Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 30 Apr 2017 12:49 PM PDT

களைகட்டிய அட்ஷய திருதியை ரூ.1,275 கோடிக்கு தங்கம் விற்பனை

Posted: 30 Apr 2017 12:42 PM PDT

அட்ஷய திருதியை முன்னிட்டு, தமிழகத்தில், இரு தினங்களில், 1,275 கோடி ரூபாய் மதிப்புள்ள, 4,250 கிலோ தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன. நாட்டில், தங்கம் பயன்பாட்டில், தமிழகம் முன்னணியில் உள்ளது. அட்ஷய திருதியை மற்றும், தீபாவளி போன்ற சுப தினங்களில், தங்கம் விற்பனை வழக்கத்தை விட, அதிகம் இருக்கும். நேற்று முன்தினம் துவங்கிய அட்ஷய திருதியை, நேற்று, முடிவடைந்தது. அட்சய திருதியை முன்னிட்டு, தங்க நகைகள் வாங்க, மக்கள் ஆர்வம் காட்டினர். தமிழகத்தில், நேற்று முன்தினம், 1,750 கிலோ; நேற்று, ஒரே நாளில் மட்டும், ...

ஸ்டாலினுக்கு ஜோதிடர் அறிவுரை !

Posted: 30 Apr 2017 12:38 PM PDT

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கட்சியினர் சிலருடன், சென்னை, மெரினா கடற்கரைக்கு சென்று, அங்கு அமர்ந்து கொண்டு, கட்சியினரிடம் பேசி வருகிறார். இதன் பின்னணியில் பலமான ஜோதிட காரணங்கள் உண்டு என, கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. சிம்ம ராசி்க்காரர்! இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: இன்றளவிலும் தன்னை நாத்திகவாதியாக காட்டிக் கொள்ளும் ஸ்டாலின், முழுமையான ஆன்மிகவாதியாக மாறி விட்டார். குடும்ப ஜோதிடர் என்ன சொல்கிறாரோ, அதையெல்லாம் தொடர்ந்து ...

பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் நள்ளிரவு முதல் அமல்!

Posted: 30 Apr 2017 12:35 PM PDT

புதுச்சேரி மாநிலத்தில் தினசரி பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை இன்று (ஏப் 30) நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ளது . இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் கூறியிருப்பதாவது: புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் ஒரு சில இடங்களில் தினசரி பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப் பட்டு அதன் படி விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு ஒரு ரூபாய் 3 காசு குறைக்கப்பட்டு ரூ.66.05காசுகளாகவும் டீசல் லிட்டர் ஒன்றிற்கு 19 காசு குறைக்கப்பட்டு ரூ.58.70காசுகளாக ...

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Posted: 30 Apr 2017 12:14 PM PDT

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108  நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் !அனைத்து தொழிலாளர்களுக்கும் , 'தொழிலாளர் தினா வாழ்த்துகள்' !

Posted: 30 Apr 2017 11:59 AM PDT

அனைத்து தொழிலாளர்களுக்கும் , 'தொழிலாளர் தின வாழ்த்துகள்' !

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சம்பந்தமாக விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நசீம் ஜைதி தகவல்

Posted: 30 Apr 2017 09:19 AM PDT

சண்டிகார், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதாகவும், எனவே தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்த வேண்டும் என்றும் பல எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து உள்ளன. இதுதொடர்பாக சமீபத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதனை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய முடியாது என்று உறுதியாக கூறி வருகிறது. இந்த நிலையில் சண்டிகாரில் ...

7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன.

Posted: 30 Apr 2017 09:10 AM PDT

கடந்த சில வாரங்களாகவே மணல் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த தொழிலை நம்பியுள்ள 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குவாரிகள் மூடப்பட்டதால் ரூ.35 ஆயிரம் வரை விற்கப்பட்ட ஒரு லோடு மணல், தற்போது ரூ.65 ஆயிரம் வரை விற்கப்படும் நிலை உருவாகி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ...

சுந்தர் பிச்சையின் ஒரு வருட வருமானம் ரூ.1,304 கோடி

Posted: 30 Apr 2017 09:01 AM PDT

ஹ¨ஸ்டன், பிரசித்தி பெற்ற கூகுள் இணைய தள நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தவர் சுந்தர் பிச்சை (வயது 44). தமிழரான இவர் கடந்த 2015&ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு உயர்ந்தார். இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம், 6 1/2 லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம்).ஆனால் இழப்பீடு என்ற வகையில் இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி). 2015-ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட தொகையை விட இது ...

தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

Posted: 30 Apr 2017 09:01 AM PDT

சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் கட்சியை தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைக்க தனது அக்கா மகன் தினகரனை கட்சியில் மீண்டும் சேர்த்து துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார். தினகரன் அதன் பின்னர் சசிகலாவின் பேச்சை மீறி ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்டதாகவும் இதனால் அவர் மீது சசிகலா அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் உள்ளார். இந்த இடைவெளியில் அதிமுக அமைச்சர்களும் ...

இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்க கூடாது தேர்தல் கமி‌ஷனில் அ.தி.மு.க. தொண்டர்கள் அணி மனு

Posted: 30 Apr 2017 02:49 AM PDT

புதுடெல்லி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தன. இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டாடியதால் தேர்தல் கமி‌ஷனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணியினரும் சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி உரிய ஆதாரங்களையும், பிரமாண பத்திரங்களையும் தாக்கல் செய்து வருகின்றனர். இதுதொடர்பான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அ.தி.மு.க. தொண்டர்கள் அணி என்ற புதிய அணி உருவாகி இருக்கிறது. தொண்டர்கள் இயக்கம் தொண்டர்களுக்கே என்ற ...

‘டி.டி.வி. தினகரன் வழக்கை தேர்தல் கமிஷனுடன் தொடர்புபடுத்தாதீர்’ சுப்பிரமணிய சாமி சொல்கிறார்

Posted: 30 Apr 2017 02:41 AM PDT

புதுடெல்லி, பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- டி.டி.வி. தினகரன் உண்மையிலேயே தேர்தல் கமிஷனில் யாருக்காவது லஞ்சம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார் என்றால் அது குறித்து தீவிரமாக விசாரித்து சட்டம் தன்னுடைய கடமையை செய்ய வேண்டும். ஆனால் இது குறித்த போலீசார் விசாரணையின்போது, அவர் ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தெரியவந்தால் அதற்கான சட்டவிதிகளின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் குற்றப்பிரிவு அந்த ...

சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

Posted: 30 Apr 2017 02:33 AM PDT

சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு நுழைவுத்தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களில் மே மாதம் 7–ந்தேதி நடக்கிறது. - பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் செயல்படும் மனிதநேயம் பயிற்சி மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட மத்திய–மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இலவச வகுப்பு நடத்தி வருகிறது. அந்த வகையில், 2018–ம் ஆண்டு நடைபெற உள்ள ...

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக புகார்

Posted: 29 Apr 2017 08:34 PM PDT

-- சென்னை ராயபுரம் தொகுதியில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த தேவதாஸ் உள்ளிட்டோர் சுவரொட்டி ஓட்டினர். இதையடுத்து தேவதாசுக்கு, அமைச்சர் ஜெயகுமார் தூண்டுதலின் பேரில் கொலை மிரட்டல்கள் வருவதாக அவருடைய தாயார் ராஜம்மாள் (வயது 80) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். அந்த புகாரில் ஜெயம்மாள் கூறியிருப்பதாவது:- அமைச்சர் ஜெயகுமார் தொகுதி மேம்பாடு மற்றும் மீனவர் நலனில் அக்கறை கொள்ளாததை கண்டித்து போஸ்டர்கள் மூலம் எனது மகன் தேவதாஸ் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™