஆறு வருடங்கள் இன்றோடு!! அடுத்ததாய் மலர்ந்தது யார்? என்னை மனதில் சுமந்து என்னுடனே வாழ்க்கையை சரி ...

தகவல் களஞ்சியம் - தொடர் பதிவு

Posted: 19 Apr 2017 12:43 PM PDT

கொஞ்சம் கடி ஜோக்ஸ்

Posted: 19 Apr 2017 12:41 PM PDT

ஆசிரியர்: - சிவராமன் நூறு ரூபாய்க்கு மூன்று லிட்டர் பெட்ரோல் வாங்கினான்...இது என்ன காலம்? - மாணவன்: அதெல்லாம் ஒரு காலம் சார்!! - ------------------------------ - ஜீனி டப்பாவில ஏன் உப்பு'னு எழுதி வெச்சிருக்கே? - எறும்புகளை ஏமாத்த அப்படி எழுதி வெச்சிருக்கேன்! - ------------------------------- - என்னடா, பரீட்சையில கோழி முட்டை வாங்கி இருக்கே? - அது கோழி முட்டை இல்லப்பா... பரீட்சை நல்லா எழுதி இருக்கேன்னு டீச்சர் ஓ போட்டிருக்காங்க! - ------------------------------- - மனைவிக்குத் ...

புதுக்கவிதைகள்...

Posted: 19 Apr 2017 12:40 PM PDT

வாரத்துக்கு நாலு தடவைதான் சந்திக்கணும்

Posted: 19 Apr 2017 12:39 PM PDT


-

வலைப்பேச்சு - ரசித்தவை

Posted: 19 Apr 2017 12:39 PM PDT

குற்றவாளியை கூண்டில் அழைத்து செல்லும் வழக்கம்

Posted: 19 Apr 2017 12:35 PM PDT


-

அமைச்சர்கள் வாகனங்களில் சிவப்பு விளக்குகளுக்கு தடை

Posted: 19 Apr 2017 12:34 PM PDT

புதுடெல்லி - வரும் மே 1 முதல் மத்திய அமைச்சர்கள், பெரும்புள்ளிகள் வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்கு பயன்படுத்த தடை விதிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்களில் மட்டுமே இத்தகைய விளக்குகள் பயன்படுத்தப்படலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து அமைச்சர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண் ஜேட்லி இத்தகவலை தெரிவித்தார். விதி ...

கோடை காலம் – சரும பாதுகாப்பு

Posted: 19 Apr 2017 12:34 PM PDT

– வெயிலைப் பொறுத்தவரை பெண்கள் அளவுக்கு ஆண்கள் அக்கறை எடுத்துக் கொள்ளாததால், அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களாகவே இருக்கிறார்கள். இயற்கையாகவே அதிக நேரம் வெளியில் சுற்றக்கூடிய வேலைகளை ஆண்கள்செய்வதால் சருமப் பிரச்னைகள் இப்போது அதிகம் ஏற்படும். அதிகப்படியான வியர்வையினால் துர்நாற்றம் ஏற்படும். – இதற்கு டியோடரண்டுகளைப் பயன்படுத்துவது மட்டுமே தீர்வாகாது. துர்நாற்றமானது வியர்வையுடன் பாக்டீரியா கலப்பதன் மூலமாகவே உருவாவதால் தினமும் இரண்டு முறை குளிப்பது, க்ளின்ஸர் அல்லது ஃபேஷ் வாஷ் கொண்டு அடிக்கடி ...

ரூ.1,000 கோடி செலவில் மகாபாரதம் கதை சினிமா படமாகிறது

Posted: 19 Apr 2017 12:32 PM PDT

- சென்னை, மகாபாரதம் கதை ரூ.1,000 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சினிமா படமாக தயாராகிறது. அடுத்த வருடம் படப்பிடிப்பை தொடங்கி 2020–ம் ஆண்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். சரித்திர கதைகள் சரித்திர, புராண கதையம்சம் உள்ள படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே வரலாற்று பின்னணியில் தயாரான பாகுபலி வசூல் சாதனை நிகழ்த்தியதால் அதன் இரண்டாம் பாகம் உருவாகி விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சுந்தர்.சி இயக்கத்தில் ...

இடுப்பு பிடிச்சிருக்குன்னு சொன்னது தப்பாம்…!!

Posted: 19 Apr 2017 12:32 PM PDT

கோடை காலம்- செல்ல பிராணிகள் பத்திரம்!

Posted: 19 Apr 2017 12:31 PM PDT

- ''கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக செல்லப்பிராணிகளுக்குப் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் இருக்கிறது. வெப்ப பக்கவாதம், உண்ணிசார்ந்த நோய்கள், கொப்பளங்கள் உருவாதல், ரத்த சோகை, புழுக்கள் பாதிப்பு, காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் செல்லப்பிராணிகள் பாதிக்கப்படுகிறது. சோர்வாக காணப்படுவது, சிறுநீரில் ரத்தம் வருவது, வாந்தி எடுப்பது, உணவு எடுத்துகொள்ளாதது போன்றவை உங்கள் செல்லப்பிராணிகள் ஆரோக்கியமாக இல்லையென்பதற்கான அறிகுறிகள். இதுபோன்ற நோய்களின் தாக்கத்தின் அறிகுறிகளை ...

ஹேப்பி சம்மர்

Posted: 19 Apr 2017 12:30 PM PDT

- கோடையில் அதிகம் பாதிக்கப் படும் பகுதியான சருமத்தின் நலன் காக்க ஆலோசனை வழங்குகிறார் சரும நல மருத்துவர் நிதிசிங். ''பெண்களைப் பொறுத்தவரை வெயில் வரும் முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்துவிட வேண்டும். உடலை இறுக்காத பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். உள்ளாடை தேர்விலும் பருத்திக்கே முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. நைலான் துணிகளில் லேஸ், ஸ்பான்ஞ் வைத்து தைத்த உள்ளாடைகளை அணியக்கூடாது. பிரேஸியரை மிகவும் இறுக்கமாக அணிவதால் மார்பகங்களின் கீழ் பகுதிகளில் வியர்வைத் தொற்று வரும். உடல்பகுதி ...

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்

Posted: 19 Apr 2017 12:30 PM PDT

இந்த தளத்திற்கு  சென்று உங்களுக்கு தேவையானதை படிக்கவும்.


http://tamilpdfworld.blogspot.in

அன்புடன்


அருள்

இதயம் இடமாற்றம்…! – கவிதை

Posted: 19 Apr 2017 12:28 PM PDT

விவேகம்

Posted: 19 Apr 2017 12:28 PM PDT

– ஆமையும் முயலும் ஓர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டனவே.. அந்தக் கதை தெரியுமா? கேட்டார் ஆசிரியர். – அந்தக் கதையும் சரி கதை புகட்டும் பாடமும் சரி அதன் தலைப்பிலேயே உள்ளதே என்றான் மாணவன் – சொல்லடா அதிகப்பிரசங்கி அதட்டினார் ஆசிரியர் – கோபப்படாமல் நீங்களும் முயன்றுதான் பார்க்கலாமே? – ஓஹோ எனக்கே நீ பாடம் சொல்கிறாயா? கையை ஓங்கினார் ஆசிரியர் – முயலாதவனுக்கே வரும் கோபமும் ஆத்திரமும் அவை மட்டுமல்ல தோல்வியும் சலிப்பும் மற்றும் ஏக்கமும் வியாதியும் இப்பொழுது தெரிந்ததா ஆசிரியரே அந்தக் ...

உப்பு சப்பில்லாம சமைச்சுப்போட்டா, எப்படி வாழறது…!

Posted: 19 Apr 2017 12:27 PM PDT

கூகுள் மேப்ஸில் சென்னைப் பகுதியைக் காணோம்!

Posted: 19 Apr 2017 12:26 PM PDT

- தெரியாத ஒரு இடத்துக்குச் சென்றால் நமக்குத் துணை நிற்பது, கூகுள் மேப்ஸ்தான். இதனால், கூகுள் மேப்ஸ் இருக்க பயமேன் என நம்மவர்கள் சுத்திவந்தனர். - அண்மைக் காலங்களாக, எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளின் ஏ.டிஎம்-களில் தமிழ் மொழி நீக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கூகுள் மேப்ஸில் இன்று காலை முதல் சென்னை தெரியவில்லை. - கூகுள் மேப்ஸில், சென்னை என்று தேடினால், கோவூர் என்று காட்டப்படுகிறது. இதனால் சென்னைவாசிகள், அதிர்ச்சியடைந்தனர். 'கிணத்தை காணோம்' வடிவேலு காமெடியைப்போல, தற்போது கூகுள் ...

அதென்ன? வெஜிட்ரிபுள் பிரியாணி?

Posted: 19 Apr 2017 12:25 PM PDT

அதென்ன? வெஜிட்ரிபுள் பிரியாணி? – மூணு வகை காய்கறிகளில் பண்ணுனது சார்! – கே.அருள்சாமி – ———————————— – ஏங்க, இது ஆயிரங்கால் மண்டபம்னு சொல்றீங்க.. இருநூற்று ஐம்பதுதானே இருக்கு? – ஆயிரம் கால் இருநூற்று ஐம்பதுதானே சார்! – ராஜ்குமார் – ——————————— – மாப்பிள்ளையும் பொண்ணும் லூசுங்க…! – அப்ப MAD ஃபார் ஈச் அதர்னு சொல்லு..! – ராஜ்குமார் – —————————————

இணையதள விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட தமிழரின் சாதனை வீடியோ!

Posted: 19 Apr 2017 12:20 PM PDT

சிறந்த இணையதளப் பங்களிப்புக்கான 'வெப்பி' விருதுகளுக்கு, அல்-ஜஸீராவின் காணொளிக் கட்டுரை தேர்வாகியுள்ளது. இந்தியாவின் 'பேட்மேன்' என அழைக்கப்படும் முருகானந்தத்தின் சாதனையை விளக்கும் வீடியோ இதுவாகும். இணையதளத்தில் சிறந்த படைப்புகளை வழங்குபவர்களுக்கு, ஆண்டுதோறும் 'வெப்பி' அவார்ட்ஸ் வழங்கப்பட்டுவருகிறது. இதற்காகத் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு, ஆன்லைனில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான சிறந்த சமூகம் சார்ந்த பங்களிப்புக்கான தேர்வுகளில், தமிழகத்தின் ...

கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன்

Posted: 19 Apr 2017 12:19 PM PDT

சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழகத்தில், தகவலாற்றுப்படை என்ற நிகழ்ச்சி நடந்தது.இதில், பழந்தமிழ் கல்வெட்டுகள் என்ற தலைப்பில் பத்மாவதி பேசியதாவது: தமிழ் மொழிக்கு, சங்ககாலத்தில் எழுந்து இருந்ததா, இல்லையா என்ற கேள்வி, 1882ல், தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படும் வரை நீடித்தது. வெங்கையா, கிருஷ்ண சாஸ்திரி, கே.வி. சுப்ரமணிய அய்யர், டி.வி. மகாலிங்கம், ஐராவதம் மகாதேவன், நாகசாமி போன்றவர்களால், அவை படித்து அறியப்பட்டன. நடுகற்கள்: தொடர்ந்து, பூமியின் மேற்பரப்பிலும், அகழாய்வுகளிலும் ...

படித்ததில் பிடித்தது - II :) -- துணிந்தால் துக்கம் இல்லை!

Posted: 19 Apr 2017 12:14 PM PDT

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! @krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா? சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது. அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான ...

அருமையான கடவுள் படங்கள் :)

Posted: 19 Apr 2017 12:04 PM PDT

அம்ருதேஷ்வரா கோயில்

Posted: 19 Apr 2017 11:55 AM PDT

--- சிக்மகளூரிலிருந்து 67 கி.மீ தொலைவில் அம்ருதேஷ்வரா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஹொய்சள வம்சத்தை சேர்ந்த இரண்டாம் வீர பல்லால என்ற அரசரால் 1196-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கோயிலுக்கு இதைக் கட்டிய சிற்பியான அம்ருதேஷ்வர தண்டநாயகரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது ஒரு ஆச்சரியமான விஷயமாகும். - -------------------------------- படம் : தினேஷ் கண்ணம்பாடடி நன்றி- தமிழ் நேட்டிவ் பிளாநெட்

வெயிலுக்கேற்ற குளியல்

Posted: 19 Apr 2017 11:55 AM PDT

- -ஸ்ரீதேவி மோகன் - மழையும் இல்லை… மரமும் இல்லை. வெயில் வெயில் வெயில் மட்டுமே என்ற நிலைமைதான் இப்போது. வாட்டும் இந்த வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, வெயிலின் கொடுமையை தணித்துக்கொள்ள சில குளியல் வகைகளை நமக்காக இங்கே சொல்கிறார் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் இந்திரா தேவி… - * வெயில் நாட்களில் பொதுவாக இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. குழந்தைகளாக இருந்தால் வெது வெதுப்பான நீரை பயன்படுத்தலாம். * வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் உடம்பு மற்றும் தலைக்கு நல்லெண்ணெயை ...

கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l

Posted: 19 Apr 2017 11:53 AM PDT

வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய விஜய மல்லையா இங்கிலாந்தில் தங்கி இந்தியாவை ஏமாற்றி வந்தார். இதனால் வங்கிகள் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதனையடுத்து, விஜயமல்லையாவை கைது செய்யும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன. இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று ஸ்காட்லாந்து போலீசார் விஜயமல்லையாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயமல்லையா. லண்டன் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று ...

சிவ ஆகம முறையில் வழிபாடுகள் (தமிழில்) - டிப்ளமோ வகுப்பு சேர விருப்பமா?

Posted: 19 Apr 2017 10:21 AM PDT

SRM யூனிவர்சிட்டி (தமிழ்ப்பேராயம்) மற்றும் தெய்வத்தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப் படிப்பின் இந்த வருட சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த படிப்பு அனைவருக்கும் தேவையான ஒன்று. இதில் பெரியவர்கள், சிறியவர்கள், ஆண்கள், பெண்கள், இனம், மொழி, சாதி, நிறம் என எந்தவேறுபாடும் பார்ப்பது கிடையாது. ஒரே தகுதி தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்கவேண்டும். அவ்வளவே! பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள வாழ்வியல் சடங்குகளையும் கோவில் கடவுள் மங்கலம் மற்றும் நாட்பூசைகளையும் சிவதீக்கை ...

ஆஸ்திரேலியாவில் விசா ரத்து நடவடிக்கையால் 95,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு திடீர் ஆபத்து

Posted: 19 Apr 2017 10:18 AM PDT

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மையை தடுக்க 95 ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் வேலையாட்கள் பற்றாக்குறையை போக்க '457 விசா' என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டது. அதன்படி திறமையுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் இந்த விசாவில் சென்று அங்கு 4 ஆண்டுகள் தங்கி வேலை செய்யலாம். இந்த விசா அடிப்படையில் 95,757 வெளிநாட்டு ஊழியர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அதை தொடர்ந்து ...

தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்?

Posted: 19 Apr 2017 08:12 AM PDT

தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? சென்னை: தினகரனையும், அவரது குடும்பத்தையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று, மூத்த அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடி விவாதித்து முடிவெடுத்தனர். அந்த கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள் பலரும் தங்கள் குமுறல்களை, முதல்வர் பழனிச்சாமியிடம் கொட்டித் தீர்த்தனர். முதல்வரும், தனக்கு ஏற்பட்ட சங்கடங்களை, அவர்களிடம் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. மூத்த அமைச்சர் புலம்பல்: கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த அமைச்சர் ...

அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் திடீரென அறிவித்தார்.

Posted: 19 Apr 2017 08:04 AM PDT

சென்னை: ‛‛அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் இன்று (ஏப்.19) காலை தினகரன் திடீரென அறிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அவசர கதி: போட்டி கூட்டம் என்பதெல்லாம் கிடையாது. சிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசினர். அதுபோல் நான் பேச விரும்பவில்லை. 1.5 கோடி தொண்டர்கள் சேர்ந்தது தான் இயக்கம். தொண்டர்களாலும், ஜெயலலிதாவின் ஆசியினாலும் ஆட்சி, கட்சி நடக்கிறது. ஏதோ சிலர் தங்களுக்கு உள்ள பயத்தால், என்னையும், எனது குடும்பத்தையும் ஒதுக்க முடிவு செய்தனர். அது பற்றி கவலையில்லை. அவசர கதியில் அறிவித்துள்ளனர். ...

அன்பு மனதிலும் இருக்க வேண்டும்...

Posted: 19 Apr 2017 07:47 AM PDT

கட்சியிலிருந்து சசி குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கி வைக்க அமைச்சர்கள் முடிவு

Posted: 19 Apr 2017 07:42 AM PDT

கட்சியிலிருந்து சசி குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கி வைக்க அமைச்சர்கள் முடிவு: சென்னை: தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சசி குடும்பத்தினை கட்சியை விட்டு முழுமையாக நீக்கிவிட்டு ஆட்சியை காப்பாற்ற அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அ.தி.மு.க., அணிகளை இணைப்பதற்கான பேச்சு துவங்கி உள்ளது. தினகரனை ஓரங்கட்டி விட்டு, இரு தரப்பும் இணைவதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பச்சைக்கொடி காட்டியிருந்தார். ...

பாவேந்தர் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 19 Apr 2017 04:24 AM PDT

பெங்களூரு ஐ .டி.ஐ . தமிழ்மன்றத்தில் 9.4.2017 அன்று நடந்த 164 வது பாவாணர் பாட்டரங்கில், 2 நிமிட உடனடி கவிதை போட்டி நடந்தது."பாவேந்தர்" என்ற தலைப்பு தரப்பட்டது. இப்போட்டியில் மூன்றாம் பரிசுப் பெற்ற கவிஞர் இரா .இரவி கவிதை ! பாவேந்தர் ! கவிஞர் இரா .இரவி ! பாவேந்தர் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் பாரதி தாசன் ! கனக சுப்புரத்தினம் என்ற பெயரை குரு பாரதிக்காக பாரதிதாசனாக மாற்றியவர்! குடும்பக்கட்டுப்பாடு பற்றி அன்றே குமுகத்திற்குச் சொன்ன முதல் கவிஞர் ! பகுத்தறிவுப் பகலவன் கருத்துக்களை ...

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 19 Apr 2017 04:23 AM PDT

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி ! இரவி என்றால் சூரியன் என்று பொருள் உண்டு இரவியின் தாகத்தை சூரிய தாகமாகப் பதிகிறேன் ! காமராசர் கக்கன் போன்ற நேர்மையாளர்கள் கரங்களில் நாட்டின் நிர்வாகம் வரவேண்டும் ! சின்னமீனைப் போட்டு சுறாமீனை விழுங்கும் சின்னப் புத்திக்காரர்கள் ஒழிய வேண்டும் ! நீதி நேர்மை நியாயம் எங்கும் எப்போதும் நிரந்தரமாக மக்களிடையே நிலவ வேண்டும் ! நாடு முழுவதும் மதுக்கடைகளும் ஆலைகளும் நிரந்தரமாக உடனடியாக மூடிவிட வேண்டும் ! வெண்சுருட்டு ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 19 Apr 2017 04:22 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! போனது உழவர்களின் மானமன்று ஆள்வோரின் மானம் ! கண்டுகொள்ளாதவர் கண்டுகொள்ள கவனம் ஈர்ப்பு ! யானை கட்டி போரடித்த தமிழன் ஊழல்வாதிகளிடம் போராடும் நிலை ! ஊரின் பசியாற்றிய வள்ளலார்களின் பசிப் போக்க வழியில்லை ! நடிகையாக இருந்திருந்தால் கிட்டியிருக்கும் வாய்ப்பு சந்திக்க ! வெளிநாடு சுற்றிடவே நேரம் போதவில்லை இவர்களை சந்திக்க ஏது நேரம் ? தொழ வேண்டிய உழவர்களை அழ வைத்தவர்கள் அழிவு உறுதி ! உலகே சிரிக்கிறது இந்தியாவின் நிர்வாகச் சீர்கேடு ...

பெருங்காட்டுச் சுனை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கூடல் தாரிக் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 19 Apr 2017 04:21 AM PDT

பெருங்காட்டுச் சுனை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கூடல் தாரிக் ! 9942530284 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! ஓவியா பதிப்பகம், 17-13-11, ஸ்ரீராம் வளாகம், காந்தி நகர், முக்கியச் சாலை, வத்தலகுண்டு 624 202 80 பக்கங்கள் விலை ரூ. 70. 04543 – 297297 ************** முனைவர் கா.பீர் முகம்மது தாரிக், கூடல் தாரிக் என்னும் பெயரில் எழுதி வருபவர். கம்பம் இலாஹி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருபவர். முதல் நூல் 'ஆலிவ் இலைகள்', இரண்டாவது நூல் 'பெருங்காட்டுச் சுனை'. இந்த நூல் மாமனிதர் அப்துல் ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 19 Apr 2017 04:19 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! வருத்தத்தில் விவசாயி மகிழ்வில் மணற்கொள்ளையர் வறண்ட ஆறு ! அழுகை நிறுத்தியது குழந்தை சவ் மிட்டாய்காரனின் கை தட்டும் பொம்மை ! சுவை அதிகம் பெரிதை விட சிறிது வெள்ளரிப்பிஞ்சு ! பத்துப்பொருத்தம் இருந்த இணைகள் மணவிலக்கு வேண்டி ! சொத்துக்களில் சிறந்த சொத்து தன்னம்பிக்கை ! அன்று சமர்கிருதம் இன்று நீட் தேர்வு அவாள் சதி ! திரும்பக் கிடைக்காது வீணாக்கிய வினாடிகள் ! பிறரை நேசிக்கும் முன் முதலில் உன்னை நேசி ! தேடி வராது தேடிச்செல் ...

சுயமரியாதை ! நூல்ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 19 Apr 2017 04:17 AM PDT

சுயமரியாதை ! நூல்ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! நேசம் பதிப்பகம் ! (மனிதவள மேம்பாட்டு மையத்தின் ஓர் அங்கம்) எண்.9 ஜி.ஏ.ரோடு, சென்னை-600 021. nesambublication@gmail.com 25980044, 94443 61136, பக்கம் 64 விலை 30. ********** 'சுயமரியாதை' என்ற தலைப்பே எல்லோரும் விரும்பிடும் நல்ல தலைப்பு. நூல் ஆசிரியர் நேர்மையான முதன்மைச் செயலர் எழுத்தாளர், பேச்சாளர் என பன்முக ஆற்றல் கொண்ட முதுமுனைவர் வெ. இறையன்பு. நூலை வாங்கிப் படித்துப் பார்த்தேன். ...

குத்தூசி ! நூல் ஆசிரியர் : நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 19 Apr 2017 04:17 AM PDT

குத்தூசி ! நூல் ஆசிரியர் : நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! சுலோச்சனா பதிப்பகம் 26-1-டி-கிராஸ் சர். எம். வி நகர் இராமையா தேங்காய் தோட்டம், இராமமூர்த்தி நகர், பெங்களூரு. 204 பக்கங்கள் விலை ரூ. 130. பெங்களூரு கீதவானி நகர் தமிழ்மன்றத்தின் பாவாணர் பாட்டரங்கின் பொறுப்பாளர் நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன். பெங்களூரு பெருமைகளில் ஒன்றானவர். நான் அங்கிருந்த ஓராண்டில் இலக்கிய நட்பால் ஒன்றானவர். எனது வேண்டுகோளை ஏற்று ஹைக்கூ நூற்றாண்டு விழாவை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™