Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆதார் - பான்கார்டு இணைப்பு: 10 அம்சங்கள்

Posted: 10 Apr 2017 12:10 AM PDT

புதுடில்லி: ஆதார் எண் மற்றும் பான் கார்டு விவரங்களை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில் ஏற்படும் குளறுபடிகளை நீக்க, சில வழிமுறைகளையும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதன் 10 முக்கிய அம்சங்கள்:

1.நாடு முழுவதும், 111 கோடி பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், 25 கோடி பேர் மட்டுமே, நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டை பெற்றுள்ளனர். இவர்களில், 6 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தி வருகின்றனர்.
2.ஆதார் எண் விவரங்களையும், பான் கார்டு விவரங்களையும் இணைக்கும் பணியை, 1.08 கோடி பேர் மட்டுமே இதுவரை ...

மூன்று மாதங்களுக்கு தேர்தல் இல்லை: தேர்தல் அதிகாரிகள் தகவல்

Posted: 10 Apr 2017 09:49 AM PDT

'சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு, இன்னும் மூன்று மாதங்களுக்கு, தேர்தல் நடத்த வாய்ப்பில்லை' என, தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிடப் போவதாக தகவல் வெளியானதும், பணப் பட்டுவாடா அதிகம் இருக்கும் என, தகவல் வெளியானது.வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஐந்து தேர்தல் பார்வையாளர்கள், ஒரு சிறப்பு தனி தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டனர்.
சமூக வலைதளங்களில் பரவின
துணை ராணுவ வீரர்கள், 720 பேர், ...

பிரதமர் அலுவலகம் முன் நிர்வாண போராட்டம்; விவசாயிகள் போராட்டம் மன அழுத்தம் காரணமா?

Posted: 10 Apr 2017 10:00 AM PDT

டில்லியில், பிரதமர் அலுவலகம் முன், திடீரென நிர்வாணப் போராட்டத்தில், தமிழக விவசாயிகள் இறங்கியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கி கடன் ரத்து, கூடுதல் நிவாரண நிதி உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள், டில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அய்யாக்கண்ணு தலைமையிலான, 40 விவசாயிகள், பாம்பு கறி உண்பது; எலிக்கறி உண்பது; மண்டை ஓடுகளை கழுத்தில் மாட்டிக் கொள்வது; துாக்கு கயிற்றை மாட்டிக் கொள்வது போன்ற போராட்டங்களை நடத்தினர்.
மனு அளித்தனர்
இந்நிலையில் நேற்று, பிரதமர் அலுவலக த்திற்கு மனு கொடுக்கப் போவதாக கூறி, ...

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கு காரணம் அம்பலம்! 29 பக்க அறிக்கை வெளியிட்டது தேர்தல் கமிஷன்

Posted: 10 Apr 2017 10:08 AM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை, ரத்து செய்ததற்கான காரணம் என்னவென விவரித்து, 29 பக்க அறிக்கையை, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தினகரன் தரப்பு மோசடிகள், புட்டு புட்டு வைக்கப்பட்டுள்ளன.

ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., அம்மா அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். அவருக்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை சமாளித்து, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வாரி வழங்கினார். அதனால், இடைத்தேர்தலை ரத்து செய்து, தேர்தல் கமிஷன் அதிரடியாக உத்தரவிட்டது.
அந்த உத்தரவில், தேர்தல் ...

சி.பி.ஐ.,யை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள்... ரகளை! அடுத்தடுத்து ஒத்திவைப்பால் ராஜ்யசபா ஸ்தம்பிப்பு

Posted: 10 Apr 2017 10:10 AM PDT

புதுடில்லி: 'பா.ஜ., ஆளாத மாநில அரசுகள், முதல்வர்கள் மீது, சி.பி.ஐ., எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை ஏவி, பொய் வழக்குகள் தொடரப்படுகின்றன' என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவில் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.

ராஜ்யசபா நேற்று துவங்கியதும், காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மா, ''பா.ஜ., ஆளாத மாநில முதல்வர்கள் பழிவாங்கப்படுகின்றனர்; இது குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளேன்,'' என்றார். ஆனால், அந்த நோட்டீசை ஏற்க மறுத்த, ராஜ்யசபா துணைத் தலைவர், பி.ஜே.குரியன், ...

பல கோடி பணம் எப்படி? அமைச்சரிடம் கிடுக்கிப்பிடி

Posted: 10 Apr 2017 10:36 AM PDT

பல கோடி பணம் பட்டுவாடா மற்றும் தேர்தல் பேரம் தொடர்பாக, வருமான வரித்துறை அலுவலகத்தில், நேற்று, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமாரிடம், அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், எம்.எல்.ஏ., விடுதி உள்ளிட்ட, 38 இடங்களில், சமீபத்தில், வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அதில், அவரது கணக்காளர் சீனிவாசன் வீட்டில் இருந்து, வாக்காளர்களுக்கு தலா, 4,000 ரூபாய் தரப்பட்ட பட்டியல் கிடைத்தது. அதன் மூலம், அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன் மற்றும் முதல்வர் பழனிசாமி மூலமாக, 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்ததது தெரிய ...

அமைச்சரவை மாற்றம் வருமா? எம்.எல்.ஏ.,க்கள் எதிர்பார்ப்பு

Posted: 10 Apr 2017 10:39 AM PDT

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையை தொடர்ந்து, அமைச்சரவையில் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய், பணம் பட்டுவாடா செய்ததற்கான, ஆவணங்கள் சிக்கின. அதன் தொடர்ச்சியாக, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ஒட்டுமொத்தமாக ராஜினாமா
விஜயபாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில், எந்தெந்த அமைச்சர்கள் மூலம், பணம் பட்டுவாடா ...

இந்தியா - ஆஸி., பிரதமர்கள் சந்திப்பு; 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

Posted: 10 Apr 2017 10:48 AM PDT

புதுடில்லி: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லுடன், இரு தரப்பு உறவுகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று விவாதித்தார். அதைத் தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது உட்பட ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.ஆஸ்திரேலியாவின் பிரதமர் மால்கம் டர்ன்புல், நான்கு நாள் அரசு முறை பயணமாக டில்லிக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார்.
நேற்று காலையில், டர்ன்புல் மற்றும் பிரதமர் மோடி, இரு தரப்பு உறவுகள், பிராந்திய உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசனை ...

இடைத்தேர்தல் ரத்து; ரூ.1.10 கோடி வீண்

Posted: 10 Apr 2017 11:06 AM PDT

இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், தேர்தல் கமிஷன் செலவழித்த, 1.10 கோடி ரூபாய் வீணாகி உள்ளது.

ஒரு சட்டசபை தொகுதிக்கு, தேர்தல் நடத்த, 1.50 கோடி ரூபாய் செலவாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி, மார்ச் 9ல், அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.
தேர்தலுக்காக, 256 ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யப்பட்டன. அங்கு, அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன. ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 1,842 பேர் தேர்வு செய்யப்பட்டு, இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
பணம் பட்டுவாடா
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, 720 ...

செலவு தொகையை கொடு! சுயேச்சைகள் மனு

Posted: 10 Apr 2017 11:55 AM PDT

சென்னை: 'தவறு செய்த வேட்பாளர்களிடம் இருந்து, நாங்கள் செலவு செய்த பணத்தை பெற்றுத் தரவேண்டும்' என, சுயேச்சை வேட்பாளர் ஆனந்த், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம், மனு கொடுத்துள்ளார்.
இந்து மக்கள் கட்சி ஆதரவு பெற்ற, ஆர்.கே.நகர் சுயேச்சை வேட்பாளர் ஆனந்த் கொடுத்துள்ள மனு: தவறு செய்த வேட்பாளர்களை, தகுதிநீக்கம் செய்துவிட்டு, மீதம் உள்ள வேட்பாளர்களை வைத்து, தேர்தலை நடத்த வேண்டும் என, ஏப்., 7ல் மனு கொடுத்தேன். தற்போது, ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து, ஜனநாயகத்தை படுகொலை செய்து விட்டீர்கள்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு, மீண்டும் ...

அலுவலகத்துக்கு லேட்டா? ஒரு நாள் சம்பளம் 'கட்'

Posted: 10 Apr 2017 12:58 PM PDT

லக்னோ: உத்தர பிரதேசத்தில், அரசு அலுவலகத்தில், அமைச்சர் அதிரடி சோதனை நடத்திய போது, ஏராளமான ஊழியர்கள் பணிக்கு வராததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர்களுக்கு, ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யும்படி, அமைச்சர் உத்தரவிட்டார்.
எச்சரிக்கை:
உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக, சமீபத்தில் பதவியேற்றார். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் ஆதித்யநாத், 'அரசு ஊழியர்கள், ஒரு நாளில், 18 முதல், 20 மணி நேரம் உழைக்க வேண்டும்; இல்லாவிட்டால், வேலையை விட்டு செல்லலாம்' என, எச்சரிக்கை விடுத்திருந்தார். ...

'சிந்து மாகாணம் இல்லையே': அத்வானி வேதனை

Posted: 10 Apr 2017 01:45 PM PDT

புதுடில்லி: ''நான் பிறந்த சிந்து மாகாணம், இந்தியாவுடன் இணையவில்லையே என்ற வருத்தம், எனக்கு எப்போதும் உள்ளது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, டில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியதாவது:
எனக்கு நீண்ட காலமாகவே மிகப் பெரிய வருத்தம் உள்ளது. நான் பிறந்த, சுதந்திரத்துக்கு முன் ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்த சிந்து மாகாணம், சுதந்திரத்துக்கு பின், இந்தியாவுடன் ...

ம.பி.,யில் பூரண மது விலக்கு: முதல்வர் சவுகான் அதிரடி

Posted: 10 Apr 2017 02:56 PM PDT

போபால்: ''ம.பி.,யில், படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்,'' என, மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.

மத்திய பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் பல மாவட்டங்களில், மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ளது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்ட மதுக் கடைகள் மூடப்பட்டன.
போராட்டம்:
மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக, குடியிருப்பு பகுதிகளில், புதிய கடைகளை திறக்க, கலால் வரித்துறை ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™