Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


லோக்சபா, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியம்!:2024 முதல் செயல்படுத்த 'நிடி ஆயோக்' பரிந்துரை

Posted: 30 Apr 2017 10:01 AM PDT

புதுடில்லி:'லோக்சபா மற்றும் சட்டசபை களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமே. வரும், 2024 முதல், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை செயல்படுத்தலாம்' என, 'நிடி ஆயோக்' பரிந்துரைத்துள்ளது.

'லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்க வேண்டும்' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார்; இந்தக் கருத்தை, பிரதமர் நரேந்திர மோடியும் வலியுறுத்தி வந்தார்.இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மாநில முதல்வர்களை உறுப்பினர்களாகக் கொண்ட, மத்திய அரசுக்கு ஆலோசனை களை வழங்கும், 'நிடி ஆயோக்' அமைப்பின் ...

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 5 ஆண்டு போட்டியிட தடை; தேர்தல் கமிஷன் அதிரடி பரிந்துரை

Posted: 30 Apr 2017 10:15 AM PDT

புதுடில்லி: 'சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அனுபவத்தின் அடிப்படையில், 'ஓட்டு போடுவதற்காக, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர், ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, ஏப்., 12ல் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
வாக்காளர்களுக்கு பணம்
அ.தி.மு.க., இரண்டாக பிரிந்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னமும் கிடைக்காததால், சசிகலாவின் அக்கா மகன் தினகரனும், முன்னாள் ...

சசி அண்ணன் மகன் விவேக்கின் முதலீடுகளை வருமான வரித்துறை... தோண்டுகிறது!

Posted: 30 Apr 2017 10:37 AM PDT

சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் குறித்து, வருமான வரித்துறை விசாரணையை துவக்கியுள்ளது. இவரது, 'ஜாஸ்' சினிமா நிறுவனத்திற்கு, 1,000 கோடி ரூபாய் முதலீடு வந்தது பற்றியும், அவரது மலைக்க வைக்கும் அரசியல் தொடர்புகள் குறித்தும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது. சசிகலா, தினகரன், விவேக் என, அதிரடி நடவடிக்கை தொடர்வதால், சொத்துக்கள் பறிபோகுமோ என திவாகரன், வெங்கடேஷ் உள்ளிட்ட, சசிகலா சொந்தங்கள் பலரும் பீதியில் உள்ளனர்.

அ.தி.மு.க.,வின் தலைமை பதவி மற்றும் முதல்வர் பதவியை கைப்பற்றும் வகையில், திட்டமிட்டு, அசுர வேகத்தில் காய் நகர்த்திய சசிகலா, தினகரன் ஆகியோர், அதே வேகத்தில் ...

தினகரன் வங்கி கணக்குகளில் கோடி கணக்கில் பரிவர்த்தனை

Posted: 30 Apr 2017 10:41 AM PDT

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை பெறு வதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரி களுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தினகரனி டம், டில்லி போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில், அவரது பெயரில் உள்ள ஐந்து வங்கிக் கணக்குகளை கண்டுபிடித்த போலீசார், அதில் செய்யப் பட்டுள்ள பரிவர்த்தனைகள் குறித்து ஆராய்ந்தனர்.
அப்போது, சமீபத்தில், பல கோடி ரூபாய் பணம்,
ஒரு குறிப்பிட்ட ஹவாலா புரோக்கருக்கு அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. தினகரனின் காவல் முடிவடைவதால், அவர், இன்று டில்லி கோர்ட்டில் ...

இனி வி.ஐ.பி., கிடையாது; இ.பி.ஐ., தான்: மோடி வலியுறுத்தல்

Posted: 30 Apr 2017 10:45 AM PDT

புதுடில்லி: ''கார்களில் சிவப்பு விளக்குகளை அகற்றுவதன் மூலம், இனி, வி.ஐ.பி., கலாசாரம் இருக்கக் கூடாது; இ.பி.ஐ., எனப்படும் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள் என்ற புதிய கலாசாரத்தை உருவாக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.பெரிய அந்தஸ்துவி.ஐ.பி., கலாசாரத்தை ஒழிக்கும் வகையில், மே 1 முதல், கார்களில் சிவப்பு சுழல் விளக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதாக, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், 'மன் கீ பாத்' என்ற, ரேடியோ மூலம் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்தும் மாதாந்திர உரை, நேற்று ஒலிபரப்பானது. அதில், அவர் ...

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர்? புது வியூகத்துக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்

Posted: 30 Apr 2017 10:47 AM PDT

புதுடில்லி:''ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சி கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க உதவும்,'' என, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர், சரத் யாதவ் கூறியுள்ளார்.

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், ஜூலையில் நடக்க உள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, பல்வேறு கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. இது தொடர்பாக, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார், காங்கிரஸ் தலைவர் சோனியாவை, சமீபத்தில் சந்தித்து ஆலோசனைநடத்தினார்.இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ...

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு அம்போ? சுற்றுப்பயணம் கிளம்புகிறார் பன்னீர்

Posted: 30 Apr 2017 11:01 AM PDT

சேலம்:அ.தி.மு.க., அணிகள் இணைப்பு, அம்போவாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், மாவட்டம் தோறும் பன்னீர் தலைமையில், ஊழியர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரகசிய பேச்சு
அ.தி.மு.க., இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிக்கு, பன்னீர் அணி குழுத் தலைவராக, முனுசாமி, பழனிசாமி அணி குழுத் தலைவ ராக, செங்கோட்டையன் நியமிக்கப் பட்டனர்.இக்குழுவினர், முதல் கட்டமாக நடத்திய ரகசிய பேச்சில், உடன்பாடு ஏற்படாததால், அதிகாரப்பூர்வ பேச்சு இன்னும் துவங்கவில்லை.தற்போது, முதல்வர் பழனிசாமி சேலத்தில் முகாமிட்டுள்ள நிலையில், மேட்டூர் எம்.எல்.ஏ., ...

கோடநாடு கொலை வழக்கு: கேரளாவில் இருவர் கைது

Posted: 30 Apr 2017 11:07 AM PDT

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு தொடர்பாக, கேரள மாநிலம், மலப்புரம் போலீசார், நேற்று, இருவரை கைது செய்து உள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் காவலாளி கொலை வழக்கு தொடர்பாக, கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த, நான்கு பேர், ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்ததாக, கேரளாவின் வயநாடு, மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த, ஜிபின் ஜோய், 30, ஜம்சீர் அலி, 25, ஆகியோரை, போலீசார் கைது செய்து உள்ளனர். இவர்களை விசாரணைக்காக, ஊட்டிக்கு அழைத்து வர, தமிழக தனிப்படை போலீசார், மலப்புரம் ...

மணல் யார்டுகள் மூடல்: 5 லட்சம் பேர் பாதிப்பு

Posted: 30 Apr 2017 11:08 AM PDT

மணல் குவாரிகள் மூடப்பட்டதால், கட்டுமான துறையைச் சார்ந்த, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அனுமதி காலாவதி
தமிழகத்தில், பொதுப்பணித் துறை கட்டுப் பாட் டில் இயங்கி வந்த, 38 குவாரிகளின், சுற்றுச் சூழல் அனுமதி காலாவதியானதால், ஒன்பது குவாரிகள் மட்டும் செயல்பட்டு வந்தன. அவை, ஏப்., 28 நள்ளிரவுடன் மூடப்பட்டன.தொடர்ந்து, மணல் விற்பனைக்காக, தனியார் ஒப்பந்ததாரர்கள் நடத்தி வந்த யார்டுகளும் மூடப்பட்டன.குவாரிகளில் இருந்து லாரிகள், ஜே.சி.பி., இயந்திரங்கள்; யார்டுகளில் ...

‛முன்கூட்டியே பார்லி., தேர்தலுக்கு வாய்ப்பில்லை'

Posted: 30 Apr 2017 12:19 PM PDT

ஐதராபாத்: பார்லி., ‛தேர்தலை முன்கூட்டியே நடத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அது ஆதாரமற்ற வதந்தி' என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
வாய்ப்பில்லை:
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: எங்கள் கட்சி தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும், 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு தயாராகும்படி, தொண்டர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இதை சிலர், தவறாக புரிந்து, லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் வரப்போவதாக பீதியை கிளப்புகின்றனர். அதற்கு அவசியமே இல்லை. இவ்வாறு அவர் ...

அரசு உதவி கிடைப்பதில் சிக்கல்; உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?

Posted: 30 Apr 2017 02:02 PM PDT

அரசிடம் கேட்ட உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஜூலை மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உத்தரவு:
தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், 2016, அக்டோபரில், இரண்டு கட்டங்களாக நடக்க இருந்தது. மனு தாக்கல் முடிந்த நிலையில், தேர்தலுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இது தொடர்பான வழக்கில், '2017, மே மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உதவி:
மாநில தேர்தல் கமிஷன், 'ஜூலையில் தேர்தலை நடத்த தயார்' என, தேர்தல் கமிஷன் ...

காந்தி படம் ‛பிரிண்ட்' ஆகாத 500 ரூபாய் நோட்டுகள்!

Posted: 30 Apr 2017 03:20 PM PDT

மொரேனா: ம.பி.,யில் உள்ள ஏ.டி.எம்., ஒன்றில் பணம் எடுத்தவருக்கு, காந்தியின் படம் பிரிண்ட் ஆகாமல் 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி:
ம.பி., மாநிலம் மொரெனா மாவட்டத்திலுள்ள கணேஷ்பூரில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., ஒன்றில் கோவர்தன் சர்மா என்பவர் பணம் எடுத்தார். எ.டி.எம்.,மில் எடுத்த பணத்தை கண்டவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பணத்தில் நான்கு 500 ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் பிரிண்ட் ஆகாமலேயே வந்துள்ளது. உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு கோவர்தன் புகார் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™