Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தேவை - கவிதை

Posted: 10 Apr 2017 03:56 PM PDT

அப்பா சாப்பிட காரம் சேர்க்க வேண்டும்
தாத்தாவுக்கு சிறுதானிய தோசை தேவை
பாட்டி சூடு குறைந்த ரசம் தொட மாட்டாள்
மாமா சாப்பிட ஏதேனுமொரு கீரை வேண்டும்
-
தம்பி ஆர்கானிக் மட்டுமே தொடுவேன் என்பான்
எண்ணெய் மிதக்காமல் உள்ளிறங்காது எனக்கு
நிஷாகுட்டி புப்பு சாதம் மட்டுமே...
அம்மா சாப்பிட
இவையெல்லாம் பழையதாக வேண்டும்
-
-----------------------
ந.சிவநேசன்
ஆனந்த விகடன்
-

பலூன் - கவிதை

Posted: 10 Apr 2017 03:55 PM PDT

ஒரு பலூன் உடையும்பொழுது வண்ணங்களின் வடிவமெடுத்தக் காற்று மீண்டும் உருவமிழக்கிறது - புவியீர்ப்பைக் கேலிசெய்து புன்னகைத்த இழைகளின் மிச்சம் பூமியின் காலில் விழுகிறது - கட்டிய நூலுடனும் கந்தலான உடலுடனும் தாலியுடன் நிற்கும் கைம்பெண்ணை நினைவுபடுத்துகிறது - சிறைபட்ட காற்று சத்தம்போட்டுச் சிரித்து சுதந்திரம் பெற்றதை உணர்த்துகிறது - உன்னோடு விளையாடிக்கொண்டிருந்த என் சுவாசம் தனியே விசும்பிக்கொண்டிருக்கிறது - ---------------------------- இளந்தென்றல் திரவியம் ஆனந்த விகடன்

நாய் கடிச்ச உடனேயே ஏன் ஓடி வரலை...?

Posted: 10 Apr 2017 02:18 PM PDT

- நாய் கடிச்ச உடனே ஓடி வரவேண்டியதுதானே? - அங்கே 4ஜி கிடைச்சது, டாக்டர்! - கோ.பகவான் - --------------------------------- - இதை இப்படியே விடக்கூடாது! - ஆம் மன்னா...குறைந்தது ஒரு மீம்ஸாவது போட்டனுப்ப வேண்டும்! - கோ.பகவான் - --------------------------------- - எங்க கிராண்மா அமெரிக்காவுல இருந்தவங்க! - ஒரு வில்லேஜ்ல ஒரு போக்கிமான்...னு அவங்க ஸ்டோரி சொல்றதுல இருந்தே, அது நல்லா தெரியுதே! - தேவதாசன் - ----------------------------------- - புலவரே நான் உம்மை புகழ்ந்து பாட்டடுமா? - அய்யோ ...

புலவருக்கு ஏன் சவுக்கடி கொடுக்கிறார்கள்...!

Posted: 10 Apr 2017 02:09 PM PDT

புலவருக்கு ஏன் சவுக்கடி கொடுக்கிறார்கள்? - மன்னர் காதில் ரத்தம் வருவதைப் பார்த்தும் தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தாராம்! - அம்பை தேவா - ---------------------------------- - ஏடி.எம்.எல்லாம் காலியாக இருப்பதைப் பார்த்தால் நிலைமை சீராகிவிட்டது போலிருக்கே? - நாம்தான் ஏ.டி.எம்.ல பணமே போடுவது இல்லையே, மன்னா! - கோ.பகவான் - -------------------------------------- போச்சு, போச்சு எல்லாம் போச்சு மன்னா! - என்ன ஆனது தளபதி? - எதிரி, போர்க்களத்தில் ஏ.டி.எம்.அமைத்து நம் படை வீரர்களைத் ...

வானத்தில் பிறந்த தேவதை... 42,000 அடி உயரத்தில் நிகழ்ந்த ஆச்சர்யம்!

Posted: 10 Apr 2017 01:55 PM PDT

- நஃபி டியாபி என்ற பெண், 42,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம், உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. துருக்கி விமானத்தில், இஸ்தான்புல் சென்றுகொண்டிருந்தார் ஏழு மாத கர்ப்பிணி டியாபி. அவருக்கு, திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. விமானப் பணிப் பெண்கள், உடனடியாக அவருக்கு பிரசவம் பார்த்தனர். நீண்ட நேரம் வலியால் அவதிப்பட்ட டியாபி, அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். விமானத்தில் பறந்துகொண்டே உலகுக்கு வந்த அந்தக் ...

குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் இல்லை! நெல்லை மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவு!

Posted: 10 Apr 2017 01:49 PM PDT

நெல்லை மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாகவும் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து விட்டதாலும் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை தண்ணீர் வழங்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் கருணாகரன் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் ஓடும் ஆறுகளிலேயே அண்டை மாநிலங்களுடன் நதிநீர் பிரச்னை இல்லாத ஆறு, தாமிரபரணி மட்டுமே. தமிழக எல்லையிலேயே உற்பத்தியாகி தமிழக எல்லையிலேயே கடலில் கலப்பது தான் இதற்கு முக்கிய காரணம். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 125 கி.மீ ...

டில்லியில் பொன்.ராதா., கமல் திடீர் சந்திப்பு

Posted: 10 Apr 2017 01:44 PM PDT

- புதுடில்லி: மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நடிகர் கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாக இன்று (ஏப்-10) சந்தித்து பேசினார். டில்லியில் உள்ள பொன்.ராதாகிருஷ்ணனின் அலுவலகத்திற்கு வந்த நடிகர் கமல்ஹாசனை, பொன். ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த தகவலை பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். - -------------------------------- தினமலர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 10 Apr 2017 12:51 PM PDT

- புதுடெல்லி, டெல்லியில் நடைபெற்ற விரிவான ஆலோசனைக்குபிறகு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கான 29 பக்க காரணங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியான விரிவான அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அரசியல் சட்டத்தின் 324 ஆவது பிரிவின் கீழ் ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. வருமானவரித்துறை அளித்த தகவலின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற ...

ரங்கு ரக்கர.... ரக்கர ரக்கர...! ரங்கு ரக்கர.... ரக்கர ரக்கர...!

Posted: 10 Apr 2017 11:27 AM PDT

வசீகரனின் அக்கறையின்மையாலும்,
கவனக் குறைவாலும்
காதல் ரத்தாகிறது என்பதை அனைவரும் அறியவும்!!


ஓட்ட போடலாம் வாங்க!

Posted: 10 Apr 2017 11:24 AM PDT

கவிதையைப் போல் ஒரு கவிதை

Posted: 10 Apr 2017 07:56 AM PDT

- இன்றைய தேதி வரையிலும் எனக்கு வாழ்க்கை புரிபடவில்லை என் முதல் கவிதையைப் போல் – எவ்வளவு ஞாபகப் படுத்தியும் என் மழலைப் ப்ருவம் நினைவில்லை என் பள்ளிப்பாடங்களைப் போல் – இன்றுவரை துன்பமென்பது நிரந்தரமற நிரந்தரமாய் இருக்கிறது மழையைப் போல் – என்றென்றும் இன்பமென்பது எதிர்பாராத நேரத்தில் வந்து எதிர்பாராத நேரத்தில் மறைகிறது வானவில்லைப் போல் – ———————- படித்ததில் பிடித்தது –

மரணம்! சில சிந்தனைகள்

Posted: 10 Apr 2017 07:56 AM PDT

- மரணம் - அனுபவம் அடுத்த வீட்டு நிகழ்வில் - மரணம் - இழப்பு நம் வீட்டு நிகழ்வில் - மரணம் - நிவாரணம் நோயாளிகளின் நோக்கில்! - மரணம் - சுமைதாங்கி ஏழைகளின் வாழ்வில்! - மரணம் - நிகழ்வு வயதானோர் கணக்கில் - மரணம் - ஆறுதல் காதலின் பிரிவில் - மரணம் - சுகம் ஞானிகளின் பார்வையில் - மரணம் - தத்துவம் சிந்தனையாளர்களின் சிந்தையில் - மரணம் - மர்மம் மனிதர்களின் பார்வையில் - ------------------ படித்தில் பிடித்தது

எந்நேரமும் இன்பமாய் இரு...!

Posted: 10 Apr 2017 07:55 AM PDT

இருக்க கூடாத வாசகங்கள்

Posted: 10 Apr 2017 07:53 AM PDT

இந்த வார திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Posted: 10 Apr 2017 07:52 AM PDT


இளமையுடன் இருக்கும் நடிகர்...
--

RK நகரில் வடிவேலு. இப்படியும் நடக்கிறதா?

Posted: 10 Apr 2017 07:48 AM PDTஅதிமுக மகளீர் அணி-தினகரன் அணி- ஆஹா இப்படியுமா?

ஊருக்கெல்லாம் புத்தி சொல்ல வயசு பத்தலே...!

Posted: 10 Apr 2017 07:47 AM PDT

யூடியூப் பகிர்வு: இறப்பில் சிரிப்பு - கண்ணீர் தருணம்!

Posted: 10 Apr 2017 07:47 AM PDT

சிரிக்க வைப்பது என்பது மாபெரும் கலை. அதிலும் துன்பத்தில் இருந்துகொண்டு மற்றவர்களை மகிழ்விப்பது என்பது ஆகப்பெரும் சாதனை. அதை அத்தனை அழகாய் நிகழ்த்தி இருக்கின்றனர் வாழ்க்கையின் கடைசி நாட்களில் இருக்கும் சிலர். முதுமையையும், நோயையும் ஒரு சேரக்கொண்டிருப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? ஆனால் இவர்கள் அப்படி இல்லை. தனது காமெடிகளுக்குச் சிரிக்காமல் சோகத்துடன் உற்றுப் பார்க்கும் பார்வையாளரைப் பார்த்துக் கேட்கிறார் அவர். ''ஏன் சிரிக்க மறுக்கிறீர்கள்? உங்களுக்கு இருமல் கூட இல்லையே, ...

வாட்ஸ் ஆப்பில் பிரசவம்........

Posted: 10 Apr 2017 07:45 AM PDT

வாட்ஸ் ஆப்பில் பிரசவம்: இது தான் தொழில்நுட்ப வளர்ச்சியோ!! ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்ட கர்பிணிக்கு, வாட்ஸ் ஆப் மூலம் மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளார். அஹமதாபாத்-பூரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நிறை மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், அபாய சங்கிலியை பிடித்து இழுத்து டிக்கெட் பரிசோதகரும், ரயில்வே காவலர்களும் ரயிலில் மருத்துவர்கள் யாரும் பயணம் செய்கிறார்களா என விசாரிக்கத் துவங்கினர். ...

காலையில் விழித்தவுடன் உள்ளங்கையை...

Posted: 10 Apr 2017 07:42 AM PDT

காலையில் விழித்தவுடன் உள்ளங்கையை பார்க்கும் படி வீட்டில் உள்ள பெரியவர்கள் அறிவுறுத்துவதை கேட்டிருப்போம். அவ்வாறு எதற்காக செய்ய வேண்டும் என்பதற்கான ஆன்மீக பதில் இதோ... இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். இறை உருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம். உள்ளங்கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்கிறது. ஹஸ்தரேகா என்ற சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ...

சம்மனை எதிர்த்து கீதாலட்சுமி வழக்கு

Posted: 10 Apr 2017 07:36 AM PDT

சென்னை: வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் .தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டவர்களின் வீடுகள் உட்பட, 30 இடங்களுக்கு மேல், ஏப்.,7 ம் தேதி, வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து, கீதாலட்சுமி உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. இதைஎதிர்த்து, கீதாலட்சுமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ...

மனைவி வர்றப்ப ஏன் கண்ணாடி போடுற...?

Posted: 10 Apr 2017 06:56 AM PDT

திருநங்கை பொம்மை!

Posted: 10 Apr 2017 06:33 AM PDT

- அமெரிக்காவைச் சேர்ந்த, பிரபல பொம்மை தயாரிப்பு நிறுவனமான டோனர், அவ்வப்போது, வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம். அதன்படி, திருநங்கை பொம்மையை தயாரித்துள்ளது. இதில், என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா... உலகிலேயே, முதன் முதலாக தயாரிக்கப்பட்டுள்ள திருநங்கை பொம்மை, இது தான். இந்த பொம்மைக்கு மாடலாக இருந்தது, ஜாஸ் ஜென்னிங்ஸ் என்ற, 16 வயது திருநங்கை. 'சிறு வயதில், பொம்மைகளை வைத்து விளையாடுவதில், மிகவும் ஆர்வமாக இருப்பேன். இப்போது, நானே ஒரு பொம்மைக்கு, அதுவும், சாதனை ...

வசந்த சித்திரையே வருக!

Posted: 10 Apr 2017 06:24 AM PDT

-- வசந்த சீர் கொண்டு வருகிற சித்திரையை வரவேற்போம்! - புத்தாண்டு சித்திரை புதுக்கணக்கு துவங்கும் மாதம் புதுவாழ்வு சித்திரையாள் பொழிய வரும் காலம்! - கோடை மழை பொழிந்து குற்றால நீர் அருவியாய் கொட்ட வரும் காலம்! - மாமரத்து கனி குலுங்கி சுவையூட்டும் காலம் வேரில் பழுத்த பலா வீதி வரும் காலம்! - வாசமல்லி பூ மலர்ந்து மணம் பரப்பும் காலம் வெள்ளரி பழம் பழுத்து விற்க வரும் காலம்! - விஷு கனி கண்டு களிக்கின்ற காலம் வசந்த ருது துவங்கும் சித்திரை மாதம்! - வசந்த சித்திரை புத்தாண்டே ...

ராமர் கோயிலை எதிர்ப்போர் தலையை எடுப்பேன்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பகிரங்க மிரட்டல்

Posted: 10 Apr 2017 06:21 AM PDT

ஐதராபாத்: ராமர் கோயில் கட்டுவதை யாராவது எதிர்த்தால் அவர்களின் தலையை எடுப்பேன் என்று பா.ஜ. எம்.எல்.ஏ. மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த பா.ஜ. எம்.எல்.ஏ., ராஜா சிங், ராமநவமி விழாவில் பங்கேற்று பேசுகையில் அயோத்தி ராமர் கோயில் பற்றி பேசி உள்ளார். "அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். அவர்களுக்காகத் தான் காத்திருக்கிறோம். ராமர் கோயில் கட்டுவதை தடுத்தால், உங்களின் தலைகள் ...

பப்ளிசிட்டிக்கு ஆசைப்படும் தலைவர்...!!

Posted: 10 Apr 2017 06:17 AM PDT

சவுதி அரேபியா மக்களுக்கு வருமான வரி ரத்து: அரசு அதிரடி அறிவிப்பு

Posted: 10 Apr 2017 06:05 AM PDT

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடந்த 2014ல் கடுமையான மாற்றம் வந்தது. கடும் சரிவை சந்தித்த அந்த தருணத்தில் சவுதியின் பொருளாதார சூழலில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் புதிய வரி விதிப்பில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் பல விதமான புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில், இன்று சவுதி அரேபியாவின் நிதி துறை அமைச்சர் அல் ஜதான் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், சவுதி அரேபியாவில் வசிக்கும் சவுதிக் குடிமக்களுக்கும், சவுதியில் செயல்படும் நிறுவனங்களுக்கும் ...

போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் மானபங்கம்

Posted: 10 Apr 2017 06:00 AM PDT

மும்பை போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசை மானபங்கம் செய்த பேக்கரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் மானபங்கம் மும்பை மாகிம், சோட்டா தர்க்கா அருகே சம்பவத்தன்று மாலை 50 வயது போக்குவரத்து பெண் போலீஸ் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது தாதரில் இருந்து பாந்திரா நோக்கி வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அவர் ஹெல்மட் அணியாமல், செல்போனில் பேசியபடி சென்றார். இதை கவனித்த போக்குவரத்து பெண் போலீஸ், அந்த வாலிபரை ...

tamilnesan avargalukku vendukol

Posted: 10 Apr 2017 05:18 AM PDT

அன்பு நண்பர் தமிழ்நேசன் அவர்களே,தங்கள் வலை தளத்திற்குள் வர அழைப்பு தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.எனது பெயர் கோபால்,என் மின்னஞ்சல் முகவரி:gopalgayathri7@gmail .com ..மிக்க நன்றி

என்னை பற்றி - கோபால்

Posted: 10 Apr 2017 04:18 AM PDT

பெயர்:கோபால் சொந்த ஊர்:சேலம் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:இணையத்தில் தேடும் போது கிடைத்தது பொழுதுபோக்கு:தமிழ் நூல்கள் படிப்பது மற்றும் மேற்கத்திய இசை ரசிப்பது தொழில்:வியாபாரம் மேலும் என்னைப் பற்றி:சிறு வயதில் இருந்தே புத்தகம் படிப்பதில் தணியாத ஆசை இருந்து வருகிறது.என்றோ படித்து சுவைத்த எத்தனையோ அருமையான நூல்களை மின்னூலாக மீண்டும் ஈகரை மூலமாக படிக்க முடிந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நண்பர்களே.மிக்க நன்றி.இன்னும் பல ஆயிரம் நூல்களை இங்கு மின்னூலாக வெளியிட வேண்டும் என வேண்டுகிறேன்

சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது

Posted: 10 Apr 2017 03:03 AM PDT

- சென்னை அமெரிக்க தூதரகம் அருகே அண்ணா சாலை பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயில் பணி நடந்து வரும் நிலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. திடீரென ஏற்பட்டு உள்ள பள்ளத்தில் கார் மற்றும் பேருந்து சிக்கி உள்ளது. கார் மற்றும் பேருந்தை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். அண்ணா சதுக்கத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்ற பஸ் பள்ளத்தில் சிக்கி உள்ளது, பேருந்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்பது தெரியவரவில்லை. 10க்கும் மேற்பட்டோர் விபத்தில் காயம் அடைந்து உள்ளனர் என ...

புது கவிதை - குடும்ப மலர்

Posted: 10 Apr 2017 02:11 AM PDT

எக்ஸ்பிரஸ் கதைகள் -

Posted: 10 Apr 2017 01:32 AM PDT

பாதுகாப்பு - எதிர்வீட்டுல நாய்கள் ஜாக்கிரதைன்னு போர்டு போட்டிருக்கு சிசிடிவி கேமா பொருத்திய இருக்கு. எக்ஸ்சர்வீஸமேன் ஒருத்தர் வீட்டுக்குப் பாதுகாப்பாப் போட்டிருக்கு.. நமக்குத்தான் எந்த பாதுகாப்பும் இல்லை என்று பொருமினாள் மனைவி - "டோன்ட் ஒர்ரி கண்ணு! இப்ப திருட்டுப் பசங்க கண்ணெல்லாம் அந்த வீட்டு மேலதான் இருக்கும். நம்ம வீட்டை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டாங்க" என்றான் கணவன் - ----------------

6 எய்ம்ஸ், 25 புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்கும் பணியை உ.பி. அரசு தொடங்கியது

Posted: 10 Apr 2017 01:00 AM PDT

லக்னோ, உத்தரபிரதேச மாநில தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரி அசுதோஷ் கோபால்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாநிலத்தில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் 25 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தோம். மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம். இடங்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்," என தெரிவித்து உள்ளார். உ.பி.யில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து உள்ள பா.ஜனதா தேர்தல் வாக்குறுதியில் இதுவும் ...

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றிய ஆவணத்தில் ஜெயலலிதா கைநாட்டை உறுதி செய்த டாக்டருக்கு ரூ.5 லட்சம் பட்டுவாடா

Posted: 09 Apr 2017 11:28 PM PDT

சென்னை : தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள அரசு வீடு, புதுக்கோட்டையில் உள்ள வீடு, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகள், அவருக்கு சொந்தமான கல் குவாரிகளில் வருமான வரித்துறையினர் கடந்த 7ம் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனை நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு முடிவடைந்தது. அதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. அதில் ஒரு ஆவணத்தில்  செலவு பட்டியலில் அரசு டாக்டர் பாலாஜிக்கு கடந்த நவம்பர் 1ம் தேதி ரூ.5 லட்சம் ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III

Posted: 09 Apr 2017 11:15 PM PDT

வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் !

தண்ணீரில் மீன் அழுதால்...

Posted: 09 Apr 2017 10:43 PM PDT

மொட்டு விரிந்தது....

Posted: 09 Apr 2017 07:31 PM PDTஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் மனைவியோட செல்பி எடுத்துப்பேன்,...!!

Posted: 09 Apr 2017 12:44 PM PDT

- ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் மனைவியோட செல்பி எடுத்துப்பீங்களா, ஏன்? - அன்னிக்கி மட்டும்தான் சீரியல் கிடையாது. அவ சிரிச்ச முகத்தோட இருப்பா...!! - பர்வின் யூனூஸ் ----------------------------- - மன்னர் 'பார்முரசு' கொட்டட்டும் என்கிறாரே? - அவர் அமைச்சர்களுக்கு மது விருந்து வைக்கப் போகிறாராம்...! - கே.அருள்சாமி - --------------------------------- தொடரும்...

வாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு

Posted: 09 Apr 2017 12:29 PM PDT

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் எதற்கும் அஞ்சாமல் தனியாளாக கொடிய பாம்புகளை பிடித்து வந்தவர், பூனம்சந்த் வயது 45. கடலூர் மக்களால் 'பாம்பு பிடி மன்னன்' என்று அழைக்கப்பட்டவர். எந்த வகை பாம்பு என்றாலும், எவ்வளவு பெரிதாக இருந்தாலும் துணிச்சலாக கையாலே பிடித்துவிடுவார். அதனால் நள்ளிரவு நேரத்திலும் இவரது செல்போனுக்கு அழைப்பு வரும், தங்கள் வீட்டில் பாம்பு புகுந்திருக்கிறது என்று! இவர் ஓடி ஓடிப்போய் பாம்புகளை பிடித்ததற்கு, அவைகள் மீது இவர் வைத்திருந்த பாசம்தான் காரணம். பெரும்பாலானவர்கள் ...

அந்த அற்புத கணங்களில்....

Posted: 09 Apr 2017 12:25 PM PDT

அந்த அற்புத கணங்களில்.... புஷ்கினின் அன்னா கேர்னுக்கு.... ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு: பாரதிப்பிரியன் என் நினைவுகளில் ஒரு அற்புத கணம்: என் கண் முன்னே நீ தோன்றியது, நொடியில் மறையும் மின்னலாக, கோடிப் புனித அழகு கொண்டு. நம்பிக்கைகளற்று சோகங்களின் வதைகளில், குழப்பங்கள் என்னுள் இரைந்திட்ட போது, உன் இனிமைக் குரல் தேனாக ஒலித்திட, உன் அழகு முகமும் கனவாகக் கண்டேன். வருடங்கள் உருண்டது, புயல் ஒன்றெழுந்தது, என்னிமைக் கனவுகளை அடித்துமே சென்றது, உன்னிமைக் குரலோ ...

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Posted: 09 Apr 2017 12:08 PM PDT

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108  நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் !டெண்டுல்கரை தொடர்ந்து பாடகரான வினோத் காம்ளி !

Posted: 09 Apr 2017 10:21 AM PDT

- மும்பை : சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து வினோத் காம்ளியும் பாடகராகியுள்ளார். சச்சின் ... கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் பாலிவுட் பாடகர் சோனு நிகாமும் இணைந்து பாடியுள்ள பாடலின் வீடியோ சமீபத்தில் வெளியானது. சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள இந்த ஒரு நிமிட வீடியோவில் கிரிக்கெட் சம்பந்தமான பாடலை, சச்சின் பாடியுள்ளார். இந்தப் பாடல் குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், 'எனக்கு இசை பிடித்த விஷயமாக இருந்தாலும், நான் பாடுவேன் என்று நினைத்து பார்த்ததில்லை'என்று கூறினார். காம்ளியும் ...

வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!!

Posted: 09 Apr 2017 07:47 AM PDT

வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுகிறார் அரங்கன்.............!!! (பங்குனி உத்திரம் 9.4.17) வருடத்தின் 365 நாட்களில், 322 நாட்களும் உத்ஸவம் காணும் பெருமாள், ஸ்ரீரங்கத்து அரங்கன்தான்! காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கு நடுவே பிரமாண்டமான ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீஅரங்கனுக்கு விழாக்களும் பிரமாண்டமாக நடைபெறுகின்றன. அவற்றில் மிக முக்கியமான பெருவிழா, பங்குனி உத்திரத் திருவிழாதான்! அட... வைகுண்ட ஏகாதசி முதலான எண்ணற்ற விழாக்கள் சிறப்புற நடைபெறும் ஸ்ரீரங்கம் ஆலயத்தில், ...

தமிழ் புத்தாண்டு!

Posted: 09 Apr 2017 07:45 AM PDT

சித்திரை, முதல் தேதியை ஏன் தமிழ் புத்தாண்டாய் கொண்டாடுகிறோம் தெரியுமா? சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதங்கள் அனைத்தும், அந்தந்த மாத பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே, அந்தந்த மாதத்திற்கு பெயராக வைத்துள்ளனர், நம் முன்னோர். சித்திரை - சித்திரை (சித்ரா பவுர்ணமி) விசாகம் - வைசாகம் - வைகாசி (வைகாசி விசாகம்) அனுஷம் - ஆனி பூராடம் - பூராடி - ஆடி சிரவணம் - ச்ராவணி - ஆவணி (திருவோணம் - வடமொழியில் ஸ்ராவண நட்சத்திரம்) பூரட்டாதி - புரட்டாசி (புரட்டாசி பவுர்ணமி, பூரட்டாதி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™