Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உதான் விமான சேவை திட்டம்: 10 அம்சங்கள்

Posted: 27 Apr 2017 03:59 AM PDT

பிரதமர் நரேந்திர மோடி, இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில், உதான் விமான சேவை திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். குறைந்த கட்டணம் கொண்ட உதான் விமான சேவை திட்டத்தின் 10 அம்சங்கள் வருமாறு:1. 'உதே தேஷ் கா ஆம் நாக்ரிக் - 'சாதாரண மனிதனும் பறக்கலாம்' என்பதன் சுருக்கமே, 'உதான்'. நாட்டின் இரண்டாம் தர நகரங்களை விமான சேவை மூலம் இணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். விமான போக்குவரத்து அமைச்சகம், 2016 ஜூன் 15ம் தேதி வெளியிட்ட தேசிய விமான போக்குவரத்து கொள்கையில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.2. ஒரு மணி நேரத்தில், 500 கி.மீ., துாரம் பயணிக்க அல்லது 30 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் பயணிக்க ...

நக்சல் இயக்க தலைவர்களை பிடிக்க... வேட்டை!: அடியோடு வேரறுக்க மத்திய அரசு உறுதி

Posted: 27 Apr 2017 09:03 AM PDT

புதுடில்லி: சத்தீஸ்கரில், நக்சல் தாக்குதலில், துணை ராணுவப்படை வீரர்கள், 25 பேர் பலியானதை அடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் பதுங்கியுள்ள, நக்சல் இயக்கத் தலைவர்கள், தளபதிகள், 250 பேருக்கு குறி வைக்கப்பட்டுள்ளது.

'இவர்களை பிடித்து, நக்சல்வாதத்தை வேரறுக்கும் முயற்சியில், மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்' என, உள்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த, ரமண் சிங் முதல்வராக உள்ள சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத் தில், சமீபத்தில், நக்சலைட்டு கள் நடத்திய தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் ...

சாமானியருக்கும் விமான பயண திட்டம்; துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

Posted: 27 Apr 2017 09:06 AM PDT

ஷிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலம், ஷிம்லா - தலைநகர் டில்லி இடையிலான, மலிவு விலை விமான பயண திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

ஹிமாச்சல பிரதேசத்தில், காங்கிரசைச் சேர்ந்த, வீர்பத்ர சிங் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் ஷிம்லா நகரையும், நாட்டின் தலைநகர் டில்லியையும் இணைக்கும் வகையில், மலிவு விலை விமான பயண திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ஆந்திர மாநிலம், கடப்பா - தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் மற்றும் மஹாராஷ்டிர மாநிலம், நான்டெட் - ஐதராபாத் இடையிலான, மலிவு விலை விமான பயண திட்டத்தையும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், பிரதமர் மோடி ...

எல்லாமே நடிப்பு தானா பழனிசாமி...?

Posted: 27 Apr 2017 09:54 AM PDT

சேலம்: சேலத்தில், நேற்று நடந்த முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளர்கள் கூட்டத்தில், சசிகலா படம் இடம் பெற்றிருந்தது, பன்னீர் அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேனர்கள் அகற்றம் :
அ.தி.மு.க.,வில்,பன்னீர்செல்வம், பழனிசாமி அணிகளை இணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.இதற்கு வலு சேர்க்கும் வகையில், மதுசூதனனின் வேண்டுகோளை ஏற்று, நேற்று முன்தினம், சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலா, தினகரன் பேனர்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, பல மாவட்ட அலுவலகங்களிலும், சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன. முதல்வர் பழனிசாமி, இன்று ...

சசிகலா அணியில் கருத்து வேறுபாடு: மா.செ.,க்கள் கூட்டத்தில் மோதல்

Posted: 27 Apr 2017 09:56 AM PDT

இரு அணிகள் இணைப்பு தொடர்பாக,அ.தி.மு.க., - சசிகலா அணியில், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, இரு தரப்பிலும் சிலர் முயற்சித்து வருகின்றனர். அதற்கு, சசிகலா அணியில், சிலர் தடையாக உள்ளனர். இதனால், அணி யில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், மூன்று நாட்களாக, மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில், இரு அணிகள் இணைப்பு தொடர்பாக பேசும்போது, கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளர்களான, தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல், கலைராஜன் போன்றோர், அணிகள் ...

தி.மு.க., மாவட்ட செயலர்களிடம் ஸ்டாலின் இன்று விசாரணை

Posted: 27 Apr 2017 09:57 AM PDT

தி.மு.க., நடத்திய முழு அடைப்பு போராட்டத்தில், முழு அளவில் கட்சியினர் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து, மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், ஸ்டாலின், இன்று விசாரணை நடத்துகிறார்.

சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம்,இன்று காலை,10 மணிக்கு நடக்கிறது. இதில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து, அறிவாலயத்தில், துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சமீபத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த முழு அடைப்பு போராட்டத்தில்,திருச்சி, சென்னை தெற்கு, திருநெல்வேலி மேற்கு மாவட்டங்களில், 1,000த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் ...

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சில் இழுபறி ஏன்?

Posted: 27 Apr 2017 09:57 AM PDT

யார் பெரியவர் என்ற, 'ஈகோ' பிரச்னை தலை துாக்கி உள்ளதால், அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு துவங்குவதில், இழுபறி நீடிக்கிறது.

இரட்டை இலை : அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைந்தால் தான், இரட்டை இலை சின்னம் கிடைப்பதற் கான சூழல் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில், இரட்டை இலை சின்னம் இருந்தால் தான், வெற்றி பெறமுடியும் என்ற நிலையும் உள்ளது. எனவே, இரு அணிகளையும் இணைக்க, இரு தரப்பிலும் முக்கிய நிர்வாகிகள் முடிவு செய்த னர். 'பேச்சுக்கு தயார்' என, பன்னீர்செல்வம் அறிவித்தார்; அதை, சசி அணியினர் வரவேற்றனர். அதை தொடர்ந்து, இருதரப்பிலும் பேச்சு நடத்த குழு ...

'ரயில்வே தனியார் மயமாகாது'

Posted: 27 Apr 2017 10:08 AM PDT

புதுடில்லி: ''ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

டில்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டில், மக்களின் முக்கிய போக்குவரத்தாக ரயில் சேவை உள்ளது. அதிலும், பயண கட்டணம் மிகவும் குறைவாகஉள்ளது. இதனால், ஆண்டுக்கு, 30,000 கோடி ரூபாய் முதல் 35,000 கோடி ரூபாய் வரை ரயில்வேக்கு, கூடுதல் செலவாகிறது. இதை மக்கள் தலையில் சுமத்த முடியாது; ரயில்வே தான் ஏற்று கொள்ள வேண்டும்.
அதற்காக, ரயில் வேயை தனியார் மயமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தனியார் ...

டில்லி போலீசை கண்டதும் சசி அணி அ.தி.மு.க.,வினர்... தலைமறைவு!

Posted: 27 Apr 2017 10:36 AM PDT

தேர்தல் கமிஷனுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டில்லி போலீசா ரால் கைது செய்யப்பட்டுள்ள தினகரன், மேல் விசாரணைக்காக நேற்று சென்னை அழைத்து வரப்பட்டார். அப்போது அவரைப் பார்க்க அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் யாரும் வரவில்லை. அவருக்கு ஆதரவாக கோஷம் போடவும் போதிய ஆட்கள் இல்லை.

டில்லி போலீஸ் என்பதால் அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் தலைமறைவாகி விட்டனர். வழக்கமாக வரும் துதிபாடிகளை காணாததால் தினகரன் வருத்தத்துடன் காணப்பட்டார்.இரட்டை இலை சின்னத்தை மீட்க சசிகலா வின் அக்கா மகன் தினகரன், ...

இந்திய-வங்க எல்லையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

Posted: 27 Apr 2017 12:02 PM PDT

கோல்கட்டா : இந்தியா - வங்கதேச எல்லைப் பகுதியில், ரகசிய சுரங்கப் பாதையை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சுரங்கப்பாதை:
மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது; இங்கு, வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள, வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில், 80 மீ., நீளமுள்ள ரகசிய சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு:
இதுகுறித்து, எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: வங்கதேச எல்லைப் பகுதியில், டெக்கான் தேயிலை ...

புனித தலங்களில் தடுப்பு சுவர்; உ.பி., முதல்வர் உத்தரவு

Posted: 27 Apr 2017 01:21 PM PDT

லக்னோ: துறவிகள் வேடத்தில் வந்து, புனித தலங்களை தகர்க்க, பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து, புனித தலங்களை சுற்றி, தடுப்பு சுவர் எழுப்ப, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.
சதி திட்டம்:
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, புனித தலங்களை தகர்க்க, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தானின் உளவு ...

கோகுலம் சிட்ஸ் 'ரெய்டு': ரூ.500 கோடி அபராதம்?

Posted: 27 Apr 2017 02:15 PM PDT

கோகுலம் சிட்ஸ் நிறுவனத்தில் நடந்த வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக, 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, அபராத வரி வசூலிக்க, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: கோகுலம் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த போது, ஏதோ தவறு நடப்பது தெரிய வந்தது. அதனால், எட்டு மாதங்களாக, அதன் உரிமையாளர்களின் நடவடிக்கை மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளை கண்காணித்தோம். அதன் உரிமையாளர் கோபாலன், 72 வயதிலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாநிலங்களில் உள்ள, 400 கிளைகளை நேரடியாக சென்று ஆய்வு ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™