Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தோள் மீது கை

Posted: 27 Apr 2017 03:16 PM PDT

தோள் மீது கை



தோள் மீது   சுதந்திரமாய்
தோழர்தான் கை  போடுவாரோ?  
தொல்லை எனக் கருதும்
போலீசாகவும் இருக்கலாம்
தோன்றியதை எழுதுகிறேன்.

ரமணியன்

புராஸ்டேட் பிரச்னை செய்கிறதா?

Posted: 27 Apr 2017 12:48 PM PDT

புராஸ்டேட் பிரச்னை செய்கிறதா? கிராமத்தில் வசித்து வந்த அந்தப் பெரியவருக்கு இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் போனது. ஒருமுறை சிறுநீர் கழித்த பின்பும் உடனே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. சிறுநீர் சரியாகப் பிரியவில்லை என நினைத்து, 'நீர் மாத்திரை'களை வாங்கிச் சாப்பிட்டார். அப்போது புதிய பிரச்னை கைகோர்த்தது. சிறுநீர் பெருகி, சிறுநீர்ப்பை பெருத்து அடிவயிற்றில் வலி எடுத்தது.உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்றார். 'சிறுநீர்ப் பாதையில் அடைப்பு இருக்கிறது. வயிற்றை ஸ்கேன் எடுத்துப் பாருங்கள். ...

அட்சயதிரிதியை அன்று எந்த நட்சத்திரக்காரர்கள் என்ன தானம் செய்யலாம்?

Posted: 27 Apr 2017 12:38 PM PDT

அட்சயதிரிதியை நாளில் தங்கம்தான் வாங்க வேண்டுமா? அட்சயதிரிதியை நாளில் எந்த நட்சத்திரக்காரர்கள் என்ன தானம் செய்யலாம்? என்பதுபற்றி வாஸ்து ஜோதிட நிபுணர் எம்.எஸ்.ஆர். மணிபாரதியிடம் கேட்டோம். அட்சயதிரிதியை அன்று தங்கம்-வெள்ளி நவரத்தின நகைகள் ஏன் வாங்கவேண்டுமென்பது பலரது கேள்வியாக உள்ளது.இதற்கான ஜோதிடர் மணிபாரதிகாரணத்தை ஆராய்ந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ராஜாக்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் மன்னர்கள், பிரபுக்கள் குடும்பம்தான் நகைகள் ஆபரணங்களை அணிவார்கள். தொழிலாளிகள், கூலி வேலை பார்ப்பவர்கள் ...

கணவன் – மனைவி ஜோக்

Posted: 27 Apr 2017 12:32 PM PDT

-– கோயிலில் இருந்து திரும்பிய கணவன் என்றைக்கும் இல்லாத திருநாளாய் மனைவியைத் தூக்கி கொண்டு சந்தோஷமாய் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தான். – வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த மனைவி மெல்லிய குரலில் கேட்டாள். – கோயிலில் என்ன நடந்தது? இன்று இத்தனை ரொமான்டிக்காக நீங்கள் இருப்பதற்கு என்ன காரணம்? – அதிரடியாக கணவன் பதில் சொன்னான். – அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! கோயிலில் ஒரு பெரியவர் சொற்பொழிவாற்றினார். அவர்தான் 'உனது சுமைகளையும், துன்பங்களையும் நீதான் மகிழ்ச்சியோடு சுமக்க வேண்டும் அதுதான் ...

உங்கள் கருத்தென்ன ?

Posted: 27 Apr 2017 11:04 AM PDT

உங்கள் கருத்தென்ன ? அரசியல் தலைவர்கள் , (ஒரு சில தலைவர்களை தவிர) பெரும் புள்ளிகள் , அவர்கள் செய்த தவறுக்கு ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்ட உடனேயே நெஞ்சு வலி, ரத்த அழுத்தம் எனக்கூறி , ஆசுபத்திரியில் சேர்க்கப்பட்டு, ஜெயில் தண்டனைக்கு பதில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர் . அதற்கு மாற்று கிடையாதா? ஈகரை அன்பர்கள் என்ன நினைக்கிறார்கள் ? உங்கள் எண்ணங்களை பதியுங்கள். என்னை கேட்டால் , ஜெயிலிலேயே ஒரு வார்டை ஹாஸ்பிடல் வார்டாக மாற்றலாம் . உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். ரமணியன்

வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி

Posted: 27 Apr 2017 10:57 AM PDT

வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி 2019 தேர்தலில் நாடு முழுவதும் வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி பயன்படுத்தப்படும்: தேர்தல் ஆணையம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று (புதன்கிழமை) தனது தரப்பு மனுவை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், வரும் செப்டம்பர் ...

“ நீரா ” பானம்...!!

Posted: 27 Apr 2017 10:53 AM PDT

தென்னை மரத்திலிருந்து கள் இறக்கி சாப்பிடுவதை இன்றைக்கும் கிராமங்களில் காணலாம். கள் இறக்கும் தொழிலில் பல கிராம மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதொரு குடிசைத் தொழிலாக கருதப்பட்டு வருகின்றன. தற்போது, அதே தென்னை மரத்திலிருந்து " நீரா " பானம் தயாரிக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் இப்பானம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போதைப் பொருள் கிடையாது. சர்க்கரைச் சத்துக் குறைவானது. மக்கள் அனைவரும் அருந்தக்கூடிய சிறந்த நீர்ப் பானமாக பயன்படுத்தலாம் என்று ...

இளம் வயதினருக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’: இந்திய அழகி சிருஷ்டி கவுருக்கு மகுடம்

Posted: 27 Apr 2017 07:22 AM PDT

- மனாகுவாவில் நடந்த இளம் வயதினருக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வெற்றிப் பெற்று மகுடம் சூடிய இந்தியாவின் சிருஷ்டி கவுர். | படம்: ஏஎப்பி --------------------------------------- மத்திய அமெரிக்காவில் உள்ள நிகாராகுவா தலைநகர் மனாகுவாவில் நடைபெற்ற இளம் வயதினருக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சிருஷ்டி கவுர் முதலிடம் பிடித்து மகுடம் சூடினார். மிஸ் யுனிவர்ஸ் போட்டிகளை நடத்தி வரும் அமைப்பு இளம் வயதினருக்கான (15 முதல் 19 வயது) அழகிப் போட்டியை நடத்தி வருகிறது. ...

கிண்டல் என்பது...!

Posted: 27 Apr 2017 07:16 AM PDT


-
வீட்டைத் தாண்டி
என்ன தெரியும் என்று
அம்மாவைக்
கிண்டல் செய்வார் அப்பா!
வீட்டைப் பற்றி
என்ன தெரியும் என்று
ஒரு போதும் அப்பாவைக்
கிண்டல் செய்ய மாட்டாள்
அம்மா!
-
நல்லா படிச்சு டாக்டராவேன்
என்று
பிள்ளை சொன்னதை நம்பி
காசநோயைப்
பெரிதுபடுத்தாமல் விட்டவள் பெயர்
அம்மா!
-
-----------------------
-விகடபாரதி
குமுதம்

ஒரு சபதம்...

Posted: 27 Apr 2017 06:39 AM PDT

நம்பி வாழ்வதைத் தவிர்ப்போம்...!!

Posted: 27 Apr 2017 06:28 AM PDT


-

உனக்கு நீதான் - சிறுவர் பாடல்

Posted: 27 Apr 2017 05:56 AM PDT

ரோஜாக்களை விற்பவன்

Posted: 27 Apr 2017 05:55 AM PDT

- தொன்மங்களின் சாட்சியாக எஞ்சியிருக்கிற துருப்பிடித்த ட்ரங்க் பெட்டியில் ரோஜாச் செடிகளை நிரப்பிக்கொண்டு விற்பனைக்கு கிளம்பியவன் – வாசல் தெளித்தாற்போல அப்போது பெய்திருந்த சிறுமழை நனைத்திருந்த வீதிகளின் வழியே 'ரோஸ்…ரோஸ்…' எனக் கூவியபடி செல்கிறான். – மென்காற்றின் இளவெப்பமென மிதந்த அவன் குரல் தான் சூட நினைத்து சூடாமல் வந்த ஒற்றை ரோஜாவை நினைவுபடுத்துகிறது அவளுக்கு – மற்றொருவனுக்கு அப்பாவின் இறுதி யாத்திரையில் வீசப்பட்ட ரோஜாக்களின் பன்னீர் மணம் கமழ்ந்து இன்னொரு துக்க கணத்துக்கு இட்டுச் ...

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்

Posted: 27 Apr 2017 05:42 AM PDT

- பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன் (செப்டம்பர் 26, 1908 - சனவரி 20, 1987) -- ஒரு சிறந்த எழுத்தாளரும் தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞரும் ஆவார். பெ. தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும் தமிழ்ப் புலவராகவும் கருநாடக இசை வல்லுநராகவும் அறியப்படுகிறார்; நாடகங்களும் இசைப்பாடல்களும் சிறுகதைகளும் சிறுவர் இலக்கியங்களும் எழுதியுள்ளார்; மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டுள்ளார்; பதிப்புப் பணிகளும் செய்துள்ளார். இவரின் நூல்கள் சில நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. - கலைக்களஞ்சியம் ...

பொன்விழா – கவிதை

Posted: 27 Apr 2017 05:41 AM PDT

எங்ஙனம் – கவிதை

Posted: 27 Apr 2017 05:41 AM PDT

ஆலாபனை செய்யும் கொசுக்கள்…

Posted: 27 Apr 2017 05:41 AM PDT

- உறங்கும் வீணை உறையில் ஆலாபனைக்கு ஆயத்தாயின கொசுக்கள்! - --------------------- - பவளமல்லிகை வேரில் பதுங்கிய தவளைக்கு நித்தமும் பூ மழை - --------------------- - பிதுங்கிய பாறை முலை பீறிட்டுத் தெறிக்கிறது பாலருவி - ---------------------- --சிற்பி - -தொடரும்...

சிறுவர் பாடல்: யாருடைய குழந்தை?

Posted: 27 Apr 2017 05:38 AM PDT

- யாருடைய குழந்தை இது… அழுதுகொண்டு நிற்கிறதே? சீருடைய முகம்சிவக்கச் சிறுகையால் கண்பிசைந்து விம்மிவிம்மித் தேம்பி விழிநீர் மிகப்பெருக்கி அம்மம்மா என்றுசொல்லி அங்குமிங்கும் பார்க்கிறதே! யாருடைய குழந்தை இது… அழுதுகொண்டு நிற்கிறதே! மையிற் படர்ந்தஇருள் மாய்க்கவரும் ஞாயிறுபோல் வையத்திருள் வாழ்வை வளரின்ப மாக்கவரும் தெய்வச் சுடர்க்குழந்தை சிரித்தமுகம் வாடிமிக நையக்கண்டால் உள்ளம் நடுங்குகின்ற தென்செய்வேன்? யாருடைய குழந்தை இது… அழுதுகொண்டு நிற்கிறதே! கன்னத்தில் முத்துதிரக் கவலையிருள் ...

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier

Posted: 27 Apr 2017 05:30 AM PDT

நேற்று ஒரு வாட்ஸ் அப் இசைக் குழுமத்தில் நண்பர் எடி, ஒரு செய்தியைப் பகிர்ந்தார். படித்ததும் ஒரு நிமிடம் பக்கென்றது. "The legendary trumpet player, Frank Dubier who played a stellar role in MSV and Ilaiyaraaja Sir's compositions is no more. Please remember him in your prayers" அதற்குக் கொஞ்சநேரம் முன்புதான் காரில் 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலைக் கேட்டுக்கொண்டே வந்தேன். அதில் பல்லவி முடிந்ததும், முதல் இடையிசையில் ஆரம்பிக்கிற ட்ரம்பெட்... Frank Dubierன் கைவண்ணம்.. இல்லையில்லை.. மூச்சு! Frank ...

64 வயது தனது பள்ளி டீச்சரை மணந்த 30 வயது பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்

Posted: 27 Apr 2017 05:28 AM PDT

பாரீஸ் பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளர் இமானுவேல் மேக்ரன். 39 வயதான மேக்ரன் அதிபர் தேர்தலில் வேட்பாளராக உள்ளார். முதல் சுற்றின் முடிவின்படி பிரான்சின் அதிபராவதற்கான வாய்ப்புகள் மேக்ரனுக்கு அதிகமாகவே உள்ளதாக உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுவருகின்றன. இந்நிலையில் இந்த அதிபர் வேட்பாளரின் மனைவி பிரிஜ்ஜெட் ட்ரானெக்ஸ். இவருக்கு வயது 64. தன்னைவிட 25 வயது மூத்த ஒருவரை மணந்துள்ளார் மேக்ரன். 17 வயதில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தன்னுடைய ஆசிரியையை மணப்பதாக வாக்களித்த மேக்ரன் அதை ...

வாழ்விற்கு அழகு சொந்தக்கால்…!

Posted: 27 Apr 2017 05:24 AM PDT


-

ஏனோ தடை செய்தாய் !

Posted: 27 Apr 2017 05:23 AM PDT

ஏனோ தடை செய்தாய் ! விடைகளை உனக்குள் மறைத்து நின்றாய் ! அன்பே ! நான் இங்கு புரியாமல் தவிக்கிறேன் ! உணவுகள் உண்ணும் போதும் உரையாடல்கள் போதும் எனக்குள்ளே தனியாய் புலம்பி நிற்கிறேன் ! உன்னை நினைத்த உடன் தும்மல்கள் வந்திட அன்பே ! அறியாமல் நான் கண்ணீரில் நனைகிறேன் ! என்ன காரணமே என்ன காரணமே என்று எண்ணியே நானும் தேய்கிறேன் ! ஏன் சொல்லாமல் சென்றாய் ! உன் மௌனத்தில் என்னை கொன்றாய் ! அன்பே ! நீ திரும்பிட நான் வேண்டி நிற்கிறேன் ! வேடிக்கையாய் எழுதி வைத்தேன் ! நீ வேதனை ...

மூத்தோர் சொல் கேட்டவர் கெடுவதில்லை.

Posted: 27 Apr 2017 05:22 AM PDT

– மூத்தோர் சொல் கேட்டவர் கெடுவதில்லை. – உவமேயம் வேண்டாம்! உவமை நல்லது! ஆனால் உருவகமாய் இரு! – இறைவன் என்பவன் மனிதனின் அதீத நம்பிக்கை. அவனது வாழ்வுக்கு வேலி. – வழி நடத்த ஒரு ஆள், தண்டிக்க ஒரு நீதி மன்றம் அடைப்பத்றுக் ஒரு சிறைச்சாலை உலகில் இருக்கும்வரை மனிதனை மிருகம் என்றே சொல்லலாம்! – ஒவ்வொரு மனிதனும் இந்த உலகம் நமக்கல்ல, பிறருக்குத்தான் என்று நினைத்தால் பேராசை வளராது! – —————————- – தன்னை நேர்படுத்தவும் நெறிப்படுத்தவும் தெரியாதவனுக்குத் தம் வாழ்வைச் சீர்படுத்தவும் ...

தூக்கு தண்டனை – நகைச்சுவை

Posted: 27 Apr 2017 05:19 AM PDT

கரும்பலகை கதிரவனே..!

Posted: 27 Apr 2017 05:17 AM PDT

பயங்கர தண்ணி கஷ்டம்!

Posted: 27 Apr 2017 05:14 AM PDT

இது கிரவுண்ட் வாட்டரா? – இல்லீங்க, அண்டர் கிரவுண்ட் வாட்டர்…நூறு அடி ஆழத்துல போர் போட்டு எடுத்தது! – ஏ.நாகராஜன் – ————————— – கஜானா காலி என்று எப்படிச் சொல்கிறாய்? – மினிமம் பேலனஸ் வைக்க முடியாமல் மன்னர் வங்கிக் கணக்கை குளோஸ் பண்ணிட்டாரே! – பர்வின் யூனூஸ் – ————————– – மாத்திரை எழுத வேண்டுமா, டாக்டர் சிரப் மட்டும் போதும்! – ஏன்… ? – எங்க ஏரியால பயங்கர தண்ணி கஷ்டம்! – அ.ரியாஸ் – —————————— வெச்ச மெந்தியே இன்னும் சரியா அழியலை! அதுக்குள்ளே ஏன் பொண்ணுக்கு மறுபடியும் இட்டுவிடச் ...

வேர்க்கடலை சாலட்

Posted: 27 Apr 2017 05:13 AM PDT

கோடையில் வெயிலினால் ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும்!

Posted: 27 Apr 2017 05:07 AM PDT

கோடை காலத்தில்தான் நம்ம உடலில் உள்ள தேவையில்லா கழிவெல்லாம் வெளியேறும். வெயிலின் உச்சத்தால உடலின் நீர்ச்சத்து அதிகளவு வெளியேறுவதால சில பிரச்னைகளும் ஏற்படும். கறுத்த முகம் சூரியனின் புறஊதா கதிர்கள், நம் சருமத்தில் ஊடுருவுவதால், நிறமியை உற்பத்திச் செய்யும் மெலனினை அதிகரிக்கச் செய்கிறது. இதனை போக்க வெயிலில் சென்று வந்தவுடன் தக்காளிச் சாற்றுடன் தயிர் கலந்து முகத்தில் அப்ளை செய்து, பத்து நிமிடம் கழித்து கழுவவும். கேலமைன் ஐ.பி லோஷனை, தினமும் இரவில் முகத்தில் அப்ளை செய்து, பத்து நிமிடம் ...

பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார்

Posted: 27 Apr 2017 05:05 AM PDT

- மும்பை பாலிவுட்டில் சினிமாக்களில் 1970 - 80களில் முன்னணி ஹீரோவாகத் திகழ்ந்தவர் வினோத் கன்னா( 70) பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் தொகுதி, பா.ஜ., - எம்.பி.,யாக உள்ளார். வினோத் கன்னாவுக்கு கடந்த 31 ந்தேதி திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து மும்பை கிர்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை வினோத்கன்னா காலமானார். வினோத் கன்னா ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 27 Apr 2017 04:48 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Posted: 27 Apr 2017 04:46 AM PDT

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ...

ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்

Posted: 27 Apr 2017 02:26 AM PDT

உங்கள்   உதவிக்கு நன்றி . என்னுடைய செல் போனில் இப்படி வர வில்லை . கம்ப்யூட்டரில் அடிக்கும் போது தமிழில் அழகாக வருகிறது. எனக்கு ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும் 1   கள்ளிப்பூ காதல் 2   அன்புடை நெஞ்சம் 3   விழியில் விழுந்து இதயம் நுழைந்து 4   எண்ணிலுறையும் உயிர் நீ 5   என்னை மறந்ததேன் என்னுயிரே 6   நீயின்றி நான் ஏதடி 7   வீழ்கிறேன் உனது விழியில் 8   நீயா நானா 9   விழிநீர் தாங்காயோ 10 மன்னிக்க வேண்டுகிறேன்   எப்போது கிடைக்குமோ அப்போது தாருங்கள் . அவசரம் படுத்த வில்லை. உங்கள் ...

முத்துலட்சுமி ராகவன் நாவல் ' நிலா சோறு' கிடைக்குமா?

Posted: 27 Apr 2017 02:23 AM PDT

I like all the posts and sharig of this site. I'm eagerly waiting to read all your posts. I need muthulakshmi raghavan madams novel nila choru . Thanking you in advance.

குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!

Posted: 26 Apr 2017 10:06 PM PDT

வெயில் காலம் தொடங்கிவிட்டாலே மண்பானைக்கு மவுசுதான் : குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!

புதிய நாணயங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

Posted: 26 Apr 2017 10:03 PM PDT

புதிய நாணயங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி புதிய ரூ.5 மற்றும் ரூ.10 நாணயங்களை விரைவில் வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. தேசிய ஆவணக் காப்பகத்தின் 125-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் புதிய ரூ.10 நாணயம் வெளியிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 150-ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் புதிய ரூ.5 நாணயத்தை ரிசர்வ் வங்கி புழக்கத்துக்குக் கொண்டுவரவுள்ளது. சிறப்பு மிக்க நிகழ்வுகளைப் போற்றும் விதமாக, அவை தொடர்பான உருவங்கள் பொறித்த புதிய நாணயங்களை ...

நெகிழ்வான ஒரு சென்டிமென்ட் சீன்...

Posted: 26 Apr 2017 10:02 PM PDT

ஈச்சங்குலை...!!

Posted: 26 Apr 2017 10:01 PM PDT

புது வழி…!! 1. மார்கழியில் எல்லாம் கழி தையில் வரும் புதுவழி. 2. வாழ்க்கைக்கு பணப் பரிமாற்றம் காதலுக்கு மனப் பரிமாற்றம். 3. சாப்பிடும்போது பொறை ஏறியது நினைத்தவள் யாராகயிருக்கும்? 4. ஆதாரமாக எடுத்துக் கொள்வதில்லை கொழுக்கட்டையின் விரல்ரேகை 5. பணமற்ற இந்தியா அட்டைக்குள் முடங்கப் போகிறது 6. சில்லறை இல்லை என்றுதான் சொல்கிறார்கள் இருக்கிறதென்று யாரும் சொல்வதில்லை. * இருப்பவனுக்கு நெருக்கடி இல்லை இல்லாதவனுக்குத் தான் நெரு்க்கடி. ந.க.துறைவன்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™